பதிவுலகில் பெண்பதிவர்களுக்கு அந்தப்பிரச்சினை, இந்தப்பிரச்சினை என்று பேசுவது இந்தப் பெண் பதிவர்கள் பிரச்சினையை முற்றுப்புள்ளி வைத்து முடிக்க முடியாத ஒரு நிலைமையைத்தான் உருவாக்குது. என்னைப்பொறுத்தவரையில் இன்றைய நிலையில் பதிவுலகில் ஆணும் பெண்ணும் சமமாகத்தான் இருக்காங்க. பதிவுலகில் பெண் பதிவர்கள் பலர் மிகத்தரமாக எழுதுகிறார்கள், தங்களுக்கென்று ஒரு மிகச்சிறந்த இடத்தை பெற்றுள்ளார்கள். அதனால் ஆண்பதிவர்கள், பெண்பதிவர்கள் என்று தேவையில்லாமல் பிரித்து பேச வேண்டிய அவசியமே இல்லை!
பதிவுலகில் ஒரு சில சமயங்களில் பெண்கள் தாக்கப்படுவதை எல்லோரும் கவனித்துப் பார்த்துக்கொண்டுதான் இருக்கோம். ஏன் ஆண் பதிவர்களும்தான் தாக்கப்படுகிறார்கள். அப்படி ஒரு சூழலில் பாதிக்கப்பட்ட பதிவருக்கு பல பதிவர்கள் துணைநிற்கிறார்கள், தைரியம் கொடுக்கிறார்கள், தங்களால் ஆன உதவியை செய்கிறார்கள். தவறு செய்தவர்களை கண்டிக்கிறார்கள், வார்த்தைகளாலேயே, இல்லை பதிவுகளாலேயே தண்டிக்கிறார்கள். ஆனால், சில காலம் சென்ற பிறகு, அது நடந்து முடிந்த ஒண்ணுனு அதை விட்டுவிட்டு , மறந்துவிட்டு நாம் முன்னோக்கி நடக்க வேண்டும்! பல மாதங்களுக்குப் பிறகு நடந்து முடிந்த பல பிரச்சினைகளை கிளறிக்கிளறி எடுப்பது தவறு செய்து தன் தவற்றை உணர்ந்த சில ஆண்பதிவர்களை மறுபடியும் மறுபடியும் அதையே சொல்லிச் சொல்லி அவமானப்படுத்துவது போல எனக்குத் தோனுது.
தவறு செய்த பதிவர்கள், தண்டிக்கப்பட்டுவிட்டார்கள், இப்போ திருந்தி பழசை மறந்து மேலும் நல்லா எழுத முயலுகிறார்கள். அப்படி ஒரு சூழலில் திரும்பத் திரும்ப அவர்கள் செய்த தவறுகளை கிளறி எடுப்பது போல் அதைப்பற்றிப் பேசி அதை கிளறி எடுப்பதை முதலில் நாம் தவிர்ப்பது நல்லது. ஆண் பதிவர்களுக்கு எந்தவிதத்திலும் பெண் பதிவர்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதில் எதற்கு யாருக்கும் சந்தேகம் வருதுனு தெரியவில்லை.
என் பார்வையில் வம்பில்லாமல் தன் கருத்தைத் தரமாக நாகரிகமாக, தைரியமாக சொல்லும் பெண்பதிவர்கள் பலர், பதிவுலகில் ஆண்களைவிட சிறப்பான இடத்தில் இருக்காங்க. அவர்கள் தரம் புரிந்து அவர்கள் பதிவுக்கு பின்னூட்டம் இடும் பதிவர்களும், நாகரிகமாக, அர்த்தமாக, நட்பு குறையாமல் எதிர்கருத்தையும் வைக்கத்தான் செய்கிறார்கள். அதுபோல் எழுதும் பெண்பதிவர்கள் எந்தவித பயமும் இல்லாமல் தன் கருத்துக்களை நாகரிகமாகத் தெரிவித்து நாளுக்கு நாள் மேலே போய்க்கொண்டுதான் இருக்காங்க. அதை யாராலும் தடுக்கவோ நிறுத்தவோ முடியாது.
