Sunday, April 11, 2010

Smart என்னும் பதிவுலக நண்பர்!

என்னுடைய காரசாரமான சாதி எதிர்ப்பு கொள்கை ப் பதிவில் ஒரு 50க்கு மேலே பின்னூட்டமிட்ட நண்பர்தான் ஸ்மார்ட் என்னும் பதிவுலக நண்பர். இவர் என்னுடைய எரிச்சலிலும் கோபத்திலும் எழுதிய ஒரு மூனு பதிவுகளில் எழுதிய பல பின்னூட்டங்களில் இருந்து என்ன சொல்றார்னா

* ஒருவர் தன் சாதியை இணையதளத்தில் சொல்லுவதில் தப்பில்லை!

நான் அதை தேவையே இல்லாத ஒரு விசயம் என்பதுடன், முடிந்தால் சாதியை மறைப்பது நல்லது என்று நம்புறேன்.

* ஒவ்வொருவரும் தன் சாதியை பெரிதாக நெனச்சுக்கலாம்.

தேவையே இல்லாத பெருமை இந்த சாதிப்பெருமை என்கிறேன் நான்.

* ப்ராமின் என்பதோ இல்லைனா வடகலை அய்யங்கார்னு சொல்வது பார்ப்பனர்னு சொல்வது அல்ல!

எனக்கு சிரிப்புத்தான் வருது இவர் வாதத்தைப்பார்த்து.

* I am proud to be born a Brahmin என்பதில் எந்தத் தவறும் இல்லை! அதைத் தவறுனு சொல்வதுதான் பெரிய தப்பு!

என்னைப் பொறுத்தவரையில் இதுபோல் பேசுவது சுத்தமான சிறுபிள்ளைத்தனம். பெரிய மனிதர்கள் யாருமே இப்படிப் பேசமாட்டார்கள்.

* எனக்கு ராகவன் மேலே (சாதிப் பெருமை பேசுவதால்) வரும் கோபத்திற்கு காரணம் பொறாமை யாம்!

சிரிப்புத்தான் வருது எனக்கு.

* “பெரியார்” “வீரபாண்டியன்” என்கிற முகமூடிப்பதிவர்களை நான் விமர்சிப்பது தப்பு. ஏன்னா “நீங்க தந்தை பெரியாரையும் வீரபாண்டியனையும் அவமானப் படுத்தீட்டங்க” என்கிறார்!


இதென்ன விதண்டாவாதம்? என்கிறேன் நான்.

* டாக்டர் ருத்ரனிடம் மன்னிப்புக் கேட்கப்பட்டுவிட்டது என்கிறார். அதனால் இந்தப் பதிவு (டாக்டர் ருத்ரனிடம் பகிரங்க மன்னிப்பு கேட்பது தேவை இல்லை) இந்தப் பதிவை எடுத்துடுங்க! என்றார்.

உண்மையிலேயே எனக்கு நெறைய விசயம் தெரியாது. சென்னை பதிவர்களுக்குள் உள்ள பாலிட்டிக்ஸ் தெரியாது. சாதிப்பிரச்சினைகள் மேலும் எந்தப் பதிவரையும்கூட எனக்குத் தெரியாது. மேலும் இந்தப் பதிவால் யாருக்கும் பாதகமில்லை சில முகமூடிகளைத் தவிர்த்து என்று நம்புறேன்.

* அப்புறம் வருண் என்றால் சமஸ்கிரதப் பெயர். “வ” வும், “ரு” வும் “ண்” ம் தமிழ் எழுத்துக்களா இருந்தாலும் வருண் ஒரு சமஸ்கிரதப் பெயர் என்று கேலி செய்கிறார்·

சரி, ஒத்துக்கிறேன். சமஸ்கிரதப்பெயராவே இருந்துட்டுப் போகட்டுமே. செத்துக்கொண்டு இருக்கிற சமஸ்கிரதம், இந்த வருண் என்கிற பெயரிலாவது வாழ்ந்துட்டுப் போகட்டுமே!

* அவரிடம், “ ஆமா உங்க தமிழ்ப் பேரென்ன ஸ்மார்ட்? (நிச்ச்யம் இது தமிழ்ப் பெயரோ, ச்மஸ்கிரதப்பேரோ இல்லை. தொரை நாட்டில்தான் இப்படி பேரு வச்சுக்குவாங்க்) ஒருவேளை ராவணனோ?” னு கேட்டதுக்கு உங்களுக்கு பார்ப்பனத் திமிர்! என்கிறார்.

சிரிக்கிறேன். திமிரு எல்லாருக்கும்தான் இருக்கு. அதென்ன பார்ப்பனத்திமிர்னு ஸ்பெஷல் க்ரிடிட்?

* என் பதிவுகளைப் பார்த்து நீங்க யாருக்கோ கூலிவேலை செய்றீங்க! என்கிறார்.

நான் எந்தக் குழுவிலும் இல்லை என்கிறேன். எனக்கு கூலி வேலையெல்லாம் பழக்கமில்லைனு சொல்றேன்.

இது எல்லாத்தையும் நாகரீகமாகத்தான் தன் பின்னூட்டங்களில் சொன்னார். கடைசியில் அவர் தளத்தில் எனக்கு ஒரு ராங்க் ம் கொடுத்துள்ளார். என்ன ராங்க்னு சரியாக்கூட எனக்கு சரியாப் புரியலை. இவர் கொடுத்த ராங்க கொடுப்பவர் இவருக்குத்தான் ரொம்ப பெருமை சேர்க்கும். அதாவது இவர் தன்னைத்தானே ”ஸ்மார்ட்” னும் நான் எல்லாம் முட்டாள்னு சொல்வது போலத்தான் இருக்கு!

ஆமா இவர் இவரைப்பற்றி என்னதான் நினைத்து இருக்கார்னு தெரியலை! “ஸ்மார்ட்” னா?

-----------------------

இந்த ஸ்மார்ட் பத்தி என்னுள் எழும் சில கேள்விகள்!


* யாருங்க இந்த ஸ்மார்ட் நு திடீர்னு வந்து முளைத்துள்ளார்?

* இவர் ஏன் இந்த ராகவனுக்கு இப்படி வரிந்து கட்டிக்கொண்டு வக்காலத்து வாங்குகிறார்?

* இந்த ராகவனுக்கு இப்படி ஒரு விசிறியா!

* இந்த ராகவன், பதிவர் ஸ்மார்ட் க்கு ஒரு கோயில் கட்டனும்!

* ஏன் இவரு ராகவன் போல ஒரு சிலர் தவறே செய்வதில்லைனு நம்புறார்?·

* ஆமா இந்த ராகவன் என்ன கடவுளா என்ன? சாதாரண தன் சாதியைப் பெருமையாக சொல்லிக் கொள்ளும் மனுஷன் தானே?

* ஏன் இப்படிஒரு 50-60 பின்னூட்டம்போட்டு நான் ஏதோ காமெடி பண்ணுறேன்னு அவரே அவருக்கு நிரூபித்துக் கொண்டார்?


மேலே என் மனதில் ஸ்மார்ட் பத்தில் எழும் கேள்விகள், பதிலை எதிர்பார்த்து கேட்கப்பட்ட கேள்விகளல்ல! இன்னும் ஒரு 100 பின்னூட்டங்களில் பதில் கொடுக்கப் பட்டாலும் அவைகள் எனக்கு திருப்திகரமாக இருக்கப்போவதில்லை என்று தெரிந்தும், நான் வியந்து கொண்டிருக்கும் கேள்விகள்!

அப்புறம் எதுக்கு இந்தப்பதிவு?

