Wednesday, April 21, 2010

காயத்ரி ஆண்ட்டி! கடலை கார்னர் (50)

"பாஸ்போர்ட் கொடுத்துட்டாங்களா, ஆண்ட்டி?"

"ஆமா, பிருந்தா, பிரச்சினை எதுவும் இல்லை! "

"கண்க்ராட்ஸ்! வீட்டுக்கு போகலாமா? நாளைக்கு டெவான்ல போயி ஷாப்பிங் பண்ணலாம்! வேற எங்கேயும் எதுவும் வாங்கனுமா ஆண்ட்டி, சிகாகோல?"

"அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல!"

"அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லையா? ஹா ஹா ஹா"

"எதுக்கு சிரிக்கிற, பிருந்தா?"

"இல்ல, ஏதோ ஞாபகம் வந்துருச்சு. சாரி ஆண்ட்டி!"

"என்ன ஞாபகம் வந்துச்சு"

"அப்புறம் சொல்றேனே, ப்ளீஸ்? அப்புறம் நாளைக்கு காலையில என் ஃப்ரெண்டு கண்ணன் னு ஒருத்தர் இருக்காரு. அவரும் நம்மளோட டெவான் ஸ்ட்ரீட் வர்ராரு. அவர்தான் நம்ம ட்ரைவர்! உங்களுக்கு ஒண்ணும் ஆட்சேபனை இல்லைதானே?"

"இல்லை பிருந்தா. யார் அவரு?"

"ஃப்ரெண்டுதான், நல்லாத் தமிழ்லயும் பேசுவாரு!"

"ஃப்ரெண்டுனா?"

"நண்பர்னு தமிழ்ல சொல்லுவாங்க இல்ல, ஆண்ட்டி?!"

"அது இல்ல... வேற மாதிரி ரொம்ப க்ளோஸா?"

"இப்படி நொழச்சுக்கேட்டால், அவர் உங்ககிட்ட ஒரு பதில் சொல்ல சொன்னாரு! சொல்லிடவா?"

"என்ன சொல்லச் சொன்னாரு?"

"கார்ல வேணாம். வீட்டுக்குப் போனதும் சொல்றேன்."

"சரி"

-----------------------------------

"இந்தாங்க காஃபி, ஆண்ட்டி! சுகர் அதிகமா வேணும்னா போட்டுக்கோங்க!"

"தேங்க்ஸ்!"

"ஆமா, கண்ணன் என்ன சொல்லச் சொன்னாரு?"

"உங்க காதிலே சொல்லவா?"

"ம்ம்"

" "

"ச்சீ! நீ ரொம்ப மோசம் பிருந்தா! பாய்ஃப்ரெண்டுனு சொல்ல வேண்டியதுதானே? அதுக்காக இப்படியா?"

"பாய்ஃப்ரெண்டுனு சொன்னா இன்னும் நெறையா கேள்வி கேப்பீங்கனுதான் இப்படி சொல்ல சொன்னாரு!"

"ரொம்ப மோசமான ஆளா, கண்ணன்?"

"ரொம்ப ரொம்ப மோசம், ஆண்ட்டி!"

"சரி எனக்கு ஒரு ஐட்டம் வாங்கனும். கொஞ்சம் ஹெல்ப் பண்ணுறியா?"

"நான் அப்போவே நெனச்சேன். என்னனு சொல்லுங்க!"

"இல்ல, இது வெளியூர்னால பிரச்சினை இல்லைனு பார்த்தேன். உனக்குத் தெரியலைனா, வேற யார்ட்டயாவது எங்கே கிடைக்கும்னு கேக்கிறியா? எனக்குனு யார்ட்டயும் சொல்லக் கூடாது! "

"என்ன ஒரே புதிர் போடுறீங்க.. என்ன ஐட்டம்? சரி என் ஃப்ரெண்டு இன்னொருத்திக்குனு சொல்றேன்"

"காதுலயே சொல்றேன், இங்கே வா!"

" "

"சரி கேக்கிறேன். கேட்டு சொல்றேன். சரியா?"

"சும்மா எங்கே கடை இருக்கு. கிடைக்குமானு மட்டும் கேளு!"

"இதெல்லாம் நிச்சயம் கெடைக்கத்தான் செய்யும். சரி கேக்கிறேன். என் ஃப்ரெண்டு ஒருத்திக்குனு சொல்லிக் கேக்கிறேன். சரியா?"

"தேங்க்ஸ், பிருந்தா!"

"ஆமா, எவ்வளவு நாளாச்சு ஆண்ட்டி உங்க டைவோர்ஸ் ஆகி?"

"மூனு வருஷமாச்சு!"

"இப்போ யாரையும் டேட் பண்ணுறீங்களா?"

"இல்ல, பிருந்தா."
----------------------------------

"என்ன பிருந்த்! எங்கே இருந்து பேசுற?"

