Wednesday, December 15, 2010

சாரு எழுத்து வர வர கழுதைபோல போகுதா?

எழுத்தாளர்கள் பொதுவாக வயதாக ஆக சிறப்பாக, தரமாக எழுதமுடியாமல் போய்விடுமா? தி ஜானகிராமன் கடைசியில் எழுதிய நாவலான நளபாகம் அவர் எழுதிய நாவல்களிலேயே ரொம்ப மட்டமானதுனு சொல்லலாம். வயதாக ஆக அவர் எழுத்தில் அவ்வளவு சுவை இல்லை, வெறும் பர்வேஷந்தான் இருந்தது என்றார்கள், பலர். அதேபோல்தான் சாண்டில்யன் போன்றவர்களும், சாண்டில்யன் வய்தான பின்னால் எழுதிய நாவல்கள் அவர் பழைய நாவல்கள் யவன ராணி, கடல் புறா, மன்னன் மகள் அளவுக்கு இல்லை என்பதே உண்மை. ஏன் ஜெயகாந்தன், பாலகுமாரன் யாருமே இதுக்கு விதிவிலக்கல்ல! அப்போ சாருவுடைய "பொற்காலம்" அதுக்குள்ளே முடிந்துவிட்டதா? சாருவும் அந்த நிலையை அடைந்துவிட்டாரா? இல்லைனா இவர் எழுதிய சீரோ டிக்ரீயை விட தரமான படைப்புக்கள் இன்னும்வர இருக்க்கின்றதா?

சமீபத்தில் சாரு நிவேதிதா புத்தக வெளியீட்டு விழாதான் பதிவுலகில் விசயமா இருக்கு. இருந்தாலும் அவர் கதைகள் தரம் குறைந்துவிட்டதாக பலர் தைரியமாக விமர்சிக்கிறார்கள். இன்னும் சீரோ டிக்ரியைப் பத்தியேதான் அவர் ஜால்ரக்கள் பெருமையாகப் பேசுகிறார்கள். சாரு ஒரு தனித்துவம் வாய்ந்தவர்தான்.. சாருக்கு தொண்டர்களும் அதிகம், எதிரிகளும் அதிகம். பதிவுலகில் அவருக்கு கிடைக்காத புகழும் கிடையாது, அதேபோல் அவருக்கு வராத அவமானங்களும் கெடையாது. சாரு உண்மையை எழுதுறாரோ இல்லையோ, அவர் எழுத்துக்கு இன்றுவரை எந்தக்குறைச்சலும் இல்லை என்பதை யாருமே மறுக்கமுடியாத உண்மை. அதனால்தான் அவரைச் சொல்லி நெறையாப் பேர் காலத்தை ஓட்டுகிறார்கள், ஓட்டுகிறோம். ஆனால் எழுத்தாளனுக்கு முக்கியம், அனுபவம், கற்பனைத்திறன்! அவர் கற்பனைத் திறன் எந்த லெவெலில் இருக்கு? என்பதென்னவோ பெரிய கேள்விக்குறியாகவே இருக்கு. சாருவின் கதை எழுதும் திறன் மங்கிவிட்டதாகத்தான் விமர்சகர்கள் பலர் அவர் சமீபத்திய நாவல்களை விமர்சிக்கிறார்கள். இப்போ எல்லாம் சாருவை ஒரு கதை எழுதுபவர்னு பார்ப்பதைவிட, எதையாவது வம்பை எழுதுவார்னு அவர் தளத்திற்குப் போய் வாசிப்பவர்கள்தான் அதிகம். அலெக்ஸா ரேட்டிங்கும் தரமான எழுத்தும் எதிர்திசையில் போறதை இப்போ எல்லாம் அழகா பார்க்க முடியுது!

