காந்தி, என்னதான் நம்ம தேசத் தந்தையாக இருந்தாலும் அவருக்கு இந்து மதப் பற்று அதிகம். காரணம் என்னனா, காந்தி , பார்ப்பணர் இல்லை என்றாலும் ஒரு ஹை க்ளாஸ் இந்து! காந்தியால் நெறைய சாதிக்க முடிந்ததற்கு அது ஒரு பெரிய காரணம், காந்தி கீழ் சாதியிலிருந்து வந்தவரில்லை! இப்போ காந்தியே ஒரு தாழ்த்தப் பட்டவரா பிறந்து இருந்தால்? அவர் போராடி இவ்வளவு மேலே வந்திருப்பதுக்கு எல்லாம் சாண்ஸே இல்லை!
காந்தி உயர் சாதியில் பிறந்தது அவர் தப்பில்லைதான்! ஆனால் அவர் தாழ்த்தப்பட்டவரா இருந்து இருந்தால் நிச்சயம் இந்துமதப் போதகரா இருந்து இருக்க மாட்டார்! இருந்து இருக்க முடியாது! இந்து மதத்தை வெறுத்து புத்தமதம் இல்லைனா இஸ்லாம், இல்லைனா க்ரிஷ்டியனாக ஆகி இருப்பார்! காந்தி மேலே எனக்கு நெறைய மரியாதை எல்லாம் உண்டு. அஹிம்சை முறையில் போராட்டம் நடத்தலாம் என்று உலகத்துக்கே கத்துக் கொடுத்தவர் காந்தி! இருந்தாலும் உயர் சாதியில் பிறந்ததால் அவருக்கு நெறைய சாதகங்கள் இருந்தன. அப்புறம் காந்தி பொறந்தது குஜராத்! தமிழ்நாடு இல்லை! தமிழ்நாட்டில் பொறந்து இருந்தா ஒரு வேளை வீணாப்போயி இருப்பார்!
அடுத்து நம்ம ஜீனியஸ் அம்பேத்கார் பற்றி பார்ப்போம்! அம்பேத்கார் பிறந்தது மத்யபிரதேஷ்! ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்து இவர் இந்த அளவுக்கு மேலே வந்திருக்கார்னா, இது எவ்வளவு பெரிய விசயம்னு சாதி வெறிபிடித்து அலையும் தமிழ்நாட்டில் பிறந்த எனக்கு நல்லாவே தெரியும்! இது உலக அதிசயங்களில் முதல் அதிசயமாக வைக்கனும்! என்னைத் தவறா புரிஞ்சுக்காதீங்க! அதாவது ஜீனியஸ்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்தததை நான் சொல்லவில்லை! தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்த ஒரு ஜீனியஸ், போராடி வளர்ந்து நாடறிய உலகறிய முன்னேறியதை சொல்லுகிறேன்! அவருக்கு எவ்வ்ளவு தன்னம்பிக்கை இருந்து இருக்கனும்? ஒரு வேளை அம்பேத்கார் தமிழ் நாட்டில் பொறந்து இருந்தால்? நெனைக்கவே எனக்கு பயம்மா இருக்கு! நம்ம ஊர் உயர்சாதி முட்டாள்களால் அம்பேத்கார் படித்து மேலே வரவிடாமல் சுத்தமாக தடுத்து இருக்கலாம்! அவர் சிந்தனைகளை, முன்னேற்றத்தை, படிப்பறிவை வளர்க்கவிடாமல் சாதி வெறிபிடித்த தமிழர்களால் அழிக்கக் பட்டுக்கூட இருக்கலாம்! தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அந்தக்காலகட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் அடைந்த இன்னல்களுக்கு அளவே இல்லை! அம்பேத்காரை மட்டும் விட்டு வைத்து இருப்பார்களா என்ன?
