Thursday, April 9, 2009

Unforgiven (A)-மன்னிப்பே கிடையாது! (3)


நம்ம க்ளிண்ட் ஈஸ்ட்வுட் (வில்லியம் மண்ணி) ஒரு ரிட்டயர்ட் திருடன், குடிகாரன், கொ லைகாரன். ஆனால் இன்று திருந்தி வாழ்கிறார். இவரை திருத்தியது இவருடைய அழகான இளம் மனைவி. இவரை இவர் மனைவி எதுக்காக கல்யாணம் செய்தார் என்று யாருக்கும் புரியவில்லை. இவர் ஒரு திருடன் கொலைகாரன் என்பது அறிந்தும் இவரை மணந்துகொள்வார். காதல்! இவரை கல்யாணம் செய்து இவரை நல்வழிப்படுத்திவிட்டு 2 வருடம் முன்னால் அவர் மனைவி பெரியம்மை நோயால் போய் சேர்ந்துவிடுவார். மனைவியை இழந்த இவர் இப்போது தன் இரு குழந்தைகளுடன் மிசவ்ரியில் யாருக்கும் தெரியாமல் ஒரு பன்னி பண்ணை வைத்துக்கொண்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறார். வில்லியம் மன்னிக்கு இப்போ வயதாகிவிட்டது, குடிப்பதில்லை, கொலை யெல்லாம் விட்டு பல வருடங்கள் ஆச்சு. துப்பாக்கியே தூக்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

இப்படி இவர் ஒளிந்து எந்த வம்பிலும் மாட்டாமல் ஒதுங்கி நல்வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இருக்கும்போது ஒரு இளைஞன் இவரை தேடிக்கொண்டு வருகிறான். இவன் பெயர் “ஸ்கோஃபீல்ட் கிட்” நு சொல்லிக்க்குவான். அதாவது அவன் ஒரு “ஸ்கோஃபீல்ட்” பிஸ்டல் ஹேண்டில் பன்ணுவதில் மன்னன் என்பதால் அந்த அடைமொழி என்பான்.இவன் ஒரு மாதிரியான சைல்டிஷ் கேரக்டர்.



“நீங்கதான் வில்லியம் மன்னியா? உங்களை பார்த்தால் அப்படி தெரியலை. என் அங்கிள் பீட் சொன்னார், நீங்க ஒரு பெரிய கன்ஃபைட்டர்னு. எனக்கு ஒரு பார்ட்னர் வேணும்னா, நீங்கதான் நல்ல ஒரு சாய்ஸ் என்றார். உங்களை பார்த்தால் பரிதாபமாக இருக்கு” என்பான்.

“உள்ளே போய் பேசலாம்” என்பார் வில் மன்னி குழந்தைகள் அருகில் இருப்பதால்.

“என்ன விசயம்?” நு கேட்பார்.

அதற்கு அந்த இளைஞன் சொல்லுவான். நான் "பீட்"டினுடைய நெஃப்யூ இதுபோல் வயாமிங்ல ஒரு விலைமாதை இரண்டு பேர் கண்டமேனிக்கு காயப்படுத்திவிட்டார்கள். அவர்கள் இருவரையும் கொன்றால் $1000 ரிவார்ட். அவர்களைக் கொல்ல எனக்கு ஒரு பார்ட்னெர் வேணும் என்று. உடனே "வில் மன்னி" (க்ளிண்ட் ஈஸ்ட்வுட்) சொல்வார் தான் திருந்தி வாழ்ந்துகொண்டு இருக்கிறேன். என் மனைவி என்னை திருத்திவிட்டாள். உன் அங்கிள் பீட் சொன்னதுபோல் நான் இப்போது இல்லை என்று விளக்கி அவனை அனுப்பிவிடுவார்.

உடனே அந்த சிறுவன், உங்க மனதை மாற்றினால், நான் வடக்குப்பக்கம் வயாமிங் நோக்கிப் போகிறேன் நீங்க வந்து சேர்ந்து கொள்ளுங்கள். உங்களைப் பார்த்தால் ரொம்ப கஷ்டப்படுவதுபோல் இருக்கு, இந்தப்பணம் நல்லா உதவலாம் என்று சொல்லிவிட்டு போவான்.

