Tuesday, December 22, 2009

ஆந்திரா, கேரளாவில் வரவேற்பு பெறும் தமிழ்சினிமா!


தமிழ்நாட்டுக்காரன் தான் மசாலா ரசிகன். தமிழ்நாட்டுக்காரன் தான் லாஜிக் இல்லாத குப்பையெல்லாம் எடுத்து ரசிக்கிறவன் என்பதுதான் பொதுவாக மக்களின் எண்ணம். நல்ல தரமான மலையாளப் படங்களையும் தமிழ் சினிமாவாக ரீமேக் செய்யும்போது தமிழன் மசாலாவைக் கலந்து கெடுத்துவிடுகிறான் என்பது போல் பல குற்றச்சாட்டுக்கள் உண்டு தமிழர்கள் மேல்!

சரி, கேரளாவிலே அவார்ட் வின்னிங் படம்தான் எடுக்கிறார்கள். தரம்னு வரும்போது கேரளா முன்னால் நிற்கிறது என்கிறார்கள் பல எல்லாம் தெரிந்தவர்கள். தமிழைவைத்து பிழைப்பு நடத்தும் தமிழ் எழுத்தாளர்களும் கேரள ரசிகர்கள்தான் உயர்வானவர்கள் என்று வெட்கமே இல்லாமல் சொல்லிக்கொண்டு தமிழன் மானத்தை வாங்குகிறார்கள்.

இப்படிப்பட்ட ஒரு நேரத்தில்,

* மசாலா மன்னன் விஜய் படங்கள் எல்லாமே கேரளாவில் நல்லாப் போகுதுனு சொல்றாங்க!

* சந்திரமுகி ஒரு ரீமேக் படம். ஒரிஜினல் சரக்கு கேரளாவிலிருந்து வந்தது. அப்போ மசாலா கலந்த சந்திரமுகி கேரளாவில் ஓடாதா? அப்படினு கேட்டீங்கனா, அது தான் இல்லை. கேரளாவில் இந்த மசாலாவும் நல்லா ஓடத்தான் செய்தது.

* சிவாஜி படம் ரிலீஸ் ஆகும்போது அதனுடைய கேரளா ரைட்ஸ் பலகோடி ரூபாய்க்குப் போனது. கேரளாவிலும் மிகப்பெரிய வெற்றியடைந்தது!

கேரளாவிலே உள்ளவர்கள் எல்லாம் ஜீனியஸ்னா என்ன எழவுக்கு தமிழ் மசாலாப்படங்களுக்கு இத்தனை வரவேற்பு இருக்கிறது என்பது எனக்கு விளங்காத ஒன்று!

சரி, ஆந்திராவை எடுத்துக்குவோம்,

* ரஜினி நடித்த, படையப்பா, சந்திரமுகி இரண்டும் 100 நாட்களுக்கு மேல் (டப் பண்ணிய படங்கள்) ஓடி சாதனை புரிந்த படங்கள்!

* எ வி எம்மின் சிவாஜி படம் ரிலீஸ் ஆகும்போது முதல் வார வசூல் (ஹைதரா பாத்ல) நாலுகோடியாகும்! ரஜினிதான் ஹைதராபாத்க்கு புது "பாக்ஸ் ஆஃபிஸ் பாஸ்"னு சொன்னது ஆந்திர பதிவுலகம்!

* ஷங்கரின், விக்ரம் நடித்த "அந்நிய"னும் ஆந்திராவில் சிறப்பாக 100 நாட்கள் மேலே ஓடி வெற்றிவாகை சூடியது.

* நம்ம உலகநாயகன் படமான மசாலாதாரம் (ஐ மீன் தசாவதாரம்! :)) ) ஆந்திராவில் நல்ல வசூலுடன் பெரிய வெற்றிப்படமானது.

ஆந்திராவில் உள்ள பலர் தமிழ்ப்படங்களின் டாமினேஷனைப் பார்த்து எரிச்சலும் கோபமுமாக கருத்துக்களங்களில் விவாதிப்பதையும் பார்க்கலாம்!

இதேபோல் தமிழ் நாட்டில், மலையாளப்படமோ அல்லது தெலுங்குப்படமோ இன்று வரவேற்பு பெறுகிறதானு பார்த்தால், நிச்சயம் இந்த அளவுக்கு வரவேற்பு பெறவில்லை என்பதுதான் உண்மை!

தமிழனுக்குத்தான் மசாலாப்புத்தினா, ஏன் சார் ஆந்திரா, கேரளாக்காரர்களும் மசாலாவை ரசிக்கிறார்கள் என்பது என் கேள்வி! அப்போ எல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைதானா என்ன?

4 comments:

shaan said...

உண்மையைச் சொன்னீர்கள்.

வருண் said...

நன்றிங்க, ஷான்! :)

எனக்குள் ஒருவன் said...

actually now 90% of malayalam movies are low budget masala movies

வருண் said...

***oscar2000 said...
actually now 90% of malayalam movies are low budget masala movies

23 December 2009 8:56 AM***

Thanks for the information oscar 2000!