Tuesday, February 18, 2014

ஆல் மென் ஆர் பாஸ்டர்ட்ஸ்- எட்டு

அடுத்த முறை மாணிக்கத்தை "ஹால்வே" ல பார்த்தபோது "ஹாய்" என்பதோட போய் கடந்து போய்விட்டான் மோகன். மாணிக்கத்திடம் இருந்து எளிதாக  ஒதுங்கிவிட்டான். அவன் பார்வையில் இந்த மாணிக்கத்தோட நட்பு பாராட்டித்தான் வாழணும்னு எந்தவிதமான தேவையுமில்லை.   இவன் இருந்தால் என்ன? வாழ்ந்தால் என்ன? செத்தால் என்ன? எந்த வகையில்  இவன் இருப்பு அல்லது இறப்பு என் வாழ்க்கையை பாதிக்கும்? என்கிற ஒரு வாதம். வேடிக்கை என்னவென்றால் மோகனுக்கு சம்மந்தமே இல்லாத, அவனை  எந்த வகையிலும் பாதிக்காத, ஒரு சில சின்னச் சின்ன விசயங்கள்கூட இதுபோல் அவன் மனதை பாதிக்குது.

ஆமா மாணிக்கம் யாரு? மாணிக்கம் எவளோடு போனால் மோகனுக்கென்ன? இவனுக்கென்று ஒரு தராசு. அதை வைத்து அவன் ஒவ்வொருவரையும் நிறுப்பதுதான் நிறை. மற்றவர்களைப் பற்றி அவனுக்குக் கவலையில்லை!

ஒரு முறை "தமிழ் சங்கம்" ஏதோ பிக்னிக் நடத்தியதென்று திடீர்னு போகலாம்னு "மூட்:  வந்து போகலாம என்று மோகன் புறப்பட ஆயத்தமானான். லூசு  விஜியை, "வர்ரியாடி"னு க் கூப்பிட்டால்,  "நான் அதுக்குனா வர்ரேன், மாட்னி ஷோ போலாம்" " தமிழாவது சங்கமாவது ஆளை விடு நான் வரலை"னு முடிவா சொல்லிட்டாள். சரி "இவ தொலைகிறாள்" னு சரியாக காரை ஸ்டார்ட் பண்ணப் போகும்போது காரில் "ஃப்ளாட் டயர்" இருப்பதைப் பார்த்தான். என்னதான் ஜாக்கி வைத்து அவனா டயரைகஷ்டப்பட்டு மாற்றினாலும்  சரி,  இல்லைனா ட்ரிபிள் "ஏஏஏ" வை அழைத்து உதவி வாங்கினாலும், அந்த ஸ்டெப்னி டயரோட 25 மைல்ஸ் போறது கஷ்டம். நேரம் ஆகிவிடும். சரி, தமிழ் நண்பர்களை செல் ஃபோனில் அழைத்து அவங்க ப்ளான் என்ன? அவனுக்கு ரைட் கொடுக்க முடியுமா? என்று கேட்டுப் பார்த்தான்.  அவன் நண்பன் பாஸ்கருடைய  ஆரம்பமே ஒரே இழுவையா இருந்தது.. "அங்க வந்து உன்னை பிக் அப் பண்ணனுமா?" னு இழுத்துக்கிட்டே கேட்டதும், "சரி விடு,  நான் வேற யாரையாவது கேட்கிறேன்" என்று முடித்துவிட்டு வீட்டிலேயே இருந்து "என் எஃப் எல்" பார்க்க ஆரம்பித்து விட்டான்.

அடுத்த முறை பாஸ்கரைப்  பார்க்கும்போது, அவனிடம் பாஸ்கர்  "என்னடா தமிழ் பிக்னிக் வரலையா? வேற யாரிடமும் "ரைட்" கெடைக்கலைனா இன்னொரு முறை என்னைக் கூப்பிட்டு இருக்கலாம் இல்ல?" னதும் "இல்லடா நான் ஃபுட் பால்" பார்த்தேன். அப்படியே நேரம் போயிடுச்சு"  னு சொல்லி முடிச்சான். அதோட விட்டுத் தொலையாமல்  "நீ என்னை இன்னொரு முறை கூப்பிட்டு இருக்கலாம்"னு மறுபடியும் பாஸ்கர் சொன்னதும் பயங்கர  கடுப்பாயிட்டான். "பாஸ்கர்! I am not in a fucking mood to  hear about your bullshit?" I asked for your help!  A FUCKING RIDE. You were not willing to give a fucking ride! Now, why do you start all these bullshit again? Would you shut the fuck up and move on?" என்றான் சத்தமாக. பாஸ்கர்,
என்னடா இவன் லூசா இருப்பான் போல னு ஒதுங்கிப் போயிட்டான்.

இவன் கத்துறதப் பார்த்து பாஸ்கருக்கு வக்காலத்து வாங்க வந்த இன்னொரு விஜய்யும் இவனிடம்  வாங்கிகட்டிக்கிட்டு போனான், "What the fuck you want now? Why dont you mind your fucking business? ஆமா என்ன மயிருக்குடா தமிழ் தமிழன் தமிழ்ச் சங்கம்னு ஏதோ சொல்லிக்கிட்டு அலையிறீங்க? இன்னொரு தமிழன் ஒருத்தனுக்கு ஒரு நாளைக்கு ஒரு "ரைட்" கொடுக்க வக்கில்லை. ஒண்ணாக்கூடி என்னகிழிக்கிறீங்க?  ஆமா,  நீங்க எல்லாருமா ஒண்ணாச் சேர்ந்து கூடி என்ன  சாதிக்கப் போறீங்க?னு கத்த ஆரம்பிச்சுட்டான்.


விஜியை அடுத்த வாரம் அவள் அப்பார்ட்மெண்ட் ல பார்க்கும்போது, அவளும் விடாமல்,

 "என்ன எப்படி இருந்தது தமிழ் சங்கம் பிக்னிக்?"னு கிண்டலான தொணில  கேட்டாள்.

"நீதான் வரலைனு சொல்லீட்ட இல்லை! அப்புறம் என்ன? அன்னைக்கு ரேச்சல்லோட ஒரு "சின்ன டேட்", அவளை தமிழ் சங்கம் பிக்னிக் அழச்சுண்ட்டு போனேன்!  சமூசா, பஜ்ஜினு நம்ம தயாரிக்கிற ஐட்டத்தை எல்லாம் நல்லா மொக்கு மொக்குனு மொக்குறா, ரேச்சல். எல்லாரும் எங்களையேதான், இல்லை அவளையேதான், எங்கடா இவளைப் பிடிச்சான் இவன்னு  வேடிக்கை பார்த்தாங்க! It was fun, விஜி" னு அவளுக்கு கோபத்தை கிளப்பினான்.

இந்தமுறை படார்னு கன்னத்தில் ஒரு அறை விழுந்தது.

அறைந்துட்டு கோபத்தில் அவனை  முறைத்துப்பார்த்தாள், விஜி! அறைந்தது வலிக்கவில்லை! அவளின் அந்தப்பார்வை கூட அவனுக்கு "செக்ஸியாதான்" இருந்தது.

-தொடரும்

 ஆல் மென் ஆர் பாஸ்டர்ட்ஸ்! -ஏழு

No comments: