Wednesday, May 22, 2013

அறிவியல் சொல்லிக்கொடுப்பது கற்றுக்கொள்ளத்தான்? மூன்று

அறிவியல் என்பது கடல்! அது சரி, எதுதான் கடல் இல்லை? தமிழும் கடல்தான்!  பெண்கள் மனமும் கடல்போல ஆழமானதுதான். உண்மைதான் அறிவியல்போலவே அவைகளும் கடல்போல ஆழமானதுதான். ஆமா, ஏகப்பட்ட கடல்கள் இருக்கு நம்மைச் சுத்தி! :-))

"ஒரு ஆசிரியர்னா அவர்களுக்கு எல்லாம் தெரியும். அவங்க சொல்றதை எல்லாத்தையும் மதிக்கணும்" என்பது  நம்மிடம் உள்ள தவறான புரிதல். அந்த ஆசிரியர்  அந்த சக்ஜெக்ட்ல பி எச் டி வாங்கி இருக்கலாம்..அதனால என்ன இப்போ? இங்கேதான் அறிவியலாளன் என்பவன் பிரச்சினைக்குரிய ஒரு ஆளாகிறான். எதையும், யாரையும்  ஆராய்வதில தப்பில்லை! அறிவியலாளனுக்கு அடிப்படை என்னவென்றால் உண்மை! வெறும் நம்பிக்கை கெடையாது! அதனால அவன் எதையும் சும்மா நம்ப மாட்டான்! உண்மையைத்தவிர! உண்மையைக் கத்துக்கணும்னா நீ உண்மையானவனா இருக்கணும். அட் லீஸ்ட் புரியாததை புரிஞ்சதுனு சொல்லி நடிக்கக்கூடாது. அப்படி உன்னை நீயே ஏமாற்றிக்கொண்டால் அது நீயே உனக்கு வச்சிக்கிறத் தடைக்கல்!

நான் ஒருமுறை என் வாத்தியாரிடம் போயி வெட்கத்தைவிட்டு "இது எனக்கு புரியலை சார். இதுக்கு என்ன அர்த்தம்? கொஞ்சம் விளக்க முடியுமா?" னு கேட்டேன். அதுக்கு அவர் என்னை அழச்சுண்டு போயி பல புத்தகங்களைப் புரட்டி என் அறியாமையைப் போக்குவார்னு நெனச்சுண்டு இருந்ததால் நான் மிகப்பெரிய ஏமாற்றம் அடைந்தேன். அவர், உடனே இந்தப் புத்தகத்தை எடுத்துப் பாரு, அதில் விளக்கி இருப்பான்னு பதில் சொன்னாரு. இதில் என்ன பிரச்சினைனா இவர் சொல்ற புத்தகம் எனக்கு அவ்வளவு எளிதில் கிடைக்காது!  மேற்படிப்புக்கு பாடம் நடத்தும் நம்ம வாத்தியார்கள் வாரத்துக்கு ரெண்டு க்ளாஸ்தான் எடுப்பது வழக்கம். மத்த நேரமெல்லாம் காண்டீன், ஷேர் மார்க்கட்,  மண்ணாங்கட்டினு பொழைப்பை ஓட்டிக்கிட்டு திரிகிறது. ஒருத்தன் தெரியலைனு வந்து கேட்கிறான். நீதான் ரெண்டு மணி நேரத்துக்கு பதிலா இன்னொரு மணி நேரம் செலவழிச்சு விளக்கினால்த்தான் என்ன? என்றெல்லாம் கேள்வி அவர்களைக் கேட்கமுடியாத பருவம் அது. பல வாத்தியார்களுக்கு மாணவர்கள் கேள்வி கேட்பதே பிடிக்காது! அப்படியே கேட்டுப்புட்டான்னா இப்படி எதையாவது சொல்லி பொழைப்பை ஓட்ட வேண்டியது. அப்புறம் எங்கேயாவது அவனைப்போட்டு சுழிக்கிறது! எதுக்குடா வம்புனு முட்டாளாவே இருந்துட்டா நெறைய மதிப்பெண்களுடன் வெளியே போயி "சாதிக்கலாம்"!

எனிவே, பாடம் நடத்துவது எதுக்குனு பார்த்தால், கற்றுக்கொள்வதற்கே என்பேன் நான். அறிவியல் கட்டுரைகள் எழுதுவது அறிவியல் கற்றுக்கொள்ளவே! உங்களுக்கு ஒண்ணு நல்லாப் புரிஞ்ச மாரி இருக்கும். ஆனால் அதை இன்னொருவருக்கு விளக்கும்போதுதான் நமக்கே இன்னும் அது சரியாப் புரியலைனு புரியும். நான் சொல்வது வேறமாரிப் புரிதல். சும்மா விக்கில தோண்டி எடுத்து வந்து, தோண்டி வந்ததெல்லாம் நமக்குப் புரிந்துவிட்டதுபோல நடிப்பதல்ல!