பலவிதமான பின்னூட்டஙக்ளை தொடர்ந்து எழுதி, நான் சொல்ல வந்த சீரியஸான மேட்டரை, “ஸ்மார்ட்” அவர் திறமையால காமெடியாக்கி விட்டதாக நினைத்துக் கொள்கிறார். இங்கே யாரும் காமெடி பண்ண வரவில்லை! என் இதயத்திலிருந்து வந்த மன எரிச்சலையும் கோபத்தையும்தான் மனசாட்சிக்கு துரோகம் செய்யாமல் பகிர்ந்து கொண்டுள்ளேன் என்பதை அவருடைய பல பின்னூட்டங்களால் மறைக்க முடியாது என்பது அவருக்கு விளங்கனும் என்பதற்காக!

19 comments:

smart said...

I will answer you shortly.
Meanwhile Thanks for Expressing your foolishness.

வருண் said...

***smart said...

I will answer you shortly.
Meanwhile Thanks for Expressing your foolishness. ***

Well, I expressed what you have expressed in your responses in "red". Don't lose your temper! :)

smart said...

//பலவிதமான பின்னூட்டஙக்ளை தொடர்ந்து எழுதி, நான் சொல்ல வந்த சீரியஸான மேட்டரை, “ஸ்மார்ட்” அவர் திறமையால காமெடியாக்கி விட்டதாக நினைத்துக் கொள்கிறார்.//

நீங்க சரியா படிக்கல அது காமெடிப்பதிவல்ல காரமானப்பதிவுனு Puncha சொல்லிருக்கேனே படிக்க்கலையா?

smart said...

//யாருங்க இந்த ஸ்மார்ட் நு திடீர்னு வந்து முளைத்துள்ளார்//
யாரிவன் யாரிவன் யாரிவன் ஒத்தையாக நடந்து வரும் ஊரிவன் ..

இப்படி ஒரு பதிவு போட்டுருகேனும் ஒரு தகவல் கொடுத்தால் உடனே வந்து நன்றி சொல்லிருப்பேனே! ச்சே லேட் ஆகிருச்சே

smart said...

The Place where you stand against you
//செத்துக்கொண்டு இருக்கிற சமஸ்கிரதம், இந்த வருண் என்கிற பெயரிலாவது வாழ்ந்துட்டுப் போகட்டுமே! //

//திமிரு எல்லாருக்கும்தான் இருக்கு. அதென்ன பார்ப்பனத்திமிர்னு ஸ்பெஷல் க்ரிடிட்?//

//பதிவர் ஸ்மார்ட் க்கு ஒரு கோயில் கட்டனும்! //
----------
உங்க பின்னுட்ட கருத்து அனைத்தும் நீங்க நினைக்கிறதாகத் தான் சொல்லுறேங்க அதான் சரியல்ல. உங்களைப் படிப்பவர்களுக்கு கட்டாயம் தெரியும் உங்கள் வாதத்திலுள்ள ஓட்டைகள்.
சில விசயத்துக்கு மட்டும் விளக்கம் கொடுக்கிறேன். இருந்தாலும் ஒத்துக்கமாட்டேனு முன்னாடியே சொன்னதால விட்டுக்கொடுத்துப்போகிறேன்.

வருண் said...

Smart: You can go on call me "foolish" and defend every damn thing "raghavan" did and make him look PERFECT!

You can rank people's post in your "comedy time" and you can respond and interpret as you wish. Also, you can imagine yourself as the "smartest person" in the EARTH.

Whatever I expressed here is what you are doing. You need to understand one thing when you are analysing someone, you are being analysed by others too!

I am not going to delte your or anybody's response as long as they are decent. Have fun!

smart said...

/defend every damn thing "raghavan" /

I am not defending any one as of my knowledge. I expressed in the way what i believe.

// you can imagine yourself as the "smartest person" in the EARTH//
I never expressed this statement and needless for me.

//இன்னும் ஒரு 100 பின்னூட்டங்களில் பதில் கொடுக்கப் பட்டாலும் அவைகள் எனக்கு திருப்திகரமாக இருக்கப்போவதில்//
This is the evidence for your foolishness.

வருண் said...

***smart said...

/defend every damn thing "raghavan" /

I am not defending any one as of my knowledge. I expressed in the way what i believe.***

Incidentally you believe whatever raghavan believe!

