Sunday, May 17, 2009

பணநாயகம் வெல்கிறது! யார் தப்பு, வருண்?!

இன்றைய அரசியலில் பணத்தால் பல ஆயிரக்கணக்கான ஓட்டுக்கள் வாங்கப்படுகின்றன என்பதை யாருமே மறுக்க முடியாது. யாருடைய ஓட்டுக்கள் இப்படி வாங்கப்படுகிறது? யாரை நாம் குறை சொல்லனும்? இதை ஒரு பேசும் நடையில் எழுதுகிறேன்.

“வருண்! அரசியலே கேவலமா போச்சு போங்க! ஒரு வீட்டுக்கு 1000 னு கொடுத்து ஓட்டு வாங்கி ஜெயிக்கிறார்கள்!”

“யாருடைய ஓட்டு இது?”

“பொதுவா அந்த அந்த கட்சிக்காரன் அவர்கள் கட்சிக்குத்தான் போடுவாங்க. இதில் வாங்கப்படுவது எந்தக் கட்சியிலும் பிடிப்பில்லாத ஏழைகள்னு இல்லைனா சந்தர்ப்பவாதிகள்னு சொல்லலாம்.”

“பணத்தை கொடுத்து ஓட்டு வாங்குவதில் இந்த அரசியல்வாதிகளுக்கு வெட்கமில்லையா?”

“இல்லை வருண், அவர்கள் அரசியல்வாதிகள்! அவர்கள் செய்வது பெருந்தவறுதான். ஆனால், மக்கள்தானே அதை ஊக்குவிக்கிறாங்க? அவங்க செய்வது எப்படி நியாயம்? தன் ஓட்டை கேவலமாக ஒரு விலை வைத்து விற்பது யார்? இதில் என்ன ஒரு விசயம் தெரியுமா? காசு வாங்கியவன் கட்டாயம் அந்த கட்சிக்குத்தான் போடுறான் ”

“ஏன் மாத்திப்போட்டால் எப்படி தெரியும்?”

“தெரியலை. நிச்சயம் அவர்கள் ஓட்டு காசு வாங்கிய கட்சிக்குத்தான் போகிறது. மனசாட்சிக்கு பயந்தவர்களா? இல்லை பயமா? னு தெரியலை. ஓட்டுக்காக பணம் வாங்கிய அவர்கள் ஏமாற்றுவதில்லை”

“நிச்சயம் நம் மக்கள்தான் இதுபோல் கேவலமான பணநாயகத்திற்கு காரணம்”

ஆமாம், "தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம் காசு முன் செல்லாதடி!" என்பது அன்றும் இன்றும் உண்மைதான் போலும்! :( :( :(

No comments: