Wednesday, February 9, 2011

ஆமா, உங்க கையெழுத்து எப்படி இருக்கு?

முன்னால எல்லாம் அம்மாவுக்காவது தமிழ்ல வாரம் ஒரு முறை கடிதம் எழுதுவதுண்டு. இன்னிக்கும் நான் எழுதின எல்லாக் கடிதத்தையும் ஏதோ பொக்கிஷம்போல வச்சிருப்பாங்க! இப்போ எல்லாம் "கால்" பண்ணிப் பேசுவதோட முடிந்தது.

ஆங்கிலம்? டாக்ஸ் ரிட்டர்ன் கூட இ-ஃபைலிங் பண்ணத்தான் சொல்றாங்க. ஆக, பேனா வச்சு எழுதுவதுனா அப்பப்போ பர்சனல் செக்ல ஒரு வரி எழுதுவது, அதில் கோழி கிளறுவதுபோல ஒரு கையெழுத்து போடுறது. அவ்வளவுதான். வொர்க்ல ஒரு சில பேப்பர் வொர்க், டாககுமெண்ட்ஸ் ரெக்கார்ட் பண்ண பேனாப் பிடிச்சு எழுதுவதுண்டுதான். ஆனாலும் ரொம்ப கம்மி.

நீச்சல், ட்ரைவிங் எல்லாம் என்றுமே மறக்காதாம். அதேபோலதான் எழுத்தும்னு நெனைக்கிறேன். நிச்சயம் உயிரிருக்கும் வரை, கைவிரல்கள் இருக்க வரை எழுதமுடியும்தான். ஆனால் தமிழ்ல கூட இப்போ எல்லாம் ஒரே டைப்தான் (பதிவுலகிலும்தான்) பண்ணுறோம். டைப் அடிப்பதாலே எவ்ளோ அழகா இருக்கு பாருங்க என் கையெழுத்து! "ஸ்பெல் செக்" மட்டும்தான் பண்ண முடியலை!

தமிழ்ல எழுதி பல மாதங்கள் இல்லை சில ஆண்டுகள் ஆகிவிட்டது. இ, ஒ எல்லாம் எழுதினால் எழுத்துக்கள் கேவலமா வ்ருது. ஏதோ ரெண்டாப்புப் படிக்கும்போது எழுதின "அழகு"ல இருக்கு என் எழுத்துக்கள்! சும்மாவே என் கை எழுத்து ஒண்ணும் அழகா குண்டு குண்டா தெளிவா இருக்காது. இப்போ அதைவிட படுகேவலமா இருக்கு!

உண்மையிலேயே இன்னைக்கு என் கையெழுத்து தலையெழுத்து மாதிரிதான் இருக்கு! இதுக்காக ஒண்ணும் கவலைப்பட வேண்டியதில்லைதான். ஆனால் என் கையெழுத்து படுமட்டமா ஆயிடுச்சுங்கிறதாலே எதையும் தமிழ்ல எழுதவே பயம்மாயிருக்கு!

உங்க கையெழுத்தெல்லாம் எப்படி? அப்படியே அழகா இருக்கா? இல்லைனா எழுதிப் பார்த்துத்தான் சொல்லனுமா?

15 comments:

மதுரை சரவணன் said...

thakavalukku nanri

பழமைபேசி said...

















Chitra said...

இருங்க... ஒரு நிமிஷம்.... எழுதி பார்த்து விட்டு சொல்றேன். ஹி,ஹி,ஹி,ஹி,ஹி...

Yaathoramani.blogspot.com said...

மிகச் சரி.நம் கையெழுத்தை பார்க்கிற
வாய்ப்பு வர வர குறைந்துகொண்டேபோகுது
இனி அதற்கும் மாதத்தில் ஒரு நாள்.
ஒதுகீடு செய்யவேனும்போல் உள்ளது
நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

பேனாவால் எழுதி..., ஆமா இப்போ எழுதிதான் பார்க்கணும் சித்ரா சொல்ற மாதிரி:))!

என் வீட்டில் சகோதர சகோதரிகள் நல்ல உருட்டி உருட்டி அழகாய் எழுதுவார்கள். நான் ஸ்டைலா எழுதுவதாய் நினைத்து கொஞ்சம் கிண்டிதான் வைப்பேன்:)!

ராமலக்ஷ்மி said...

மொத்தமா பார்க்கையில் சுமாராய் இருந்தாலும், அப்போதும் இப்போதும் என் signature பலருக்கும் பிடித்த ஒன்று பாருங்க இங்கேயும், அவசியம் இங்கே பின்னூட்டங்களையும்:)!