வருண் said...

***// you can imagine yourself as the "smartest person" in the EARTH//
I never expressed this statement and needless for me.***

You find foolishness only in others! That implies that you imagine yourself as smart as you claim! :)

smart said...

//இன்னும் ஒரு 100 பின்னூட்டங்களில் பதில் கொடுக்கப் பட்டாலும் அவைகள் எனக்கு திருப்திகரமாக இருக்கப்போவதில்//
This is the evidence for your foolishness.
So I am able to write more

வருண் said...

***//இன்னும் ஒரு 100 பின்னூட்டங்களில் பதில் கொடுக்கப் பட்டாலும் அவைகள் எனக்கு திருப்திகரமாக இருக்கப்போவதில்//
This is the evidence for your foolishness.***

You dont seem to understand the difference in views/understanding/beliefs of people.

Let me explain you with an example!
Who is foolish one who believes the existence of God or nonexistence of God?

BOTH of them or neither of them!

It is all what you believe in! :)

கோவி.கண்ணன் said...

/சரி, ஒத்துக்கிறேன். சமஸ்கிரதப்பெயராவே இருந்துட்டுப் போகட்டுமே. செத்துக்கொண்டு இருக்கிற சமஸ்கிரதம், இந்த வருண் என்கிற பெயரிலாவது வாழ்ந்துட்டுப் போகட்டுமே! /

++

வருண் said...

ஏதோ நம்மளால சமஸ்கிரதத்துக்கு ஒரு சின்ன உதவிதான்! :))))

smart said...
This comment has been removed by a blog administrator.
வருண் said...

smart: I am deleting your NONSENSE! You seem INSANE! Get a life!

smart said...

//smart: I am deleting your NONSENSE! You seem INSANE! Get a life!//

I won't delete yours it seems a Balance.

வருண் said...

Smart: This blog is not just for criticizing one group of people like you do! When I find somethng unconvincing to me I respond. You have all the right to criticize me in your blog. DO IT! But I dont wnat you to advertise that in my "responses" especially when it is irrelavant to the topic! Honestly I am not starving for your responses!

YOU just get personal and ONLY on FEW PEOPLE and leave out some people no matter what they do or what nonsense they talk (may be you belong to that kind and you are self-centered and stuck-up!).
I am not like that and this blog is not built for that! It is for expressing our thoughts on any issue. When I find something "odd" or "wrong" or "not convincing" I address the issue. But you are doing a full-time job of attacking only few people. Some might enjoy it. I find your posts are not worthy of my time. I am really sorry!

Even here, I have no problem with Mr. sivaraman. I only have problem with some statements he has made! I have to disagree with them. That is why I wrote this. He is also open-minded enough to publish my responses in his blog!

You need to look for issues, NOT just few people to attack eg. vaal payyan, dr. rudhran, d r ashok etc

ராஜ நடராஜன் said...

இந்த பதிவு சீரியஸா இல்ல காமெடியா?

பதிவை படிச்சு முடிச்சுட்டு பின்னுட்டத்துக்கு வந்தா உங்க நண்பர் சொல்லி வச்ச மாதிரி நின்னுகிட்டு இருக்கிறார்.

நீங்க எந்த மனநிலையில எழுதுனீங்களோ தெரியாது

ஆனா எனக்கு
முடியலங்க:) வயிரு வலிக்குது:)நான் வாரேன்:))))))

வருண் said...

*** ராஜ நடராஜன் said...

இந்த பதிவு சீரியஸா இல்ல காமெடியா?

பதிவை படிச்சு முடிச்சுட்டு பின்னுட்டத்துக்கு வந்தா உங்க நண்பர் சொல்லி வச்ச மாதிரி நின்னுகிட்டு இருக்கிறார்.

நீங்க எந்த மனநிலையில எழுதுனீங்களோ தெரியாது

ஆனா எனக்கு
முடியலங்க:) வயிரு வலிக்குது:)நான் வாரேன்:))))))

19 April 2010 1:01 PM***

:-)))