Tuesday, May 21, 2013

மனிதனை விட நாய்க்கு அதிக க்ரோமோசோம்கள்! அறிவியல்! ரெண்டு

மனிதனை (46) விட நாய்களுக்கு (78) க்ரோமோசோம்கள் அதிகம் னு தெரியுமா உங்களுக்கு? நாய்க்கு மட்டுமல்ல நெறைய விலங்குகளுக்கு மனுஷனை விட க்ரோமோசோம்கள் அதிகம்!

ஒரு சிலர் X chromosome அம்மாட்ட  இருந்து வருவது, Y chromosome அப்பாட்ட இருந்து வரும்னு என்னவோ இந்த ரெண்டு க்ரோமோசோம்கள்தான் ஒருவருடைய ஜெனெடிக்ஸையே முடிவு செய்யும்னு நெனச்சுக்கிறா.

எக்ஸ் மற்றும் வை க்ரோமோசோம்கள், நமக்கு அப்பா அம்மாவிடமிருந்து வரும் 23 க்ரோமோசோமில் ஒண்ணே ஒண்ணுதான். இது நம்ம பாலியலை முடிவு செய்வது. மற்ற 22 க்ரோமோசோம்கள் நம்ம மற்ற குணங்களை முடிவு செய்யும். அதனால் இந்த எக்ஸ் வையை மட்டுமே பிடிச்சு தொங்காதீங்கப்பா.

 Human cells have 23 pairs of chromosomes (22 pairs of autosomes and one pair of sex chromosomes), giving a total of 46 per cell. 

இருக்கது 23 க்ரோமோசோம் ஜோடிகள். அதாவது 46 க்ரோமோசோம்கள். ஆனால் ஒரு க்ரோமோசோமில்  எத்தனை ஜீன்கள் இருக்குணு தெரியுமா? ஆயிரக்கணக்கான ஜீன்கள்!

அப்போ க்ரோமோசோம் என்பது ஒரு டி என் எ இல்லையா? ஒரே ஒரு டி என் எ இல்லையா? அது ஒரே ஒரு ஜீன் இல்லையா? என்றால்..

க்ரோமோசோம் என்பது டி என் எ மற்றும் ப்ரோடீன் கலந்தது. நம்ம செல் நியூக்ளியஸ்ல ஒரு பெரிய டி என் எ வை வளைச்சு சுருட்டி கட்டி வைக்கப்பட்டிருக்கும். எதால்? பல ப்ரோட்டீன்களால். அப்போ க்ரோமோசோம்ல ப்ரோட்டீன்களும் உண்டா? ஆமா உண்டு! ஒரு டி என் எ வாக இருந்தாலும் அது 6 அடி நீளம் உள்ள ஒரு மாக்ரோ மாலிக்யூல்! அதை சுருட்டி உருட்டி வைத்திருப்பது பல ப்ரோட்டீன்கள். ஒரு டி என் எ வில பல ஜீன்கள் உள்ளது எப்படி? ஒரு டி என் எ வில் ஒவ்வொர் பகுதியும்  ஒரு சில மரபுக் குணங்களை முடிவு செய்யும்!


Chromosome Genes Total base pairs Sequenced base pairs[15] Cumulative (%)
1 4,220 247,199,719 224,999,719 7.9
2 1,491 242,751,149 237,712,649 16.2
3 1,550 199,446,827 194,704,827 23.0
4 446 191,263,063 187,297,063 29.6
5 609 180,837,866 177,702,766 35.8
6 2,281 170,896,993 167,273,993 41.6
7 2,135 158,821,424 154,952,424 47.1
8 1,106 146,274,826 142,612,826 52.0
9 1,920 140,442,298 120,312,298 56.3
10 1,793 135,374,737 131,624,737 60.9
11 379 134,452,384 131,130,853 65.4
12 1,430 132,289,534 130,303,534 70.0
13 924 114,127,980 95,559,980 73.4
14 1,347 106,360,585 88,290,585 76.4
15 921 100,338,915 81,341,915 79.3
16 909 88,822,254 78,884,754 82.0
17 1,672 78,654,742 77,800,220 84.8
18 519 76,117,153 74,656,155 87.4
19 1,555 63,806,651 55,785,651 89.3
20 1,008 62,435,965 59,505,254 91.4
21 578 46,944,323 34,171,998 92.6
22 1,092 49,528,953 34,893,953 93.8
X (sex chromosome) 1,846 154,913,754 151,058,754 99.1
Y (sex chromosome) 454 57,741,652 25,121,652 100.0
Total 32,185 3,079,843,747 2,857,698,560 100.0

*******************************8

பொதுவாக திடப்பொருளாக உள்ளவை அதாவது "solids" வுடைய "density" அதனுடைய  திரவ வடிவத்தில் இருப்பதைவிட அதிகமாக இருக்கும்.  காரணம்? திடப்பொருளாக இருக்கும்போது அந்த மூலக்கூறுகளெல்லாம் ரொம்ப "டைட்லி பாக்டா" இருக்கும். ஆனால் அது திரவநிலையில் கொஞ்சம் ரிலாக்ஸ்ட் ஆக இருக்க முடியும். ஆனால் நம்ம தண்ணீர் (H2O) மட்டும் இதற்கு விதிவிலக்கு!

தண்ணீர் அல்லது வாட்டர் மாலிக்யூல்ஸ் ஏன் வித்தியாசமானது என்றால்...

அதில் "ஹைட்ரஜன் பாண்டிங்" இருப்பதால்னு சொல்லலாம்.

அது திடப்பொருளாக இருக்கும்போது  "density" குறைவா இருப்பதற்கு ஹைட்ரஜன் பாண்டிங் ஒரு காரணம்!

இப்போ என்ன எழவுக்கு டி என் எ ல இருந்து "ஹைட்ரஜன் பாண்டிங்க்" கு தாவுற?னு கோவப்படாதீங்க.

"ஹைட்ரஜன் பாண்டிங்" மிக மிக முக்கியமான ஒண்ணு! டி என் எ அமைப்பு பத்தி புரிஞ்சுக்கணும்னா அதைப் புரிந்துகொள்ளாமல் கொஞ்சம் கஷ்டம்.

ஏன் பனிக்கட்டி தண்ணீரில் மிதக்குது? அது தலையெழுத்து மிதக்குது?
இதிலே என்ன இருக்குனு பெரிய வியாக்யாணம் பேசுறனு தெரியலைனு புலம்பாமல் கவனிங்க.

இதுக்கு முக்கியக் காரணம் ஹைட்ரஜன் பாண்டிங்!




ரெண்டு தண்ணீர் (water) molecules. சிவப்பில் உள்ள முதல் மாலிக்க்யூள்ல் ஆக்ஸிஜனுக்கும் வெள்ளையா இருக்க ரெண்டாவது மாலிக்யூல்ல உள்ள ஹைட்ரஜனுக்கும்  உள்ள பாண்ட் (பிணைப்பு) தான் ஹைட்ரஜன் பாண்டிங்





 



ஐஸ்ல தண்ணீர் ஹைட்ரஜன் பாண்ட்களுடன் இருக்கும் தண்ணிர் மூலக்கூறு எப்படி இருக்குனு பாருங்க! இடையில் பெரிய பெரிய ஓட்டை இருக்கா?






அதே வாட்டர் மாலிக்யூல், தண்ணியா, திரவமா  இருக்கும்போது  இருக்கும் அமைப்பில் அதுபோல் பெரிய ஓட்டை "இடைவெளி" கெடையாது.
இதனால் ஐஸ்வுடைய டென்ஸிட்டி தண்ணீர் (திரவம்)ல இருக்க டெண்சிட்டியை விட குறைவு! இதை ஏன் தெரிஞ்சுக்கணும்?

டி என் எ, மற்றும் ப்ரோட்டீன்களிலும் ஹைட்ரஜன் பாண்டிங் இருக்கு.

சரி ப்ரோட்டின்னா என்ன டி என் எ னா என்ன?

ப்ரோட்டீன் என்பது  அமினோ ஆசிட்களால் ஆனது. டி என் எ என்பது அமினோ ஆசிட்களால் ஆனதல்ல!

ப்ரோட்டீன்னா என்ன?

பல அமினோ ஆசிட்கள் இணைந்து ஒரு பெரிய மாக்ரோ மாலிக்யூல் ஆவது ப்ரோட்டீன். அந்த ப்ரோட்டீனுக்கு பயலாஜிக்கல் ஆக்டிவிட்டி இருந்தால் அதனை என்சைம் எனலாம்!

அப்போ ப்ரோட்டீனும் என்சைமும் ஒண்ணுதானா?

