
"அடுத்த கமல் படம், உதயநிதி தயாரிக்க, கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் அனுக்ஷா ஹீரோயினா நடிக்கிறாராம்."
"என்னண்ணே உங்களோட! ஒரு வாரத்துக்கு முன்னாலதான் கமல் ஹீரோயின் தமன்னா, அவ லக்கி அது இதுனு னு சொன்னீங்க? இப்போ அனுக்ஷானு சொல்றீங்க!"
"ஆமா இப்போ அனுக்ஷானுதான் ஒரு சிலர் சொல்றாங்க! என்னை என்ன பண்ண சொல்ற? நாளைக்கு கோவை சரளாதான் ஹீரோயின், இவர்கள் ஹீரோயின் இல்லைனு சொல்லுவாங்க. அப்போ அதையும்தான் சொல்லுவேன்"
"சரி, அதுதான் பழைய நியூஸ் ஆச்சேண்ணே! புதுசு என்னண்ணே?"
"புது நியூஸ் என்னன்னா, அந்த கமல் படத்திலே உதயநிதி நடிக்கப் போறாராம்!"
"அடக்கடவுளே! அவருக்கும் நடிக்க ஆசையா?"
"அப்படித்தான் போல இருக்கு. இந்த உலகத்தில் நடிக்க ஆசை இல்லாதது நீயும் நானும்தான் போல"
"அண்ணே! இந்த மேட்டர்ல என்னை உங்களோட சேர்க்காதீங்க!"
"அது சரி. ஆசை உன்னையும் விடல பாரு! சும்மா ஒரு சின்ன ரோலுக்கு கெள்ரவ வேடத்தில் வந்தாலும் வரலாம்! நம்ம பிரபு மன்னன்ல கெத்தா வருவார் இல்ல, அது மாதிரி"
"யாருக்குத்தெரியும்? வருங்கால சூப்பர் ஸ்டார் இவரோ என்னவோண்ணே!"
"என்னவோ.. உதயநிதி ஸ்டாலினுக்கு என் வாழ்த்துக்கள்!"
No comments:
Post a Comment