Sunday, May 30, 2010

விஜயுடைய “முதல்வர் ஆசை”க்கு விலை!



சுறா நல்லாப்போகலை என்பதென்னவோ எல்லோரும் ஏற்றுக்கொண்ட உண்மைதான். நம்ம ஊர்ல எப்படியோ, ஆனால் "மலேசியாவில் சுறாவை சிங்கம் வந்து முழுங்கிவிட்டது" என்பதை மலேசியா “நவ் ஷோயிங்” பார்த்தால் தெரியும். சுறா விழுந்தா? அதுக்காக திரையரங்கு உரிமையாளர்கள் எல்லாம் ஒண்ணு சேர்ந்து விஜயை மிரட்டனுமா?


படம் மினிமம் கியாரண்டியை க்கூட ஈட்டவில்லைனா, விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் படத்தயாரிப்பாளரைத் தானே கேக்கனும்? இல்லையா? விஜய்தான் இதற்கு பொறுப்பா? விஜய் எப்படி இதுக்கு பொறுப்பாவார்?

ரஜினியின் பாபா நல்லாப்போகாதபோது ரஜினி ஓரளவு பணத்தைத் திருப்பிக்கொடுத்தார். அது ஏன் என்றால் பாபா ரஜினியுடைய தயாரிப்பு. பாபா, மினிமம் கியாரண்டியை ஈட்டவில்லை அதனால் ரஜினி அதற்கானதை செய்தார். அதேபோல் குசேலன் சரியாகப்போகததால், மினிமம் கியாரண்டியை சம்பாரிக்க முடியாததால் கவிதாலயா மற்றும் ப்ரமிட் சாய்மீராவைத்தான் திரையரங்கு உரிமையாளர்கள் அனுகினார்கள். ரஜினியை அனுகவில்லைனுதான் நினைக்கிறேன்.
இப்போ சுறா சரியாப்போகலைனா அதேபோல் திரையரங்கு உரிமையாளர்கள் விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர் சங்கிலி முருகனைத்தானே அனுகனும்?

திரையரங்கு உரிமையாளர்கள் ஏன் விஜய்யை அனுகுகிறார்கள்? என்பது என் குழப்பம்! திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளரை அனுகி நஷ்டப்பணம் பெறனும். நஷ்டமடைந்த தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் விஜையை அனுகனும்னுதான் எனக்குத் தோனுது.

திரையரங்கு உரிமையாளர்கள் => விநியோகஸ்தர்/தயாரிப்பாளர் => நடிகர் விஜய்!

அதைவிட்டுவிட்டு திரையரங்கு உரிமையாளர்கள் விஜயை அனுக, மற்றும் மிரட்டக்காரணம்?

மேலும் சம்மந்தமே இல்லாமல் அவருடைய பழைய படங்களை எல்லாம் சுறாவோட இணைப்பது?

இதுக்கெல்லாம் காரணம் என்ன?

விஜயின் “முதல்வர் கனவு” தான் இதற்கு காரணம்! விஜய்க்கு அந்த ஆசை இருப்பதால் விஜய் மீடியா/மக்கள் முன்னால் நல்லவராக நடிச்சே ஆகவேண்டிய கட்டாயம் இது! பெரிய தியாகி போலவும், நல்லவர்போலவும் நடிக்காமல் நான் சாதாரண வியாபாரி, ஒரு நடிகன் என்பதுபோல அவர் பேசலாம். ஆனால் அப்படிப் பேசினால் அவருடைய “முதல்வர் கனவு” வீணாகிவிடும்! முதல்வராக ஆசைப்படும் விஜயின் வீக்னெஸை அறிந்த திரையரங்கு உரிமையாளர்கள் இதுபோல் அரசியல் செய்து விஜயை மிரட்டுறாங்கனுதான் தோனுது. விஜய், அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்றி அவருடைய “முதல்வர் கனவை” பாதுகாப்பாராக!
தயவு செய்து விஜய்க்காக யாரும் பரிதாபப்படாதீங்க!
ஏன்னா அவரு விவேகத்தில் 100 சாணக்யனுக்கு சமமாம்! அவர் பட வசனம்தான்! :)

4 comments:

Unknown said...

நண்பா, குசேலன் படத்துக்கும் ரஜினியைத்தான் அணுகினார்கள். ரஜினி தான் கவிதாலயாவையும் பிரமிட் சாய் மிராவையும் வற்புறுத்தி (தன் சம்பளத்தில் ஒரு பகுதியைத் திருப்பித் தந்துவிடுவதாகக் கூடக் கூறி) பணத்தைத் திருப்பித் தரச் செய்தார். விஜயிடமும் இதே பண்பை எதிர்பார்க்கிறார்கள் திரையரங்கு உரிமையாளர்கள் என்று நினைக்கிறேன்.

உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?

ராமலக்ஷ்மி said...

தலைப்பு..

வாழ்க்கையில எல்லாத்துக்கும் ஒரு விலை இருக்குன்னு சொல்ல வர்றீங்க. சரிதானே:)?

வருண் said...

***முகிலன் said...
நண்பா, குசேலன் படத்துக்கும் ரஜினியைத்தான் அணுகினார்கள். ரஜினி தான் கவிதாலயாவையும் பிரமிட் சாய் மிராவையும் வற்புறுத்தி (தன் சம்பளத்தில் ஒரு பகுதியைத் திருப்பித் தந்துவிடுவதாகக் கூடக் கூறி) பணத்தைத் திருப்பித் தரச் செய்தார். விஜயிடமும் இதே பண்பை எதிர்பார்க்கிறார்கள் திரையரங்கு உரிமையாளர்கள் என்று நினைக்கிறேன்.

உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?

30 May 2010 5:37 PM***

வாங்க முகிலன்!

விஜய், வழக்கம்போல ஒண்ணுமே பேசமாட்டார். அவரோட அப்பா ஏதாவது சொல்லுவார்னு நெனைக்கிறேன். பார்க்கலாம் :)

வருண் said...

***ராமலக்ஷ்மி said...
தலைப்பு..

வாழ்க்கையில எல்லாத்துக்கும் ஒரு விலை இருக்குன்னு சொல்ல வர்றீங்க. சரிதானே:)?

30 May 2010 6:31 PM***

ஆமாங்க ராமலக்ஷ்மி. சினிமாவில் நாயகன் சாதனைகளை வைத்து தன் பலத்தை அதிகமாக்கனும்னு நெனச்சா, ரியல் வாழ்க்கையில் அவங்களுக்கு பல சோதனைகள் வருவதை தவிர்க்கமுடியாது.

Couple of sayings,

He needs to pay a price for what he wants and that nothing is free in the world. Vjay's wants to be a CM in the future, he will have to pay a high price to maintain his image!

I think he is cornered mainly bcos of his BIG political ambition!