குற்றம் சாட்டப்பட்ட கணிதப் பேராசிரியை நிர்மலாதேவி |
சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் நிர்மலா தேவி அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-
எனக்கும், அருப்புக்கோட்டையை சேர்ந்த சரவண பாண்டியன் என்பவருக்கும் 1996-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். 2003-ம் ஆண்டு எனது கணவர் சென்னையில் பணிபுரிந்தபோது, கிழக்கு தாம்பரத்தில் குடும்பத்துடன் வசித்துவந்தோம். அப்போது, பக்கத்து வீட்டு பெண்ணுடன் எனது கணவருக்கு தொடர்பு ஏற்பட்டது. இதனால், எங்கள் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு, நான் தற்கொலைக்கு முயற்சி செய்தேன்.
எனது உறவினர்கள், கணவர் செய்யும் தவறுகளை தட்டிக்கேட்கக்கூடாது என்று என்னை கண்டித்தனர். அதன்பிறகு, எனது கணவர் அவருடைய நண்பர்கள் சிலருடன் நெருக்கமாக பழக என்னை வற்புறுத்தினார். இதனால், எங்கள் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது சமாதானம் செய்ய வந்த எனது உறவினருடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டது. நாங்கள் இருவரும் நெருங்கி பழகினோம்.
அதன்பிறகு, 2008-ம் ஆண்டு எனது கணவருக்கு பணி மாறுதல் ஏற்பட்டதால், நான் குழந்தைகளுடன் அருப்புக்கோட்டையில் உள்ள மாமனார் வீட்டில் தங்கினேன். அப்போது, எனது கணவர் முயற்சியால் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியில் கணிதத் துறையில் உதவி பேராசிரியர் பணி கிடைத்தது. 2009-ம் ஆண்டு சவுதி அரேபியாவுக்கு எனது கணவர் வேலை பார்க்க சென்றார். அவருக்கு அந்த பணி பிடித்திருந்ததால் தொடர்ந்து அங்கேயே இருந்தார்.
குற்றம் சாட்டப்பட்ட ஆண்கள் |
நான் பணிபுரிந்த தேவாங்கர் கலை கல்லூரியின் நிர்வாக குழுவில் நிறைய பிரச்சினைகள் இருந்தது. 2011-ம் ஆண்டு எனது கணவரின் தம்பி மகனுக்கு மொட்டை போடுவதற்காக சங்கரன்கோவில் சென்றபோது, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே பிரச்சினை இருந்தது.
நான் அவருடன் நெருக்கமாக பழகினேன். இது எனது கணவருக்கும் தெரியும். எனக்கு அவர் வாங்கிக் கொடுத்த செல்போனை எனது கணவர் தான் வைத்திருந்தார். அவர் என்னை திருமணம் செய்ய விரும்பினார். ஆனால், எங்கள் இருவருக்கும் இடையே இருந்த தொடர்பால் அவருக்கு பணிபுரிந்த இடத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால், அவர் சென்னைக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், 2016-ம் ஆண்டு எனது கணவர் சரவண பாண்டியன், சவுதி அரேபியாவில் இருந்து அருப்புக்கோட்டைக்கு வந்து, அங்கேயே நகராட்சி ஒப்பந்தபணிகளை எடுத்து செய்து வந்தார். அதில், அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. கடும் பண நெருக்கடி உண்டானது. இந்த நேரத்தில், எங்கள் கல்லூரியின் முன்னாள் செயலாளருடன் நான் நெருங்கிப்பழக ஆரம்பித்தேன். அவர் எனக்கு அவ்வப்போது பணம் கொடுப்பார்.
அதன்பிறகு, எனது கணவர் கரூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சப்-காண்டிராக்ட் எடுத்து தொழில் செய்து பார்த்தார். அதிலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை. இதனால், எனக்கும், எனது கணவருக்கும் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. பிரச்சினையை தீர்த்து வைக்க எனது கணவரின் நண்பர்கள் ராஜூ, ராமச்சந்திரன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மற்றும் சிலர் வந்தனர். அவர்களுடனும் எனக்கு நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. இந்த விஷயத்தை தெரிந்துகொண்டதால், எனது கல்லூரியில் வேலைபார்ப்பவர்கள் யாரும் என்னுடன் சரியாக பேசுவது கிடையாது. நானும் எந்த விஷயத்திலும் தலையிடமாட்டேன்.