எந்தப்பதிவருமே (ஆணென்ன பெண்னென்ன இதில்) வம்பில்லாமல் எழுதும்போது அவர்கள் எந்த ஒரு பிரச்சினையிலும் மாட்டுவதில்லை. அப்படியில்லாமல் கொஞ்சம் மற்றவரை சீண்டுவதுபோல், அவமானப்படுத்துவதுபோல் எழுதப்படும் ஆண்பதிவர்கள் பதிவுகளும், அந்தப் பதிவர்களும்தான் சில சமயம் தாக்கப்படுகிறார்கள். இதுபோல தாக்கப்படும் பதிவர்களில் ஆண்களும் உண்டு. ஆண் என்று யாருக்கும் ஸ்பெஷல் ப்ரிவிலேஜ் கொடுக்கப்படவில்லை!
என்னைக் கேட்டால் இந்த 21 ஆம் நூற்றாண்டில் இருந்துகொண்டு இணையத்தில், இன்னும் பெண்களுக்கு முழு சுதந்திரம் வரவில்லை என்பதுபோல பேசும் பெண்ணியவாதிகள்தான், பெண்களை மேலே வளரவிடாமல் தடுப்பவர்கள்.
மேலும் இவர்கள் எழுதும் எழுத்தில் இருந்து ஆண்பதிவர்கள் தங்களுக்கு உதவனும் என்று வேண்டுகிறார்களா? இல்லை கட்டளையிடுகிறார்களா? இல்லை உதவுவதில்லைனு குறை கூறுகிறார்களா? என்பது அவர்கள் எழுதும் தொணியில் சரியாக விளங்கவில்லை!
சரி, Happy New Year to everyone! :)
28 comments:
என்ன காரணத்திற்காக இந்தப் பதிவு என்று விளங்கவில்லை... ஆனால் நிச்சயம் பொதுவாக எழுதவில்லை என்று தெரிகிறது...
Happy New Year for u too...
என்ன காரணத்திற்காக இந்தப் பதிவு என்று விளங்கவில்லை... ஆனால் நிச்சயம் பொதுவாக எழுதவில்லை என்று தெரிகிறது...
//
பிளாசபி உமக்கு விளங்காது. தளபதிக்கும், பழமைக்கும் தான் விளங்கும்
கு.கு... பத்த வெச்சிட்டீரே கு.கு!!
Wish you happy and the best new year!!!
அண்ணே, சில பேருக்கு எதுக்காச்சும் சும்மா புலம்பிக்கினே இருக்கணும்; ஒண்ணும் இல்லாட்டி புலம்பறதுக்கு ஒரு சங்கதியும் இல்லியேன்னாவது புலம்புவாங்க!
விடுங்க, ஆணோ பெண்ணோ, பதிவர்கள் எல்லாம் நல்லாத்தான் இருக்காங்க! இனியும் அப்படியே இருப்பாங்க!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
***philosophy prabhakaran said...
என்ன காரணத்திற்காக இந்தப் பதிவு என்று விளங்கவில்லை... ஆனால் நிச்சயம் பொதுவாக எழுதவில்லை என்று தெரிகிறது...
30 December 2010 4:39 PM **
தல நீங்க பதிவுலகைக் கொஞ்சம் கூர்ந்து கவனிக்கனும் :)
**philosophy prabhakaran said...
Happy New Year for u too...
30 December 2010 4:40 PM **
நன்றி!
***குடுகுடுப்பை said...
என்ன காரணத்திற்காக இந்தப் பதிவு என்று விளங்கவில்லை... ஆனால் நிச்சயம் பொதுவாக எழுதவில்லை என்று தெரிகிறது...
//
பிளாசபி உமக்கு விளங்காது. தளபதிக்கும், பழமைக்கும் தான் விளங்கும்
30 December 2010 4:53 PM ***
:-)))
*Blogger பழமைபேசி said...
கு.கு... பத்த வெச்சிட்டீரே கு.கு!!
30 December 2010 5:02 PM**
"அணுகேந்திரனை" எங்கேனு எனக்கு இப்போ எனக்கு விபரம் சொல்லனும், மணியண்ணா!
***சேட்டைக்காரன் said...
அண்ணே, சில பேருக்கு எதுக்காச்சும் சும்மா புலம்பிக்கினே இருக்கணும்; ஒண்ணும் இல்லாட்டி புலம்பறதுக்கு ஒரு சங்கதியும் இல்லியேன்னாவது புலம்புவாங்க!
விடுங்க, ஆணோ பெண்ணோ, பதிவர்கள் எல்லாம் நல்லாத்தான் இருக்காங்க! இனியும் அப்படியே இருப்பாங்க!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
30 December 2010 6:40 PM***
உங்களுக்கும் ஹாப்பி நியு இயர் ங்க! :)
எனக்குப் புடிக்கலை... தூக்கிட்டனுங்க!!
