Monday, April 28, 2014

நாந்தான் ஸ்பெஷல்! இல்லை நாந்தான்! போடாங்!

"நாந்தான் ஸ்பெஷல்!"

"இல்லை! நாந்தான்!"

"ஆமா, நீ யாரு?"

"நான் ஹைட்ரஜன்! நீ யாரு?"

"நான் ஆக்ஸிஜன்!"

"ஆக்ஸிஜனா? ஆமா நீ ஏன் ஸ்பெஷல்?"

"நான் இல்லைனா இவ்வுலகில் எந்த உயிரினமும் வாழமுடியாது! எல்லோருடைய உயிரோட்டமும் என்னால்தானே ஓடுது. இதுகூடத் தெரியாதா?"

"நான் இல்லைனா வாழ்ந்திடுமாக்கும்?  தண்ணீரில் ரெண்டு மடங்கு நாந்தான். நீ ஒரு மடங்குதான்!  தெரியுமில்ல? பூமியைவிடு!  இந்த பிரபஞ்சத்திலேயே நாந்தான் அதிக அளவு இருக்கேன் தெரியுமா?"

"எதாவது ஒளறாதே! ஆக்ஸிஜன் இல்லாமல் எந்த உயிரினமும் வாழமுடியாதுனுதான் சொல்லுவாங்க. ஹைட்ரஜன் இல்லாமல்னு யாராவது சொல்லுவாங்களா?"

"யாரு சொல்றாங்க?  மனிதர்களா?"

"ஆமா."

"அதுகளுக்கு ஆறு அறிவுதான். எனக்கு உடம்பெல்லாம் அறிவு!"

"அது சரி."

 "கீழே பாரு!"இரண்டு ஹைட்ரஜன் அனுக்கள் சேந்து நியூக்ளியர் ஃப்யூஷன் ரியாக்சன்


"என்ன இது? ஏதோ ரியாக்சன் மாதிரி இருக்கு"

"நீ  அந்த ரியாக்ஷன் சீக்வென்ஸில் இல்லாதனால இதெல்லாம் புரியாது உனக்கு! சரிதானே? "

"நான் இல்லைங்கிறது இருக்கட்டும். என்ன நடக்குதுனு சொல்லு!"

"சூரிய ஒளி உயிரினங்களுக்கு அவசியமா?"

"ஆமா"

"அது எப்படி உருவாகுது?"

"சூரியன்ல இருந்து"


The Sun by the Atmospheric Imaging Assembly of NASA's Solar Dynamics Observatory - 20100819.jpg
சூரியன்: இதில் உண்டாகும் ஒளிக்கு மூலகாரணம், ஹைட்ரஜன்கள் இணைந்ஹ்டு உண்டாகும் நியுக்ளியர் ஃப்யூசன் ரியாக்சன்


"சூரியன்ல இருந்து எப்படி ஒளி உண்டாகுது?"

"ஏதோ நியூக்ளியர் ஃபிஷ்ஷன், நியூக்ளியர் ஃப்பியூஷன்னு சொல்றாங்க!"

"அது யாரு யாரு "சேர்ந்து"  "ஒளி சக்தி" உருவாகுது தெரியுமா?"

"யாரு யாரு?"


" நாந்தான் ஹைட்ரஜன். என்னை அழித்துக்கொண்டுதான் நான் ஒளி உருவாக்குறேன். ஒளியில்லைனா இந்த உயிரினங்கள் வாழ முடியாது. நான் இல்லைனா உயிரிங்கங்கள் இல்லை! இனிமேலாவது சும்மா நான் ஆக்ஸிஜன் க்ரேட், மண்ணாங்கட்டினு ஒளறாதே!"

"நீங்க ரெண்டு பேரும் லூசா? ஹைட்ரஜனாம், ஆக்ஸிஜனாம்!  மனிதனால் மதிக்கப்படுவது நாந்தான்!"

"ஐயா யாரு?"

"நாந்தான் "கோல்ட்" என்னை "தங்கம்" என்பார்கள் தமிழில்! பார்க்க அழகா இருப்பேன்"

பொற்காசுகள் (உயிரினங்கள் வாழ அவசியமே இல்லாதது)தங்கம்! மனிதனால் மதிக்கப்படும் விலை உயர்ந்த பொருள்


"அது சரி, ரொம்ப அழகுதான் நீ! நீ யாருக்கு வேணும்?"