"பாத்ரூம்ல இருந்து பேசுறேன்! ஒரு வழியா பாஸ்போர்ட் வாங்கிட்டாங்க! காயத்ரி ஆண்ட்டிட்ட சொல்லிட்டேன் நீங்கதான் நாளைக்கு எங்களுக்கு ட்ரைவெர்னு!"

"சரி, வர்ரேன். டெவான் ஸ்ட்ரீட் போறது தவிர வேறென்னவும் வாங்கனுமா அவங்களுக்கு?"

"ஆமா! அவங்ககிட்ட தெரிஞ்சமாதிரி காட்டிக்காதீங்க! மொதல்ல தயங்கினாங்க. அப்புறம் கடைசில சொல்லீட்டாங்க! ஹா ஹா ஹா!"

"ஏய் என்னனு சொல்லு!"

"அவங்க, அது என் ஃப்ரெண்டு ஒருத்திக்குனு சொல்லி யார்ட்டயாவது கேக்க சொன்னாங்க! உங்ககிட்ட கேக்கிறதுதான் எனக்கு ஈஸி! உங்ககிட்ட நான் எப்படி பொய் சொல்ல முடியும்? ஹா ஹா ஹா!"

"என்னடி சொல்ற? என்ன வேணுமாம்? சொல்லீட்டு சிரி"

"பாவம் கண்ணன்.. அவங்களுக்கு ஏதோ "டாய்" வாங்கனுமாம்."

"டாய்ஸ்ரஸ்க்கு கூட்டிப்போ!"

"அய்யோ இந்த டாய் எல்லாம் டாய்ஸ்ரஸ்ல கெடைக்காது! அவங்களுக்கு! புரியலையா?"

"புரியுது புரியுது"

"இதுமட்டும் நல்லாப் புரியுமே!"

"ஆண்லைன்ல ஆர்டர் பண்ணச்சொல்லு பிருந்த்! எந்த பிரச்சினையும் வராது."

"ஆண்லைன்லயா?"

" தட் இஸ் த பெஸ்ட் வே! காண்ஃபிடெண்ஷியலா டெலிவெர் பண்ணிடுவாங்க! யாருக்கும் உள்ள என்ன இருக்குனு தெரியாது. யு கேன் ஃபைண்ட் சம் லின்க்ஸ் ஈஸிலி!'

"சரி, அப்போ அவங்களையே ஆர்டெர் பண்ணிக்க சொல்றேன்! உங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரியும், கண்ணன்?"

"ஸ்டெய்ஸிதான் ஒரு நாள் சொன்னாள்!"

"இதெல்லாம் அவகிட்ட எதுக்கு பேசினீங்க?"

"ஏய்! இது இன்னொரு காண்டெக்ஸ்ட்ல பேசும்போது ஏதோ ஜோக் மாதிரி சொன்னாள்."

"சரி, ஆண்ட்ட்ட சொல்றேன்!"

"ஏய் அவங்களுக்குத்தானே?"

"ஆமா! ஏன் எனக்கொண்ணு வாங்கினால் தப்பா?"

"இல்லையே."

"எனக்குத்தான் நீங்க இருக்கீங்களே?!"

"சரி, ஆண்ட்டிட்ட நான் எதையும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்க மாட்டேன். கவலைப் படாதே!"

"எனக்கு உங்களைத் தெரியாதா?"

"என்ன தெரியும்?"

"இந்த மாதிரி மேட்டர்ல எல்லாம் ஜோக்னு ஏதாவது பண்ண மாட்டீங்கனு தெரியும்!"

"எதுக்கும் நீ என்னிடம் கேட்டதா அவங்ககிட்ட சொல்லாதே!"

"ஸ்டெய்ஸிட்ட கேட்டதா சொல்றேன். சரியா?"

"ஓ கே டா!"

" உங்களுக்காகத்தான் ஒரு பொய் சொல்றேன்!"

"என்ன செய்வ பாவம். வாழ்க்கையிலே இதுதான் நீ சொல்ற மொதல் பொய்! இல்லையா?"

"ஹா ஹா ஹா! அப்புறம் இன்னொரு விசயம், கண்ணன்."

"என்ன பிருந்த்?"

"அவங்க கிட்ட நீங்க என்னோட "அந்த buddy" னு சொல்லியாச்சு!"

"விளையாடுறியா?"

"நீங்க சொன்ன மாதிரியே நொழச்சு நொழச்சு கேட்டாங்க.. அதான் பச்சையா சொல்லீடேன்!"

"இந்த லேடீஸே ரொம்ப மோசம்ப்பா!"

"அப்படியா!'

"சரி நாளைக்கு பார்ப்போம்!"

"லவ் யு கண்ணன்!"

"லவ் யு டூ, டார்லிங்!"

-தொடரும்

1 comment:

வருண் said...

வாங்க, சித்ரா :)