நாவல் படிக்காதவங்க, நாவல் ஒரு கற்பனை கதை, உலகுக்கும் வாழ்க்கைக்கும் தேவையற்றது, "சும்மா கனவுலகில் சஞ்சரிப்பவர்கள்தான் வாசிப்பாங்க" என்று நாலுவரி ஒழுங்காப் பேசமுடியாதவங்களா பரிதாபமா எதையோ சொல்லிக் கொண்டு இருந்தாங்க, ஒரு பக்கம்.
நாவல் படிக்கிறவங்களும் நாவல் படிக்காதவன் எல்லாம் ஏதோ வாழ்க்கையை வீணாக்குகிறாங்க என்பதுபோல ஒரே உளறல். நாவல் படிக்கிறவங்களாவது ஒழுங்கா ஏதாவது பேசுவாங்களானு பார்த்தால் அதுவும் ஒரு பெரிய ஏமாற்றம்தான்.
பதிவுலகில் இருந்து ஒரு அம்பது பேரை செலக்ட் பண்ணி இந்த விவாதம் நடத்தி இருந்தால் நல்லாயிருந்து இருக்கும்.
பதிவுலகிலேயே நீங்க இதே ட்ரெண்டை கண்கூடாகப் பார்க்கலாம். அதாவது நாவல், சிறுகதை படிக்கிற வாசகர்கள் ரொம்ப கம்மியாத்தான் இருக்காங்க. அதுக்காக அவங்களை, அவங்க தரத்தை யாரும் இதிலிருந்து நிர்ணயிக்க முடியாது.
நான் பார்த்தவரைக்கும் பதிவுலகில் சிறுகதை அல்லது நாவல்கள் பிரபலமாவது ரொம்ப ரொம்ப அரிது (ஏதாவது பிரபலமாவது போல "கள்ளக்காதல்" "காமத்தீ" அப்படினு போட்டு இருந்தால்) நாலுபேருக்குப் பதிலா ஒரு நாப்பது பேரு வருவாங்க. இல்லைனா ஏதாவது போட்டி நடத்தி பரிசு தருவதாகச் சொன்னால் அதை "பரிசு" க்காக வாசிப்பார்கள். மற்றபடி கதைனா பொதுவாக வாசகர்கள் "ஜகா"தான் வாங்குகிறார்கள்.
இதைப்பத்தி நாலு விபரம் தெரிந்தவர்கள் உங்க கருத்தை சொல்லுங்களேன், ப்ளீஸ்? பயப்படாதீங்க! உங்க கருத்தை சும்மா சொல்லுங்க! யாரும் தப்பா எடுத்துக்க மாட்டாங்கங்க! :)
* நாவல் படிப்பதில் என்ன நன்மை?
* சும்மா சினிமா மாதிரி இதுவும் பொழுது போக்குத்தானா?
* நம்மில் நாவல் படிக்கிறவங்க ரொம்ப கம்மியா இருக்க உண்மையான காரணம் என்ன?
* நாவல் படிக்காதவங்க எல்லாம் நல்ல ரசனை இல்லாதவங்களா?
* இல்லை நாவல் படிக்கிறவங்க எல்லாம் ஏதோ ஒரு வகையில் உயர்ந்த ரசனை உள்ளவங்களா?
எனக்குத் தெரிய நண்பர் * ராஜ நடராஜன் ஒருமுறை, கதை படிச்சா எனக்கு தூக்கம் வரும் வருண்" னு சொன்னாரு! என் "போரான" கதையைத்தான் அப்படி சொன்னாருனு நான் நெனச்சுக்கிட்டேன். :)
10 comments:
1)நாவல் படிபதால் நன்மை எதுவும் இல்லை ஆனால் மனம் ஒருமுக படும்
2)பொழுதுபோக்குன்னு மட்டும் சொல்ல முடியாது சில புதிய விசயங்கள் பலரது எழுத்து வடிவில் அறிய ஒரு சந்தர்ப்பமாக இருக்கும்
3)நேரம்மின்மை., நேரம் இருபவர்களுக்கு பொறுமை இல்லை
4)நல்ல ரசனை படித்தவனுக்கு மட்டும் அல்ல படிகாதவர்களுக்கும் இருக்கும் வெளிபடுத்த வழி தெரியாமல் தடுமாறுவார்கள்
5)ரசனைக்கு அளவுகோல் இல்லை பிறரை ரசிக்க வைப்பதில் தான் அளவு உள்ளது அது எழத்து வடிவிலோ அல்லது பேச்சு வடிவிலோ
படிக்கும் ஆர்வம் இருந்தால் இங்கு சென்று படிக்கவும்
http://marancollects-tamilebooks.blogspot.com
உங்க கருத்துக்கும், தொடுப்புக்கும் நன்றி, திரு ராஜகோபால்! :)
இலகு வாசிப்புக்கும் ஆழ்நிலை வாசிப்புக்கும் உண்டான தன்மைன்னு தள்பதி சொல்வாரான்னு தெரியலை!!
***பழமைபேசி said...
இலகு வாசிப்புக்கும் ஆழ்நிலை வாசிப்புக்கும் உண்டான தன்மைன்னு தள்பதி சொல்வாரான்னு தெரியலை!!