பார்ப்பணர்கள் பலரிடம் எனக்குப் பிடிக்காத விசயம் ஒண்ணு இருக்கு. எதுக்கெடுத்தாலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் ரிசெர்வேஷன் பத்தி மட்டும் வயிறெரியிவார்கள்! நாங்க தீண்டாமையை வளர்த்தோமே ஒழிய, தாழ்த்தப்பட்டவர்களை எந்தவையிலும் "ஃபிசிக்கல் அப்யூஸ்" பண்ணவில்லை என்பார்கள். அதுபோல் செய்தவர்களெல்லாம் ஹைக்க்ளாஸ் திராவிட முட்டாள்கள்தான் என்பார்கள். அது ஓரளவுக்கு உண்மைதான். ஆனால் பார்ப்பணர்கள் என்னைக்காகவது தாழ்த்தப்பட்டவர்களுக்காக, அவர்கள் பட்ட இன்னல்களுக்காக அழுதிருக்காங்களா? அவங்க படுகிற இன்னல்களைப் பத்தி கவலையாவது பட்டு இருக்காங்களா? இல்லை அவர்களுக்குகாக இவங்க கடவுளிடம் பூஜை செய்து இருக்காங்களா? அவங்களும் மனிதர்கள்தான், ஏன் அவர்களை இவ்வளவு கீழ்த்தரமா ட்ரீட் பண்ணுகிறோம்னு யோசிக்கயாவது செய்தார்களா? அந்த அளவுக்கு பார்ப்பணர்களுக்கு மூளை இருந்ததா? இல்லை திறந்த மனது இருந்ததா? னு பார்த்தால் கெடையவே கெடையாது என்றுதான் தோனுது. அதுபோல் நற்சிந்தனை கொண்ட பாரதியையே அக்ரஹாரத்தைவிட்டு தள்ளி வைத்தவர்கள் இவர்கள்! இவங்க முன்னேற்றம், இவங்க கல்வியறிவு, இவங்க மதம், இவங்க கடவுள் நம்பிக்கை இதில்தான் இவர்கள் முழு கவனம் செலுத்தினார்கள். தாழ்த்தப் பட்டவர்களையோ, அவர்கள் பட்ட இன்னல் களையோ பற்றி பற்றி இவங்க கவலையே பட்டதில்லை!
பெரியார்கூட தாழ்த்தப்பட்டவர்களுக்காக ரொம்ப வரிந்துகட்டிக்க்கொண்டு வந்து "ஹை க்ளாஸ்" திராவிட முட்டாள்களை கண்டித்தாரா என்பது தெரியவில்லை!
அம்பேத்கார்கள் நம் தமிழ்நாட்டில் உருவாகி இருக்க முடியுமா? னு யோசித்தால் ... நிச்சயமாக அந்த காலகடத்தில் முடியாத ஒரு சூழல்தான் இருந்ததுனு தோனுது. நிச்சய்ம அம்பேத்கார் போன்ற ஜீனியஸ்கள் தமிழ் நாட்டில் தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து பிறகு மறைந்தும்தான் இருப்பார்கள். அவர்கள் அம்பேத்கார்போல் மேல் வந்து பெரிய ஆளாகததற்கு காரணம், தாழ்த்தப்பட்டவர்களை நசுக்கிய நம் உயர்சாதி தமிழர்கள்! நிச்சயம் இதில் இவர்கள் பெரிய பங்குபெறுவார்கள்! தீண்டமையை கண்டுபிடித்து, கடைபிடித்து, வளர்த்த பார்ப்பணர்களும் "இண்ணொசண்ட்" எல்லாம் கெடையாது.
ரொம்ப யோசித்தால், அறியாமைதான் (நம்ம முட்டாள்களா இருந்து இருக்கோம்) எல்லாத்துக்கும் காரணம்னு சொல்லிட்டுப் போகலாம்! இல்லைனா இருக்கவே இருக்காரு நம்ம கடவுள். அவர் என்னத்த கிழிச்சாரு தாழ்த்தப்பட்டவர்களை இந்த முட்டாள்கள் சீரழிக்கும்போது?
குறிப்பு: அம்பேத்கார் திரைப்படம் இன்னும் பார்க்கவில்லை! அந்த திரைப்படத்தைப் பத்தி யோசிக்கும்போது வந்த சிந்தனைகளின் தொகுப்புதான் இது!
