கமலஹாசன் கொஞ்சம் ஹைப்பரா இருக்கார் போலயிருக்கு. திடீர்னு மன்மதன் அம்பு வெளியாகும் நேரம் வந்துவிட்டதால் நெறையாவே பேசுறார். பேச ஆரம்பிச்சதாலே பாதிக்கு மேலே உளறலாத்தான் வருது.
* எந்திரன் பட வெற்றிக்கு அதில் உள்ள் "காண்டெண்ட்ஸ்" காரணமல்ல! ரஜினி என்கிற நடிகரும், சன் நெட்வொர்க் செய்த மார்க்கட்டிங் ஸ்ட்ரெடெஜிதான் காரணம் என்கிறார். இதிலிருந்து இவர் சொல்ல வர்றதென்ன? ஷங்கரின் ட்ரீம் ப்ராஜெக்ட்டான இந்தப்படத்தில், ஷங்கர் ஒண்ணும் பெரிய "ஸ்டஃப்" வைக்கவில்லைனு சொல்றாரா? அதனால்தான் தான் இதில் நடிக்கலைனு சொல்றாரா? பாவம் ஷங்கர்! :(
* அப்புறம், எந்திரன் மார்க்கட்டிங் ஸ்ட்ரெடெஜியை மன்மதன் அம்பு ஃபாளோ பண்ணுமானு கேட்ட அதே கேள்விக்கு, நான் என்னுடைய சினிமா வாழ்க்கையில் யாரையும் மிமிக் பண்ணியதில்லைனு சொல்றார்.
இவர் யாரையும் மிமிக் பண்ணியதாக யாரும் இங்கே சொல்லவில்லை, நாளுக்கு நாள் மாறிவரும் மார்க்கட்டிங் ஸ்ட்ரட்டஜியை இவரும் செய்வாரா என்பதே கேள்வி.
தசாவதராம் ரிலீஸ் செய்தவிதம் நிச்சயம் சிவாஜி ரிலிஸ் செய்த ஸ்ட்ரேட்டஜிலதான் செய்தார்கள். பெரிய பொருட்செலவில் தயாரித்ததால் நெறைய ப்ரிண்ட் ரிலீஸ் செய்தார்கள்.
அதேபோல் மன்மதன் அம்பு சிங்கபூரில் ஆடியோ ரிலீஸ் செய்யப்பட்டதும், மலேசியாவில் எந்திரன் ஆடியோ ரிலீஸ் செய்த ஸ்ட்ரட்டஜிதான். சரி இதெல்லாம் "கோ இண்சிடெண்ஸ்"னு வச்சுக்கிட்டாலும், ஆமா இவரு சார்லி சாப்ளினை மிமிக் பண்ணாமல் என்ன பண்ணினார்?
15 comments:
இப்படியெல்லாம் கேள்வி வரும்னு தெரியாம சொல்லிட்டாருப்பா....... :-)))
எந்திரன் பட வெற்றிக்கு அதில் உள்ள் "காண்டெண்ட்ஸ்" காரணமல்ல! ரஜினி என்கிற நடிகரும், சன் நெட்வொர்க் செய்த மார்க்கட்டிங் ஸ்ட்ரெடெஜிதான் காரணம் என்கிறார்//
இதுதான் காரணம் அப்படின்னு உங்களுக்கும் தெரியும். எஸ்ஜே சூர்யா கூட விஞ்ஞானியா நடிச்சிருக்கலாம் எந்திரன்ல படம் ஓஓஓஓஓஒடுமா.
first tamil film released in more than 10 theatres at chennai is Vettaiyadu Vilayadu....
http://lh5.ggpht.com/_c9CdS4tPudc/TQEJNrHNVGI/AAAAAAAAAZ4/pupRYvFnoHc/VV.jpg
***Chitra said...
இப்படியெல்லாம் கேள்வி வரும்னு தெரியாம சொல்லிட்டாருப்பா....... :-)))
9 December 2010 9:35 AM***
ப்ளாக் வச்சிருக்கதுல ஒரே ஒரு பிரயோசனம் இதுபோல் கேள்வியை கேக்கலாம்ங்க, அம்புட்டுத்தான் :))
***குடுகுடுப்பை said...
எந்திரன் பட வெற்றிக்கு அதில் உள்ள் "காண்டெண்ட்ஸ்" காரணமல்ல! ரஜினி என்கிற நடிகரும், சன் நெட்வொர்க் செய்த மார்க்கட்டிங் ஸ்ட்ரெடெஜிதான் காரணம் என்கிறார்//
இதுதான் காரணம் அப்படின்னு உங்களுக்கும் தெரியும். எஸ்ஜே சூர்யா கூட விஞ்ஞானியா நடிச்சிருக்கலாம் எந்திரன்ல படம் ஓஓஓஓஓஒடுமா.***
நான் உண்மையிலேயே சொல்றேன், சன் மார்க்கட்டிங்னால எரிச்சலடைந்தது பலர்.
