
பா ம க வின் தோல்வியை ரஜினி ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்! தமிழ் நாட்டு அரசியல் சாக்கடையில் தெரிந்தோ தெரியாமலோ மாட்டிக்கொண்டவர் ரஜினிகாந்த். இவர் ஜெ ஜெ யை எதிர்த்துக் குரல் கொடுத்தபோது ஜெ ஜெ தோல்வியைத் தழுவினார். அதேபோல் 2004 ல் இவரை தனிப்பட்ட முறையில் ராமதாஸ் தாக்கியதால், இவர் ரசிகர்களும், இவரும் மனதுடைந்து போனார்கள்.
இவர் ரசிகர்கள் ராமதாசுக்கு எதிராக ஓட்டுப்போட்டும் பிரச்சாரம் செய்தும் ராமதாசு பெரு வெற்றி வாகை சூடினார். அதனால் ரஜினி ரசிகர்கள் மனம் தளர்ந்து போனார்கள்.
ஆனால் வெற்றி தோல்வி எல்லாம் நிரந்தரம் இல்லை என்பதென்னவோ உண்மைதான். யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல் இந்தத்தேர்தலில் ராமதாசும் அவர் கட்சி பா ம க வும் படு தோல்வியடைந்துள்ளார்கள்.
இதற்கு காரணம், அவரே அவர் தலையில் மண்ணள்ளிப்போட்டுக்கொண்டது போல் அவர் செய்த "இன்கண்ஸிஸ்டண்ட் பாலிடிக்ஸ்" . காங்கிரசுடன் கடைசி நிமிடம் வரை சேர்ந்து இருந்துவிட்டு காங்கிரஸை எதிர்த்து பிரச்சாரம் செய்தது எடுபடவில்லை என்று சொல்லலாம்.
ஆனால் ராம்தாசின் இந்தத்தோல்வியை மிகவும் ரசித்துக்கொண்டாடுவது ரஜினி ரசிகர்கள்தானாம். இதில் ரஜினி பங்கு எதுவும் இல்லை என்றாலும், ராமதாசுடைய தோல்வியை கொண்டாடுகிறார்கள்.
எங்கே??
தங்கள் மனதுக்குள் கொண்டாடுகிறார்களாம் போனமுறை அடி வாங்கிய ரஜினி ரசிகர்கள்! :-)
2 comments:
http://4.bp.blogspot.com/_ai8JhTp6ops/Sg73Xg6xwRI/AAAAAAAAAjA/_a2HQS_PYIY/s1600-h/Boss.JPG
That photo is hilarious, உடன்பிறப்பு!
ROTFL! :-)))))
Post a Comment