அறிவியலை எளிய முறையில் புரிந்துகொள்ள முடியுமா? முடியாது! அப்போ எதுக்கு இந்த அறிவியல்? ஒரு சிலர் புரிந்து கொண்டாலும் பரவாயில்லை! என்ற பெரிய மனசு எனக்கு! :-)
இப்போ எல்லாம் ஆத்திகர்கள்தான் அறிவியலை கையிலே வச்சுண்டு அறிவியலாளன் எல்லாம் முட்டாள்கள்! டார்விந்தான் மிகப்பெரிய முட்டாள்! எங்க ஆண்டவந்தான் எல்லாருக்கும் மேலேணு அவங்களுக்குள்ளே நிரூபித்து, அவங்களுக்குள்ளேயே கதை சொல்லி, கை தட்டல் வாங்கிக்கிட்டு நெஞ்சை தூக்கிக்கொண்டு திரிகிறார்கள்! எல்லாம் அவங்க ஆண்டவன் காப்பாத்திப்புடுவான்னு தைரியத்திலே தான். வேறென்ன?
ஆன்ஜலீனா ஜோலி தனக்கு வரப்போகும் வியாதியை உணர்ந்து அதற்காக முன் எச்சரிக்கையுடன், தன் மார்பகத்தை அறுவை சிகிச்சை செய்து அதற்காக பதிலாக செயற்கையான மார்பகத்தை வைத்துக் கொண்டுள்ளார். இதை மூடி மறைக்காமல், உலகுக்கும் சொல்லி, பலருக்கும் உதவும் வகையில் நடந்துள்ளார்.
சரி இவருக்கு எப்படித் தெரியும்? தனக்கு 87% சாண்ஸ் மார்புப்புற்று நோய் வர வாய்ப்பிருக்கு என்று?
அவரோட கடவுள் கனவுல வந்து சொன்னாரா? இல்லைனா நம்ம கிருஷ்ண பரமாத்மாதான் நேரிடையாகப் போயி சொன்னாரா? இல்லைனா எப்படி?
ஆத்திகந்தான் சொல்லுவானே எல்லாப் புகழும் இறைவனுக்கே! னு ஆக, நம்ம க்ரிடிட்டை அந்த இறைவனுக்கு அள்ளிக் கொடுத்துப் புட்டு சில அறிவியல் உண்மைகளைப் பார்ப்போம்.
க்ரோமோசோம்னா என்ன?
ஜீன் என்றால் என்ன?
ஜெனட்டிக்ஸ் னா என்ன?
அவர் அம்மாக்கு அந்த கேன்சர் உண்டாக்கும் ஜீன் இருந்தால் இவருக்கு எப்படி கேன்சர் வரும்?
இப்போ நம்ம ஜெனட்டிக்ஸ் தெரிஞ்சுக்கனும்.
அதான் க்ரூமோசோம், எக்ஸ்-வை (XY) இருக்கு. அப்புறம் எக்ஸ்-எக்ஸ்(XX) அதெல்லாம்தான். இதெல்லாம் தெரியுமே னு எல்லாம் புரிஞ்சமாரி நடிச்சுக்கலாம்.
ஆனால் உண்மையிலே புரிஞ்சதா?
அப்படினா?
உண்மையிலே புரியலைனா நான் ஏன் புரிஞ்சதுனு சொல்றேன்? னு எரிச்சலுடன் சொல்றீங்களா?
கோவிச்சுக்காதீங்க! இது சம்மந்தமாக எனக்கு இன்னும் நெறையா கேள்விகள் இருக்கு! அதான் கேட்டேன்.
உங்களுக்கு கேள்வியே இல்லையா? சரி, நல்லாயிருங்க!
புரியாதவர்கள், புரிந்துகொள்ளணும்னு நெனைக்கிறவங்களைப் பார்ப்போம்!
கீழே ஊதாவா ஒரு ரிப்பன் மாரி இருக்கு இல்ல? அதான் டி என் எ! அப்போ பின்க்கா உள்ளது? அதுவும்தான் டி என் எ. அப்போ, ஊதாவும் பிங்கும் சேர்ந்த கலர் ரிப்பன்? அதுவும் டி என் எ தான்.
கலர் கலரா அழகா இருக்கு ரிப்பன்! :))
சரி, இந்த ஊதா ரிப்பன், டி என் எக்கும் ஜீன்க்கும் என்ன சம்மந்தம்?
டி என் எக்கும் க்ரோமோஸோம்க்கும் என்ன சம்மந்தம்?
ஜீனுக்கும் க்ரூமோசோமுக்கும் என்ன சம்மந்தம்?
இது ஒரு ப்ரோட்டீனா?
இல்லைனா என்ஸைமா?
இது அமினோ ஆசிட் களால் ஆனதா?
இல்லையா?
அப்போ இந்த ரிப்பன் எதால் ஆனது?
கீழே உள்ள படத்தைப் பாருங்க!
மேலே இருக்கதும் அதே ரிப்பன் தான். கொஞ்சம் பக்கதிலே போயி ரிப்பனை பார்க்கிறோம். அம்புட்டுத்தான்.
பயமா இருக்கா?
சரி கீழே உள்ள இன்னொரு நமக்குக் கொஞ்சம் புரிகிற படத்தைப் பாருங்க!
இப்போ ஏதாவது புரியுதா?
புரிஞ்சிருச்சா?
அட இம்பூட்டுத்தானா? னு சொல்றீங்களா??? :)))
-தொடரும்
8 comments:
ராஜ நடராஜன் உள்ளிட்ட பதிவர்களுக்கு விழா எடுக்கணும். பொறுமையா இன்னும் பதிவுகள் எழுதுவதும், மற்ற பதிவுகளுக்கு மறுமொழிதலும்... வாழ்க நும் தொண்டு!!
வாங்க மணீயண்ணா! ஜெனடிக்ஸ் படிக்கலாம் வர்ரீங்களா? :)
வர்ரது வராம இருக்காது, வராம போறது வராது..,
இன்னும் புரிஞ்சிக்க வேண்டியது நிறைய இருக்கு [என் போன்றவர்களுக்கு].
இன்னும் விளக்கமா தொடர்ந்து எழுதுங்க.
கண்டிப்பா எழுதணும்.
எனது தளத்தில் நேரம் விமர்சனம்
http://chakkarakatti.blogspot.in/2013/05/blog-post_7279.html
டார்வின் சொன்னது அறிவியலா........?? ஹெ ......ஹே ........ஹெ ........ஹே ...........ஹே .......
தொடருங்க...
மற்றவர்கள் கலாய்ப்பது போதாதென்று நீங்களும் அறிவியலில் கலாய்க்க வந்துட்டீங்களா ...!! சரி சரி தொடர்ந்து எழுதுங்க உங்க
பாணியிலேயே .....தொடர்கிறேன் .
Post a Comment