14 February 2011 1:37 PM***
இதை நீங்க சொன்னதாத்தான் (உங்க கணக்குலதான்) நான் எடுத்துக்க முடியும். தளபதி வந்து என்ன சொல்றாருனு பார்ப்போம்.
கற்பனைத் திறன் அதிகரிக்கும்.
1. சிறப்பு நன்மைகள் என்று சொல்ல முடியாது. என்னை பொறுத்தவரை கற்பனை திறன் அதிகாரிக்கும். நிறைய காட்சிகளை உருவாகபடுத்த வேண்டி இருப்பதால்.
2. நாவல் வெறும் சுவாரசியத்துக்காக மட்டுமல்லாமல் கொஞ்சம் இலக்கிய நயத்தோடும், தகவல்களோடும் இருப்பது சிறந்தது.
3. நிறைய காட்சிகள், நிறைய பாத்திரங்கள் ஆகியவற்றை ஞாபகம் வைத்துக்கொள்ள கடினம்.
4. அப்படியல்ல. வேறு மாதிரி ரசனை உள்ளவர்கள்.
5. நாவலை விரும்புபவர்கள் அன் லிமிடெட் மீள்ஸ் ரசிகர்கள். அதை விரும்பாதவர்கள் பாஸ்ட் புட் ரசிகர்கள்.
//நாலுவரி ஒழுங்காப் பேசமுடியாதவங்களா...
....பதிவுலகில் இருந்து ஒரு அம்பது பேரை செலக்ட் பண்ணி இந்த விவாதம் நடத்தி இருந்தால் நல்லாயிருந்து இருக்கும்.//
ஐம்பது பேரை அல்ல, இரண்டு பேரை தேர்வு செய்திருந்தார்கள். அவர்கள் பதிவில் பார்த்த அறிவிப்பினால் நானும் நிகழ்ச்சியைப் பார்த்தேன்:)! ஒரு பதிவருக்கு அதிகம் வாய்ப்பு வரவில்லை. ஒருவர் நன்றாகவே பேசினார்.
வாங்க ராமலக்ஷ்மி! :)
***ராமலக்ஷ்மி said...
//நாலுவரி ஒழுங்காப் பேசமுடியாதவங்களா...
....பதிவுலகில் இருந்து ஒரு அம்பது பேரை செலக்ட் பண்ணி இந்த விவாதம் நடத்தி இருந்தால் நல்லாயிருந்து இருக்கும்.//
ஐம்பது பேரை அல்ல, இரண்டு பேரை தேர்வு செய்திருந்தார்கள். அவர்கள் பதிவில் பார்த்த அறிவிப்பினால் நானும் நிகழ்ச்சியைப் பார்த்தேன்:)! ஒரு பதிவருக்கு அதிகம் வாய்ப்பு வரவில்லை. ஒருவர் நன்றாகவே பேசினார்.***
அப்படியா?!!
என் அறியாமையை போக்கியதற்கு நன்றிங்க! ஆமாம், எல்லோருக்கும் போதுமான வாய்ப்பு கிடைக்காதுதான்.
இது ஒண்ணும் "லைவ்" நிகழ்ச்சி இல்லையே? நெறையப்பேரை பேசவிட்டு நல்லா எடிட் செய்து இருக்கலாம்!
என்னவோ போங்க, I was not impressed! :(
//நடுவரும் (மாடெரேட்டர்) ஏதோ ரொம்ப சுமார்தான்/
Simply, You are very much away from Tamilnadu. கோபிநாத்தை தெரியாந்துங்கிறப்பவே.. கொஞ்சம் நெருடல்.. நிற்க. இது அது பத்தின பின்னூட்டமில்லை. நாவல் படிப்பதென்பது ஒரு அனுபவம். மற்ற பொழுது போக்கு மாதிரிதான். அந்த அனுபவம், பதிவுகளை படிக்கிற மாதிரிதான். எதைப் படிச்சா என்னாங்க? எல்லாமே அனுபவம்தான். as you read the pdf's for tech details
***ILA(@)இளா said...
//நடுவரும் (மாடெரேட்டர்) ஏதோ ரொம்ப சுமார்தான்/
Simply, You are very much away from Tamilnadu. கோபிநாத்தை தெரியாந்துங்கிறப்பவே.. கொஞ்சம் நெருடல்.. நிற்க. இது அது பத்தின பின்னூட்டமில்லை. நாவல் படிப்பதென்பது ஒரு அனுபவம். மற்ற பொழுது போக்கு மாதிரிதான். அந்த அனுபவம், பதிவுகளை படிக்கிற மாதிரிதான். எதைப் படிச்சா என்னாங்க? எல்லாமே அனுபவம்தான். as you read the pdf's for tech details
16 February 2011 7:43 AM***
ஓ கோபியா?! ரொம்ப நாளைக்கு முன்னால ஒரு க்ளிப்ல பார்த்தது.
எனக்கு பிடிச்ச ஒரே ஒருத்தர் நம்ம அனுஹாசன் தான்.
---------------
ரெண்டு பக்கமும் நல்லா விதண்டாவாதம் பண்ணலாம்ங்க. ஆனால் புத்தகம் படிக்காதவங்க has an edge னு நான் நெனைக்கிறேன் :)
Post a Comment