இயக்கத்தில் ஒருவர் இமயம்னா இன்னொருவர் சிகரம்! அதில் யாருக்குமே என்றுமே சந்தேகம் இல்லை! ஆனால் நடிப்பில்? நிச்சயமாக ரஜினியளவுக்கோ, கமல் அளவுக்கோ இவர்கள் சிறந்த நடிகர்களல்ல! ரொம்ப சாதாரண நடிகர்கள்தான் பாலச்சந்தரும் பாரதிராஜாவும் என்பதை புரிஞ்சுக்கனும். எஸ் பிக்ச்சர்ஸ் புது முயற்சிதான் சிகரத்தையும், இமயத்தையும் வெள்ளித்திரையில் காட்டும் இந்த முயற்சி.
பாலசந்தரும், பாரதிராஜாவும் நடிகர்களாக தோற்காவிட்டாலும், இவர்களை வைத்து இயக்கிய இயக்குனர் தாமிரா வெற்றியடையவில்லை என்பதே விமர்சகர்களின் ஏகமனதான தீர்ப்பு! ஆனால் கார்த்திக் ராஜாவின் இசை ந்ல்லாயிருக்குனு சொல்றாங்க!
விமர்சகர்களின் பார்வையில் உள்ள மதிப்பீடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Behindwoods: Verdict: 2/5
*****
Rediff: Rediff Rating: 2/5
*****
Sify: Sify Rating: Big Bore!
Indiaglitz: பெருசா எதுவும் பாராட்டவில்லை!
எல்லா விமர்சகர்களுமே படத்தை பாராட்டமுடியாமல் ரொம்ப கஷ்டப்படுகிறார்கள்.
பதிவுலக விமர்சகர்கள் என்ன் தீர்ப்பு வழங்கியிருக்காங்கனு நான் இன்னும் பார்க்கவில்லை. எது எப்படியானாலும் கடைசியில் மக்கள் தீர்ப்பே படத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கும்! அது என்னனு இன்னும் 2 வாரத்தில் தெரியும்.
இன்னொரு வதந்தி என்னனா, பாரதிராஜா கொஞ்சம் உள்ளே நுழைந்து இயக்குனருக்கு படவோட்டம், மற்றும் முடிவு எப்படியிருந்தால் நல்லாயிருக்கும்னு வலியுறுத்தி அவைகள் சம்மந்தமான அறிவுரைகளை அள்ளி வழங்கினாராம். அதுக்கப்புறம் இவர்களுக்கிடையில் சில மனக்கசப்புகள் ஏற்பட்டுவிட்டதாகவும் பிறகு படத்தை முடிக்க பெரும்பாடாகிவிட்டதாக் சொல்றாங்க! :(
4 comments:
HI VARUN.. movie is not that much worst.. its good entertainer only...i laughed in many places.. some places are bore.. but some scenes are very touching...
yet to see the movie. :-)
***லோகேஷ்வரன் said...
HI VARUN.. movie is not that much worst.. its good entertainer only...i laughed in many places.. some places are bore.. but some scenes are very touching...
25 April 2010 9:56 PM***
Thanks. I would certainly watch it as soon as the dvd comes out. :-)
***Chitra said...
yet to see the movie. :-)
25 April 2010 10:28 PM***
I suspect they will screen this movie in big screen here but I will watch it in dvd to see KB and BR as actors. I dont know how long it is going to take for the dvd to come out, though :-)
Post a Comment