Monday, April 13, 2009

வைகோவை எதிர்த்து காங்கிரஸ் வெற்றி பெற முடியுமா?!


விருதுநகரில், வை கோபால்சாமி போட்டியிடுகிறார். கம்மா நாய்டு அல்லது நாயக்கர் வகுப்பை சேர்ந்தவர் இவர். இந்த தொகுதியில் நாயக்கர்கள் வாக்கு கனிசமாக உள்ளது. அது போக, மறவர்கள், நாடார்கள், தலித் ஓட்டுக்கள் கனிசமாக உள்ள எம் பி தொகுதி இது.

இவரை எதிர்த்து தி மு க போட்டிக்கு (தற்போது அது காங்கிரஸ்க்கு ஒதுக்கப்பட்ட தொகுதி) ஒரு ஸ்ட்ராங்க் கேண்டிடேட்டை நிறுத்தலாம் என்கிற வதந்தி நிலவுகிறது. ஆனால் அது நடக்கப்போவதில்லை.

வை கோபால்சாமி, அனேகமாக காங்கிரஸ் வேட்பாளரைத்தான் எதிர்ப்பார். இதுவரை காங்கிரஸ் வேட்பாளரை அறிவிக்கவில்லை என்று நம்புகிறேன். அப்படி வரும்போது, ஈழத் தமிழர்கள் பிரச்சினையை பெரிது படுத்தப்பார்ப்பார். அது தவிர வேறு எப்படி அம்மாவுடன் சேர்ந்து ஒத்து ஊதப்போகிறார் என்பது தெரியவில்லை.

விருதுநகர் தொகுதி இப்போதைக்கு, வை கோ வெற்றி பெற வாய்ப்பு உள்ள ஒரு தொகுதி போல்தான் உள்ளது. ஆனால் காங்கிரஸ் மோகம் என்பது லோக் சபா எலெக்ஷனில் ரொம்ப சாதாரணம். காங்கிரஸ் ஒரு ஸ்ட்ராங் கேண்டிடேட் நிறுத்தினால், வை கோ கண்னில் விரலை விட்டு ஆட்டலாம்.

இதில் பரிதாபம் என்னவென்றால் ஈழத்தமிழர் பிரச்சினைதான் இந்த தேர்தலில் எல்லோரும் பயன்படுத்துகிற ஒரு "அரசியல் ஆயுதம்".

என்னைப்பொறுத்தவரையில் ஈழத்தமிழர்களின் கண்ணீரை அரசியலுக்காக பயன்படுத்துகிற எவனுமே ஒரு கேவலமான தமிழன்.

தமிழ் ஈழம் பொறுத்தவரையில் இதுவரை தமிநாட்டில் உள்ள எந்த அரசியல்வாதியாலும் ஒண்ணும் கிழிக்க முடியலை என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படி இருக்கும் மனசாட்சியுள்ள தமிழ் அரசியல்வாதிகள் இதைப்பற்றி பேசாமலாவது விடலாம்! ஈழத்தமிழர் கண்ணீர் துடைக்கப்பாடுவதாக சொல்லி இதில் அரசியல் ஆதாயம் தேடுவது கண்டிக்க வேண்டிய ஒன்று.

2 comments:

ttpian said...

no bit of shame!
why these gang running behind,karunanidhi or jeyalalitha?
entire parties could have been assembled on Tamileelam issue as a force-these fact will send jeya+karuna to dustpin....

யட்சன்... said...

அனைவரும் மறந்துவிடும் ஒரு யதார்த்தத்தினை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

தமிழகதில் தமிழீழ வேட்கைக்கான ஆதரவு பொங்கிப் பெருகியிருக்கும் பட்சத்தில் வைக்கோ மாதிரியான ஆசாமிகளின் பின்னால்தான் கலைஞர், ஜெயா மாதிரியான ஆட்கள் ஓடிக்கொண்டிருப்பர்.

நிதர்சனத்தில் தமிழகத்தில், ஈழத்தமிழனுக்காக அனுதாப அலை வீசுகிறதேயொழிய வைக்கோ சீமான் மாதிரியானவர்கள் சொல்லும் அளவிற்கு தமிழனின் மீசை துடிக்கவில்லை என்பதுதான் நிஜம்.

மேலும், உள் நாட்டில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் மலையளவு இருக்கும் போது இம்மாதிரியான பிரச்சினைகள் ஓரு சாமான்ய வாக்காளனை எந்த அளவிற்கு வைக்கோ பக்கம் போக விடுமென்பது கேள்விக்குறி...

முந்தைய தேர்தல்களில் சிவகாசியை இந்திரலோகமாக்குவேன், சந்திரலோகமாக்குவேன் என வசனம் பேசிய வைக்கோவால் அவர்களுக்கு ஒரு துரும்பைக் கூட கிள்ளிபோட முடியவில்லை என்பதுதான் நிஜம்.

சாதி ஓட்டுகளை நம்பி இந்த பாதுகாப்பான தொகுதியை வைக்கோ தேர்ந்தெடுத்திருபாரேயானால் அவர் நம்பும் தமிழீழ கொள்கைகள் தமிழக வாக்காளர்கள் மத்தியில் நீர்த்துப் போனவை என்பதுதான் உண்மை.