Tuesday, April 13, 2010

பைத்தியக்காரனின் "காதல் புனிதமானதா"? -எதிர்வினை

காதல் புனிதமானதா? னு ஒரு பதிவு போட்டு அதற்கு மீள்பதிவும் போட்டு இருக்கார் பைத்தியக்காரன் (திரு. சிவராமன்) .

நான் இப்போத்தான் இந்த பதிவைப் பார்த்தேன்! இந்த எதிர்வினைக்கு காரணம், காதல் புனிதமானதா? சொல்லியிருக்கிற இவருடைய தியரி எல்லாம் விவாதத்துக்குரியதாகவும் சுத்தமாக ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் இருக்கிறது .

இது ஒரு "ஹெல்த்தி" யான எதிர் வாதம்/ எதிர்வினை தான். சும்மா இவரோட கற்பனை தியரியை எல்லாம் உண்மை உண்மைனு சொல்லியிருக்கிறது சரியல்ல என்பதை சொல்லாமல் இருக்க முடியலை. அதனால் இதை யாரும் தவறாக எடுத்துக்க வேணாம்!

இதற்கு அவர் பதில் சொல்லனும்னு தேவையுமில்லை! ஏகப்பட்ட கருத்து வேற்றுமை இருப்பதால் இது சம்மந்தமாக ஒரு 100 பின்னூட்டங்கள் அவர் தளத்தில் போட வேண்டி வரும். அதைத் தவிர்க்கத்தான் இந்தப் பதிவு!

மனிதன் ஒருபோதும் சிந்திப்பதுமில்லை: காதலிப்பதுமில்லை: பாசம் செலுத்துவதுமில்லை: தோழமையோடு பழகுவதுமில்லை... இதுதான் உண்மை.

இது உண்மை அல்ல! பைத்தியக்காரனின் நம்பிக்கை அல்லது கற்பனை! உண்மை என்கிற வார்த்தையை இங்கே இருந்து மொதல்ல தூக்கனும்!

சிந்திப்பது மட்டுமே மனிதனை விலங்குகளிடமிருந்து பிரித்துக் காட்டுகிறது என்று சொல்பவராக நீங்கள் இருந்தால், ஒரு நிமிடம்... நிஜமாகவே நீங்கள் சிந்திக்கிறீர்களா?

இவருக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி உளறுகிறார்னு "நான் சிந்திக்கிறேன்"! அது சிந்தனை இல்லை என்கிறீர்களா? :)

எதிர்பாலினத்தை 'காதலிப்பதாக' சொல்லும்போதே மற்றவர்கள் யாரையும் காதலிக்கவில்லை என்பதை அழுத்தமாக உணர்த்துகிறோம். ஒருவரை நேசிக்கும்போதே வேறு யாரையும் அந்த இடத்தில் வைக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறோம். மொத்தத்தில் ஒவ்வொரு வார்த்தையும் அதற்கான எதிர்மறையை தனக்குள் சுமந்து கொண்டே அலைகிறது.

எதிர்பாலினத்தைத்தான் காதலிக்கனும்னு இல்லை. ஓரினச்சேர்க்கையில் உள்ளவர்கள் தன் பாலினத்தில் உள்ளவர்களையே காதலிக்கிறார்கள். உங்களுக்குத் தெரியும் இல்லையா?

இப்படி புனிதமாக நாம் நினைக்கும் அனைத்துமே வெறும் புடலங்காய்தான் என்றால் அதிர்ச்சியாக இருக்கும். ஆனால், உண்மை அதுதான்.

புனிதமும் இல்லை, புடலங்காயும் இல்லை சரி ! உண்மை உண்மை என்று நீங்கள் கூறுவது "உண்மையும்" அல்ல!

உண்மையில் தன்னைத் தவிர வேறுயாரையும் யாரும் காதலிப்பதுமில்லை, நேசிப்பதுமில்லை. சுயநலமாக வாழ்வது மட்டுமே இயல்பானது.

