Friday, June 7, 2013

ஆல் மென் ஆர் பாஸ்டர்ட்ஸ்-4

இன்னொரு முறை விஜியைக் கூப்பிட்டான். அவ, பிக் அப் பண்ணல..

"விஜி! நான் மோஹன் தான். நீ எதையாவது கற்பனை பண்ணிட்டு இஷ்டத்துக்கு பேசக்கூடாது!  இண்டியா போனபோது உனக்கு எதுவும் பேய் கீய் அடிச்சிருச்சா என்னனு தெரியலை. எப்படி இப்படி முழு லூசாகி வந்து நிக்கிற!" னு ஒரு கோபமான "டோன்" ல லாங் மெசேஜை விட்டுவிட்டு தனக்குள்ளே சிரித்துக்கொண்டான் மோகன். இப்படி ஏதாவது பண்ணினால்த்தான் விஜி ப்ராம்ப்ட்டா அவன் "காலை" ரிட்டன் பண்ணுவானு அவனுக்கு நல்லாவே தெரியும்.

அன்று இரவு 8 மணிப்போல ரேச்சலை சந்தித்தான்.

"ஸோ, ஹவ் இஸ் கெமிஸ்ட்ரி கம்மிங் அலாங், ரேச்சல்?"

"ஐ அம் நாட் ஸ்கேர்ட் ஆஃப் இட் எனிமோர்!"

"தட்ஸ் க்ரேட். யு டோண்ட் நீட் மி எனிமோர்"

"வாட் டு யு மீன், Mohaan?"

"I mean now you kind of understood the basic concepts and you may need little help. Right?"

"NO, I need your help even for Orgo-2, the next semester as well! Are you moving somewhere?"

"It is not that"

"You want me to pay $20 more per hour than what I pay you now?"

"Ha ha ha"

"Why are you laughing?"

"I dont know I find that funny because you offer me a raise already?"

"WHY? I dont understand why  can not you continue teaching me?"

"Do you have a boyfriend, Rachel?"

"I used to but I dumped him recently. Right now I care only about my studies. I dont need any moron to hang out with me now! I am too busy!"

"OK. Let us get back to the subject! Where were we?"

"You are going to continue tutoring me, right, Mohaan?"

"OK. Deal!"

"Thanks!"

-----------------------------------

மோகனுடைய செல்ஃபோன் அலறியது.

"I need to take this call, Rachel" னு ஃபோனை எடுத்துக்கொண்டு லிவிங் ரூம்க்கு சென்றான்.

"ஹவ் இஸ் ஷி?"

"ஹூ?"

"தட் வைட் பிட்ச்!' என்றாள் விஜி ஒரு மாதிரியான டோனில்.

"உனக்கென்ன பைத்தியம் பிடிச்சிருச்சா, விஜி?"

"சரி எதுக்கு கால் பண்ணுனீங்க?"

"என் மெசேஜைப் பார்த்தியா இல்லையா?"

"கேட்டேன். எங்கே இருந்து பேசுறீங்க இப்போ?"

"ஐ அம் வித் எ ஃப்ரெண்ட்." னு இழுத்தான்

"பொண்ணா? பையனா?"

"பொண்ணுதான். I will tell you the details later"

"Too bad I bothered you now.  Were you in the middle of fucking her?"

"SHUT UP, Viji!" னு கத்திட்டு ஃபோனை ஆஃப் பண்ணிட்டான்.

----------------------

"Everything OK?" என்றாள் ரேச்சல்.

"Yeah. Let us get back to subject. Where were we at?"

"This one. This pyridine, pyrrole and aromaticity and 4n+2 rule or whatever"

ரெண்டுபேரும் கெமிஸ்ட்ரியில் மூழ்கினார்கள்.

-தொடரும்


தொடர்புடைய பதிவுகள்!

Thursday, June 6, 2013

அறிவியல்! டி என் எ, ப்ரோட்டீன் -பகுதி 4

இதுவரைக்கும் என்ன பார்த்து இருக்கோம்? என்ன எழவைப் பார்த்தோம்னு எனக்கென்ன தெரியும்? ஒரு மண்ணும் புரியலை? னு ஆனஸ்டா பதில் சொன்னாலும் பரவாயில்லை!

நானே சொல்லிடுறேன்..

* டி என் எ னா என்ன? அது எப்படி இருக்கும்? அதை பக்கத்தில் க்ளோசாப் போய் பார்த்தால் அதில் என்ன தெரியும்.

* சரி டி என் எ னா என்ன?

Deoxyribo nucleic acid.

* Deoxyribo னா? 

ரைபோஸ் என்கிற மூலக்கூறில் ஒரு ஆக்ஸிஜன் இருக்காது (குறைவா இருக்கும்)!

* ரைபோஸ்னா என்னனே தெரியாதே?

அது ஒரு கார்போஹைட்ரேட்!

* கார்போஹைட்ரேட் அப்படினா?

க்ளுக்கோஸ்னு சொல்லுவாளே அது தெரியுமா?

ஆமா! ஏதோ க்ளுக்கோஸ் ஏத்துறானு சொல்லுவாளே?

அதேதான் பிடிச்சுக்கோ!

* சர்க்கரை காபி டி ல எல்லாம் போட்டுக்குடிக்கிறோமே? அது தெரியுமா?

ஆமா.. அது என்ன க்ளுக்கோஸா?

சர்க்கரையில் க்ளுக்கோஸும் இருக்கு!

அப்போ வேறென்ன இருக்கு?

"ஃப்ரூக்டோஸ்"ம் இருக்கு!

"அதென்ன ஃப்ரூக்டோஸ்?"

உன் தலை! இப்படியே போனா எதையும் முழுமையாக சொல்லி முடிக்க எனக்கு வாழ்நாள் பத்தாது! இப்போ அதை விட்டுப்புட்டு ரைபோஸ்னா என்னணு தெரிஞ்சுக்குவோம்!

"சரி அதையாவது தெளிவாச் சொல்லு! என்ன அது?"

க்ளுக்கோஸ் மாரி ஒரு கார்போஹைட்ரேட்! ஆனால் க்ளுக்கோஸ்ல 6 கார்பன் 12 ஹைட்ரஜன், 6 ஆக்ஸிஜன்கள் இருக்கும். ரைபோஸ்ல 5 கார்பன், 10 ஹைட்ரஜன், 5 ஆக்ஸிஜன் இருக்கும்.

அப்போ, க்ளுக்கோஸும், ரைபோஸும் வேற மாரி இருக்குமா?

கீழே பாரு!


ரைபோஸ்

Deoxyribose/டி-ஆக்ஸிரைபோஸ்
இப்போ ரைபோஸ்னா என்ன, டிஆக்ஸிரைபோஸ்னா என்னனு தெரிஞ்சி என்ன ஆகப்போது?சரி க்ளுக்கோஸ் எப்படி இருக்கும்?

சரி இந்தா இதுதான் க்ளுக்கோஸ்!



க்ளுக்கோஸ்


சரி, இப்போ,

டி என் எ தான் "ஜெனட்டிக் கோட்" (மரபுக் குணம்? ) டை சந்ததிகளுக்கு கொண்டு செல்லுதுனு நெறையா ஆராய்ச்சிக்கு அப்புறம் கண்டு பிடிச்சு இருக்காங்க. அதற்கு முன்னால் எல்லாம் ரொம்ப காலமா  "க்ரோமோசோமில் உள்ள ப்ரோட்டின்" தான் "மரபு" சம்மந்தப்பட்ட னு நம்பிக்கொண்டு இருந்தார்கள்.

"மரபு சம்மந்தப்பட்ட குணம்னா" என்ன??

ரொம்ப கஷ்டப்படாதீங்க! 

எளிமையாக யோசிச்சுப் பாருங்க!

* ஒரு இந்தியன் ஏன் "இந்திய இனத்தில் உள்ளவன் போல மூக்கு, கண்கள், நிறம் போன்று உடலுறுப்புகள் பெற்றுப் பிறக்கிறான்?"

* அதாவது மங்கோலிய (சைனீஸ்) போலல்லாமல், வெள்ளைக்காரன் போலல்லாமல், ஒரு ஆப்பிரிக்க கருப்பர் இனத்தைப் போலல்லாமல், அவர்கள் தாய் தந்தையர்கள் போல ஒரு இன அடையாளங்களுடன் பிறக்கிறான். அது ஏன்?

