Monday, May 18, 2009

இது இந்தியா! நாங்க "தமிழ் இந்தியர்கள்"!

பங்களூரில் அந்த ஹாஸ்டல் அறையில் மதி, சுந்தர் என்கிற இரண்டு நண்பர்கள், நண்பன் பாலு வருகைக்காக காத்திருந்தார்கள். அன்று சனிக்கிழமை மூவரும் சேர்ந்து தமிழ்ப்படம் பார்க்கப்போகலாம் என்றிருந்தார்கள்.

"மதி! அவன் ட்ட இது இந்தியா னு சொல்லுடா! நம்ம எல்லாம் இந்தியர்கள்னு சொல்லு! சும்மா மடத்தனமா கன்னடத்துலதான் பேசனும்! தமிழர்லாம் தமிழ்நாட்டில் இருக்கனும் னு எல்லாம் பேசக்கூடாதுனு தெளிவா சொல்லுடா!" என்றான் சுந்தர்

"யார்ட்டடா சுந்தர்?" என்றான் அப்போத்தான் அந்த அறையிக்குள்ளே நுழைந்த நண்பன் பாலு.

"இல்லைடா இந்த "ஸ்ரிதர்" இருக்கான்ல? இவன் லாப்மேட்! அவன் ஒரு கன்னடிகா! அவன் மங்களூர்ல இருந்து பேங்களூர்ல இருக்க இந்த இண்ஸ்டிடூட் க்கு வந்தவன். அவனுக்கு இங்கே நெறையப்பேர் தமிழ் பேசுவாங்கனு தெரியாது! அவன் ஏதோ காய்கறி பழங்கள் வாங்க மார்க்கட் போயிருக்கான். அங்கே போய் கன்னடத்தில் ஏதோ கேட்டிருக்கான். அங்கே கறிகாய் விக்கிற எல்லோரும் தமிழ்க்காரங்க! ஒரு சில பேருக்கு கன்னடமே தெரியாது. இவன் வாங்கப்போன இடத்திலே அந்தம்மாக்கு கன்னடம் தெரியுமா என்னனு தெரியலை. அவள் இவனிடம் தமிழ்ல விலை சொல்லி இருக்கா. இவன் மறுபடியும் கன்னட்த்தில் பேசி ஏதோ சண்டை போட்டு வந்திருக்கான். அங்கே பார்த்தா எல்லோரும் தமிழ்ல பேசுவதைப்பார்த்து, இதென்ன பங்களூர் தமிழ்நாடா இல்லை கர்நாடகாவா ?னு கோபம் வந்து கண்ணாபின்னானு தமிழனை எல்லாம் திட்டுறானாம்" என்றான் சுந்தர் விளக்கமாக.

"மதி! ஸ்ரிதரை தமிழ் கத்துக்க சொல்லுடா! அப்போத்தான் பங்களூர்ல குப்பை கூட்டாலாம்னு சொல்லு" என்று சொல்லி சிரித்தான் பாலு சத்தமாக.

"ஏண்டா டேய்! சும்மாவே கடுப்புல திறிகிறானுக, இந்த இண்ஸ்டிடூட் ல தமிழந்தான் அதிகமா இருக்காங்கிறதைப் பார்த்து" என்றான் சுந்தர்.

"நீ அவன் பேசும்போது இல்லைடா. கண்டமேனிக்கு பேசுறாண்டா, சுந்தர்!" என்றான் மதி.

"என்னடா சொன்னான்?"

"Why you tamils come here and live in slum like pigs! Not learning the home-land language. Always brag how great your f'king Tamil is blah blah" னு சொல்றான். இதையெல்லாம் கேட்டுட்டு சும்மா இருக்க வேண்டி இருக்கு!

"இது இந்தியானு சொன்னியா? நம்ம எல்லாம் இந்தியர்கள்னு சொன்னியா?"

இதைக்கேளு! "You Tamils are never Indians. You always worry about your language. I have never seen fanatics like you" னு வேற சொல்றான்.

"ஃப்ரீயா விடுடா! கொஞ்ச நாள்ல அவனும் தமிழ் கத்துக்குவான்!" என்றான் பாலு.

"நான் எல்லாம் கன்னடம் கத்துக்கிட்டேன்ப்பா" என்றான் சுந்தர்.

"ஆமா! என்ன தெரியும் உனக்கு, கன்னடம்?" என்று சீண்டினான் பாலு.

"ஹேகிதீரா?, எஷ்டு? ஏன்றி இதூ? சென்னாகிதே, யாக்கேறீ? ஏன்றி சும்னே கலாட்டா மாடுத்தீரா?" சாக்கு, ஏனு பேக்கு?" அவ்வளவு தாண்டா கன்னடம்!' என்றான் அவனுக்குத்தெரிந்த சில கன்னட வார்த்தைகளை சொல்லிய சுந்தர்.

"என்னவோ போ! அந்தம்மா கன்னடத்திலேதான் பேசினால் என்னடா?" என்றான் மதி.

"நீ வேற! எனக்குத்தெரிய 20 வருஷம் இங்கே உள்ள ப்ரஃபசர்களும் கன்னடம் கத்துக்கிறதில்லை!" என்றான் பாலு.

"இதை கேளு! அவன் கேக்கிறான், "Why do you Tamils want ThiruvaLLuvar statue here in our land?"னு கேக்கிறான். இதுக்கு என்ன சொல்லச் சொல்ற, சுந்தர்?"

"இது இந்தியா. நாங்க தமிழ் இந்தியர்கள்! இந்திய சட்டதிட்டப்படி அதில் தப்பில்லைனு சொல்லுடா, மதி! ஆனா, கன்னடத்தை கத்து தொலைங்கப்பா! பாவம் அவனுக!" என்றான் சுந்தர்.

2 comments:

ரங்குடு said...

சிலைகள் தமிழ்நாட்டிற்கே ஒரு சாபக் கேடு. போக்கு வரத்துக்கு அல்லல்.
காக்கைகளுக்கும், குருவிகளுக்கும் கழிப்பிடம்.

இதில் பெங்களூரில் வள்ளுவருக்குச் சிலை வைத்து என்ன செய்யப் போகிறோம்.

மதிப்பும், மரியாதையும் தானே வர வேண்டும். நாமே சொல்லிக்கொள்வதில்லை.

போகிற போக்கில், பிரபாகரனுக்கே சிலை வைத்துப் புண்ணியம் கட்டிக் கொள்வார் கலைஞர்.

வருண் said...

உங்கள் வருகைக்கும் கருத்தும்க்கும் நன்றி, ரங்குடு! :-)