அப்படினு சொல்லலாம்! இரண்டுமே அமினோ ஆசிட்கள் சேர்ந்து அமைக்கப் பட்ட பெரிய மாலிக்யூல்கள்தான்.

அமினோ ஆசிட்னா என்ன?

கீழே பாருங்க! இவைகள்தான் அமினோ ஆசிட்கள்!






 சரி அப்புறம்?

இவைகள் எல்லாவற்றிலுமே குறைந்தது ஒரு அமினோ க்ரூப் (NH2) அப்புறம் ஒரு ஆசிட் க்ரூப் (COOH) ரெண்டுமே இருக்கும்.

இவைகள் தனியாக இருக்கும்போது எதுவும் பெரிதாக சாதிக்க முடியாது. ஆனால் இவைகள் ஒன்றோட ஒன்று இணைந்து ஒன்றாகக்கூடி மாக்ரோ மால்க்யூல் ஆகும்போது இவைகளுக்கு "உயிர் வந்துவிடும்"!

-தொடரும்


11 comments:

கவியாழி said...

நாய்க்கு மட்டுமல்ல நெறைய விலங்குகளுக்கு மனுஷனை விட க்ரோமோசோம்கள் அதிகம்!//
நன்றியும் அதிகம்தான் வருண்

உஷா அன்பரசு said...

பயனுள்ள தகவல்கள்.. தொடருங்க!

இராஜராஜேஸ்வரி said...

வியக்கவைக்கும் தகவல்கள்..!

வருண் said...

***கவியாழி கண்ணதாசன் said...

நாய்க்கு மட்டுமல்ல நெறைய விலங்குகளுக்கு மனுஷனை விட க்ரோமோசோம்கள் அதிகம்!//
நன்றியும் அதிகம்தான் வருண்***

உண்மைதான் சார். நமக்கு அறிவுமட்டும் 6 இருக்குனு பீத்திக்கலாம், அவ்ளோதான்! :)

வருண் said...

***உஷா அன்பரசு said...

பயனுள்ள தகவல்கள்.. தொடருங்க!**

நன்றிங்க உஷா! :-)

வருண் said...

*** இராஜராஜேஸ்வரி said...

வியக்கவைக்கும் தகவல்கள்..!***

வாசித்தமைக்கு நன்றிங்க, ராஜி!

Unknown said...

உபயோகமான தகவல்கள்

nila said...

எனக்கு என் எம்எஸ்சி நியாபகம் வந்துடுச்சு.. அமினோ ஆசிட்ஸ் வரிசை அசிடிக் பேசிக் எல்லாம் மண்டைல ஏத்த ரொம்ப கஷ்டப்பட்டேன் :D எப்படி பிஎச்டி பண்ண வந்தேன்னு கொஞ்சம் மலைப்பா இருக்கு..

வருண் said...

***Gnanam Sekar said...

உபயோகமான தகவல்கள் ***

ந்னறி, ஞானம் சேகர்! :)

வருண் said...

***nila said...

எனக்கு என் எம்எஸ்சி நியாபகம் வந்துடுச்சு.. அமினோ ஆசிட்ஸ் வரிசை அசிடிக் பேசிக் எல்லாம் மண்டைல ஏத்த ரொம்ப கஷ்டப்பட்டேன் :D எப்படி பிஎச்டி பண்ண வந்தேன்னு கொஞ்சம் மலைப்பா இருக்கு..***

வாங்க, நிலா!

எனக்கெல்லாம் பிளஸ் டு பாடம் காலேஜிக்கு போனதும்தான் புரிந்தது. இளநிலை அறிவியல், முதுநிலை அறிவியல் படிக்கும்போது புரிந்தது. முதுநிலை அறிவியல், "மேற்படிக்கும் போது" தெளிவு பட்டது. We always have lots of pressure when we are studying (exam seminar, getting high marks and what not?), so we hardly have time to get into the subject and enjoy what we are studying, I suppose. :)

nila said...

//We always have lots of pressure when we are studying (exam seminar, getting high marks and what not?), so we hardly have time to get into the subject and enjoy what we are studying, I suppose. :) //

true... now when I write the thesis I realize that I have been blindly doing some experiments in the first year without a clear idea of wat it is.. to be frank.. thesis writing pressure is more than exam pressure.. (especially when u still have bench work in heaps).. m going crazy sometimes :(