இந்த சூழ்நிலையில், எனது கணவர் என்னை அடித்து துன்புறுத்தத் தொடங்கினார். இதனால், 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி நான் சென்னை வந்துவிட்டேன். அப்போது, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரியை மீண்டும் சந்தித்தேன். திருப்பதி, சென்னை என்று பல இடங்களுக்கு சென்றேன். 24 நாட்களுக்கு பிறகு அருப்புக்கோட்டை வீட்டுக்கு திரும்பிவிட்டேன்.
அருப்புக்கோட்டையில் சொக்கநாதர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்து நாங்கள் பராமரித்து வந்தோம். அதில் ஏற்பட்ட பிரச்சினையை தீர்ப்பதற்காக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ராமநாதனை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சந்தித்து பேசினேன். எங்கள் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டு, உல்லாசமாக இருந்தோம். அருப்புக்கோட்டையில் நகைக்கடை அதிபர் ஒருவருடனும் எனக்கு நெருக்கம் ஏற்பட்டது. அவருடனும் நான் உல்லாசமாக இருந்தேன்.
2016-ம் ஆண்டு நான் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு சென்றபோது, அங்கு இருந்த அதிகாரியுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருக்கமாக இருந்தோம். நான் 1992-1994-ம் ஆண்டுகளில் பானு சத்திரிய கல்லூரியில் எம்.எஸ்சி. கணிதம் படித்த காலத்தில், வணிகவியல் துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்தவர் எனக்கு தெரியும். அவரது தொலைபேசி எண்ணை 3 ஆண்டுகளுக்கு முன்பு நான் வாங்கி பேசினேன். அன்று முதல் அவருடன் தொடர்பில் இருந்து வந்தேன்.
தற்போது, அவர் வெளி கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளராக வகுப்புகள் நடத்தி வருகிறார். நானும் அவரைப்போல் கவுரவ விரிவுரையாளராக ஆசைப்பட்டு, அவரிடம் உதவி கேட்டேன். இது தொடர்பாக, அடிக்கடி அவருடன் போனில் பேசுவேன். வாட்ஸ்-அப்பிலும் தகவல்களை பரிமாறிக்கொள்வேன். அப்போது, அவர் ஏதாவது கல்லூரிக்கு கவுரவ விரிவுரையாளராக சென்றால், அதை போட்டோ எடுத்து எனக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்புவார். அவர் 2017-ம் ஆண்டு 2 முறை எனது வீட்டிற்கு வந்து என்னுடன் நெருக்கமாக இருந்துள்ளார்.
2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடந்த புத்தாக்கப் பயிற்சியில் சேருவது சம்பந்தமாக அவரை சந்தித்து பேசினேன். அப்போது அவர் அதே பல்கலைக்கழகத்தில் வணிகவியல் துறையில் உதவி பேராசிரியராக உள்ள முருகன் என்பவரை தொடர்புகொள்ளுமாறு எனக்கு அவரது செல்போன் எண்ணை கொடுத்தார். நானும் உடனே முருகனை செல்போனில் தொடர்பு கொண்டு என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, புத்தாக்கப் பயிற்சியில் சேர வாய்ப்பு தருமாறு கேட்டுக்கொண்டேன். அதன் பிறகு அவரை நேரில் சந்தித்தும் பேசியிருக்கிறேன்.நவம்பர் மாதம் கடைசி வாரத்தில் தேவாங்கர் கலைக் கல்லூரியில் செமஸ்டர் தேர்வு விடைத்தாள்களை நான் திருத்திக்கொண்டிருந்தபோது முருகனிடம் இருந்து எனக்கு போன் வந்தது. அன்று அவர் அருப்புக்கோட்டைக்கு வந்திருப்பதாகவும், என்னை சந்திக்க முடியுமா? என்றும் கேட்டார். நானும் விடைத்தாள் திருத்தி முடித்தவுடன் மாலை 3 மணிக்கு மேல் காந்திநகர் பஸ் நிலையத்துக்கு வருவதாக கூறினேன். அவரும் அங்கு எனக்காக காத்திருந்தார். நான் காரில் சென்று அவரை எனது வீட்டிற்கு அழைத்து வந்தேன். அப்போது, என்னுடன் அவர் உல்லாசமாக இருந்தார்.