இதுவும் மரபுதான்! அப்பா அம்மாவிடம் உள்ள "மரபு குணம்"தான் குழந்தைக்கு வரும்! அதான் அவர்களைப் போலவே இருக்கான்!

இப்போ புரியுதா? மரபு குணம் மரபுகுணம்னு ஏன் அடிச்சுக்கிட்டாணுக அறிவியலாளனுகள்??

அப்பா அம்மாவிடம் இருந்து எந்த மாலிக்யூலின்மூலம் ("ப்ரோட்டீன்" மூலமா இல்லைனா "டி என் எ" மூலமா இல்லைனா "ஆர் என் எ" மூலமா???) அவர்கள்  மரபுகுணம் பிள்ளைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதுனு கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் ஏன் இருந்ததுனு புரியுதா?

பின்னால் வரும், இதற்கான ஆராய்ச்சி, எக்ஸ்பெரிமெண்ட், மற்றும் ரிசல்ட்ஸ் களை நீங்க புரிஞ்சுக்கணும்னா, டி என் எ மற்றும்  ப்ரோட்டின் னா என்ன? அவைகளுக்குள்ள என்ன என்ன வித்தியாசம் போன்றவையை புரிஞ்சுக்கிடணும் என்பதாலதான் அதை இங்கேயே தெளிவு படுத்த முயல்கிறேன்.

 டி என் எ வின் என்ன என்ன அணுக்கள் அல்லது தனிமங்கள் இருக்குனு தெரிந்து கொள்ளனும்னா அதை பிச்சு, பிச்சுப் போட்டு ஒவ்வொரு பகுதியாகப் பார்ப்பது நல்லது.

சரி, டிஆக்ஸிரைபோஸ்னா ஏதோ புரிஞ்ச மாரி இருக்கு.

அடுத்த பாதி nucleic acid  நியூக்லிக் ஆசிட்னு ஏன் சொல்றா?

அது செல் ல உள்ள (செல் ஃப்போன் இல்லை! ) நியூக்ளியஸ்ல உள்ள ஒரு அமிலம்/ஆசிட்!

அமிலமா? ஏன் அது அமிலம். டி என் எ மூலக்கூறின் முதுகெலும்பில் (in the backbone) நீங்க இந்த டிஆக்ஸி ரைபோஸ் தொடராக இருப்பதைப் பார்க்கலாம். அதேபோல் ஒரு ஃபாஸ்பேட் என்னும் க்ரூப்பும் இருக்கும். இந்த பாஸ்பேட் க்ரூப்தான் அமிலத்தன்மை உள்ளது. அதனால இதை அமிலம் என்கிறார்கள்.

டி என் எ முதுகெலும்பில் உள்ள அமிலத்தன்மையுள்ள ஃபாஸ்பேட் க்ரூப்


ஆமா, இந்த ஃபாஸ்பேட்டோ என்னவோ க்ரூப்? இது எங்கே டி என் எ ல இருந்துச்சு?

 சரி நம்ம டி என் எ  வை மறுபடியும் பக்கத்தில் போயிப்போயி பார்ப்போம்!
 

 இப்போ அந்த ஆரஞ்சு கலர்ல  ரெண்டு பக்கமும் இருக்கதுதான் "டிஆகஸி ரைபோஸ்" பகுதி. அப்புறம் அந்த ஆரஞ்சிக் கலர் டிஆக்ஸிரைபோஸை ஒன்றோடு ஒன்றாக இணைத்து இருப்பதுதான் அமிலத்தன்மை வாய்ந்த ஃபாஸ்பேட் க்ரூப் சரியா? மஞ்சளில் பாஸ்பரசை ஹைலைட் பண்னியிருக்காங்க தெரியுதா?

சரி, டிஆக்ஸி ரைபோஸ் இருக்கு.. ஃபாஸ்பேட் இருக்கு.. வேறென்ன இருக்கு டி என் எ ல?

அடினைன், குவானைன், தைமின், சைட்டோசைன் னு  நாலு bases  இருக்கு பாருங்க!

"Base" அப்படினா? காரத்தன்மை வாய்ந்தது? "ஃபேஸிக்" கா இருக்கும் (அமிலத்தனமைக்கு எதிர்ப்பதமா? )

அது ஏன் அடினைன் னும் தைமின்னும், ஏதோ ஒண்ணு சேர்வதுபோல இருக்கு? அதுதான் ஹைட்ரஜன் பாண்டிங்! 