கற்றுக்கொடுக்கணும்னா நமக்குப் புரியாததை ஏற்றுக்கொண்டு, மேலும் அதைப்பத்தி படிச்சு கற்றுக்கொண்டு விளக்கணும். அப்படியெல்லாம் எல்லாரும் செய்வதில்லை!

இது புத்திசாலிகளுக்கான உலகம்! இதுபோல் சிரத்தையுடன் கற்றுக்கொண்டு கற்றுக்கொடுக்கும் முட்டாள்களுக்கானது அல்ல! அப்படிக் கற்றுக்கொள்வதால், கற்றுக்கொடுப்பதால் வேறு யாருக்கும் நன்மையோ இல்லையோ, உங்களுக்குத்தான் நன்மை. அதைப்பற்றி நீங்க இப்போ இன்னும் கொஞ்சம் தெளிவாகப் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

அதனால் பாடம் சொல்லிக்கொடுப்பதே நாம் இன்னும் கற்றுக் கொள்வதற்குத்தான், நாம் இன்னும் நன்றாக புரிந்துகொள்ளத்தான். என்ருமே நாம் அனைவருமே மாணவர்கள்தான்.

சரி, ப்ரோட்டீன்னா என்ன?

அமினோ அசிட்கள் ஒண்ணோட ஒண்ணு சேர்ந்து பெரிய ஒரு பெரிய மாலிக்யூலா எப்படி ஆகும்?



மேலே உள்ளமாரித்தான் ஒண்ணோட ஒண்ணு சேரும். இதுபோல் நூற்றுக்கணக்கான வேற வேற அமினோ ஆசிட்கள் ஒண்ணு சேர்ந்தால் ஒரு ப்ரோட்டீன் உண்டாகும். நான் சொன்னதுபோல் அந்த ப்ரோட்டினுக்கு உயிர் இருக்கு!

சரி, இந்த மாரி யாரு ஒரு ப்ரோட்டினை உருவாக்குவது?


டி என் எ தான் எந்த மாரி ப்ரோட்டீன் உருவாகணும் என்கிற "கோடிங்" எல்லாம் கொடுக்கும், அதை உருவாக்குவது ஆர் என் எ வும்,  என்ஸைம்களும் (ப்ரோட்டின்கள்தான்) சேர்ந்து.

நம்ம ஆய்வகத்தில் வேதிக்குடுவைகளில் செய்வதைவிட இந்த டி என் எ  சொல்லும் "கோடிங்"கை (அதாவது என்ன மாரி ப்ரோட்டீன் அல்லது டி என் எ வேணும்னு சொல்றதை), ஆர் என் எ வும், ப்ரோட்டீன்களும் (என்சைம்களும் ) சேர்ந்து உருவாக்கிவிடும்!

அப்படி உருவாக்கும் உயிருள்ள ப்ரோட்டீன் எப்படி இருக்கும்?




என்ன மறுபடியும் கலர் கலரா ரிப்பனா? :)) ஆமா, இது டி என் எ இல்லை! ப்ரோட்டீன் ரிப்பன்கள்! அதாவது பக்கத்துல போயி பார்த்தால்..
 

பக்கத்திலே போயி ரிப்பனைப் பார்த்தால் மேலே இருக்கமாரித்தான் இருக்கும்.

நீங்க மட்டுமில்லை, பெரிய பெரிய பயாலஜிஸ்ட்ஸ்களுக்குக்கூட அதை கீழே கொடுக்கப்பட்டது போல் பார்க்கப் பிடிக்காது. ரிப்பனாகத்தான் பார்க்கப் பிடிக்கும்!

இப்போ ப்ரோட்டின்னா என்னனு புரிஞ்சிருச்சா? :)))

-தொடரும்

6 comments:

nila said...

:)

வருண் said...

nila: Thanks for stopping by. At least you should read these articles when time permits .

nila said...

definitely... I read most of ur posts.. sometimes i just accumulate them to read in d weekend

கவியாழி said...

வாத்தியார்களுக்கு மாணவர்கள் கேள்வி கேட்பதே பிடிக்காது!//உண்மைதான் இப்படியும் சிலர் இருக்கத்தானே செய்கிறார்கள்?

வருண் said...

**nila said...

definitely... I read most of ur posts.. sometimes i just accumulate them to read in d weekend***

I meant only the "biology-related" stuff. You could ignore the other stuff. :-)

வருண் said...

***கவியாழி கண்ணதாசன் said...

வாத்தியார்களுக்கு மாணவர்கள் கேள்வி கேட்பதே பிடிக்காது!//உண்மைதான் இப்படியும் சிலர் இருக்கத்தானே செய்கிறார்கள்?***

என் துரதிஷ்டம்...எனக்கு கற்றுக்கொடுத்தவர்கள் பொதுவாக அப்படித்தான், ஐயா! :)