அப்படியே வச்சுக்குவோம்! தன் சுயநலத்திற்காக காதலிப்பது அப்போ ஏன் உண்மை இல்லை? காதல் என்பது சுயநலம். சுயநலம் என்பது உண்மை! னு நான் சொல்றேன். காதல் என்பது இயலபானதுதான்!

அடுத்தவரை வீழ்த்த நாம் நடத்தும் நாடகமே வாழ்க்கை. வாழ்க்கையின் அர்த்தமே அடுத்தவர் முன்னேறாமல் தடுப்பதுதான்.

என்ன சொல்றீங்க??? வாழக்கையின் ஒரு பகுதி வேணா, மற்றவர் முன்னேறாமல் தடுப்பதாக இருக்கலாம். வாழ்க்கையே, வாழ்க்கையின் அர்த்தமே அதுதான் என்பது அபத்தம்!

மனதின் சந்தோஷமே அடுத்தவரின் வீழ்ச்சியில்தான் அடங்கியிருக்கிறது.

அபத்தமான ஸ்டேட்மெண்ட்!!!
கிடையவே கிடையாது!

உங்க தளத்தில் பின்னூட்டத்தில் சொன்னது (மாடெரேஷன் பண்ணவில்லை இன்னும்) மறுபடியும் இங்கே!

ஒரு உதாரணத்துடன் சொல்கிறேன்!

One had a wonderful sex with his partner and both had wonderful climax at the same time on that fine fine day. They both were very happy after the sex. They felt great about the sex on that day.

Are you saying that is NOT HAPPINESS?

One can be happy in several ways. You don't have to defeat someone for being happy!


புனிதம் என்று காலம்காலமாக நம்பப்பட்டும், பேசப்பட்டும் வரும் விஷயம் காதல்.

காதலை விடுங்க! புனிதம்னு ஒண்ணு இருக்குனு நம்புறீங்களா? புனிதம் எதிலிருக்குனு மட்டும் சொல்லுங்க! இவ்வளவு நேரம் நீங்க சொன்ன தியரி எல்லாமே இந்த புனிதத்திற்கு எதிரா போகப்போது! புனிதமே இல்லைனு நீங்க ஏற்றுக்கொண்டால் உங்க தலைப்பே அபத்தம்!

உண்மையில் காதலைப் போன்ற பம்மாத்தான விஷயம் வேறு எதுவுமே இல்லை.

உண்மைனா என்னனே உங்களுக்கு சரியா தெரியலை சார்! மறுபடியும் மறுபடியும் நீங்க உண்மை உண்மைனு எதையோ சொல்றீங்க! பம்மாத்துனா என்னனு விளங்கவில்லை! புனிதத்துக்கு எதிர்ப்பதமா?

ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஒரு பெண் இருக்கிறாள். ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு ஆண் இருக்கிறான். தனக்குள் இருக்கும் பெண்ணின் பிரதிபலிப்பை வேறொரு பெண்ணிடம் 'சாயலாக'க் காணும் ஆண், அவளை 'காதலிப்பதாக' நினைக்கிறான். அவளை அடைவதன் மூலம், வேறொரு ஆணிடம் அவள் போவதை தடுக்கிறான். இதே தியரியை பெண்ணுக்கும் பொருத்தலாம்.

What about GAYS then??? You dont think they are Humans? So, your theory fails here as gays get attracted to the same sex people!

பிரச்னை என்னவென்றால் ஒவ்வொரு ஆணும், ஒவ்வொரு பெண்ணும், தனக்குள் இருக்கும் மறுபாதியை 'பலரிடமும்' காண்பதுதான். அதனால்தான் 'அனுபவம்' கூடக் கூட, காதல் உணர்வு வளர்ந்து கொண்டே போகிறது. மறுபாதியை காணும்போதெல்லாம் காதல் உணர்ச்சி பெருக்கெடுக்கிறது. பரிணாம வளர்ச்சியில் இந்த உண்மையை ஆண், பெண் இருவருமே உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் 'காதலுக்காக' வகுக்கப்பட்ட பல வார்த்தைகள் இன்று செல்லரித்துப் போய் ஆவணக் காப்பகங்களில் உறங்கிக் கொண்டிருக்கின்றன.

