சாக்கடை அள்ளுறதெல்லாம் புனிதமான வேலை! என்ன இருந்தாலும் அவர்கள் அசுத்தத்தை சுத்தம் செய்றாங்க. ஆனா அந்தமாதிரி நல்லவேலையைச் செய்ய நம் "உயர் மக்கள்" எவனும் முன்வரமாட்டான்! நம்ம ஊர்ல உயர்சாதி இந்தியனுக்கு என்னைக்குமே மூளை மழுங்கியதுதான்! இல்லாத கடவுளுக்கு ஓடி ஓடி சேவை செய்வான்! இதுபோல் நல்லவேலை செய்றவங்களை கீழ்சாதினு கேவலப்படுத்துவான்! இவந்தான் உயர்சாதியாம்! வேடிக்கையான உலகம் இது!
ஆமா அசுத்தத்தை அகற்றும் அவங்களுக்கு எவ்வளவு சம்பளம்?
ஆமா, நம்மை ஆளுகிறவன் சாக்கடை அள்ளுபவன் சம்பளத்தை அதிகமாக்கினால் என்ன? மாதம் ரெண்டு லட்சம், ஏன் ஐந்து லட்சம் இவர்களுக்கு சம்பளம் என்றுதான் ஆக்கினால் என்ன?! எவனுமே செய்யத் துணியாத ஒரு கஷ்டமான வேலைக்கு அதிகச் சம்பளம் கொடுத்தால் என்ன? சமுதாயத்துக்கு உதவிக்கொண்டே அவனும் அவங்க பிள்ளைகளை நல்லாப் படிக்க வைக்கலாம். அப்போத்தானே அவங்களும் நாளைக்கு ஒரு நல்ல படிப்புப் படிச்சு ஒரு உயர்தர வாழ்க்கை வாழ வாய்ப்வாவது அமையும்! இப்படியெல்லாம் மூளைமழுங்கிய நம்மாளு யோசிப்பானா?.அசுத்தத்தை சுத்தம் செய்யனு ஒரு சாதியை உருவாக்கி அவர்களை சிறுமைப்படுத்தி பொழைப்பை ஓட்டும் கீழ்த்தரமானவனுக இல்லையா இந்த உயர்சாதி இந்தியர்கள்?
பிரகாஷ், தனக்குள்ளே பேசிக்கொண்டான்.என்ன தொழில் இது? பணத்துக்காக! நான் செய்யும் வேலையில் காமப் பசியைத்தான் தூண்டுறேன். அறியாச் சிறுவர்களை கெடுக்கிறேன். எவ்வளவு ஒரு கேவலமான தொழில் இது! நிச்சயமாக ஒரு வேசி செய்றதைவிட கேவலமான தொழில்! ஆனால் இன்னும் வயித்துப்பொழைப்புக்காக அதே வேலையில்தான் தொடர்ந்து இருக்கான், பிரகாஷ். யாருக்குத் தெரியப்போது பிரகாஷ், என்ன தொழில் செய்றான்னு? அவன் வேசியைவிட கேவலமானவன் என்று எனக்கு அவனுக்கு மட்டும்தானே தெரியும்? அதையெல்லாம் வெளியே சொல்ல அவன் என்ன முட்டாளா?
பிரகாஷ் படிச்சதென்னவோ சாஃப்ட் வேர் இஞ்சினியரிங்தான். இருந்தாலும் அவன் இன்று தான் என்ன தொழில் செய்கிறேன் என்று வெளிப்படையாக யாரிடமும் தைரியமாகச் சொல்லமுடியாத ஒரு அவல நிலை. ஆமா இன்னைக்கு லட்ச லட்சமாக சம்பாரிக்கும் ஒரு சாஃப்ட்-போர்ன் -இஞ்சினியர் தான் நம்ம பிரகாஷ்! அப்படினா? போர்ன்சைட் நடத்துறவங்களுக்கு வெப்-டிசைனர் மற்றும் தள அட்மினிஸ்ட்ரேட்டர்! மூக்கை நுழைத்து அவனிடம் கேள்வி கேட்பவர்களிடம் "வொர்க்ல கான்ஃபிடென்ஷிலாலிட்டி அக்ரிமெண்ட் சைன் பண்ணியிருக்கேன் அதனால வேலை சம்மந்தமாக எல்லாம் வெளியில் சொல்ல முடியாது" என்று சப்பை கட்டிக்கொள்வான்.
இந்த "புனிதமான வேலை" செய்துதான் சமூகத்துக்கு உதவிக்கொண்டே லட்சலட்சமா சம்பாரிக்கிறான், பிரகாஷ்! ஆனால் பிரகாஷ் எத்தனை "சோப்" போட்டுக்குளிச்சாலும், எத்தனை "டீ-யோடரைசர்" பயன்படுத்தினாலும், ஏன் "ப்ளீச்" போட்டு உடம்பை ஊற வைத்துக் குளித்தாலும்கூட அவன் "மன நாற்றம்" என்றுமே அவனைவிட்டு அகன்றதில்லை!
************************
ஏற்கனவே வாசித்ததுதானா?
மன்னிக்கவும்!
ஆமாம், இதுவும் மீள்பதிவே!
5 comments:
மீள் பதிவு என்றாலும் தூள் பதிவு !
***Bagawanjee KA said...
மீள் பதிவு என்றாலும் தூள் பதிவு !***
வாங்க பகவான் ஜி! நன்றி :)
//ஆமா, நம்மை ஆளுகிறவன் சாக்கடை அள்ளுபவன் சம்பளத்தை அதிகமாக்கினால் என்ன? மாதம் ரெண்டு லட்சம், ஏன் ஐந்து லட்சம் இவர்களுக்கு சம்பளம் என்றுதான் ஆக்கினால் என்ன?! எவனுமே செய்யத் துணியாத ஒரு கஷ்டமான வேலைக்கு அதிகச் சம்பளம் கொடுத்தால் என்ன? //
absolutely! உண்மையான புரட்சி இதன் மூலம் நிச்சயம் ஏற்படும்!
துப்புரவுப் பணியாளர்களுக்கு நல்ல சம்பளம் கொடுக்கத் தான் வேண்டும். அப்போதுதான் மற்றவர்களும் இந்த வேலையில் ஈடுபட முன்வருவார்கள்
பிரகாஷுக்கு கொஞ்சமாவது குற்ற உணர்ச்சி இருக்கிறதே.அதற்காகவாவது சந்தோஷப் படவேண்டியதுதான்
வாங்க "பந்து" மற்றும் முரளி. கருத்தரைகளுக்கு நன்றி.
அட் லீஸ்ட் இவர்கள்போல் எளியவர்களைப் பார்க்கும்போது, அவர்கள் இடத்தில் நம்மை நிறுத்தி ஒரு நிமிடமாவது அவர்கள் கஷ்டங்களை யோசிச்சுப் பார்க்கணும். அதுக்குத்தான் நமுக்கு ஆறாவது அறிவு இருக்கு? இல்லையா? :)
Post a Comment