திராவிடர்கள் மட்டுமல்ல பொதுவாக மனிதன் என்றுமே அறியாமையில்தான் வாழ்கிறான். அவன் வாழும் அற்ப வாழ்வு, சுமார் 30 ஆயிரம் நாட்கள்தான். இந்த குறுகிய காலத்தில் அவன் அதிக முக்கியத்துவம் கொடுப்பவை, மதிப்புக் கொடுப்பவைகள், போற்றிப் புகழ்பவைகள்  எல்லாம் அவன் உயிர் வாழ எந்தவகையில் உதவாத தங்கம் போன்றவைகள்தான்.

இப்படிப் பட்ட மனித முட்டாள்கள் நிறைந்ததுதான் நம் தமிழ் பதிவுலகமும் கூட! அதனால் இவர்கள் வழங்கும் சான்றிதழ்களை வைத்து உங்களை  நீங்க எடை போடாதீங்க! தாழ்வாவோ, உயர்வாவோ நினைக்காதீங்க!தொடர்புள்ள பதிவுகள்:


17 comments:

நாடோடி said...

//அதனால் இவர்கள் வழங்கும் சான்றிதழ்களை வைத்து உங்களை நீங்க எடை போடாதீங்க! தாழ்வாவோ, உயர்வாவோ நினைக்காதீங்க!//

ரெம்ப உண்மைங்க..

அவரவர் மனசாட்சிக்கு உண்மையாக எழுதினால் போதும்..

//நியூக்ளியர் ஃப்யூஷன் ரியாக்சன்//

சிம்பிளா புரியும் படி விளக்கிவிட்டீர்கள்!!

Bagawanjee KA said...

விடுங்க வருண் ..நீங்க உங்க கருத்தை ஹைடிரஜன் குண்டாய் போட்டுகிட்டே இருங்க ..(சு)வாசிக்க நாங்க இருக்கோம் ,எங்களுக்கு ஆக்சிஜனே அதுதான் !
த ம +1

வருண் said...

வாங்க, நாடோடி!

ஹைட்ரஜன் ஒரு தனித்துவமான தனிமம். ஏன் என்றால், அந்த ஒரே தனிமத்தில்தான் நியூட்ரான் கெடையாது. ப்ரோட்டான் மட்டுமே உள்ளது. மேலும் சூரியன் போன்ற ஸ்டார்களில் ஹைட்ரஜன் தான் அதிகமாக இருக்கிறது. ஆனால் நாம் ஆக்ஸிஜனைத்தான் உயர்வாக நினைப்பதுண்டு. நாம் அருத்தும் தண்னீரில்கூட இரண்டு ஹைட்ரஜன்கள் உண்டு. ஒரே ஒரெ ஆக்ஸிஜன் தான் இருக்கு. இருந்தாலும் நாம் ஹைட்ரஜனுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஒண்ணுக்கும் உதவாத தங்கத்தை கட்டி அழுறோம்..என்று சிந்தனை ஓடியது. அதனால் ஏற்பட்ட விளைவே இப்பதிவு.

உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. :)

வருண் said...

வாங்க, பகவான் ஜி! உங்க வருகைக்கு நன்றி. ஆக்ச்சுவல்லா நான் ஹைட்ரஜன் பத்தித்தான் எழுத ஆரம்பிச்சேன். அது எப்படியோ மனிதர்களின் அறியாமைக்குத் தாவி இப்படி முடிந்துவிட்டது.

எல்லாம் உங்க (பகவான்) செயல்தான்! :)

வவ்வால் said...

நாந்தான் ,நாந்தான்னு சொல்லி சட்டைய கிளிச்சுக்கிட்டு அலையப்போறீர் அவ்வ்1

//deuterium, (D, or 2H), also called heavy hydrogen, isotope of hydrogen with atomic weight of approximately 2. Its nucleus, consisting of one proton and one neutron, has double the mass of the nucleus of ordinary hydrogen.//

http://www.britannica.com/EBchecked/topic/159684/deuterium

இதே போல ரெண்டு நியுட்ரான் இருக்க ஹைட்ரஜன் ஐசோடோப்பும் இருக்கு "டிரிடியம்"

# இதுல உண்மை என்னனா , ஹைட்ரஜன் என்பது இம்மூன்றுக்குமே பொதுவான பேரு , நியுட்ரான் அடிப்படையில் மூனு பேரு வச்சு ,எல்லாமே ஹைட்ரஜனின் ஐசோடோப்பு என்பார்கள்.