Again this is your theory. It can be destroyed completely by showing the love life of gays!

இன்று சராசரியாக ஒவ்வொருவரும் 12 அல்லது 13 வயது முதலே மறுபாதியை எதிர்கொள்ள ஆரம்பித்து விடுகிறார்கள். அதுமுதலே 'காதல்' உணர்வு அரும்ப ஆரம்பித்துவிடுகிறது. அதனால்தான் 23 வயதுப் பெண்ணிடம் ஒரு ஆண் காதலிப்பதாக சொல்லும்போது அவள் சிரிக்கிறாள். 'வேணாம்பா நாம ஃபிரெண்ட்சா இருப்போம்...' என்கிறாள். அவளுக்குத் தெரியும் போகப் போக இதுபோல இன்னும் பலரை எதிர்கொள்ள நேரிடும் என்று.

எல்லாரும் சிரிக்க மாட்டாங்க! யார் சொல்றாங்கங்கிறதை பொறுத்து இங்கே! காதல் அரும்ப வயசெல்லாம் இல்லை சார்!

ஒவ்வொருவரும் இன்று நேரில், தொலைபேசியில் அல்லது செல்லில், மெயிலில், சாட்டில் எதிர்பாலினத்தை சேர்ந்த பலரிடமும் தினமும் பேசுகிறார்கள், பழகுகிறார்கள். எதற்காக பேசுகிறோம், சிரிக்கிறோம் என்பது இருவருக்குமே தெரியும். ஆனாலும் தெரியாததுபோல நடந்து கொள்வதில் இருக்கும் சுவாரஸ்யம், அந்த உறவை அனுமதிக்கிறது. தப்பித் தவறி யாராவது ஒருவர் வெளிப்படுத்தும்போது, திடுக்கிடுவது போல் காட்டிக்கொள்வது நமது 'புனிதத்தை' காப்பாற்ற உதவுகிறது.

புனிதம்னா என்னனு நீங்க சொல்லனும்! நீங்க புனிதம் என்கிற ஒரு வார்த்தையை அழகா உதாரணத்துடன் விளக்குங்க! காதல் எனபது புனிதமானதோ இல்லை அபத்தமானதோ எனக்குத் தெரியலை. காதல் என்பது ஒரு உணர்வு, அவ்வளவுதான்!

மன்னிச்சுக்கோங்க! இந்தப் பதிவு ஏதோ டீனேஜ் பையன் காதல்னு சொல்லி உளறுவதுபோல் இருக்கு! இதை உண்மையிலேயே எழுதியது நீங்கள் தானா!!

3 comments:

வருண் said...

***www.bogy.in said...
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

13 April 2010 6:23 PM***

நன்றி! உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

smart said...

//இது ஒரு "ஹெல்த்தி" யான எதிர் வாதம்/ எதிர்வினை தான்.//

அப்ப நீங்க எனக்கு போட்ட எதிர்வினை ஹெல்தியில்லையோ.

நான் போட்ட எதிர்வினை எப்படிஇருக்குன்னு ஒரு ஹெல்தியா ஒரு எதிர்வினை போடுங்க

வருண் said...

Smart: This blog is not just for criticizing one group of people like you do! When I find somethng unconvincing to me I respond. You have all the right to criticize me in your blog. DO IT! But I dont wnat you to advertise that in my "responses" especially when it is irrelavant to the topic! Honestly I am not starving for your responses!

YOU just get personal and ONLY on FEW PEOPLE and leave out some people no matter what they do or what nonsense they talk (may be you belong to that kind and you are self-centered and stuck-up!).
I am not like that and this blog is not built for that! It is for expressing our thoughts on any issue. When I find something "odd" or "wrong" or "not convincing" I address the issue. But you are doing a full-time job of attacking only few people. Some might enjoy it. I find your posts are not worthy of my time. I am really sorry!

Even here, I have no problem with Mr. sivaraman. I only have problem with some statements he has made! I have to disagree with them. That is why I wrote this. He is also open-minded enough to publish my responses in his blog!

You need to look for issues, NOT just few people to attack eg. vaal payyan, dr. rudhran, d r ashok etc