ஒருவகையில் அந்தக்காலத்தில் வலையுலகம் இல்லாதது என்னவோ எழுத்தாளர்களின் கற்பனைத் திறனை வளர்த்தது என்றுதான் சொல்லனும். அதனால்தான் அவர்களால் நன்றாக அவர்கள் அனுபவத்தை அனுபவிச்சு எழுத முடிந்ததோ? வலையுலகத்தால் தினமும் என்ன இழவையாவது எழுதனும்னு எழுதி கதை எழுதுபதில் ஜெயமோகன், சாரு போன்றவர்களால், ஒரு தி ஜா போலவோ அல்லது ஒரு ஜெயகாந்தன் போலவோ அல்லது ஒரு அகிலன் போலவோ உருவாக முடியவில்லை என்பதை நீங்கள் கண்கூடகாகப் பார்க்கலாம்.

வலையுலகால் எழுத்தாளர்கள் நஷ்டமடைகிறார்கள் என்றே சொல்லனும். அவர்கள் எழுத்தின் தரம் குறைகிறது. கற்பனைக்கு பஞ்சம் வருகிறது. மேலும் அவர்கள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு அவர்கள் தாக்கப்படுகிறார்கள். காயபடுத்தப் படுகிறார்கள். அவர்களும் தரமான படைப்புக்களை மட்டும் தருவதை விட்டுவிட்டு எதையாவது உளறி குழாயடி சண்டைபோட்டு நேரத்தை வீணடிக்கிறார்கள். அதனால்தானோ என்னவோ குறைந்த வயதிலேயே அவர்கள் எழுத்து தரமிழந்துவிடுகிறது. ஆக மொத்தத்தில் வலையுலகம் வர வர எழுத்தாளர்களை புதைகுழியில் தள்ளிக் கொண்டுதான் போகிறது என்றுதான் ஒரு முடிவுக்கு வர வேண்டியதிருக்கிறது.

17 comments:

பழமைபேசி said...

தி.ஜா?

உங்களுக்கு வயசாயிடிச்சி...

வருண் said...

**பழமைபேசி said...

தி.ஜா?

உங்களுக்கு வயசாயிடிச்சி...
15 December 2010 8:00 AM **

நான் நெனச்சேன் நீங்க சொல்லீட்டீங்க! :)))

ஆமா, தி ஜானகிராமன் பத்திதான் சொன்னேன் :)))

வருணன் said...

ஒரு வகையில் நீங்கள் சொல்வது சரி வருண். படைப்பாளிக்கு அவதானிக்க கால அவகாசம் நிச்சயம் தேவை. இணையம் ஒரு கண்ணோட்டதில் எழுத்தாதளர்களுக்கு சாபக்கேடே! நிர்பந்திக்கப்படும் அழுத்ததால் ஒரு படைப்பாளி பல வேளைகளில் தமது படைப்பின் தரத்தில் சமரசம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாவது கண்கூடு.

வருண் said...

வருணன் said...

ஒரு வகையில் நீங்கள் சொல்வது சரி வருண். படைப்பாளிக்கு அவதானிக்க கால ***அவகாசம் நிச்சயம் தேவை. இணையம் ஒரு கண்ணோட்டதில் எழுத்தாதளர்களுக்கு சாபக்கேடே! நிர்பந்திக்கப்படும் அழுத்ததால் ஒரு படைப்பாளி பல வேளைகளில் தமது படைப்பின் தரத்தில் சமரசம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாவது கண்கூடு.

15 December 2010 8:12 AM***

தங்கள் கருத்துக்கு நன்றிங்க, வருணன். :)

ILA (a) இளா said...

இன்னும் பயிற்சி தேவை வருண். சாரு பத்தி எழுதும்போது, கொஞ்சம் **தா, **டை, ***ர், இப்படி எழுதனும். அப்பத்தான் ஒத்துக்குவாங்க

வருண் said...

***ILA(@)இளா said...

இன்னும் பயிற்சி தேவை வருண். சாரு பத்தி எழுதும்போது, கொஞ்சம் **தா, **டை, ***ர், இப்படி எழுதனும். அப்பத்தான் ஒத்துக்குவாங்க
15 December 2010 9:53 AM ***

அது சரி! :))))

Chitra said...

ஆஜர் மட்டும் போட்டுக்கிறேன்.

வருண் said...

***Blogger Chitra said...

ஆஜர் மட்டும் போட்டுக்கிறேன்.

15 December 2010 11:16 AM**

வாங்க சித்ரா! :)

நசரேயன் said...

// மொத்தத்தில் வலையுலகம் வர வர எழுத்தாளர்களை புதைகுழியில் தள்ளிக்
கொண்டுதான் போகிறது//

எனக்கு இல்லை

சி.பி.செந்தில்குமார் said...

நல்ல கருத்துக்கள்

அலெக்ஸா ரேட்டிங்கும் தரமான எழுத்தும் எதிர்திசையில் போறதை இப்போ எல்லாம் அழகா பார்க்க முடியுது!

முற்றிலும் உண்மை

ராவணன் said...

வலையுலகில் எழுதுபவர்கள் இந்த so called எழுத்தாளர்களைவிட நன்றாக எழுதுகின்றார்கள்.

வலையுலகில் எழுதுபவர்களுக்கு எழுத்து மட்டுமே பிழைப்பு அல்ல.

அதனால், தங்களைத் தாங்களே பெர்ர்ர்ர்ர்ய எழுத்தாளர் என்று சொல்லிக்கொண்டு திரிவதில்லை.

பழமைபேசி said...

//நசரேயன் said...
// மொத்தத்தில் வலையுலகம் வர வர எழுத்தாளர்களை புதைகுழியில் தள்ளிக்
கொண்டுதான் போகிறது//

எனக்கு இல்லை
//

நெம்ப நாளைக்கப்புறம் தளபதி தலை தெரீது.... இமயமலைக்கு விமோசனம்?!

வருண் said...

***நசரேயன் said...

// மொத்தத்தில் வலையுலகம் வர வர எழுத்தாளர்களை புதைகுழியில் தள்ளிக்
கொண்டுதான் போகிறது//

எனக்கு இல்லை
15 December 2010 4:43 PM ***

நல்லது தளபதி :)

வருண் said...

**சி.பி.செந்தில்குமார் said...

நல்ல கருத்துக்கள்

அலெக்ஸா ரேட்டிங்கும் தரமான எழுத்தும் எதிர்திசையில் போறதை இப்போ எல்லாம் அழகா பார்க்க முடியுது!

முற்றிலும் உண்மை

15 December 2010 6:03 PM**

தங்கள் கருத்துக்கு நன்றி, செந்தில் குமார் :)

வருண் said...

***Blogger இரவு வானம் said...

:-)

16 December 2010 3:09 AM***

வாங்க இரவு வானம் :)

வருண் said...

***ராவணன் said...

வலையுலகில் எழுதுபவர்கள் இந்த so called எழுத்தாளர்களைவிட நன்றாக எழுதுகின்றார்கள்.

வலையுலகில் எழுதுபவர்களுக்கு எழுத்து மட்டுமே பிழைப்பு அல்ல.

அதனால், தங்களைத் தாங்களே பெர்ர்ர்ர்ர்ய எழுத்தாளர் என்று சொல்லிக்கொண்டு திரிவதில்லை.

16 December 2010 6:21 AM***

தங்கள் கருத்துக்கு ந்னறி, ராவணன். :)

வருண் said...

**பழமைபேசி said...

//நசரேயன் said...
// மொத்தத்தில் வலையுலகம் வர வர எழுத்தாளர்களை புதைகுழியில் தள்ளிக்
கொண்டுதான் போகிறது//

எனக்கு இல்லை
//

நெம்ப நாளைக்கப்புறம் தளபதி தலை தெரீது.... இமயமலைக்கு விமோசனம்?!

16 December 2010 7:22 AM**

தல மட்டுமா? மாற்றுக்கருத்தை தைரியமாக வைக்க ஆரம்பித்துவிட்டார் நம்ம தளபதி :)