நியுட்ரான் இல்லாதது -புரோடியம்

ஒரு நியூட்ரான் - டியூட்ரியம்

ரெண்டு நியூட்ரான் - டிரைடியம்

இப்போ சொல்லும் ஹைட்ரஜனில் நியுட்ரான் இருக்கா இல்லையா :-))

வருண் said...

When people say hydrogen, they mean the most abundant isotope of hydrogen which does not have a neutron.

In general H2 is Hydrogen, HCl means Hydrogen chloride, Nobody calls that as protium chloride.

D2 is Deuterium, DCl means Deuterium Chloride- They wont say "hydrogen chloride" as you claim.

T2 is Tritium.

To me, hydrogen, the most abundant isotope does not have neutron but other isotopes, deuterium and tritium do have a one and two neutrons! :-)

But you can call HCl as protium chloride. You can also write a text book rewriting all hydrochloride to proto-chloride too! :)

வருண் said...

LiAlH4 -> Lithium Aluminium HYDRIDE

It is never addressed as Lithium Aluminium protride anywhere in chemistry literature!

LiAlD4 -> Lithium Aluminium DETERIDE

LiAlT4 -> Lithium Aluminium Tritride

Also,

Though H+ is called as "proton" but H- is always called as "hydride" not as "protride" ever.

குட்டிபிசாசு said...

Like H2O , there is a compound D2O. called as heavy water. தமிழில் கனநீர் என்று நினைக்கிறேன். சரியாக நினைவில் இல்லை.

வவ்வால் said...

அடுத்தவங்கள கொறை சொல்லும் போது "சயின்டிஃபிக் அமெரிக்கன் போல பேச வேண்டியது ,தனக்குனு வந்தா சாணி தட்ட கிளம்பிடுறது அவ்வ்!

#
நியுட்ரான் இருக்க ஹைட்ரஜனை 'ஹெவி ஹைட்ரஜன்" என சொல்வது வழக்கம் தானே?

ஹைட்ரஜனில் "நியுட்ரானே" இல்லை அதான் "ஸ்பெஷல்"னு சொன்னது தப்பா இல்லையா?

# Henry Cavendish at 1766 இல் ஹைட்ரஜனை கண்டுப்பிடிச்சாரு , ஆனால் Lavoisier. பேரு வச்சப்போ , ஆக்சிஜனுடன் இணைந்து தண்ணீரை உருவாக்குது என்பதால் ஹைட்ரோ = நீர் +ஜென் =உருவாக்குதல் = ஹைட்ரோஜன் எனப்பேரு வச்சாரு.

நீரின் அடிப்படையில் அப்படி பேரு வச்சிருக்காங்க எனவே ஹைட்ரஜனுடன் , குளோரின் சேர்ந்து ஹைட்ரோ குளோரிக் அமிலம் உருவாகாது என சொல்லுவீரா?

இல்லை ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை தான் தாகம் எடுத்தா தண்ணீ போல குடிப்பீரா?

சயின்டிஃபிகலி ,டெக்னிகலி பேசுனா, ஹைட்ரஜனில் நியுட்ரான் இல்லைனு பேச முடியாது, இன்னும் சொல்லப்போனால் சுமார் 5000 ஹைட்ரஜன் மூலக்கூறில் ஒன்னு என்ற விகிதத்தில் டியூட்ரியம் என இயற்கையில் இருப்பதால் நாம குடிக்கிற தண்ணியில கூட கொஞ்சமே கொஞ்சம் "ஹெவி ஹைட்ரஜன்" மூலம் உருவான ஹெவி வாட்டர் இருக்காம் :-))

பிரிட்டானியா பிஸ்கெட் கொடுத்தாலும் சாப்பிட மாட்டேன் "நாய் பிஸ்கெட்" தான் வேண்டும்னு கேட்குறீரே அவ்வ்!

