Saturday, February 5, 2011

கேள்வியும் நானே பதிலும் நானே (சூப்பர் பவ்ல் ஸ்பெஷல்)!

* எல்லாரும் க்ரிக்கெட் பத்திப் பேசும்போது, நீங்கமட்டும் ஏன் அமெரிக்கன் ஃபுட் பால்னு உளறிக்கொண்டு இருக்கீங்க?

நான் அமெரிக்கா வந்த புதிதில், "இதென்னப்பா விளையாட்டு? பாக்ஸிங்கைவிட கேவலமாயிருக்கு?" னு என் அமெரிக்கன் நண்பர்களிடம் சொல்லியிருக்கேன். ஆனால் இப்போ எல்லாம் அமெரிக்கன் ஃபுட் பால் சீசன் தான் பெஸ்ட் டைம்! சூப்பர் பவ்ல் முடியும்போது டிப்ரெஸிங்கா இருக்கும்! ரொம்ப இண்டெர்ஸ்டிங் ஆன விளையாட்டு இதுங்க, நம்புங்க! எனக்குத் தெரிய என்னைப்போல் நெறைய இந்தியர்கள் உண்டு!

* அமெரிக்காவில் வந்து வாழும் இந்தியர்கள் ஏன் அமெரிக்கன் ஃபுட்பால் பார்ப்பதில்லை இன்னும் க்ரிக்கட்டே பார்க்கிறாங்க?

நான் என்ன நெனைக்கிறேன்னா இவங்களுக்கு இந்த விளையாட்டு எப்படி ஆடுவாங்க, ரூல்ஸ் என்ன, அஃபெண்ஸ்னா என்ன செய்யனும், டிஃபெண்ஸ்னா அவங்க வேலை என்ன னு ஒண்ணுமே நெறையப்பேருக்குத் தெரியாதுனு நம்புறேன். இந்த கேம் எப்படி வெளையாடும்னு தெரிந்தால் நிச்சயம் க்ரிக்கட்டை எல்லாம் ஓரமா வச்சுட்டு இந்த விளையாட்டை ரசிச்சுப்பார்ப்பாங்க!

* டாலஸ்ல நாளை நடக்கவிருக்கும் 2011 சூப்பர் வின்னர் யார்னு ப்ரிடிக்ஷன்?

ஸ்டீலர்ஸ் ஏற்கனவே 6 முறை சூப்பர் பவ்ல் வின் பண்ணிவிட்டதால், பாக்கர்ஸ் வின் பண்ணனும்னு எனக்கு ஒரு ஆசை. ஸ்டீலர்ஸ் ஜெயிச்சாலும் ஓ கே தான். As long as it is a close game, I would be happy! :)

* முன்னால் காதலி/காதலன் யுடன் அவளு(ரு)க்குத் திருமணம் ஆனபிறகு சாதாரண நட்பாயிருக்க முடியுமா?

எங்கிருந்தாலும் வாழ்கனு மரியாதையா வாழ்த்திவிட்டு, அவர் பக்கம் இந்த ஜென்மத்தில் திரும்பிப்பார்க்காமல் இருக்கது ரெண்டு பேருக்கும் மரியாதை, நல்லது, உங்க சுயமரியாதையை காப்பாத்திக்கலாம். மேலும் அதுதான் நீங்க அவளு(ரு)க்கு செய்கிற கடைசி நன்மை! உங்களுக்கும்தான்! கல்யாணத்துக்கு அப்புறம் முன்னால் காதலி/காதல்ன் உடன் சும்மா நட்பாயிருக்கேன் ஃப்ரெண்டாயிருக்கேன், நான் அவருடைய நலம் விரும்பி என்பதெல்லாம் வீண் வம்பு மேலும் அர்த்தமற்றது.

உலகம் மிகப்பெரியது. அவர் நிழல், நினைப்பு இல்லாமல் நீங்க இந்த ஜென்மத்தில், இந்த உலகத்தில் சந்தோஷமாக வாழலாம்! வாழக்கத்துக்கனும்! வாழ்ந்து காட்டனும்!

2 comments:

ரவி said...

நீங்க ஏன் சாருவின் தேகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கக்கூடாது ?

வருண் said...

***செந்தழல் ரவி said...

நீங்க ஏன் சாருவின் தேகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கக்கூடாது ?***

Are you owning the copy rights for that novel? Or Charu owns it? Or someone else? ட்ரேண்ஸ்லேட் பண்ணச் சொல்லி என்னை எதுவும் லீகல் ட்ரபுள்ல மாட்டி விட்டுடாதீங்க! :)))