Friday, April 19, 2013

ஆல் மென் ஆர் பாஸ்டர்ட்ஸ்-3

பலவருடங்கள் முன்னால் விஜி வாழ்க்கையில் நடந்தது பற்றி இங்கே சொல்லணும்.

விஜி, மிடில் ஸ்கூல், ஹை ஸ்கூல் எல்லாம் அவள் சொந்த ஊரான மதுரையிலிருந்து படிக்காமல் பக்கத்தில் இருந்த திண்டுக்கலில் ஹாஸ்டலில் சேர்ந்து படித்தாள். விஜியின் அம்மா, கமலா, மதுரையில் ஒரு ஆசிரியை. ஹையர் சக்கண்டரிக்கு பாட்டனி டீச் பண்ணிக்கொண்டு இருந்தார். அவள் அப்பா பாலசுப்பிரம்ணியன் மதுரையில் செளராஷ்டிரா கல்லூரியில் ஒரு இயற்பியல் பேராசிரியர். மதுரையில் ஆயிரம் நல்ல பள்ளிகள் இருந்தும் விஜியையும் அவள் தங்கை மாலாவையும் திண்டுக்கல்லில் ஹாஸ்டலில் சேர்ந்த்து படிக்க வைத்தார் அவர் அம்மா, கமலா.

ப்ளஸ் 2 படிக்கும்போதுதான் விஜிக்கு அவள் அப்பா "ஒரு மாதிரியான ஆள்" என்று புரிந்தது. தோழி ஒருத்தி ஒரு சாதாரண சண்டையில் எதையோ  விஜி அப்பாவைப்பற்றி மோசமாக சொல்லிவைக்க..ஒன்றும் புரியாமல் விழித்த விஜி, அதன் பிறகு மற்றவர்களிடம் விசாரிக்கும்போதுதான் அவள் "வெல்விஷர்கள்" அவளுக்கு அந்த உண்மையை தெளிவுபடுத்தினார்கள். அதாவது விஜியின் அப்பா பாலாவுக்கும் அவர் கல்லூரியில் பணிசெய்த இன்னொரு பெண்ணிடம் தகாத உறவுத் தொடர்பு இருப்பதும், அதனால் அவங்க அம்மா, கமலா, அவள் அப்பா, பாலாவுடன் உண்மையில் சேர்ந்து வாழவில்லை என்பதும் விஜிக்கு அப்போத்தான் விளங்கியது. இதைப்பற்றி அவள் அம்மா, கமலா, விஜியிடம் பேச விரும்பியதில்லை. ஊருக்காக அவள் அம்மா, அவள் அப்பாவுடன் சேர்ந்து வாழ்ந்தார்கள். ஆனால் அவர்களுக்குள் வாழ்நாள் முழுவதுக்கும் உறவு முறிந்துவிட்டது என்பதும் விஜிக்கு இந்தச் சண்டைக்குப் பிறகு தெளிவுபடுத்தப் பட்டது. அப்பாவின் இந்த "நன் நடத்தையால்"தான் விஜி ஆல் மென் ஆர் பாஸ்டர்ட்ஸ் என்று முழுவதும் நம்பினாள்.

அதன் பிறகு ஒரு நாள், இவளைப் போலவே மதுரையில் இருந்து வந்து படிக்கும் தோழி பவித்ராவிடம், ஆண்கள் ஏன் இவ்வளவு கேவலமாக இருக்கிறார்கள் என்று  இதைப்பற்றிப் பேசியபோது பவித்ரா சொன்ன இன்னொரு விசயம் அதைவிட பயங்கர ஷாக்கிங்காக இருந்தது விஜிக்கு.

பவித்ராவுடைய தாய் மாமா, கோபால், அவருக்கு வயது 48 இருக்கும், பெரிய பணக்காரர், கோடி கோடியாக சம்பாரிப்பவர் இவர். இவருக்கு 12, 14 வயதில் இரண்டு பையன்கள். இவர் மனைவி காந்திமதி ஏழை வீட்டில் இருந்து வந்தவள், ஒரு அப்பாவி. கணவனை நிமிர்ந்துகூட பார்த்து பேசமாட்டார். பணத்திலேயே புரளும் கோபால், தன் சொந்த பந்தங்கள்னு பல குடும்பங்களுக்கு பண உதவி பொருளுதவி எல்லாம் செய்பவர். அப்போது, பவித்ராவுடைய பெரியம்மா மகனுக்கு, அதாவது, கோபாலுடைய அக்கா மகன் வினோத்க்கு, பெண் பார்ப்பதற்காக  சுமாரான வசதியுள்ள ஒரு பெண்ணை பார்க்க சென்றார்கள். தாய் மாமா, கோபால்தான் பெரிய பணக்காரர், பெரும்புள்ளி என்பதால், கோபாலும் அந்த பெண்ணைப் பார்க்கச் சென்றாராம். எதிர்பார்த்ததைவிட பெண் பார்க்கப்போன அந்தப் பெண், பேரழகியாக இருந்தாளாம். ஆனால் அவர்கள் குடும்பத்தில் வசதி கம்மி என்பது  தெளிவாகியது.  பெண்ணைப் பார்த்தவுடன், பவித்ராவின் கசின், வினோத்திடம், உனக்கு வேற பெண் பார்க்கலாம் என்று முறையாக சொல்லிவிட்டார் அந்த பிசினஸ் மேக்னட், கோபால். அதற்கு காரணம்? கோபாலுக்கு அக்கா மகனுக்குப் பார்க்கப்போன அந்தப் பெண்ணை ரொம்பவே பிடித்துவிட்டதாம். ஆமாம், இந்த 48 வயதில் அந்த 20 வயது அழகியைப் பார்த்து மயங்கிவிட்டாராம், கோபால். மனைவியென்றால் இவளைப் போல்தான் இருக்கணும் என்று ஞானோதயம் வந்து  எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் அவளை தான் மணக்க ஏற்பாடு செய்தாராம்-கோபாலின் மனைவி, காந்திமதி உயிரோட  இருக்கும்போதே. கணவனின் இந்தக் கேவலமான ஆசையை உணர்ந்த மனைவி , காந்திமதி, தற்கொலை செய்து செத்துவிட்டாளாம். இருந்தும் கோபால், மனைவி, காந்திமதி  இறந்து சிலமாதங்களில் மருமகனுக்கு பெண் பார்க்க சென்று பார்த்து மயங்கிய அந்தப் பெண்ணையே இரண்டாம் தாரமாக மணந்துகொண்டாராம்! இது உண்மைக்கதை என்றாள், பவித்ரா, தோழி விஜியிடம். விஜியின் அப்பா மட்டுமன்றி, ஆல் மென் ஆர் பாஸ்டர்ட்ஸ் என்பதை தோழி பவித்ரா ஊர்ஜிதம் செய்தாள்!