#//திராவிடர்கள் மட்டுமல்ல பொதுவாக மனிதன் என்றுமே அறியாமையில்தான் வாழ்கிறான். அவன் வாழும் அற்ப வாழ்வு, சுமார் 30 ஆயிரம் நாட்கள்தான். இந்த குறுகிய காலத்தில் அவன் அதிக முக்கியத்துவம் கொடுப்பவை, மதிப்புக் கொடுப்பவைகள், போற்றிப் புகழ்பவைகள் எல்லாம் அவன் உயிர் வாழ எந்தவகையில் உதவாத தங்கம் போன்றவைகள்தான்.//

தங்கத்துக்கு ஆபரண மதிப்பு,புல்லியன் மதிப்பு இருப்பதை போல தொழில் மற்றும் மருத்து மதிப்பும் இருக்கு.

மொத்த உற்பத்தியில் சுமார் 15% தங்கம் பல்வேறு துறைகளில் பயன்ப்படுது, செல்போன்,கணினி, வானியல் ஆய்வு, மருத்துவம் , பொறியியல் என பல வகையிலும் தங்க இல்லாமல் வேலை நடக்காது!

இக்கடச்சூடும்,

//6. Medicine

Because of its resistance to tarnishing and decay, gold has been used in medicine for thousands of years. Ayurveda practitioners in India today are estimated to consume a few metric tons of gold every year. In the seventh century BCE, the Etruscans used fine gold wire to fasten false teeth. Modern dentistry continues to demand gold -- 11 metric tons of it in the second quarter of 2011 alone. Nanoparticles of gold serve many other modern medical uses -- in pregnancy test kits, in treatments for rheumatoid arthritis and certain cancerous tumors, to detect quickly the presence of food-borne pathogens like salmonella and E. coli, and to provide rapid screening tests for HIV.//

http://www.dailyfinance.com/2011/09/13/six-reasons-businesses-cant-live-without-gold/

HIV இருக்கானு சோதனை செய்து உமது உயிரைக்காப்பாத்த கூட தங்கம் உதவுது :-))

இன்னும் பலப்பலன்கள் பற்றி சுட்டியில் இருக்கு , அறியாமை இருட்டில் இருந்து வெளியில் வந்து படிச்சு பாரும் :-))


# 2012 இல் தங்கத்தின் பயன்ப்பாடு பற்றி கோல்ட் கவுன்சில் சொல்லி இருப்பது,

"World Gold Council data shows jewellery consumed 1908 tonnes, bullion and coins 1582 tonnes and ,technology applications 428 tonnes. Central Banks were again net purchasers of gold during 2012."

http://www.australianminesatlas.gov.au/aimr/commodity/gold.html

வருண் said...

***Like H2O , there is a compound D2O. called as heavy water. தமிழில் கனநீர் என்று நினைக்கிறேன். சரியாக நினைவில் இல்லை.***

Yes, ku pi, D2O is called heavy water as it has a higher mass than water, and it is commonly used in the laboratory for NMR spectroscopy as solvent. It is not radioactive and so it is considered harmless. :)

வருண் said...

vavvaal: தங்கத்தால் எந்த பயனும் இல்லைனு அர்த்தம் எடுக்க வேண்டியதில்லை. ஹைட்ரஜன் அளவுக்கு தங்கம் முக்கியமான தனிமம் இல்லை என்று எடுத்துக் கொள்ளணும். அப்படிப்பார்த்தால் குப்பையிலிருந்துகூட பயோ ஃபுயெல் தயாரிக்கலாம். அதை குப்பைனு சொல்லக்கூடாதுனு வாதிடலாம். :)

வவ்வால் said...


//தங்கத்தால் எந்த பயனும் இல்லைனு அர்த்தம் எடுக்க வேண்டியதில்லை. ஹைட்ரஜன் அளவுக்கு தங்கம் முக்கியமான தனிமம் இல்லை என்று எடுத்துக் கொள்ளணும். //

இப்போ இப்படி பல்டி அடிக்கிறீர், ஆனால் பதிவில் ஒரே மட்டையடியாக,

//அவன் உயிர் வாழ எந்தவகையில் உதவாத தங்கம் போன்றவைகள்தான்.//

என சொல்லி தங்கம் மனிதன் உயிர் வாழ தேவையில்லைனு "தூக்கி குப்பையில" போட்டதேனோ? ஏன் இந்த முரண்பாடு?