மதுரையிலெல்லாம் 50 நாட்களுக்கு மேலே எந்திரன் ஓடலைங்க. திடீர்னு எல்லாத்தியேட்டலையும் தூக்கிட்டாங்க. சிவாஜி ஓடுச்சு. டிக்கட் வெலையை கடைசிவரை எந்திரனுக்கு குறைக்கவே இல்லை.
சன் மார்க்கடிங்கை விட, எ வி எம் நல்லா செஞ்சாங்க! சன் ஒருவகையில் படத்தை ஒப்பேத்தினதுதான் மிச்சம்!
***சண்டியர் கரன் said...
first tamil film released in more than 10 theatres at chennai is Vettaiyadu Vilayadu....
http://lh5.ggpht.com/_c9CdS4tPudc/TQEJNrHNVGI/AAAAAAAAAZ4/pupRYvFnoHc/VV.jpg
9 December 2010 10:19 AM***
சரி, இவரைத்தான் எல்லாரும் ஃபாளோ பண்ணினாங்க்னு வச்சுக்குவோம். இவர்தான் எல்லாத்துக்கும் பிள்ளையார் சுழி போடுறவர்.
இவர் சார்லி சாப்ளினை மிமிக் செய்யாமல் என்ன செய்தார்?
நாயகனில், மார்லன் ப்ராண்டோவை மிமிக் செய்யலையா?
சன்ன விடுங்க ஆனா ரஜினி இல்லாட்ட்டி ஷோ கணக்குல கூட எந்திரன் ஓடிருக்காதுதானே?
***குடுகுடுப்பை said...
சன்ன விடுங்க ஆனா ரஜினி இல்லாட்ட்டி ஷோ கணக்குல கூட எந்திரன் ஓடிருக்காதுதானே?
9 December 2010 10:53 AM***
ரஜினி நிச்சயமா ஒரு பெரிய ஃபேக்டர்தாங்க. :) அதை நான் இல்லைனு சொல்லலங்க.
ஆனால் "ஷங்கர்" ரஜினி அளவுக்கு ஆந்திராவில் பெரிய ஃபேக்டர்.
இந்தியாவிலேயிலே மிகப்பெரிய பட்ஜெட் என்பதும் இன்னொரு பெரிய விசயம்தான். 150 கோடி இண்வெஸ்ட்மெண்ட் என்பது ரஜினி இருந்ததாலே வந்த தைரியம்தான்!
கமல்கூட அந்த சிட்டி ரோலை நல்லாத்தான் செய்திருப்பார். அவர் நடித்திருந்தால் படம் நல்லாத்தான் போயிருக்கும்னு நெனைக்கிறேன்.
கமல்கூட அந்த சிட்டி ரோலை நல்லாத்தான் செய்திருப்பார். அவர் நடித்திருந்தால் படம் நல்லாத்தான் போயிருக்கும்னு நெனைக்கிறேன்.
///
கண்டிப்பாக ஓடியிருக்காது என்பது என் எண்ணம்.
//குடுகுடுப்பை said...
சன்ன விடுங்க ஆனா ரஜினி இல்லாட்ட்டி ஷோ கணக்குல கூட எந்திரன் ஓடிருக்காதுதானே?
//
ஆக, டெக்சாசு மன்னன் சொல்ற மன்னன் இல்லாட்டி படம் ஓடி இருக்காதுன்னு அந்த மன்னன் நினைக்கிறது சரிதானே?
***Blogger பழமைபேசி said...
//குடுகுடுப்பை said...
சன்ன விடுங்க ஆனா ரஜினி இல்லாட்ட்டி ஷோ கணக்குல கூட எந்திரன் ஓடிருக்காதுதானே?
//
ஆக, டெக்சாசு மன்னன் சொல்ற மன்னன் இல்லாட்டி படம் ஓடி இருக்காதுன்னு அந்த மன்னன் நினைக்கிறது சரிதானே?
9 December 2010 12:40 PM***
நான் ட்க்சாஸ் மன்னர் கருத்திலிருந்து வேறு படுகிறேன். கமல் செய்திருந்தாலும் இந்தப் படம் ஓடித்தான் இருக்கும். :)
//சார்லி சாப்ளினை மிமிக் பண்ணாமல் என்ன பண்ணினார்//
புன்னகை மன்னன்:))?
***ராமலக்ஷ்மி said...
//சார்லி சாப்ளினை மிமிக் பண்ணாமல் என்ன பண்ணினார்//
புன்னகை மன்னன்:))?
10 December 2010 5:59 AM***
ஆமங்க, நமெக்கெல்லாம் ஞாபகம் இருக்கு, இவர் மட்டும் மறந்துட்டார் போல! :) :(
நியூயார்க் மன்னரைக் காணலியே? என்ன செய்ய??
***Blogger பழமைபேசி said...
நியூயார்க் மன்னரைக் காணலியே? என்ன செய்ய??
10 December 2010 10:44 AM**
தளபதி எப்போ மனனரானாரு? :)
Post a Comment