விஜியுடைய தனிப்பட்ட வாழக்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவம்தான் அவளை இப்படி சந்தேகப்பட, உணர்ச்சி வசப்பட வைத்தது. இந்தக் கதைகளை மட்டும் அவள் ஒரு நாளும் மோஹனிடம்கூட சொன்னது இல்லை!

-தொடரும்

9 comments:

'பரிவை' சே.குமார் said...

கதை அருமையாப் போகுது...
வாழ்த்துக்கள்...
தொடருங்கள்...
தொடர்கிறோம்....

உஷா அன்பரசு said...

ம்.. விஜி வாழ்க்கையில் பார்த்த ஆண்களை வைத்து ஆல் மென் ஆர் பாஸ்டர்ட்ஸ் என்று முடிவு பண்ணிட்டாங்களா? கதை சுவாரஸ்யமாக இருக்கு! தொடருங்க!

உஷா அன்பரசு said...

ம்.. விஜி வாழ்க்கையில் பார்த்த ஆண்களை வைத்து ஆல் மென் ஆர் பாஸ்டர்ட்ஸ் என்று முடிவு பண்ணிட்டாங்களா? கதை சுவாரஸ்யமாக இருக்கு! தொடருங்க!

பூ விழி said...

எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ போகுது அப்புறம் ???கடைசியில் என்ன பஞ்ச வ்ரபோகுதோ இது தொடர் கதையா இது கற்ப்பனையா ?????

வருண் said...

***சே. குமார் said...

கதை அருமையாப் போகுது...
வாழ்த்துக்கள்...
தொடருங்கள்...
தொடர்கிறோம்....***

வாங்க குமார். இதை தொடர நேரம்தான் கெடைக்க மாட்டேங்கிறது. திடீர்னு லைஃப் பிஸியாடுச்சு!

வருண் said...

***உஷா அன்பரசு said...

ம்.. விஜி வாழ்க்கையில் பார்த்த ஆண்களை வைத்து ஆல் மென் ஆர் பாஸ்டர்ட்ஸ் என்று முடிவு பண்ணிட்டாங்களா? கதை சுவாரஸ்யமாக இருக்கு! தொடருங்க!***

உலகத்திலே நெறையா ஆம்பளைங்க இப்படித்தான் இருக்காங்க.. என்ன பண்ணுவா விஜி பாவம்! :(

வருண் said...

***poovizi said...

எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ போகுது அப்புறம் ???***

பூவிழி.. உங்களை என்ன ஆளையே காணோம்? ஐ மீன் பதிவுலகில்! :))

***கடைசியில் என்ன பஞ்ச வ்ரபோகுதோ?***

பஞ்ச் எல்லாம் ஒண்னும் இல்லை. வேணா நீங்க இதை தொடர்ந்து எழுதி பஞ்ச் சோட முடிச்சுடுங்க! :)))

*** இது தொடர் கதையா இது கற்ப்பனையா ?????****

எல்லாமே நமக்கு முன்னால நடக்கீறத பார்த்து அதை கதையாக்கி எழுதுறதுதான். :)

Anonymous said...

உங்களின் பதிவுகளை விட கதை அருமை, கதைகளில் கவனம் செலுத்தினால் நல்ல படைப்புக்களை உருவாக்கக் கூடும் தாங்கள். அப்பாவும், அம்மாவும் குடும்ப உறவில் முறிவுக் கண்டு மனதாபப் பட்டதை ஒரு பெண் 12-ம் வகுப்பு படிக்கும் போதே அறிந்து கொண்டாள் எனக் கூறுவது இடிக்குது.

வருண் said...

Niranjan thambi: உண்மைதான். நான் தொடர்ந்து எழுதாததால், கொஞ்சம் முன் பின் முரணாக்கத்தான் என் கதை போகிறது.

ஆனால் நீங்க சொன்ன..

***அப்பாவும், அம்மாவும் குடும்ப உறவில் முறிவுக் கண்டு மனதாபப் பட்டதை ஒரு பெண் 12-ம் வகுப்பு படிக்கும் போதே அறிந்து கொண்டாள் எனக் கூறுவது இடிக்குது.**

விமர்சனத்துக்கு பதில் இதே தளத்தில் இருக்கு..

கற்புனா என்ன சில நினைவலைகள்- பகுதி 2 மற்றும் 3 (இதே தளத்தில் 2008 ஜூலை மாதம் தோழி கயல்விழி யால் எழுதப்பட்டது) போயி வாசிச்சுப் பாருங்க. :) அதில் பதில் இருக்கு.