அதே போல குவானைன்னுக்கும் சைட்டோசைன்னும்  இடையிலே ஹைட்ரஜன் பாண்டிங் இருக்கு பாருங்க!

அடினைனுக்கும் தைமின்க்கும் இடையே உள்ள ஹைட்ரஜன் பாண்டிங்


குவானைன்க்கும் சைட்டோசைன்க்கும் இடையே உள்ள ஹைட்ரஜன் பாண்டிங்

அது ஏன் இந்த ஹைட்ரஜென் பாண்டிங்கை பிடிச்சு தொங்குற வருண்?

சும்மா எல்லாம் நான் தொங்கவில்லை! முக்கியக்காரணம் இருக்கு! டி என் எ வில் ஹைட்ரஜன் பாண்டிங் இருக்கு பாருங்க! :)






DNA exist in Double helix unlike proteins.  (மேலே இடது பக்கம் உள்ளதப் பாருங்க ரெண்டு ரிப்பன் ஒண்ணோட ஒண்ணு ஒட்டிக்கிட்டு இருக்கு இல்ல? You could see there are two strands. டி என் எ எப்போவுமே ரெண்டு ரிப்பனாத்தான் ஒட்டிண்டு இருக்கும். These two strands are complementary (note the spelling! It is not complimentary like I spelt before) to each other. What does it mean??  அப்படினா?

அடுத்த பகுதியில் பார்ப்போம்!

சரியா?

-தொடரும்

தொடர்புள்ள பதிவுகள்!

Sunday, June 2, 2013

பார்ப்பானுக்கு ஒரு நாயம்னா ஊருப்பயலுகளுக்கு இண்ணொண்ணு!

எழுத்தாளர் சுஜாதாவைப் பற்றி அவர் அன்பு மனைவி, இந்த வயதான காலத்தில், பேட்டி எடுக்க வந்த இன்னொரு பெண்ணிடம், அவர் குறைகளையும் எடுத்துச்சொல்லி  இருக்காரு. குறை இல்லாத மனிதன் யாருப்பா இருக்கா? எழுத்தாளர் சுஜாதாவுடைய "எழுத்தாளர் பிம்பத்தை"த் தவிர்த்து  அவர் ஒரு கணவனாக, தந்தையாக, ஒரு சிறுவனா, ஒரு பார்ப்பானாகப் பார்த்தால்.. அவர் எப்படி? என்கிற விசயம் இப்போது அவர் கொடுத்த பேட்டிமூலம் வெளிவந்து இருக்கிறது!

அதெல்லாம் சரி, இந்தப் பேட்டி வெளிவருமுன்பே, இதுபோல் ஒரு பேட்டி எடுக்கப்பட்டது பற்றி எப்படி உலகத்துக்கே எப்படி தெரியுது?னு யோசிக்கிறாளா?  இந்த விசயத்தில் பார்ப்பாணுக லெவெலே தனிதான்! பேட்டி வருமுன்னாலேயே இதை அறிந்து, அந்தம்மாவை அணுகி, " நீங்க சுஜாதாவுடன் வாழ்ந்திருந்தால் என்ன? அதனால உங்களுக்கு அவரைப்பத்தி  ரொம்ப தெரிஞ்சிடுமா? நீங்க எப்படி இப்படி செய்யலாம்?  அவரைப்பற்றி இல்லாததையும் பொல்லாததையும் எப்படிச் சொல்லலாம்? உங்க ஆத்துக்காரர் பத்தி  நீங்க  "  பொய் பொய்யா ஜோடிச்சு"  ச்சொல்லி இப்படி எல்லாம்  எப்படி ஒரு அசட்டுத்தனமான பேட்டியைக்கொடுக்கலாம்? அவர் பார்ப்பன மீடியாவை பயன்படுத்தி  உருவாக்கி வைத்திருந்த  " பெண்ணியவாதி"   என்கிற அவருக்கு சம்மந்தமே இல்லாத ஒரு உருவத்தை/ பிம்பத்தை இப்படி  அழிச்சுட்டேளே!" னு ஒப்பாரி வைத்ததுடன். அந்தப் பேட்டி வெளிவருமுன்பே, அந்த பத்திரிக்கையின் தரத்தைப்பற்றியும்,  பேட்டி எடுத்தவருடைய தரத்தையும், மஞ்சள் பத்திரிக்கை என்றும் சொல்லிக்கிட்டு திரிகிறாணுக!  அவர் மனைவியிடம் ஒரு நேர்முகப் பேட்டியில் சேகரித்த விசயங்களை ,  என்னவோ ஏதோ ஊருல உள்ள யாரிடமோ பேசிப்பெற்ற விசயம்போலவும், ஏதோ  இல்லாததையும் பொல்லாததையும் எழுதியதுபோல் பிதற்றி, கிழிந்துபோன சுஜாதாவின் முகத்திரை தைக்க முயல்றாணுகப்பா!