அதன்பிறகு, எனது மகளின் சடங்கு ஆல்பத்தை அவருக்கு காண்பித்தேன். அதை பார்த்துவிட்டு உன்னுடைய மகளும் வருவாளா? என்று என்னிடம் கேட்டார். நான் அதற்கு அவள் ஒப்புக்கொள்ளமாட்டாள் என்று சொல்லிவிட்டேன். அதற்கு அவர், உங்கள் சொல்படி கேட்டு ஒத்துழைப்பு கொடுக்கின்ற கல்லூரி மாணவிகள் யாராவது இருக்கின்றார்களா? என்று என்னிடம் கேட்டார். அவர் கல்லூரி மாணவிகளுடன் உல்லாசமாக இருக்கத்தான் கேட்கிறார் என்பதை நான் புரிந்துகொண்டேன். அதற்கு நான் எங்களது கல்லூரி நிலவரம் தற்போது சரியில்லை. இப்போது வேண்டாம் என்று கூறிவிட்டேன்.
இந்த ஆண்டு (2018) பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி தேர்வுத்தாள் திருத்தும் பணிக்கான அழைப்பு உத்தரவு எனக்கு வந்தது. கல்லூரி செயலாளர் அனுமதியுடன் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு நான் வந்தேன். அந்த சமயத்தில் நான் அங்கிருந்த முருகனை சென்று சந்தித்து, வழிநடத்துவது விஷயமாகவும், புத்தாக்கப் பயிற்சி விஷயமாகவும் அவரிடம் ஞாபகப்படுத்திவிட்டு வந்தேன்.
அதன்பிறகு, மார்ச் 7-ந் தேதி புத்தாக்கப் பயிற்சியில் நான் சேர்வதற்கான உத்தரவு கல்லூரி அலுவலகத்திற்கு வந்தது. அந்த தகவலை பார்த்துவிட்டு, முருகனிடம் நான் செல்போனில் தெரிவித்தேன். நான் அங்கு வரும்போது அவரை நேரில் சந்திப்பதாகவும் கூறினேன். மார்ச் 9-ந் தேதி காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு சென்று புத்தாக்கப் பயிற்சியில் சேர்ந்தேன். மதிய உணவுக்காக அங்குள்ள கேண்டீனுக்கு சென்றபோது, முருகனுக்கு போன் செய்து, அவரை பார்க்க விரும்புவதாக கூறினேன். அவரது துறை அலுவலகத்துக்கு வரச்சொன்னதால், அங்கு சென்றேன்.
அப்போது முருகன் என்னிடம், “என்னம்மா இப்போது நிலைமை சரியாகிவிட்டதா?. கல்லூரி மாணவிகளிடம் பேசி ஏற்பாடு செய்ய முடியுமா?” என்று மீண்டும் கேட்டார். “நான் சில மாணவிகளின் விவரங்களை தெரிந்துவைத்துள்ளேன். அவர்களிடம் பேசி ஏற்பாடு செய்கிறேன்” என்று கூறினேன். அதன்பிறகு, கருப்பசாமி என்பவரின் செல்போன் எண்ணை முருகன் என்னிடம் கொடுத்து, பல்கலைக்கழகத்தில் எந்த உதவி வேண்டுமானாலும் அவரை தொடர்பு கொள்ளுமாறு என்னிடம் கூறினார். கருப்பசாமியை நான் நேரில் சந்தித்து பேசினேன்.
மார்ச் 12-ந் தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நான் இருந்தபோது, கருப்பசாமி எனக்கு போன் செய்து, தொலைதூர கல்வி அலுவலகத்துக்கு வரும்படி கூறினார். உடனே, நான் அங்கு சென்றேன். அங்கு கருப்பசாமி இயக்குனரை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். அவருடைய பெயர் எனக்கு தெரியாது.