சரிங்க. விளக்கத்திற்கு நன்றி :)
நான் சரியாக்கூட வாசிக்கவில்லை :(
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பா
புரிஞ்சது . விடுங்க வருண். சிலரை மாற்ற முடியாது. உங்களுக்கு என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
***Blogger இரவு வானம் said...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பா
30 December 2010 9:21 PM***
நன்றிங்க, இரவு வானம். உங்களுக்கும் என்னுடைய இனிய ஹாப்பி நியு இயர் வாழ்த்துக்கள் :)
***எல் கே said...
புரிஞ்சது . விடுங்க வருண். சிலரை மாற்ற முடியாது. உங்களுக்கு என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
30 December 2010 11:09 PM***
நன்றிங்க எல் கே!
ஹாப்பி நியு இயர்! :)
அட என்னங்க. பதிவுலகுல பொண்ணுங்களுக்கு எவ்வளவோ கொடுமை நடக்குது.
உங்களுக்குத் தெரியாது..
எவ்வளவோ இழிவா நடத்தறாங்க. உங்களுக்குத் தெரியாது.
எவ்வளவு மட்டமா பேசறாங்க,. உங்களுக்குத் தெரியாது.
உங்களுக்குத் தெரியாது.
உங்களுக்குத் தெரியாது.
உங்களுக்குத் தெரியாது.
உங்களுக்குத் தெரியாது.
உங்களுக்குத் தெரியாது.
உங்களுக்குத் தெரியாது.
ஏன்னா நீங்க முதலாளித்துவ நாட்டுல இருக்கீங்க.
iLa :நீங்க நெசம்மாத்தேன் சொல்றீகளா!!!
anyway, ஹாப்பி நியு இயர்! :)))
ஓன்னும் புரியல..........
//வழிப்போக்கன் - யோகேஷ் said...
ஓன்னும் புரியல..........
//
தம்பிக்கு ஓன்னும் புரியலையாம்... அப்ப, ஆன்னு சொல்லிப் பாருங்க.. அல்லாங்காட்டி ஈன்னும் சொல்லிப் பார்க்கலாம்!!
வருண் அவர்களுக்கு,
இன்றைய சூழலில், பெண்கள் பதிவெழுதும் போது ஆண்களைப் போல சுதந்திரமாக கருத்துக்களை பல நேரங்களில் கூற முடிவதில்லை. பெண்கள் பதிவென்றால் அது சமையல், குழந்தைவளர்ப்பு, வீட்டுவேலை போன்ற பதிவுகளே, என்பது போன்ற மாயை நிறைய இருக்கிறது. அதையும் தாண்டி ஒரு சிலர் சமூக அக்கரையோடு எழுத விளையும் போது ஆண் பதிவர்களுக்கு இருப்பது போன்ற வரவேற்ப்போ அல்லது சொல்ல வரும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் மனபாவமோ பலருக்கு இல்லை என்றே கூற வேண்டும்.
பதிவுலகில் ஆண் பெண் சமம் என்பதெல்லாம் வர இன்னும் சில காலங்கள் பிடிக்கலாம் என்பது என் கருத்து.
நன்றி.
***வழிப்போக்கன் - யோகேஷ் said...
ஓன்னும் புரியல..........
31 December 2010 11:07 AM ***
1) மறப்போம் மன்னிப்போம்!
2) நடந்தவைகள் நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும். நடப்பவைகள் நல்லவைகளாக அமையட்டும்!
அம்புட்டுத்தாங்க, யோகேஷ்! :)
Happy New year! :)
***பழமைபேசி said...
//வழிப்போக்கன் - யோகேஷ் said...
ஓன்னும் புரியல..........
//
தம்பிக்கு ஓன்னும் புரியலையாம்... அப்ப, ஆன்னு சொல்லிப் பாருங்க.. அல்லாங்காட்டி ஈன்னும் சொல்லிப் பார்க்கலாம்!!