பழமைபேசி said...

மார்ச் 6ம் தேதி வருண் திருமணம்!

வருண் said...

**மதுரை சரவணன் said...

thakavalukku nanri

9 February 2011 11:07 AM***

வாங்க மதுரை சரவணன்!

---------------

***பழமைபேசி said...***

மணீயண்ணா எதுக்கு இந்த இடத்தை ரிசேர்வ் பண்ணி இருக்கீங்க? :)))

வருண் said...

***Chitra said...

இருங்க... ஒரு நிமிஷம்.... எழுதி பார்த்து விட்டு சொல்றேன். ஹி,ஹி,ஹி,ஹி,ஹி...

9 February 2011 12:30 PM***

உங்க கையெழுத்து நிச்சயம் என் கையெழுத்தைவிட நல்லாத்தான் இருக்கும். :)

வருண் said...

**Ramani said...

மிகச் சரி.நம் கையெழுத்தை பார்க்கிற
வாய்ப்பு வர வர குறைந்துகொண்டேபோகுது
இனி அதற்கும் மாதத்தில் ஒரு நாள்.
ஒதுகீடு செய்யவேனும்போல் உள்ளது
நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்

9 February 2011 3:08 PM***

நன்றிங்க, ரமணி :)

வருண் said...

***tamilan said...

சுட்டியை சொடுக்கி படிக்கவும்.

=====>
நடிகர் விவேக்கும் சாமி சாணிசித்தரும். <===

9 February 2011 5:32 PM***

வாங்க, தமிழன். :) உங்க சுட்டிக்கு நன்றி :)

வருண் said...

***ராமலக்ஷ்மி said...

பேனாவால் எழுதி..., ஆமா இப்போ எழுதிதான் பார்க்கணும் சித்ரா சொல்ற மாதிரி:))!

என் வீட்டில் சகோதர சகோதரிகள் நல்ல உருட்டி உருட்டி அழகாய் எழுதுவார்கள். நான் ஸ்டைலா எழுதுவதாய் நினைத்து கொஞ்சம் கிண்டிதான் வைப்பேன்:)!

9 February 2011 7:03 PM

-----------

Blogger ராமலக்ஷ்மி said...

மொத்தமா பார்க்கையில் சுமாராய் இருந்தாலும், அப்போதும் இப்போதும் என் signature பலருக்கும் பிடித்த ஒன்று பாருங்க இங்கேயும், அவசியம் இங்கே பின்னூட்டங்களையும்:)!

9 February 2011 7:18 PM***

உங்க கையெழுத்து நீங்க மேலே சொன்னதுபோல ரொம்ப ஸ்டைலிஷாத்தான் இருக்குங்க, ராமலக்ஷ்மி! தொடுப்புகளுக்கு நன்றி :)

சும்மா பேசலாம் said...

நீங்கள் சொல்வது மிகவும் சரி. இப்ப எல்லாம் கையெழுத்து போடத்தான் பேனாவையே எடுக்கிறேன். முன்பு எல்லாம் எங்கு சென்றாலும் பேனாவை எடுத்து சட்டை பையில் எடுத்து செல்வேன். இப்ப பையில் பேனா எடுத்துகிட்டு போனால் "பெருசு" அப்படின்னு சொல்கிறார்கள்.

வருண் said...

***Blogger பழமைபேசி said...

மார்ச் 6ம் தேதி வருண் திருமணம்!

10 February 2011 8:40 AM ***

மணியண்ணா!

உங்களுக்கு அழைப்பிதழ் வரலையா? :)

ரொம்ப சின்னப்பையனா இவரு? அதான் ரொம்ப உளறுராருபோல இந்த வருண் சஞ்சய் காந்தி! :)

வருண் said...

வாங்க அன்பரசன்!

***சும்மா பேசலாம் said...

நீங்கள் சொல்வது மிகவும் சரி. இப்ப எல்லாம் கையெழுத்து போடத்தான் பேனாவையே எடுக்கிறேன். முன்பு எல்லாம் எங்கு சென்றாலும் பேனாவை எடுத்து சட்டை பையில் எடுத்து செல்வேன். இப்ப பையில் பேனா எடுத்துகிட்டு போனால் "பெருசு" அப்படின்னு சொல்கிறார்கள்.

10 February 2011 10:06 AM***

சிரிச்சுட்டேன் :)

இதெல்லாம் அநியாயம்ங்க. நாடு ரொம்ப கெட்டுப்போச்சு போல! :(