15 comments:
நிறைய யோசிக்கிறீங்க ...... ம்ம்ம்ம்.......
அயோத்திதாச பண்டிதர் என்று ஒருவர் தமிழகத்தில் உருவானார். கூகுளில் தேடிப்பாருங்கள்
படம் பார்க்கமலே இவ்வளவா.. ?.
வெயிட்டிங்கு ஃபார் சினிமா விமர்சனம் டூ..
//தீண்டமையை கண்டுபிடித்து, கடைபிடித்து, வளர்த்த பார்ப்பணர்களும் "இண்ணொசண்ட்" எல்லாம் கெடையாது.//
இன்னும் அவாள் பேசிக்கிறத கேட்டா.:)
f
நல்ல பதிவு!
***Chitra said...
நிறைய யோசிக்கிறீங்க ...... ம்ம்ம்ம்.......
7 December 2010 4:54 PM ***
வாங்க சித்ரா. எப்போவாவது இப்படியும் யோசிக்கிறது! :)
*** கோவி.கண்ணன் said...
அயோத்திதாச பண்டிதர் என்று ஒருவர் தமிழகத்தில் உருவானார். கூகுளில் தேடிப்பாருங்கள்
7 December 2010 5:32 PM***
வாங்க, கோவி! கூகிள் செய்து பார்த்ததில் 2007 ல உங்க பதிவு ஒண்ணு வந்தது. இன்னும் நான் கவனமாக அதை வாசிக்கவில்லை! வாசிக்கிறேன். நன்றி :)
****Blogger பயணமும் எண்ணங்களும் said...
படம் பார்க்கமலே இவ்வளவா.. ?.
வெயிட்டிங்கு ஃபார் சினிமா விமர்சனம் டூ..
//தீண்டமையை கண்டுபிடித்து, கடைபிடித்து, வளர்த்த பார்ப்பணர்களும் "இண்ணொசண்ட்" எல்லாம் கெடையாது.//
இன்னும் அவாள் பேசிக்கிறத கேட்டா.:)
7 December 2010 5:42 PM***
தாழ்த்தப்பட்டவர்களுக்கு தீங்கிழைத்ததில் எல்லோருக்கும் பங்கு உண்டுங்க. ஒரு சிலர் அவங்க தப்பை ஏற்றுக்கொள்வதற்கு பதில் இன்னொருவர் தப்பை சுட்டிக் காட்டுவாங்க!
***Blogger Robin said...
நல்ல பதிவு!
7 December 2010 7:21 PM***
நன்றி, ராபின் :)
தளபதி, அவருக்குன்னு எதாவது ஒரு கருத்து வெச்சி இருப்பாரா இருக்கும்.
***பழமைபேசி said...
தளபதி, அவருக்குன்னு எதாவது ஒரு கருத்து வெச்சி இருப்பாரா இருக்கும்.
8 December 2010 7:35 AM***
ஆமா தளபதி ரொம்ப சமத்து (ஷை டைப்பும் கூட), வாயைத்திறந்து எதுவும் வம்பில் மாட்டிக்க மாட்டார் :)
நல்ல பதிவு, முற்றிலும் ஒத்துப்போகச்சொல்லும் பதிவுதான்.
***குடுகுடுப்பை said...
நல்ல பதிவு, முற்றிலும் ஒத்துப்போகச்சொல்லும் பதிவுதான்.
9 December 2010 10:23 AM **
நன்றிங்க, கு கு! :)
நல்ல பதிவு வருண்!!! தமிழகத்தில் அப்படி யாருமில்லைதான். அம்பேத்கார்கள் அதிசயமானவர்கள்.
எல்லா இடத்திலும் பிறப்பதில்லை அவர்கள்!!!
***இனியா said...
நல்ல பதிவு வருண்!!! தமிழகத்தில் அப்படி யாருமில்லைதான். அம்பேத்கார்கள் அதிசயமானவர்கள்.
எல்லா இடத்திலும் பிறப்பதில்லை அவர்கள்!!!
10 December 2010 7:48 AM**
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, இனியா! :)
Post a Comment