அவன் போனவுடன் வில் மன்னிக்கு மனது மாறும். மனைவியும் உயிருடன் இல்லாததால், ஏன் செய்யக்கூடாதுனு ஒரே மனக்குழப்பமா இருக்கும். தன் துப்பாக்கியை எடுத்து சுட்டுப்பார்ப்பார். சரியாக சுடக்கூட தெரியாது. குதிரையில் ஏறினால், அதிலிருந்து வழுக்கி விழுவார். எப்படியோ கஷ்டப்பட்டு குதிரையில் ஏறி துப்பாக்கி, மற்றும் தேவையான பொருள்களை எடுத்துக்கொண்டு, தன் குழந்தைகளை கவனமாக இருக்க சொல்லிவிட்டு புறப்படுவார்.

போகும் வழியில் தன் நண்பன் நெட் லோகனையும் (மார்கன் ஃப்ரீமேன்) அழைத்துக்கொண்டு போவார்.

பணம் தேவை என்பதாலும், ஒரு பெண்ணை அகோரப்படுத்தியதாலும் இருவருக்கும் அது தப்பாகத்தோனாது. வேதாளம் முருங்க மரத்தில் ஏறும்!

இருவரும் அந்த சிறுவனை கொஞ்ச நாளில் கேட்ச் பண்ணுவார்கள். அவன் முதலில் “நெட்” சேர்வதை விரும்ப மாட்டான். பிறகு “நெட்” என் ஃப்ரெண்டு, அவனை நீ சேர்க்கலைனா, நானும் வரவில்லைனு வில் மன்னி சொன்னதும், அந்த சிறுவன் சரி என்பான். 3 பேரும் $1000, சமபங்கா பிரிச்சுக்கலாம் என்று வயாமிங் நோக்கி போவார்கள்.

போகும் வழியில், அந்த சிறுவனுக்கு “ஷார்ட் சைட்” அவன் இதுவரை யாரையும் கொன்றதில்லை எனபதை, வில் மற்றும் “நெட் லோகன்” புரிந்து கொள்வார்கள். வில் லும், நெட் டும் பழங்கதை பேசிக்கொண்டு போவார்கள். யார் யாரை கொன்றார்கள், என்ன என்ன அயோக்கியத்தனம் எல்லா செய்தார்கள் என்று. இந்த பையன் ஸ்கோஃபீல்ட் கிட் ஏதாவது பொய் சொல்லிக்கொண்டு உளறிக்கொண்டே வருவான். அவன் சொல்லும் கதைகளையெல்லாம் இவர்கள் இருவரும் நம்பமாட்டார்கள்.

பிக் விஷ்கியில் இவர்கள் மூவரும் நுழையும்போது, இங்லிஷ் பாப் வெளியே அனுப்பப்படுவார். அன்றும், இடி மின்னல் மழையாக இருக்கும். இரவு நேரம். வில்லியம் மன்னிக்கு ஒரு ஃப்ளூ (காய்ச்சல்) வந்துவிடும். ஏதோ உளற ஆரம்பித்துவிடுவார். மூவரும் அந்த சலூன் (க்ரீலீஸ்) உள்ளே போவார்கள். க்ளிண்ட் (வில்லியம் மன்னி) மட்டும் குடிக்க மாட்டார், விலைமாதுவிடம் போவது தப்பு என்று நினைப்பார். அதனால், வில்லியம் மன்னி மட்டும் அங்கே பார்ல உட்கார்ந்து இருப்பார். மற்ற இருவரும், மேலே போய் அந்த விலைமாதுகளிடம் தாங்கள் வந்த விசயத்தையும், அவர்களை கொல்லப்போகிறோம் என்றும் சொல்வார்கள். அதற்காக அட்வாண்சாக அவர்களிடம் படுப்பார்கள். இப்போ விசயம் செரீஃப்க்கு போய்விடும். அதாவது 3 ஸ்ட்ரேஞ்சர்ஸ் வந்து இருக்காங்க, அவர்களிடம் துப்பாக்கி இருக்கு என்று.

உடனே நம்ம ப்ரூட்டல் செரீஃப் லிட்டில்பில் அங்கே வருவார். இப்போ வில்லியம் மன்னி மட்டும்தான் இருப்பார். ஒரு விஷ்கி பாட்டில் டேபில் மேலே இருக்கும். நெட் லோகன், நண்பனை குடிக்க சொல்லி வலிய்றுத்திவிட்டு மேலே விலைமாதுவிடம் போய்விடுவார்.

செரீஃப் வந்தவுடன், வில் மன்னியிடம்

"உன் பெயர்?'

"வில்லியம்"

"வில்லியம்??"

"ஹென்றிஷா"

இங்கே க்ளிண்ட் உண்மை பேரை சொன்னால் பெரிய விபரீதம் ஆகிவிடும். வில்லியம் மன்னி என்கிற பேர் அமெரிக்கா முழுவது பிரபலம்.

"துப்பாகி எதுவும் வச்சிருக்கியா?'

"இல்லை"

"உன் ஃப்ரெண்ட்ஸ் மேலே இருக்காங்க இல்ல? அவர்கள்?'

"அவங்ககிட்டயும் இல்லை"

செரீஃப், வில் மன்னி அருகில் வந்து செக் பண்ணுவார். துப்பாக்கி அவர் வைத்திருப்பார். அதை செரீஃப் கையில் வாங்கிக்கொண்டு,

"இது என்ன?"

"அது பாம்பு கீம்பு வந்தால் கொல்வதற்கு"

"இங்கே பாம்பு கிடையாது, மிஸ்டர் ஹென்றிஷா"

"லோட் பண்ணல, பவுடர் ஈரமா இருக்கு"

இப்போது, எல்லோரும் இருப்பார்கள். அந்த எழுத்தாளர், எல்லா டெப்புட்டிகளும், ஒரு சில விலைமாதுகள், ஸ்கின்னி எல்லோருமே வேடிக்கை பார்ப்பார்கள்.

செரீஃப், இது மாதிரி பொய் சொல்லி சமாளிப்பதை பார்த்ததும் பயங்கர கடுப்பாயிடுவார் தன் பிஸ்டலை வச்சி வில்லியம் மன்னி (க்ளிண்ட்) முகத்தில் ஓங்கி ஒரு அடி அடிப்பார். கீழே விழுவார் வில்லியம் மன்னி. முகத்தில் கீறல் விழுந்து ரத்தமா ஓடும். அவருக்கு காய்ச்சல் வேற, வயதும் ஆகிவிட்டது, துப்பாக்கியும் இல்லை. தற்காப்புக்காக விஷ்கி பாட்டிலை எடுக்கப்பார்ப்பார், அதை எடுத்தவுடனே அடுத்த அடிவிழும். அடினா உங்க அடி எங்க அடி இல்லை. பூட்ஸ்கால எத்தி எத்தி வில்லியம் மன்னியை பிச்சு பிச்சு எடுப்பார் செரீஃப்.

அடிச்ச அடினால எழுந்திரிக்கக்கூட முடியாது. அப்படியே தவழ்ந்து வெளியே போவார். எல்லோரும் ஷாக் ஆகி நிற்பார்கள். அந்த எழுத்தாளர் திரு திரு னு முழிப்பார்.

இங்கே செரீஃப் வந்ததை பார்த்தவுடன், ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேரையும் வேறொரு வழியில் அனுப்பிவிடுவார்கள் அந்த விலைமாதுகள். எப்படியோ தடவி தடவி வெளியே வரும் வில்லியம் மன்னி யை பின்னாலிருந்து வந்து ஃப்ரெண்ட்ஸ் குதிரையில் ஏற வைத்து அழைத்து செல்வார்கள்.

செரீஃப் வெற்றிப்புன்னகையுடன் இருப்பார்.

வில்லியம் மன்னிக்கு இந்தக்காயங்களுடன் காய்ச்சல் அடிக்கும். ஊருக்கு வெளியே விலைமாதுகள் உதவியுடன் ஒரு இடத்தில் 3 பேரும் தங்குவார்கள். வில் மன்னி காய்ச்சலில் ஒரே புலம்பல். அவருக்கு சாகப்போகிற பயம் வந்துடும். செத்துவிடார் என்றே ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் முடிவு செய்துவிடுவார்கள். இந்த சூழ்நிலையில் அந்த "கிட்", நெட் லோகனிடம்,

"வில் செத்தால் என்ன பண்றது?" என்பான்.

"புதைப்போம்" என்பார் நெட்.

"இல்லை, நம்ம ரெண்டு பேரும் சேர்ந்ந்து அந்த 2 பேரையும் கொன்றுவிடலாம். நீ உதவி செய்" என்பான்.

"நான் அவன் இல்லாமல் யாரையும் கொல்லமாட்டேன்" என்பார் நெட் லோகன்.

வில்லியம் மன்னி பிழைப்பாரா, சாவாரா என்ன ஆகப்போதுனு பயந்துகொண்டு இருப்பார்கள்.

-தொடரும்

No comments: