கீழே கொடுக்கப்பட்டுள்ளது ஜெயமோகன் தளத்தில் யாரோ அவர் கதைகளைப் பாராட்டி எழுதிய பின்னூட்டம். இதில் ஒரு பிராமணர் பாஷை நல்லாத் தெரிந்தவர் என்ன சொல்லி இருக்கார் னா, அத்தையை அம்மா என்றும், மருமகளை மாட்டுப்பெண் என்று சொல்வதுதான் பிராமணர்கள் வழக்கம் என்கிறார்.
ஐந்து கதைகளிலும் என்னை அறைந்தவை அறமும், வணங்கானும்தான். கெத்தேல் சாஹிப், ஆறாம், வணங்கான் மூன்றுமே inspiring. தாயார் பாதம் நன்றாக இருந்தாலும் என்னைப் பொறுத்த வரையில் ஐந்தாவது இடம்தான். பாலசுப்ரமணியம் யார் என்று தெரியவில்லையே! கொஞ்சம் nitpicking . // உள்ள போய் என்ன அத்தைன்னு தொட்டதுமே தெரிஞ்சுடுத்து. // பிராமண மருமகள்கள் இல்லை இல்லை மாட்டுப்பெண்கள் மாமியாரை அம்மா என்றுதான் அழைப்பார்கள், அத்தை என்று இல்லை – அதுவும் தஞ்சாவூர்க்காரர்களுக்கு இன்றும் அப்படித்தான். அதே போல [...]
"ஆத்துக்காரர்" என்றால் அகத்துக்காரர்னு சரியான அர்த்தம் என்று சொன்னதும் பரவாயில்லையே னு தோணியது.
அதேபோல் "மாட்டுப்பெண்" என்று ஏன் அழைக்கிறார்கள் என்று யாராவது தமிழ் அறிஞர்கள் விளக்கினால் நல்லாயிருக்கும்! ஒருவேளை "மாற்றுப்பெண்" என்ற அர்த்தமோ? "மாற்றுப்பெண்" என்பதுதான் மருவி "மாட்டுப்பொண்ணானது" என்றாலும் எல்லோருடைய தமிழ் உச்சரிப்பையும் கேலி செய்யும் பிராமணர்கள் எப்படி இப்படி அர்த்தத்தையே மாற்றும் அளவுக்கு கவனக்குறைவா இருந்தாங்க?
இதுபோக ஒரு ஜானகிராமன் கதையில் "ஷட்டகன்" என்கிற ஒரு வார்த்தை வந்தது. அதுக்கும் அர்த்தம் சரிவர தெரியவில்லை!
யாரையும் கேலிசெய்யும் கெட்ட எண்ணத்தில் இந்தப்பதிவு ஆரம்பிக்கவில்லை. ஆனால் தலைப்பு சும்மா ஒரு ஜாலிக்காகத்தான் போட்டிருக்கேன். யாரும் சண்டைக்கு வர வேண்டாம். ஆங்கில மொழி பெயர்ப்பில் "கவ்கேர்ள்" னா இப்படித்தான் இருப்பாங்க். மேலும் "கவ்கேர்ள்" என்பது ஒரு செக்ஸுவல் இண்டெர்கோர்ஸ் பொஸிஷன் என்றும் சொல்றாங்க!
நன்றி! வணக்கம்!
8 comments:
shattagan= co brother= sagalai
wife's sister's hubby
//அதேபோல் "மாட்டுப்பெண்" என்று ஏன் அழைக்கிறார்கள் என்று யாராவது தமிழ் அறிஞர்கள் விளக்கினால் நல்லாயிருக்கும்! ஒருவேளை "மாற்றுப்பெண்" என்ற அர்த்தமோ? "மாற்றுப்பெண்" என்பதுதான் மறுவி "மாட்டுப்பொண்ணானது" என்றாலும் எல்லோருடைய தமிழ் உச்சரிப்பையும் கேலி செய்யும் பிராமணர்கள் எப்படி இப்படி அர்த்தத்தையே மாற்றும் அளவுக்கு கவனக்குறைவா இருந்தாங்க?
