
சிவாஜியும், சிவாஜி ராவும் தமிழ் சினிமாவில் சரித்திரம் படைத்தவர்கள். இருவருமே அவர்கள் காலகட்டத்தில் நடிக்க ஆரம்பித்த உடனேயே புகழின் உச்சியை அடைந்தவர்கள். இருவரும் வேறு வேறு காலகட்டங்களை சேர்ந்தவர்கள் என்றாலும் நடிகர்திலகம் இவ்வுலகைவிட்டு மறையும் வரை நடித்துக்கொண்டே இருந்ததாலும், பல நட்சத்திரங்ககளுடன் நடிகர் திலகம் இணைந்து நடிக்க என்றுமே தயங்கியதில்லை என்பதாலும், இருவரும் ஒரு ஐந்து படங்களில் இணைந்து நடிக்கவும் செய்தார்கள். நடிகர் கமலஹாசன் நடிகர் திலகத்துடம் மட்டுமல்லாமல், மக்கள் திலகம் எம் ஜி ஆருடன் இணைந்து நடித்துள்ளார் குழந்தை நட்சத்திரமாக, ஆனால் ரஜினி எம் ஜி ஆருடன் இணைந்து நடித்ததில்லை.
சிவாஜி-ரஜினி சேர்ந்து நடித்த படங்கள்!
* ஜஸ்டிஸ் கோபிநாத் (1978, இயக்கம்: யோகானந்த்)
* நான் வாழ வைப்பேன் (1979, இயக்கம்: யோகானந்த்)
* படிக்காதவன் (1985, இயக்கம்: ராஜசேகர்)
* விடுதலை (1986, இயக்கம்: கே. விஜயன்)
* படையப்பா (1999, இயக்கம்: கே எஸ் ரவிக்குமார்)
இதில் * நான் வாழ வைப்பேன் படத்தில் ரஜினிக்கு கெளரவ வேடம்தான். ஆனால் சிவாஜியைவிட ரஜினி நன்றாக நடித்துவிட்டார் என்று ரஜினிக்குப் பேர் வாங்கித் தந்த படம்.
* படிக்காதவனில், சிவாஜி கெளரவ வேடத்தில் அண்ணனாக நடித்துள்ளார். இது மிகப்பெரிய வெற்றிப்படம் (வெள்ளிவிழா கொண்டாடியது).
* படையப்பாதான் நடிகர்திலகத்தின் கடைசி தமிழ்ப்படம். இதில் ரஜினியின் தந்தையாக கெளரவ வேடத்தில் வந்து இருப்பார் சிவாஜி. இதுவும் மிகப்பெரிய வெற்றிப்படம். இதில் சிவாஜி கேரக்டர் மறைந்துவிடுவதாக காட்டப்படும் இந்தப்படத்தில். :(
சிவாஜி ப்ரடக்ஷன்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்த படங்கள் இரண்டே இரண்டுதான்!
* மன்னன் (1992, பி வாசு இயக்கம்)
* சந்திரமுகி (2005, பி வாசு இயக்கம்)
இரண்டு படங்களுமே மிகப்பெரிய வெற்றிப்படங்கள்!

No comments:
Post a Comment