# //! இனிமேலாவது சும்மா நான் ஆக்ஸிஜன் க்ரேட், மண்ணாங்கட்டினு ஒளறாதே!"//

ஹைட்ரஜன் அளவுக்கு தங்கம் உயிர் வாழத்தேவையில்லை என்பது சரி தான் ,அப்படிப்பார்த்தால் , ஆக்சிஜன் ,ஹைட்ரஜனை விட ரொம்ப முக்கியம் ஆச்சே, தண்ணிக்குடிக்காம ஒரு நாள் கூட உயிர் பிழைக்கலாம், ஆனால் ஆக்சிஜன் இல்லாமல் 2 நிமிடத்துக்கு மேல் உயிர் வாழ முடியாது அவ்வ்.

நான் சொன்னதில் சந்தேகம் இருந்தால் ,மூக்கு வாய் எல்லாம் பொத்திக்கிட்டு ஒரு 5 நிமிடம் இருந்து பாரும் , உமக்கு ஹைட்ரஜன் தேவைப்படுமா ,ஆக்சிஜன் தேவைப்படுமானு தெரிய வரும் :-))

ஹைட்ரஜன் முக்கியம் தான் ஆனால் அதனை விட ஆக்சிஜன் ரொம்ப முக்கியம் எனவே தான் "பிராணவாயு" என்கிறார்கள், பிராணவாயு இல்லை எனில் அஞ்சாவது நிமிசம் "பிணம்" ஆகிடுவோம்!!!

எனவே ஆக்சிஜன் கிரேட் தான்!!!

#//"சூரிய ஒளி உயிரினங்களுக்கு அவசியமா?"

"ஆமா"

"அது எப்படி உருவாகுது?"

"சூரியன்ல இருந்து"//

சும்மா தகவலுக்காக, உயிரினம் உருவாக ,வாழ ஆக்சிஜன் , ஹைட்ரஜன் ஒளி (சூரிய ஒளி)எல்லாம் தேவையில்லை. வேறு ஒளியும் தேவை இல்லை.

மிக ஆழ்கடலில் சூரிய ஒளியே இல்லாத நிலையிலும் உயிரினங்கள் ,நுண்ணுயிரிகள் இருக்கு .

"Chemosynthesis is the use of energy released by inorganic chemical reactions to produce food. Chemosynthesis is at the heart of deep-sea communities, sustaining life in absolute darkness, where sunlight does not penetrate.'
http://oceanexplorer.noaa.gov/facts/photochemo.html

அதே போல திரவ மீத்தேனில் ,நைட்ரஜனில் வாழும் நுண்ணுயிர்களும் இருக்கு, ஆக்சிஜன் , ஒளி எல்லாம் கூட தேவையில்லை.

Obligate anaerobes, which are harmed by the presence of oxygen.[5][6]
Aerotolerant organisms, which cannot use oxygen for growth, but tolerate its presence.[7]
Facultative anaerobes, which can grow without oxygen but use oxygen if it is present.[7]

http://en.wikipedia.org/wiki/Anaerobic_organism

எனவே என்ன மாதிரியான சூழல் "பரவலாக" நிலவுதோ அதுக்கு ஏத்தாப்போல தகவமைவுடன் உயிரினம் உருவாகிட்டு இருக்கு என்பது தான் 'உயிரின உருவாக்கத்தின்' ஆச்சர்யமே!

#//and it is commonly used in the laboratory for NMR spectroscopy as solvent. It is not radioactive and so it is considered harmless. :)//

கனநீர் அணு உலைகளில் மாடரேட்டராக அதிக அளவில் பயன்ப்படுகிறது.

கதிரியக்கம் இல்லாதவை என்றாலும் ஆபத்தற்ற "திரவம்" அல்ல.

மனித உடலில் 50 %கனநீர் சேர்ந்தால் மரணம் நிச்சயமாம். 20% கனநீர் கலந்தாலே பிரச்சினைகள் உருவாகிவிடும்.

