Friday, May 24, 2019

மரணப்படுக்கையில் ம நீ ம. எல்லா இடத்திலும் டெபாசிட் காலி!

ம நீ ம வேட்பாளர்கள் போட்டியிட்ட எல்லா இடத்திலும் டெப்பாசிட் காலி என்பதே உண்மை நிலவரம். அதைச் சொல்லாமல், ம நீ ம பெரிய மூனாவது சக்தியா உருவாகி, மூனாவது இடத்தில் வந்துட்டாரு, நாலாவது இடத்தில் வந்து மண்ணக் கவ்விட்டாருனு சொல்லி சப்பை கட்டு கட்டி காமெடி பண்றானுக தமிழ் மீடியாக்கள்.

பதிவான மொத்த வாக்கில் 16% வாங்கினால்தான் டெபாசிட் கிடைக்கும் என்கிறார்கள். எனக்குத் தெரிய எந்த ஒரு தொகுதியிலும் ம நீ ம வேட்பாளரும் 16% பெறவில்லை.

நகரங்களாவது பரவாயில்ல, கிராமங்கள் (கிராமம்தான் எங்களுக்கு ரொம்ப முக்கியம்ணு சொல்லிக்கிட்டு அலைந்த??) பக்கம் 1-2% ஓட்டுத்தான் விழுந்து இருக்கு!

இவரு அப்துல் கலாம் வீட்டிலிருந்து கட்சி ஊர்வலம் ஆரம்பிச்சாரு. பொறந்த ஊரு பரமக்குடி. சரி இராமநாதபுரம் தொகுதியிலே என்ன ஓட்டு வாங்கி இருக்காரு நம்ம பலிகடா விசயபாசுகர்னு பார்த்தால்
2 %  ஓட்டு வாங்கி இருக்காரு. டெபாசிட்க்கு சான்ஸே இல்லை

ட்விட்டர்ல நாலு பேரு ஃபாலோ பண்ணதும், தப்புக் கணக்குப் போட்டு, மரண அடி வாங்கியாச்சு. இப்போவாது திருந்துவியா?
அனேகமாக கெளதமி, வாணி எல்லாம் மோடியின் வெற்றியையும் மநீம வின் பரிதாப நிலையைப் பார்த்து கொண்டாடி டான்ஸ் ஆடி செலெப்ரேட் பண்ணி இருப்பாங்க- இந்தாளு மண்ணைக் கவ்விய நிலையைப் பார்த்து.

சும்மா அப்துல் கலாம் என் தந்தையார், பாரதி என் தாத்தா, காந்தி என் பாட்டன்னு பீலா விட்டுக்கிட்டு திரிய வேண்டியதுதான். நீ பண்ற காந்தி-கோட்சே அரசியல் எல்லாம் இன்றய தமிழ்நாட்டில் எடுபடாது. அப்படியே எடுபட்டாலும் திமுக வுக்குத்தான் அந்த ஓட்டும் போகும்போல!

அந்தாளு மோடி தமிழ்நாட்டைத் தவிர எல்லா மாநிலங்களிலும் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளார். நீ இன்னும் வாய் கிழியப் பேசுற?!!

இவரு, நம்ம மோடிக்கு  அட்வைஸ், ஓட்டே போடாத தமிழ் நாட்டையும் மோடி ஓர வஞ்சனை இல்லாமல் கவனிக்கனுமாம்.
அடேங்கப்பா! 4% ஓட்டு வாங்க வக்கில்லை! அறிவுரை வேற!

தமிழ்நாட்டு மக்கள் மோடியை பிரதமராக்கலையாம்ப்பா. மோடிக்கு ஓட்டுப் போடலையாம். இந்த மேதை கண்டுபிடிச்சு கிழிச்சுட்டாரு!!

சரி,  பி ஜெ பி போட்டியிட்ட இடங்களீல் தமிழ்நாட்டில் ம நீ ம என்னத்தைத்தான் புடுங்குச்சுனு பார்ப்போம்,

கன்னியாகுமரி, இராமநாதபுரம், தூத்துக்குடி, இந்த மூனு  தொகுதியிலும். பி ஜெ பி எத்தனை லட்சம் ஓட்டு வாங்கி இருக்கு, ம நீ ம வேட்பாளர் எத்தனை ஆயிரம் வாக்கு பெற்றிருக்கார்கள்னு பார்த்தால் உன் வண்டவாளம் எல்லாம் தண்டவாளத்தில் ஏறிடும். நீயும் கோட்சே அவன் தாலினு சொல்லிக்கிட்டு அலைஞ்ச, ஆனா என்ன பண்றது  ஒரு பய மதிக்கலை!

ம நீ ம பதினாலு மாத குழந்தையாம்ப்பா . ம நீ ம இன்னும் வயசுக்கு வரவே 12-15 வருடமாகுமாம். அப்புறம்தான் எல்லாரையும் கவர்ந்து ஓட்டு வாங்கி கிழிப்பாளாம்!  

ஆமா, குழந்தையை ஏன் எலக்‌ஷன்ல நிக்க வைக்கிற? வளந்து ஆளான பிறகு நிக்க வைக்க வேண்டியதுதானே? குழந்தை அது இதுனு சொல்லு ஒளறித் தள்ளுறான்ப்பா.

 பிரதமாரனதும் மோடி தமிழ்நாட்டைத்தான் ரொம்ப கவனிக்கனுமாம்? இவரு சொல்லிப்புட்டாரு. ஓட்டுப்போடாத மாநிலத்தை என்ன மயிறுக்கு கவனிக்கனும்?! அதான் நீ இருக்கியே கவனிக்க? நல்லா ஜல்லிக்கட்டுனு தூண்டிவிட்டு வேடிக்கை பாரு. 

 எதிரியா இருந்தாலும் வென்றவனை "பாராட்டுவது" நாகரீகம். அதுகூடத் தெரியலை இந்த வெளக்கெண்ணைக்கு!

அனேகமாக ம நீ ம அம்புட்டுத்தான்! கொண்டு போயி குழியத்தோண்டி பொதைக்க வேண்டியதுதான்.


4 comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
வருண் said...

தமிழர் வரலாறூ:

கோயிந்தா கோயிந்தா!!

Candidates of AMMK, MNM, NTK lose deposit in all LS constituencies1!!

* MNM and NTK candidates lost their deposit in all Assembly constituencies they contested for the byelection.

* Candidates from smaller parties such as actor Kamal Haasan-led Makkal Needhi Maiam (MNM), Seeman-led Naam Tamilar Katchi (NTK) and TTV Dhinakaran’s Amma Makkal Munnetra Kazhagam (AMMK), forfeited deposit in all the Lok Sabha constituencies they contested.



G.M Balasubramaniam said...

பாம்புதான் செத்துவிட்டதே அதை இன்னும் அடிக்க வேண்டுமா

வருண் said...

***G.M Balasubramaniam said...

பாம்புதான் செத்துவிட்டதே அதை இன்னும் அடிக்க வேண்டுமா**

உண்மைதான் சார். செத்த பாம்பை குழி தோண்டி புதைத்து பால் ஊற்றீவிடலாம். :)