"என்னடி வித்யா, ஒரே யோசனை? முகத்தில் ரத்தம் பாயுது? காஃபியைக் குடி. ரொம்ப கோல்ட் ஆகுது" என்றாள் தோழி லாவண்யா.
"ஒண்ணூமில்லடி, சும்மா இந்த ஆம்பளைங்க பத்தி யோசித்தேன்" என்றாள்.
"நீ பேசாமல் என்னைக் கல்யாணம் பண்ணி இருக்கலாம்? நீ வாடினா நான் இந்தாள கழட்டி விட்டுட்டு வந்து இருப்பேன்."
"சும்மா இருடி!"
"அப்புறம் என்ன? திரும்பத் திரும்ப பதில் தெரிந்த அதே கேள்வி? உன் ஆத்துக்காரர்தான் "ஜெம்", பக்கா ஜென்ட்ல்மேன். எனக்கும் ஒண்ணு வந்து வாச்சிருக்கே?"
"ஆரம்பிச்சுட்டியா?. ஏய் உனக்கு விசயம் தெரியுமா? ரேச்சலும், ஆஷ்லியும் செப்பரேட்டட்"

"யாரு? உன் கலீக்ஸ்? அந்த லெஸ்பியன் கப்புளா?"
"ஆமடி"
"என்னாச்சு?"
"என்னனு எனக்குத் தெரியலை. ஒத்துக் போகலையாம். "ஐ டோண்ட் லவ் ஹெர் எனிமோர்"ணு சொல்றாள் ரேச்சல்"
"எனக்குப் புரியல? இந்த ஆம்பளைங்கதான் இப்படினு நெனச்சேன். இவளுகளுமா! "
"இங்கேயும் அதே கதைதான் போல"
"நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன்"
"என்னடி?"
"எனக்கு அந்த எண்ணங்கள் தலை தூக்கும்போது, மெடிட்டேஷன் பண்ணப் போறேன்." என்றாள் லாவண்யா.
"ஹா ஹா! நீயா?!'
"பின்ன நீயா?"
"இல்ல, அப்போ 24 மணி நேரமுமா மெடிட்டேஷன் பண்ணப்போற!?"
"கொழுப்புடி உனக்கு!"
"அதை விடு.. இல்ல, நம்ம இந்த ஆம்பளைங்களே இப்படித்தான்னு சொல்லுவோம்.. ரெண்டு பெண்களுக்கு இடையில் கூட கொஞ்ச நாளில் "மண உறவு" பிரச்சினை வந்து விடுகிறது"
"இந்தப் பொம்பளைங்களே இப்படித்தான்னு சொல்லுவாளா ரேச்சல்? சரி, சரி ரொம்ப யோசிக்காதே! ஜஸ்ட் லிவ்!"
"உனக்கு நீயே சொல்லிக்கோ!"
"எனக்கும்தான்"
***************
No comments:
Post a Comment