தொடர்ந்து கனநீர் கலந்த நீரை பருகினால் உடல் செயலிழப்பு ஏற்பட்டு உயிரிழக்க நேரிடும். கன நீர் மெட்டபாலிசத்தினை பாதிக்க வல்லது.

http://www.straightdope.com/columns/read/2135/is-heavy-water-dangerous

http://www.physlink.com/education/askexperts/ae685.cfm

எனவே கன நீர் ஆபத்தற்றது என "பொதுவாக" சொல்லிட முடியாது!!!

வருண் said...

****சும்மா தகவலுக்காக, உயிரினம் உருவாக ,வாழ ஆக்சிஜன் , ஹைட்ரஜன் ஒளி (சூரிய ஒளி)எல்லாம் தேவையில்லை. வேறு ஒளியும் தேவை இல்லை.***

வவ்வால்: எந்த ஒரு உயிரியும், அமைனோ ஆசிட், நியூக்லிக் ஆசிட், லிப்பிட் களால் ஆனது. அவைகள் அனைத்திலுமே ஆக்ஸிஜன் இருக்கிறது. ஆக்ஸிஜனால் ஆன ஒரு உயிரி ஆக்ஸிஜன் இல்லாமல் வாழும் என்று எப்படி சொல்லமுடியும்? :)

It might not need molecular oxygen but it is made of oxygen and it survives in water, which is made of oxygen. When the reality is like this, how can any organism survive WITHOUT the element oxygen? :)

வருண் said...

****எனவே கன நீர் ஆபத்தற்றது என "பொதுவாக" சொல்லிட முடியாது!!!****

Harmless means it can be used in laboratory casually. It does not have any acute toxicity. I never meant to say you can drink as much as you can. :)

In that case, soluble form of Gold is also toxic. It can kill you if you ingest quite a bit (in a soluble form as a salt or so) too. It is all relative. Heavy metal like Gold and silver, Platinum has to be disposed carefully. You will be fined if Gold and Silver are contaminated in water as they are TOXIC! :)

வருண் said...

பண்டாரம்: எனக்குத்தான் கூட்டத் தெரியும். நான் ஜோஸிய சயண்டிஸ்ட் அப்புறம் ஆன்மீக பெருச்சாளி!

கேள்வி 1: சொல்லு பண்டாரம்! ஒர் ப்ரோட்டானும் (ஹைட்ரஜனும்) இன்னொரு ப்ரோட்டானும் (இன்னொரு ஹைட்ரஜனும்) சேருவது என்ன?

பண்டாரம்: அது சும்மா கொஞ்சு விளையாடுது.

கேள்வி ரெண்டு: அது நியூக்ளியர் ஃப்யூஷன் இல்லையா பண்டாரம்?

பண்டாரம்: பே பே!

கேள்வி மூனு: ரெண்டு ஹைட்ரஜன் அனுக்கள் சேர்ந்து, ஒரு ப்ரோட்டான் தன்னை அழித்துக் கொண்டு நியூட்ரானாக மாறி, ஹீட் எனர்ஜி கொடுப்பது (காமா கதிர்களாக) என்ன? அது நியூக்ளியர் ஃப்யூஷன் இல்லையா?

பண்டாரம்: பே பே

கேள்வி நாலு: ரெண்டு ப்ரோட்டான் சேர்ந்தால் எத்தனை ப்ரோட்டான் இருக்கணும்?

பண்டாரம்: ரெண்டு ப்ரோட்டான் சேர்ந்து இருக்கணும்..

கேள்வி ஐந்து: எத்தனை ப்ரோட்டான் இப்போ இருக்கு?

பண்டாரம்: ரெண்டு ப்ரோட்டான்கள்..

கேள்வி ஆறு: எத்தனை?

பண்டாரம்: ப்ரோட்டான் ஒண்ணுதான் இருக்கு. இன்னொண்ணு நியூட்ரானா ஆயிடுச்சு

கேள்வி ஏழு: ஆக, ரெண்டு ஹைட்ரஜன் சேர்ந்து, ஒரு ப்ரோட்டான் அழிந்து எனர்ஜி கொடுத்து, அது நியூட்ரானாக உருவாகி இருக்கு. இப்போ இருப்பது ஒரு ப்ரோட்டான் மட்டுமே. ஒரு ப்ரோட்டான் அழிந்துவிட்டது. அதாவது ப்ரோட்டான் அழிவதால் ஒரு ஹைட்ரஜன் அழிந்து, ரெண்டு ஹைட்ரஜனுக்கு (2 ப்ரோட்டானுக்கு) பதிலாக ஒரு டியூட்டிரியம் உருவாகி இருக்கு..(ஒரு ப்ரோட்டான், ஒரு நியுட்ரான், பிளஸ் எனெர்ஜி)!