//
மாற்றார்விட்டுப் பெண், மாற்றுப் பெண் என்பதாக மருவி மாட்டுப் பெண் ஆகி இருக்கவேண்டும். கணவன் குடும்பத்தாரிடம் மாட்டப் போகிற, மாட்டிய, மாட்டிக் கொண்ட என்ற உவமைத் தொகையில் மாட்டுப் பெண்ணாகவும் இருக்கலாம் :)))))
ஆத்துகாடி, அகத்துக்காரி சரி. 'வாங்கோண்ணாவுக்கு' பொருள் என்ன ? விஜய் எல்லோரையும் அண்ணான்னு கூப்பிடுகிறார். :)
ஏதாவது பிரச்சனையை கிளப்பனும்..? ஹா ஹா
***Blogger ராம்ஜி_யாஹூ said...
shattagan= co brother= sagalai
wife's sister's hubby
16 February 2011 7:56 PM***
It makes perfect sense if it is "co-brother". I was only guessing then. Now I know it for sure because of your input!
Thank you, Ramji-yahoo!
***கோவி.கண்ணன் said...
//அதேபோல் "மாட்டுப்பெண்" என்று ஏன் அழைக்கிறார்கள் என்று யாராவது தமிழ் அறிஞர்கள் விளக்கினால் நல்லாயிருக்கும்! ஒருவேளை "மாற்றுப்பெண்" என்ற அர்த்தமோ? "மாற்றுப்பெண்" என்பதுதான் மறுவி "மாட்டுப்பொண்ணானது" என்றாலும் எல்லோருடைய தமிழ் உச்சரிப்பையும் கேலி செய்யும் பிராமணர்கள் எப்படி இப்படி அர்த்தத்தையே மாற்றும் அளவுக்கு கவனக்குறைவா இருந்தாங்க?
//
மாற்றார்விட்டுப் பெண், மாற்றுப் பெண் என்பதாக மருவி மாட்டுப் பெண் ஆகி இருக்கவேண்டும். கணவன் குடும்பத்தாரிடம் மாட்டப் போகிற, மாட்டிய, மாட்டிக் கொண்ட என்ற உவமைத் தொகையில் மாட்டுப் பெண்ணாகவும் இருக்கலாம் :)))))
ஆத்துகாடி, அகத்துக்காரி சரி. 'வாங்கோண்ணாவுக்கு' பொருள் என்ன ? விஜய் எல்லோரையும் அண்ணான்னு கூப்பிடுகிறார். :)
16 February 2011 8:08 PM***
வாங்க, கோவி! :)
"ண்ணா"வுக்கு இன்னும் அர்த்தம் எனக்கும் தெரியலை. உங்களுக்கெல்லாம் தெரியும்னு நெனச்சேன்.
ஆமா விஜய் அந்த "அண்ணா'வை எப்போப் பிடிச்சாருனு தெரியலை. ஜென்மத்துக்கும் விடமாட்டார் போல! :)
***சி.பி.செந்தில்குமார் said...
ஏதாவது பிரச்சனையை கிளப்பனும்..? ஹா ஹா
17 February 2011 2:42 AM ***
இல்லைங்க, மாட்டுப்பெண் என்பது கொஞ்சம் கேக்க கஷ்டமாயிருக்கு! அதான் சரியான வார்த்தையை தெரிஞ்சுக்கலாமேனு.. :)
மாட்டுன பொண் மருவி மாட்டுப்பொண் ஆகியிருக்கலாம்... குடுகுடுப்பையார் கூடுதல் விபரங்களை அள்ளித் தெளிப்பாராக!!
***பழமைபேசி said...
மாட்டுன பொண் மருவி மாட்டுப்பொண் ஆகியிருக்கலாம்... குடுகுடுப்பையார் கூடுதல் விபரங்களை அள்ளித் தெளிப்பாராக!!
17 February 2011 11:07 AM***
மாட்டுன பொண்ணா? அப்படினா? :)
கு கு என்ன சொல்றார்னு பார்ப்போம் :)
Post a Comment