31 December 2010 11:19 AM***
உதவிக்கு நன்றிங்க, மணியண்ணா. நீங்க அழகா விளக்கியபிறகு நல்லாப் புரிஞ்சி இருக்கும்! :)
***Blogger முகுந்த் அம்மா said...
வருண் அவர்களுக்கு,
இன்றைய சூழலில், பெண்கள் பதிவெழுதும் போது ஆண்களைப் போல சுதந்திரமாக கருத்துக்களை பல நேரங்களில் கூற முடிவதில்லை. பெண்கள் பதிவென்றால் அது சமையல், குழந்தைவளர்ப்பு, வீட்டுவேலை போன்ற பதிவுகளே, என்பது போன்ற மாயை நிறைய இருக்கிறது. அதையும் தாண்டி ஒரு சிலர் சமூக அக்கரையோடு எழுத விளையும் போது ஆண் பதிவர்களுக்கு இருப்பது போன்ற வரவேற்ப்போ அல்லது சொல்ல வரும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் மனபாவமோ பலருக்கு இல்லை என்றே கூற வேண்டும்.
பதிவுலகில் ஆண் பெண் சமம் என்பதெல்லாம் வர இன்னும் சில காலங்கள் பிடிக்கலாம் என்பது என் கருத்து.
நன்றி.
31 December 2010 1:18 PM***
தங்கள் கருத்துக்கு நன்றிங்க. அட் லீஸ்ட் நீங்க ஒரு ஆளாவது உங்க கருத்தை தெளிவா நேரிடையா சொல்லியிருக்கீங்க. அதற்கு பாராட்டுக்கள்.
என்னை மாதிரி பதிவர்களுக்கும் பல பிரச்சினைகள் வரத்தாங்க செய்யுது. பலவிதமான மக்கள், நம்மிடம் இல்லாத்ததை நம் பதிவில் எதிர் பார்ப்பவர்கள், மட்டம் தட்டனும்னே வர்றவங்க. என்ன எழுதினாலும் நமக்கு ஒரு லேபெல் போட்டு அதே பார்வையில் பார்ப்பவர்கள், சம்மந்தமே இல்லாமல் "உங்க பதிவெல்லாம் மொக்கை"னு சான்றிதழ வழங்கும் பெரிய மனுஷனுகள், எதையோ எழுதுறோம்னு நம்ம எழுதுவதை பலவிதமாக சைக்காலாஜிக்கலா பாதிக்க வைப்பவர்கள், கூடவே இருந்து குழிபறிப்பவர்கள், பதிவை வாசிக்காமலே எதையாவது பின்னூட்டம்னு போடுபவர்கள். வம்புப்பின்னூட்டமம் மட்டுமே இடுறவங்க. நம்ம எழுத்தை கேலி செய்யனும்னு ஒரே ஒரே குறிக்கோளுடன் வர்ரவங்க, பலவிதமான வயித்தெரிச்சல் கோஷ்டிகள் இப்படி பலர்.
இவர்களுடன் பல நல்லவர்களும் வரத்தான் செய்றாங்க. :)
நான் எல்லாம் எல்லாத்தையும் உதிர்த்துவிட்டு என் திருப்திக்காகத்தான் பொதுவா பதிவுகள் எழுதுறேங்க. I am serious here. Survival in blog world is very difficult for anybody if we are sensitive and want to satisfy all people . You don't have to be a woman for that. you just have to be blogger :)
------------
anyway, wish you and your family a very Happy New Year, muhunth ammA!
தலைவரே தத்துவம்: இந்தப் புதிய இனிய ஆண்டில் உங்க தளம் மென்மேலும் உயர (தரத்தில்) வாழ்த்துக்கள்!
Survival in blog world is very difficult for anybody if we are sensitive and want to satisfy all people . You don't have to be a woman for that. you just have to be blogger :)//
நிஜம்..
பெண் ரவுடிகள் உண்டுதானே?,,
சமீபத்தில் பஸ் ல் பார்த்தது இது
" Fucking cheap Retards " னு பெண் பதிவர் சொல்ல அதுக்கு ஜால்ரா பாக்கணுமே..:))
இவர்களிடையே நாமும்.. :)
***survival in blog world is very difficult for anybody if we are sensitive and want to satisfy all people . You don't have to be a woman for that. you just have to be blogger :)//
நிஜம்..
பெண் ரவுடிகள் உண்டுதானே?,,
சமீபத்தில் பஸ் ல் பார்த்தது இது
" Fucking cheap Retards " னு பெண் பதிவர் சொல்ல அதுக்கு ஜால்ரா பாக்கணுமே..:))
இவர்களிடையே நாமும்.. :)
5 January 2011 9:37 PM***
வாங்க, திருமதி சாந்தி! :)
உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
வாங்க, திருமதி சாந்தி! :)
உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!//
நன்றி . தங்களுக்கும் குடும்பத்தார்க்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
Post a Comment