Friday, December 25, 2009

ஹிந்தியில் சிவாஜி!


ஷங்கர் இயக்கத்தில் ரஜினி-ஸ்ரேயா நடித்த பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரான எ வி எம்மின் சிவாஜியை ஹிந்தியில் டப் செய்து விடப்போவதாக இரண்டு வருடங்கள் முன்பு சொல்லப்பட்டது. ஆனால் அதன்பிறகு அதைப்பத்தி எந்த பேச்சுமே அடிபடவில்லை என்பதால் அதை எ வி எம் கைவிட்டுவிட்டதாக தோன்றியது. சிவாஜிக்குப் பிறகு வந்த இன்னொரு பிரம்மாண்டப்படமான தசாவதாரம் ஹிந்தியில் ரிலீஸாகியது. தசாவதாரம் ஹிந்தியில் ஒண்ணும் பெருசா சாதிக்கவில்லை.

கடைசியில் சிவாஜி, ஹிந்தியில் ரிலீஸ் ஆகப்போவதாக எ வி எம் நிறுவனம் அறிவித்து உள்ளது. இன்றைய தினசரி அட்வர்டைஸ்மெண்ட்படி 2010 ஜனவரி 8ம் தேதி சிவாஜி ஹிந்தியில் ரிலீஸாகிறது. இந்தப்படம் பெரிய அளவில் ஹிந்தியில் வெற்றியடையுமா இல்லை தோல்வியடையுமா என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி. சிவாஜி, எந்த அளவுக்கு ஹிந்தியில் வெற்றியடைகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

4 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

எம்.ஜி.ஆர் தெலுங்கில் எண்டிஆர் ஆன மாதிரி இந்தியில் என்ன ஆயிருப்பார்?

SUREஷ்(பழனியிலிருந்து) said...

எம்.ஜி.ஆர் தெலுங்கில் எண்டிஆர் ஆன மாதிரி இந்தியில் என்ன ஆயிருப்பார்?

வருண் said...

ஹிந்தியில் இந்த மொட்டைபாஸுக்கு சரியான பெயர் வச்சு "கலக்கிறது" கஷ்டம்ங்க! என்ன ஆகியிருப்பார்னு யூகிக்க முடியலை, தல!

அ.ஜீவதர்ஷன் said...

இன்றுதான் முதல் முதலாக உங்கள் தளத்திற்கு வந்துள்ளேன், நீங்கள் ரஜினி ரசிகனாக இருப்பதில் மகிழ்ச்சி. தொடர்ந்து கலக்குங்கள்.