பண்டாரம்: பே பே..ஆனால் எனக்குத்தான் கூட்டத்தெரியும்!

வவ்வால் said...

அமெரிக்கன் சயிண்டிஸ்ட் ரொம்ப விவரம் தான் அவ்வ்!

//It might not need molecular oxygen but it is made of oxygen and it survives in water, which is made of oxygen. When the reality is like this, how can any organism survive WITHOUT the element oxygen? :)//

அப்போ மாலிக்கியுலார் ஹைட்ரஜனையா உயிரினங்கள் நேரடியாக பயன்ப்படுத்துகின்றன?

தாவரங்களுக்கு நீர் என்ற திரவ வேதிவிளைப்பொருள் தான் பாய்ச்சப்படுது, மனிதனும் நீரைத்தான் குடிக்கிறான் "ஹைட்ரஜனை" அல்ல.

ஆனால் ஆக்சிஜன் மூலக்கூறாகவும் தேவைப்படுது வேதிக்கலவை வடிவிலும் பயன்ப்படுது.

அப்புறம் எப்படி ஆக்சிஜன் கிரேட் இல்லை ஹைட்ரஜன் தான் என சொல்கிறீர் , ஆக்சிஜன் இல்லாமல் 5 நிமிடம் கூட வாழ முடியாது எனவே அது மிக அத்தியாவசியமான தேவை! அப்பாலிக்கா தான் ஹைட்ரஜன் எல்லாம்.

உடம்புல மூச்சு ஓடிக்கிட்டு இருந்தா தான் தாகத்துக்கு தண்ணியே தேவைப்படும் ,செத்தப்பொணத்துக்கு தாகமெல்லாம் லேது!!!

#பதிவு முழுக்கவே இப்படித்தான் என்னமோ பெருசா "ஹைட்ரஜன்" வச்சு தத்துவம் சொல்லுகிறேன் என ஒரே மூட நம்பிக்கை பிரச்சாரமா இருக்கு :-))

வருண் said...

vavvaal: You seem to have strong wikki-knowledge. :))) All you do is go read something superficially and come here, and COPY PASTE that crap and "prove" that you are a "GENIUS"! Only idiots will think that you are a genius. Unfortunately I am not one of them! :)))

Actually you are "genius" who copy pastes wiki stuff and pretend that you are an expert in everything!

I am sorry, if it hurts, but the fact is you are an IDIOT, vavvaal!

Otherwise, why you always wants to prove that you know everything better than anybody?? The anybody includes Einstein and Feynman and all the experts. I can see that you are SICK! Your aim in any discussion is to show the world that you are better than anybody!

Finally, in my write-up, I have not mentioned what form of hydrogen and oxygen and gold are discussing. I meant elements oxygen, hydrogen and gold. Not in any specific form.

Hydrogen can exist as H2 or H. or H+ or H- and it is not specified because the character here is "hydrogen the element" You are keep talking nonsense to prove that you are a "genius". :)))

Now, let us get to oxygen.. Again, you dont seem to understand any organism is made of protein and nucleic acids and lipids. You dont understand how they were synthesized. You dont understand oxygen can exist in several forms too. If some form of oxygen is toxic, that organism will take oxygen as nitrate or other forms.

Even molecular oxygen can exist in singlet and triple form, peroxy and superoxy form. Again, the character "oxygen" I mentioned is element oxygen. It can be in any form (singlet or triplet or part of water molecule or in a carbonyl group of protein or in a phosphate group of nucleic acids)>

Your wiki knowledge is useless to me because you are an idiot and all you want to show is you are a genius to other idiots in the globe!

Now you go, join the other idiot jeyadev and you both lick each other and bite each other and show the world that you both are the geniuses for idiots around you!

I guarantee you there are idiots like "nuts" to accept that you are a idiotic genius!


As usual it is not worth discussing with you anymore here!

So long, vavvaal! :)