பழமையானது எல்லாமே தரமானதாக இருப்பதாக பெரியவர்கள் சொல்வார்கள். "இன்னைக்கு எல்லாம் கெட்டுக் குட்டிச்சுவராப் போச்சு! காலம் மாற மாற தரம் குறைஞ்சுக் கிட்டேதான் போகுது" என்பதைக் பெரியவர்கள் சொல்லும்போது கேட்கும் இளையதலைமுறைகள் கோபப்படுவதுண்டு! இதே இளைய தலைமுறையை ஒரு 30 வருடமான பிறகு தரமானவர்கள் என்றும் சொன்னாலும் சொல்வார்கள் என்பதை யோசிப்பார்களா என்னனு தெரியலை!
ஆனால் உண்மையில் பழசெல்லாம் தரமானதெல்லாம் கெடையவே கெடையாது! தீண்டாமையையும், சதி யையும், சிறுவர்கள் திருமணங்களையும் நடத்திய நம் கலாச்சாரம் தரமானதானு கேட்டால், இல்லைனுதான் சொல்லனும். அதனால பழசெல்லாம் தரமானதா இருந்ததாவும் இன்னைக்கு எல்லாம் நாறிப்போயிட்டதாக சொல்வது முற்றிலும் உண்மையல்ல!
ஒரு சில விசயங்களில் பழசு நல்லாத்தான் இருந்தது இன்னைக்கு குரங்கு கைல போன பூமாலை மாதிரி ஆயிப்போயிடுச்சு! சினிமா விமர்சனம் என்றால் விகடன் விமர்சனம் மதிக்கத்தக்கதாக ஒரு காலத்தில் இருந்ததென்னவோ உண்மைதான். ஆனால் இன்னைக்கு கண்ட அரைவேக்காடுகளும் விகடன் விமர்சனக்குழுல நொழஞ்சு விகடன் விமர்சனம் மற்றும் மதிப்பெண்களில் எந்தவிதமான குவாலிட்டியும் இல்லாமல் போயிடுச்சு என்பது உண்மைதான்!
சரி, விகடன் அந்தக்காலத்தில் என்னத்த ஒழுங்கா விமர்சனம் எழுதிக் கிழிச்சாங்க? னு கேக்கிறவர்களுக்காக தோண்டி எடுத்த ஒரு பழைய விமர்சனம் இங்கே !
---------------------
Review by Ananda Vikatan Dated 3.9.1978
சினிமா விமர்சனம்
தலைப்பிலேயே இலக்கிய மணம் கமழ் கிறது. மேலோட்டமாகப் பார்க்கும்போது, முரட னான அண்ணனையும் பூப்போன்ற தங்கையை யும் 'முள்ளும் மலரும்' என்ற தலைப்பு குறிப்பிடு வதாகத் தோன்றினாலும், முள்ளைப் போன்ற முரட்டு சுபாவம் கொண்ட அண்ணன் கூட, தன் தங்கைக்காகத் தணிந்து வந்து மலராகிறான் என்ப தையே அது குறிக் கிறதோ?
தன்மான உணர்வும், தங்கையிடம் தாய்க்கு நிகரான பாசமும் கொண்ட காளியின் பாத் திரப் படைப்பு தமிழ்த் திரைக்குப் புதிதல்ல என்றாலும், ரஜினிகாந்த் அதைச் செய்திருப்பதில் ஓர் அழுத்தத்தையும் ஆழத்தையும் காண்கி றோம். சிவாஜி ஏற்று நடித்த அண்ணன் வேடத்தை இப்போது சிவாஜி ராவ் (ரஜினி) ஏற்றிருக்கிறார். இவரும் சக்கைப் போடு போடு கிறார்.
மேலதிகாரி மீதிருந்த கோபத்தைத் தங்கை மீது காட்டிவிட்டு பின்னர் மனம் வருந்தி வீடு திரும் பும் காளியைத் தங்கை சாப்பிடக் கூப்பிடும்போது, ''நான் வரமாட்டேன், போ!'' என்று குழந்தை போலச் சிணுங்குவதும், பிறகு தங்கையிடம், ''நீ என்னை அடிச்சுடுடா'' என்று கெஞ்சுவதும் அருமை.
எஞ்சினீயர் தன்னை மணந்துகொள் ளக் கேட்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி -சகோதரனின் கை போனதும் ஏற்படும் துக்கம் -கடைசியில் அண்ணனிடமே வந்து அடைக்கலம் புகும் பாசம்... அப்பப்பா! இத்தனையும் கொட்டி நடித் திருக்கிறார் ஷோபா. அவர் நடிப்பு பற்றி ஒரே வார்த்தை: ஷோபிக்கிறார்!
சரத்பாபுவுக்குப் பொருத்தமான எஞ்சினீயர் வேடம். மேல் மட்ட அதிகாரி களுக்கே உரித்தான கொச்சைத் தமிழில் அவர் பேசுவது எஞ்சினீயர் வேடத்துக்கு ஒரு கம்பீரத்தைத் தருகிறது.
சரியான சாப்பாட்டுராமி மங்கா! அடைக்கலம் புகுந்த இடத்தில் அண்ணியாக பிரமோஷன் கிடைக்கிறது 'படாபட்'டுக்கு! வள்ளியின் வாழ்க்கை கெட்டுவிடக் கூடாதே என்ற அக்கறையில் கணவனிடமே அவர் நடத்தும் தர்மயுத்தம், ஒரு பட்டிக் காட்டு அந்நியோன்னியத்தை மிகைப் படுத்தாமல் வெளிப்படுத்துகிறது.
காலை உதயத்தின் அழகு, வானவில்லின் வர்ணஜாலம், இயற்கையின் எழிற்கோலங்கள் -இவற்றை அற்புதமான முறையில் படமாக்கியிருக்கிறார் பாலு மகேந்திரா. கண்களில் ஐஸ் வைத் துக் கொண்டு படம் பார்ப்பது போல, அத்தனை குளிர்ச்சி!
நான்கே பாடல்கள்தான் என்றாலும், அவற்றை இனிமை இழையோட இசை அமைத் திருக்கிறார் இளையராஜா. 'ராமன் ஆண்டாலும்' பாட்டு தொடங்கும் முன்னும், பாட்டின் மத்தியிலும் போட்டிருக்கும் 'லேலே... லேலே...' கோரஸ், காதுகளைக் கட்டித் தழுவி முத்தமிடுகிறது. கிளைமாக்ஸ் காட்சியில், வெறும் தாள வாத்தியத்தை மட்டும் வைத்துக் கொண்டு தேவையான 'மூட்' உருவாக்கியிருக்கிறார். அதற்காகவே தனியாக அவரைப் பாராட்டலாம்.
இதுவரை கதை -வசன கர்த்தாவாக மட்டுமே இருந்து வந்த மகேந்திரனுக்கு இந்தப் படத்தில் டைரக்ஷன் ஒரு புதிய பொறுப்பு. வியக்கத்தக்க அளவுக்கு அதில் தன் திறமையை வெளிக் காட்டியிருக்கிறார். உதாரணத்திற்கு...
எஞ்சினீயரிடம் காளியைப் பற்றி ஒருவர் கோள்மூட்ட, ஒவ் வொரு வாக்கியத்துக்குப் பிறகும் உண்மை என்ன என்பது போல, காளியின் நடவடிக்கைகளைக் காட்டுவதைப் பற்றிச் சொல் வதா...
நீட்டி முழக்கி, பக்கம் பக்கமாக வசனங்களை எழுதாமல் சொல்ல வேண்டியவற்றைக் கன கச்சித மாகச் சொல்லி, இறுதிக் காட்சியில் தங்கை அண்ணனிடமே ஓடி வந்து அவனைக் கட்டிப்பிடித்துக் கதறியழும் கட்டத்தில் ஒரு வரி கூட வசனம் இல்லாமல் பேனாவை இறுக மூடி வைத்து விட்ட புத்திசாலித்தனத்தைப் பற்றிச் சொல்வதா...
