Wednesday, December 16, 2009

வேட்டைக்காரன் வெற்றி வாகை சூடுவானா?


"வேட்டைக்காரன் எப்போடா ரிலீஸ்?"

"வர்ற வெள்ளிக்கிழமைண்ணே!"

"விஜய்க்கு குருவி, வில்லு ரெண்டுமே பெரிய வெற்றிப்படமா அமையலை. வேட்டைக்காரன் வெற்றி பெறுமா? உள்ள எழவு பத்தாதுனு இப்போ தேவையே இல்லாத விஜயோட அரசியல் பிரவேசம். காங்கிரஸ் சப்போர்ட் ஈழத்தமிழர்களுக்கு பயங்கர கோபத்தையும் எரிச்சலையும் உருவாக்கி இருக்கு"

"ஆமாண்ணே! ஈழத்தமிழர்களெல்லாம் பயங்கர கோபமா இருக்காங்க, விஜய்மேலே!"

"என்ன எழவுக்கு இந்த வயசுல இவருக்கு அரசியல் வேண்டிக்கெடக்குனு தெரியலை. சும்மா இருந்து தொலைய வேண்டியதுதானே? இவருக்கென்ன வயசாயாடுச்சா என்ன?"

"அது சரியான லூசுத்தனம்தான் அண்ணே! இவருடைய காங்க்ரஸ் சப்போர்ட்டால நிச்சயம் ஈழத்தமிழர்கள் பலர் இந்தப் படத்தை புறக்கணிப்பாங்க போல இருக்குண்ணே!"

"ஏற்கனவே எந்தப்படமும் சமீபத்தில் இவருக்கு பிச்சுக்கிட்டு ஓடல.."

"அண்ணே விஜய் படம் எதுவுமே அப்படி பெருசா விழல அண்ணே!"

"வேட்டைக்காரன் படம் எப்படி ஓடும்? அதாவது காதலுக்கு மரியாதை, கில்லி, குஷி, திருப்பாச்சி, போக்கிரி, சிவகாசி லெவெலுக்கு ஓடுமா? இல்லை சச்சின், ஆதி, வில்லு, குருவி லெவலுக்குப் போகுமா? இப்போ புரியுதா ரெண்டுக்கும் உள்ள டிஃபெரெண்ஸ்?"

"ஆமாண்ணே நீங்க சொல்லிய ரெண்டு செட் படங்கள் இரண்டும் ரெண்டு வகைதான்."

"சரி, எந்த லெவெலுக்குப் போகும்னு நெனைக்கிற?"

"அண்ணே இப்போ படம் வெற்றியா தோல்வியானு கண்டுபிடிக்கிறது ரொம்ப கஷ்டம்ண்ணே!"

"இது வேறயா? ஏன்ப்பா?"

"அந்தக்காலத்தில் 100 நாள், வெள்ளிவிழா ஓடினா வெற்றிப்படம். சீக்கிரமே தியேட்டர்விட்டு ஓடிட்டா ஃப்ளாப்னு சொல்லிடலாம். ஆனால் இப்போ நெறையா பெட்டிய ரிலீஸ் பண்ணி குழப்புறானுக அண்ணே!"

"அதென்னவோ உண்மைதான். இப்போ வெற்றிப்படமும் சீக்கிரமே பெட்டிக்குள்ளே போயிடுது. எல்லாம் ஒரு 5-6 வாரம்தான். அதனால வெற்றி தோல்வியெல்லாம் சொல்றது ரொம்ப கஷ்டம்போல இருக்கு! சரி வேட்டைக்காரன் எப்படிப்போகும்னு நீ நெனைக்கிற சொல்லு"

"பாட்டெல்லாம் நல்லா இருக்குண்ணே. ஒரு மாதிரி புது ஹீரோயின். மசாலாப்படம்போல இருக்கு. நல்லத்தான் போகும்ண்ணே!"

"இப்போ உள்ள நிலையில் விஜய்க்கு சந்தேகமே இல்லாமல் உலகமே வெற்றினு ஒத்துக்கிற அளவுக்கு ஒரு வெற்றிப்படம் வேணும். அதை வேட்டைக்காரன் தருமா?'

"தரனும். பார்க்கலாம் அண்ணே!"

"இன்னும் ஒண்ணு இல்ல ரெண்டு வாரத்தில் தெரியும்! பார்க்கலாம்!"

"இதுவும் விழுந்தா கொஞ்சம் கஷ்டம்தான் விஜய்க்கு!"


4 comments:

சதீஷ் said...

அண்ணே, வேட்டைக்காரன சன் டிவிக்காரங்க எடுத்துருக்காங்கண்ணே!!! அவங்களுக்கு டப்பா படமான காதலில் விழுந்தேனையே வெற்றிப்படமாக்கிய வியாபார யுக்தி தெரிந்தவங்கண்ணே!!! இந்த படத்தையும் ஓட்டிருவாங்கண்ணே!!1

SUREஷ்(பழனியிலிருந்து) said...

பதிவுலகில் சூப்பர் ஹிட் தல..,

பதிவர்கள் நிறையப் பேர் முதல் காட்சியே பார்த்தாச்சு..,

வருண் said...

***Sathish said...
அண்ணே, வேட்டைக்காரன சன் டிவிக்காரங்க எடுத்துருக்காங்கண்ணே!!! அவங்களுக்கு டப்பா படமான காதலில் விழுந்தேனையே வெற்றிப்படமாக்கிய வியாபார யுக்தி தெரிந்தவங்கண்ணே!!! இந்த படத்தையும் ஓட்டிருவாங்கண்ணே!!1

18 December 2009 12:27 AM***

படமும் கமர்சியல்லா நல்லாப்போகும்னுதான் தோனுது. காதலில் விழுந்தேனை ஓட்டுவதைவிட விஜய் படத்தை ஓட்டுவது ஈஸிதானே?:)

வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி, சதீஸ் :)

வருண் said...

*** SUREஷ் (பழனியிலிருந்து) said...
பதிவுலகில் சூப்பர் ஹிட் தல..,

பதிவர்கள் நிறையப் பேர் முதல் காட்சியே பார்த்தாச்சு..,

20 December 2009 8:40 AM***

ஆமா சுரேஷ், கமர்சியலாக நிச்சயம் வெற்றியடையும்னுதான் தோனுது. :))