
காதல்னா என்னனு கேள்வி கேட்டு கேலி செய்து சிரித்தவள், பின்னாளீல் காதலில் விழுந்து, பிறகு காமத்தில் விழுந்து எப்படியெல்லாமோ நினைவில் பறந்து, இன்பத்தில் திளைத்து, கடைசியில்... கடமைக்காக எந்தவித உறூதியும் தராத அவனையும் துறந்து, அந்த உறவை ஒரு இன்ஃபாச்சு வேஷனாக மறந்து, வாழ்க்கையை தொடர்ந்து... நல்ல மனைவியாக, நல்ல துனணவியாக, நல்ல தாயாக வாழ்வது நீ மட்டுமல்ல! இவ்வுலகில் கோடிப் பெண்கள் அப்படித்தான் உன்னைப் போல் வாழ்ந்தார்கள், வாழ்கிறார்கள். நீ மட்டும் 'யுனீக்" அல்ல என்பதை நீ ஏற்றூக்கொள்ளத் தயங்கினாலும் அதுதான் கசப்பான உண்மை.
எங்கும் மனிதர்கள். உலகில் ஜனத்தொகை பெருகிக்கொண்டே போகிறது. இந்தியாவில் 1000 கோடி மக்களூக்கு மேலாகிவிட்டது. எங்கே பார்த்தாலும் மனிதர்கள். எங்கே பார்த்தாலும் மனிதக் கூட்டம். இவர்கள் பெருகப் பெருக தண்ணீர் பஞ்சம். மனிதனால் அசுத்தமாக்கப் பட்ட நதிகள், தீமைதரும் வேதிப் பொருள்கள் கலந்த காற்றூ. "பிற உயிர்களல்லாம் ஒன்னுமே இல்லை மனிதந்தான் உயிர்களீல் சிறந்தவன்" னு இவனே நினைத்துக் கொள்றான். இவ்வுலகே அவனுக்குத்தான் சொந்தமாம். அவன் நெனச்சா நாயையும் பூனையையும் கொஞ்சுவான், பறவைகள சுட்டுக் கொல்லுவான். ஆடு மாடுகள கொன்னு சாப்பிடுவான். பாலை மாட்டிடம் இருந்து திருடுவான், தேனை தேனீக்களீடம் இருந்து பறீத்து சாப்பிடுவான். அவன் வாழ்வதற்காக, அவன் வசதிக்காக, இவ்வுலகில் என்ன வேணா செய்வான். இவன் பண்ற அநியாயத்தை எல்லாம் நியாயப் படுத்த இவன் வசதிக்கு, இவன் மன வியாதியை சரி செய்ய கடவுள்ணு ஒரு கேரக்டரை உருவாக்கி, இவன் மனபிராந்தியைத் தீர்க்க இவனே உருவாக்கிய கடவுள் என்கிற கற்பனையை வணங்கி, வாழ்த்தி, அவனை அவனே ஏமாத்தி கடைசியில் செத்து ஒழிகிறான். இத்தனை சாதாரணமானவந்தான் மனிதன் என்பதை உணராமலே வாழ்ந்து சாவது அதைவிட பரிதாபம்.

வாழ்க்கைனா என்ன?ணு புத்தனுக்குப் புரிந்ததுபோல் எனக்கும் புரிந்ததுபோல் தோனுது. இது அகந்தை அல்ல! உண்மையை உளறூவது அகந்தையும் அல்ல. அறீயாமையும் அல்ல!
மனிதர்கள் மிகவும் சாதாரணமானவர்கள். இதில் நான், நீங்கள், அவள், அவன், அவர்கள் எல்லோரும் அடங்குவார்கள். இதில் பலவகை மனிதர்கள். சந்தர்ப்பவாதிகள், கோழைகள், ஏமாற்றூக்காரர்கள், காமுகர்கள், முட்டாள்கள் இப்படி பலவகை மனிதர்கள். இவர்களால் இவ்வுலகிற்கு எந்த பிரயோஜனமும் கிடையாது. நாளூக்கு நாள் இவ்வுலகை அசுத்தப் படுத்துகிறார்கள். ஏதேதோ உளறூகிறார்கள், நியாயப் படுத்துகிறார்கள். ஆமாம் சாகும் வரை. இவர்கள் செத்த பிறகு இதே வகை மனிதர்கள் பல தோன்றூகிறார்கள் இதே போல் வாழ்கிறார்கள் சாகிறார்கள்.
6 comments:
//இத்தனை சாதாரணமானவந்தான் மனிதன் என்பதை உணராமலே வாழ்ந்து சாவது அதைவிட பரிதாபம்//
உணர்வதற்கான முயற்சிகூட இல்லாமல் செத்தொழிவது இன்னும் பரிதாபம்.
//இவர்கள் செத்த பிறகு இதே வகை மனிதர்கள் பல தோன்றூகிறார்கள் இதே போல் வாழ்கிறார்கள் சாகிறார்கள்//
ஆன்மா, மறுபிறப்பு, சொர்க்கம், நரகம், கடவுள், கடவுள்கள் எல்லாம் மனிதன் என்றென்றும் சாகாமல் இருக்க ஆசைப்பட்டதால் உருவாக்கப்ப்ட்டவைதானே?
தலைப்பில் 'உளறல்கள்' என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். நீங்கள் உளறவில்லை. மனித வாழ்க்கை எத்தனை அவலமானது என்பதை மிக அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
ஔவையார் பாடலின் சில வரிகளை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
'....................................இருந்தேங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம் நினைந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில்'
இந்த பதிவை எழுதியது பாஸ் வருணா அல்லது அட்மினா?
***'பசி'பரமசிவம் said...
//இத்தனை சாதாரணமானவந்தான் மனிதன் என்பதை உணராமலே வாழ்ந்து சாவது அதைவிட பரிதாபம்//
உணர்வதற்கான முயற்சிகூட இல்லாமல் செத்தொழிவது இன்னும் பரிதாபம்.***
சிந்தித்தால் பல உண்மைகள் வெளிவந்துவிடும் எதுக்கு வம்புனு அவாள் சிந்திப்பதில்ல சார். :)
***ஔவையார் பாடலின் சில வரிகளை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
'....................................இருந்தேங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம் நினைந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில்'***
நன்றி சார். :)
***Avargal Unmaigal said...
இந்த பதிவை எழுதியது பாஸ் வருணா அல்லது அட்மினா?***
அது யாருங்க அட்மினி? அப்படி யாரும் இந்தத் தளத்தில் "நடத்துனர்" இப்போது இல்லைங்க! :)
Post a Comment