தமிழ்மணம் நடத்தும் போட்டியில் பதிவர்கள் எல்லாம் ஆவலுடன் கலந்துகொள்ளும் நேரம் இது. நிச்சயம் இது ஒரு ப்ரஸ்டிஜியஸ் அவார்ட் தான்.
பதிவர்கள் பலர் எந்தப்பதிவை பரிந்துரைக்கலாம்னு தன் பதிவுகளையே எடைபோட்டு குழம்பிநிற்கும் இந்த சூழலில் நான் மட்டும் "ஆண்டவன் படச்ச்சான் என்கிட்ட கொடுத்தான் அனுபவி ராஜானு அனுப்பி வச்சான்" னு நிம்மதியா இருக்கேன்.
நான் இதுவரை இந்தப் போட்டியில் கலந்ததில்லை. கலந்துக்க தகுதி இருக்கானு சந்தேகமமும் உண்டு. போட்டினாலே சின்ன வயதிலிருந்து பிடிக்காது. மற்றும் அவார்ட் வாங்கிற அளவுக்கெல்லாம் யோசிச்சு பதிவு எழுதுறதில்லை, எழுதியதுமில்லை. ஒருமுறை பதிவர் ராமலகக்ஷ்மி அவர்கள் காசுவலாக கேட்டதால் சர்வேஷன் நடத்திய போட்டியில் "அவரு அவரு..ஒரு" னு ஒரு கதை எழுதி இருக்கேன். அதுவும் அமெச்சூரிஷாத்தான் வந்தது. முடிவும் எதிர்பாத்தது போலவே! :)
பதிவுலகில் நானிருக்க காரணம்? இது ஒரு மாதிரியான போதைதான். பதிவுலக போதையில் மாட்டிக்கொண்டு நேரம் கிடைக்கும்போது எதையாவது எழுதனும்னு எழுதற ஆள் நான், அவ்ளோதான். ஆனால் உண்மையை என்றுமே சொல்லத்தயங்குவதில்லை!
போட்டியில் கலந்துக்காததை எப்படி வேணா ஒவ்வொரு பதிவரும் எடுத்துக்கலாம்.. ஊர் வாயை கேக்கவா வேணும்?
* இவரு கலந்துக்கிட்டாலும் எவன் பரிந்துரைப்பான் ? இதுவரைக்கும் வாசகர் பரிந்துரையில் குறைந்த அளவு பரிந்துரைக்கப்பட்ட பதிவுகள் வருண் பதிவுதான் என்று பலர்..
* போட்டியில் கலந்துக்க எல்லாம் ஒரு தரம், தராதரம் இருக்கனும். வருண் தன் "தரத்தை" உலகம் புரிஞ்சுக்கிட்டதை புரிஞ்சுக்கிட்டார் போல இருக்கு என்று பலர்
* எல்லாரும் கலந்துக்கிறாங்க. யாருக்கும் முதல் இரண்டு இடங்கள் கெடைக்கும்னு நம்பிக்கை இருக்காது. இவரும் கலந்துக்கலாம் என்றும் ஒருசில நல்லவர்கள்
சரி, உலகம் ஆயிரம் சொல்லும் நெனச்சுக்கும். அதில் உண்மையும் இருக்கலாம். இல்லாமலும் போகலாம். உலகத்தைவிட்டுவிட்டு நம் சுதந்திரத்தை வைத்து நாம் எடுக்கும் முடிவுனு ஒண்ணு இருக்கு.
Anyway, தமிழ்மணத்திற்கும், விருதுகளை ஸ்பாண்சர் செய்யும் அலோகாவுக்கும் இதில் ஆவலுடன் கலந்துகொள்ளும் பதிவர்களுக்கும், வெற்றிபெறப்போகும் பதிவர்களுக்கும் "ரிலாக்ஸ் ப்ளீஸ்" சார்பாக என் வாழ்த்துக்கள்! நன்றி! :)
7 comments:
இப்பவும் கேசுவலாகக் கேட்கலாம்னு வந்தால்..
//நம் சுதந்திரத்தை வைத்து நாம் எடுக்கும் முடிவுனு ஒண்ணு இருக்கு.//
இப்படி சொல்லிட்டீங்க:))!
இந்த வாரம் தமிழ்மணம் சிறந்த இருபது வலைப்பூக்கள் பட்டியலில் 14-வது இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்.
சரியான பாடல்களை கண்டுபிடித்ததால் உங்களுக்கு விருது வழங்கி கவுரவித்துள்ளேன். என் தளத்தில் பின்னூட்டப்பகுதியில் பார்க்கவும்
http://ragariz.blogspot.com/2010/12/riddle-to-rajini-fans.html
_/\_
***ராமலக்ஷ்மி said...
இப்பவும் கேசுவலாகக் கேட்கலாம்னு வந்தால்..
//நம் சுதந்திரத்தை வைத்து நாம் எடுக்கும் முடிவுனு ஒண்ணு இருக்கு.//
இப்படி சொல்லிட்டீங்க:))!
11 December 2010 7:02 PM***
வாங்க ராமலக்ஷ்மி! நீங்க வெற்றிபெற வாழ்த்துக்கள்ங்க! :)
**ரஹீம் கஸாலி said...
இந்த வாரம் தமிழ்மணம் சிறந்த இருபது வலைப்பூக்கள் பட்டியலில் 14-வது இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்.
11 December 2010 9:53 PM**
வாங்க ரஹீம்! நன்றிங்க! நீங்க டாப் 10க்குள் இடம்பெற்றதற்கு வாழ்த்துக்கள்! :)
--------------
ரஹீம் கஸாலி said...
சரியான பாடல்களை கண்டுபிடித்ததால் உங்களுக்கு விருது வழங்கி கவுரவித்துள்ளேன். என் தளத்தில் பின்னூட்டப்பகுதியில் பார்க்கவும்
http://ragariz.blogspot.com/2010/12/riddle-to-rajini-fans.html
11 December 2010 11:30 PM
பார்த்தேன் :)))விருதுக்கு நன்றிங்க, ரஹீம்! :)
***பழமைபேசி said...
_/\_
12 December 2010 12:49 AM***
வாங்க மணியண்ணா! :)
Post a Comment