அங்கிருந்து புறப்பட்டபோது, நானும் உங்களுடன் காரில் வருகிறேன் என்று கருப்பசாமி கூறியதால் அவருக்காக காத்திருந்தேன். அவர் வந்தவுடன் கருப்பசாமியின் சொந்த ஊரான திருச்சுழிக்கு எனது காரில் கிளம்பினோம். போகும் வழியில் காரை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு, காரில் நாங்கள் இருவரும் உல்லாசமாக இருந்தோம். அங்கிருந்து புறப்பட்டபோது, கருப்பசாமி என்னிடம், அடுத்தவாரம் சென்னை செல்வதாகவும், அந்த சமயத்தில் கல்லூரி மாணவிகளை ரெடி பண்ணி தருவீர்களா? என்று கேட்டார். நானும், முயற்சி செய்து பார்க்கிறேன் என்று சொன்னேன். ஆனாலும், தொடர்ந்து அவர் இதே விஷயத்தை என்னிடம் வலியுறுத்தினார். அதன்பிறகு, அவரை வீட்டில் இறக்கிவிட்டுவிட்டு, நான் எனது வீட்டிற்கு வந்துவிட்டேன்.
முருகன் மற்றும் கருப்பசாமி இருவரும் என்னிடம் தொடர்ந்து நேரிலும், போனிலும் கேட்டுக்கொண்டதால், மார்ச் 12-ந் தேதி இரவு முதலே நான் என்னுடைய செல்போனில் இருந்து, எங்கள் கல்லூரி கணிதத்துறையில் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவிக்கு சூசகமாக பல எஸ்.எம்.எஸ். அனுப்பினேன். இந்த விஷயத்தை உடன் படிக்கும் மேலும் 3 மாணவிகளுக்கும் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொண்டேன்.
இவ்வாறு சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் வாக்குமூலம் அளித்த நிர்மலா தேவி, தொடர்ந்து பல அதிர்ச்சிகரமான தகவல்களையும் தெரிவித்துள்ளார். அது என்னவென்பது,
நன்றி மாலைமலர்!
அதென்ன திறந்த கல்யாணம்?
ஓப்பன் மேரேஜ் என்பார்கள். கணவன் மனைவிக்கு இடையே ஒரு புரிதல். அதாவது நீ எப்படி வேணாப் போ, யாரோடனாலும் உறவு வைத்துக்கொள். அதேபோல் என்னையும் கண்டுக்காதே!
மேலே சொல்லப்பட்டதை பொய் வாக்குமூலம் என்கிறார்கள். இது பொய்யினா அப்போ உண்மை எப்படி இருக்கும்?
ஒரு பக்கம் "மீ-டூ" னு பெண்கள் ஒப்பாரி வைக்கிறாங்க. இன்னொரு பக்கம் இந்தம்மா மாதிரி பெண்கள் எல்லாவற்றிற்கும் துணிந்து விட்டார்கள். பலர் சாதரணாமாக குடிச்சுட்டு ஆடுறாங்க. சாதாரணமாக டேட்டிங்னு போயி ப்ரி மாரிட்டல் செக்ஸ் வச்சுக்கிறாங்க.
காலம் மாறிவிட்டது. நாம் முன்னேறிவிட்டோம். பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது. நமது கலாச்சாரம் இன்னும் கொஞ்சம் சாக்கடையாகி உள்ளது.
இதற்குத்தான் பாரதி ஆசைப்பட்டானா? இந்த சாக்கடை கலாச்சாரத்தை உருவாக்கத்தான் பெண் உரிமை பேசினானா, பாரதி?
கொசுறு:
ஷாலினினு ஒரு மன மருத்துவர் (மன நோயாளி) ஆண்-பெண் உறவுனு என்னத்தயோ ஒளறிக்கிட்டு அலைகிறது.
இவர் ஒளறல் பத்தி ஏற்கனவே விமர்சிச்சு இருக்கேன்.
டாக்டர் ஷாலினியின் கிளர்ச்சி ஸ்விட்ச் -விமர்சனங்கள்
கல்யாண் என்னும் டான்ஸ் மாஸ்டர் பற்றி வந்த "பொய் குற்றச்சாட்டு ட்வீட்டை" உண்மையானதுனு நம்பி "ரீட்வீட்" செய்து அவமானப்படுத்திய சின்னமாயி அவரிடம் தன் தவறுக்கு மன்னிப்பு கேட்கவில்லை என்கிறார் பலியான அவர்! அந்தளவுக்குத்தான் நாகரிகம் இல்லாமல் படித்த "மீடூ"ப் பெண்கள் இருக்காங்க!