சரி, இதே பார்ப்பன மீடியா, தந்தை பெரியாரை எல்லாம்  என்ன என்னவெல்லாம் சொல்லி , பிள்ளையாரை கும்பிட்டான்! சின்னப்பொண்ணை கட்டிக்கிட்டான்,  சொல்லி அவர் பொணமான பிறகும் அவதூறு தூற்றினானுகள்? அதெல்லாம் இவனுகளுக்குத் தெரியாதா என்ன? அதையெல்லாம் நாங்க பார்க்கலையா என்ன? இப்போ மட்டும் என்ன பெருசாத் துடிக்கிறேள்???

உங்களுக்குத் தெரியுமா? பெரியாரை கேவலப்படுத்தவே ஒரு விஷப் பார்ப்பான் ஒருத்தன், இணையதளத்தில்  தன்னை ஒரு"எஸ் ஸி"யாக உருவெடுத்து வந்து,  தாழ்த்தப்பட்டவனாக நடித்து, தன் சாதியை பெரியார் இழிவுபடுத்தியதாகவும் சொல்லி வாதிட்டு இருக்கான்! இதுபோல் தாழ்த்தப்பட்டவனாக நடித்த பார்ப்பானுகள் பற்றிக் கூட ஆதாரப்பூர்வமான தகவல்கள் என்னிடம் இருக்கின்றது!

தீண்டாமைனா என்னனே தெரியாது போலவும், படிப்பறிவில்லா உயர்சாதினு பிதற்றும் திராவிட முண்டங்கள்தான் தாழ்த்தப்பட்டவாளை எல்லாம் இழிவுபடுத்தினார்கள் என்றும், "நாங்க எல்லாம் வெறும் அப்பாவிக,  அவங்களை மனுஷாளா எங்களைப்போலவே மதித்தோம்" என்பது போல பிதற்றிக்கொண்டு அப்பாவி வேடமிற்று அலைகிற பார்ப்பானுகளை இன்னைக்கும் பார்க்கலாம்!

பெரியாரின் பிம்பத்தை இழிவுபடுத்தும்போது  "இதெல்லாம் தேவை இல்லாதது"னு சொல்லி எவனாவது ஒரு பார்ப்பான் சொல்றதைப் பார்த்து இருக்கீங்களா?

பெரியார் செத்தால் தென் இந்திய பிராமணர்கள் எல்லாம் நிம்மதியடைவார்களா? என்றெல்லாம் 50 ஆண்டுகளுக்கு முன்னால், பத்திரிக்கையில் கேள்வி பதில்கள் வந்ததாக வயதான பெரியவர்கள் சொல்கிறார்கள்!

ஆனால் இன்னைக்கு சுஜாதா என்கிற எழுத்தாளருடைய முகத்திரை கிழியும்போது, அவர் ஒரு பார்ப்பனர், ஆத்திகர் என்பதால், "ஊரை கவனமாக ஏமாற்றி, தனக்கு இல்லாத ஒரு பிம்பத்துடன் சுஜாதா வாழ்ந்து இருப்பாரோ?" என்கிற கேள்வி எழுமே?   "உலகம் அவரை ஏதாவது தாறுமாறா சொல்லிப்புடுமே" னு பார்ப்பாணுக துடிக்கிற துடிப்பு இருக்கே! அட அட அட அடா!

இதுபோல் ஒப்பாரி வைக்கும் பார்ப்பாணுக புரிந்துகொள்ள வேண்டியது ஒண்ணே ஒண்ணுதான்!

A hypocrite is a person who - but who isn't?
 -Don Marquis