இனி, அவர் எந்தப்படத்தை இயக்கினாலும், இந்தப் படத்தின் தரத்தை அவரிடமிருந்து எதிர் பார்ப்பார்கள்!
சொந்தக் கிராமத்துக்குச் சென்று இளைப்பாறிவிட்டு வந்த திருப்தி, படம் முடிந்ததும் கிடைக்கிறது. இந்த மலர், தமிழ்த் திரை யில் எப்போதோ பூக்கும் ஒரு குறிஞ்சி மலர்!
-------------------------
சோர்ஸ்: இது ரஜினிவிசிறிகள் தளத்தில் இருந்து எடுக்கப்பட்டு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது! அவர்களுக்கு என் நன்றிகள்! :)
10 comments:
அது அந்தக்காலம்ங்க... விகடன சொன்னேன்...
நீட்டி முழக்கி, பக்கம் பக்கமாக வசனங்களை எழுதாமல் சொல்ல வேண்டியவற்றைக் கன கச்சித மாகச் சொல்லி, இறுதிக் காட்சியில் தங்கை அண்ணனிடமே ஓடி வந்து அவனைக் கட்டிப்பிடித்துக் கதறியழும் கட்டத்தில் ஒரு வரி கூட வசனம் இல்லாமல் பேனாவை இறுக மூடி வைத்து விட்ட புத்திசாலித்தனத்தைப் பற்றிச் சொல்வதா...
இனி, அவர் எந்தப்படத்தை இயக்கினாலும், இந்தப் படத்தின் தரத்தை அவரிடமிருந்து எதிர் பார்ப்பார்கள்
I enjoyed reading the review - one of Rajini's best movies. This is better than 2 gold coins :-)
***D.R.Ashok said...
அது அந்தக்காலம்ங்க... விகடன சொன்னேன்...
17 May 2010 9:44 AM***
வாங்க அஷோக்!
எப்படியிருந்த விகடன் விமர்சனக்குழு இப்போ இப்படி போச்சு! :(
***Jawahar said...
நீட்டி முழக்கி, பக்கம் பக்கமாக வசனங்களை எழுதாமல் சொல்ல வேண்டியவற்றைக் கன கச்சித மாகச் சொல்லி, இறுதிக் காட்சியில் தங்கை அண்ணனிடமே ஓடி வந்து அவனைக் கட்டிப்பிடித்துக் கதறியழும் கட்டத்தில் ஒரு வரி கூட வசனம் இல்லாமல் பேனாவை இறுக மூடி வைத்து விட்ட புத்திசாலித்தனத்தைப் பற்றிச் சொல்வதா...
இனி, அவர் எந்தப்படத்தை இயக்கினாலும், இந்தப் படத்தின் தரத்தை அவரிடமிருந்து எதிர் பார்ப்பார்கள்
17 May 2010 10:45 AM***
வாங்க ஜவஹர்! :)
இத்தான் மகேந்திரன் முதல்ப்படம் னு எனக்கு இப்போத்தான் தெரியும்!
***Chitra said...
I enjoyed reading the review - one of Rajini's best movies. This is better than 2 gold coins :-)
17 May 2010 12:52 PM***
வாங்க சித்ரா!:)
ஆமாங்க, தங்கக்காசுகளுக்கு ஒரு விலை யிருக்கு. ஆனால் இதுக்கு இல்லை :)))
I think this film came in 1978 and it was a very refreshing movie to watch.
By the way, doesnt the total marks add up to only 60.5 % Wrong addition I am afraid. Vikatan has of late become very unfair in mark allocations.
Shankar
Shankar!
Your addition is the best part. May be they rounded that to the nearest integer!
:-))))
Thanks for sharing your thought!
நல்ல படம். நல்ல விமர்சனம். நல்ல பகிர்வு. நன்றி:)!
***ராமலக்ஷ்மி said...
நல்ல படம். நல்ல விமர்சனம். நல்ல பகிர்வு. நன்றி:)!
21 May 2010 7:30 PM***
வாங்க ராமலக்ஷ்மி! :)
Post a Comment