"விவிலியக் கதைகள், தேவாலய வடிவமைப்பு, சிற்பம், ஓவியம் ஆகியவற்றில் ஆணின சின்னங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வெளிபட ஆரம்பித்தன."
"பெண்கள் சுலபமாய் மயங்கி மடியில் விழுவார்கள் என்று ஆண்கள் கணக்கிட, பெண்களோ, இதற்கு ஒரு படி மேலே போய் யோசிக்க ஆரம்பித்தார்கள்."
இவர் எழுதற விதம், "பெண்கள் இப்படி இருந்து இருக்கலாம்", ஆணகள் இப்படி யோசித்து இருக்கலாம்" என்று இல்லாமல், ஒரு மாதிரியான தியரி அல்லது ஸ்பெக்குலேஷனை ஏன் இப்படி உறுதியாக நடந்ததுபோல வார்த்தைகள் போட்டு அதாவது "ஆரம்பித்தன" ஆரம்பித்தார்கள்" போன்ற வார்த்தைகள் போட்டு எழுதுறாருனு புரியலை.
இவர் எழுதுவது கதையல்ல! கட்டுரைதானே? நான் அந்தக் காலத்தில் வாழவில்லை, இவரும் வாழ்ந்திருக்கமாட்டார். வாழ்ந்தவர்கள் எழுதிய நாட்குறிப்பும் நம்மிடம் இல்லை என நம்புகிறேன். ஆக இவர் எழுதுவது ஒரு மாதிரியான தியரிதான். அவைகள் உண்மையாக இருக்கனும்னு அவசியம் இல்லையே?
இவர் எழுதுகிற எழுத்து நடை, ஏதோ இதையெல்லாம் இவர் கண்கூடாகப் பார்த்தது போல இருக்கு. எப்படி இவரால் இதுமாதிரி "கதை" சொல்ல இயலும்னு எனக்கு குழப்பம்!
I could not resist to make this response when I read that "ஆண்குறி சின்னங்கள்"
நான் மட்டும்தான் இப்படி உணருகிறேனா? இல்லை என்னைப்போல் உணருகிறவர்கள் யாரும் இருக்காங்களா?
15 comments:
Varun
I also had the same feeling while I read that article. In that she claims even missiles are designed on that basis. That is wrong, physics is behind that design. May be spiritual signs designed on that basis.
Sankar.
Thanks, Shankar, for sharing your thoughts. IMHO, there has to be a BIG "may be" everywhere she speculates. Otherwise I am afraid she is misguiding the innocent readers! :(
அந்தக் காலத்தில் நடந்தால் உறுதியாக எழுதக் கூடாதா என்ன? கற்றறிந்த மருத்துவருக்கு, அக்காலத்தில் நடந்தவைகளை ஆராய்சிமுடுபுகளாலும், நூல்களின் ஊடாகவும் அறிந்திரிக்க கூடும்.
இராமர் இலங்கைக்கு சென்றார் என்று தான் படிக்கிறோம். இராமர் இலங்கைக்கு போயிருக்கலாம் என்றாப் படிக்கிறோம். இராமர் சென்றதை நீங்களோ நானோ பார்த்தது உண்டா...................... இதைப் போலத் தான் அதுவும். கதையில் மட்டும் தான் உறுதியாக கூற வேண்டும். கட்டுரையில் உறுதியில்லாமல் கூற வேண்டும் என நினைப்பது முட்டாள்தனம்
***ANKITHA VARMA said...

23 December 2010 3:27 PM***
ராமர் காட்டுக்குப்போனதா எழுதியது கதை (இதிகாசம்). அது கட்டுரை அல்ல! You need to learn the difference here!
அதேபோல் வால்மீகி ஒரு மனநல மருத்துவரோ விஞ்ஞானியோ அல்ல!
டாக்டர் ஷாலினி ராமாயணம் போல ஒரு ஃபிக்ஷன் கதை எழுதினால் எனக்கு பிரச்சினை இல்லை. A theory should never have been written like this. It is really wrong! DOT
நல்லா சொன்னீங்க வருண் .
படிக்கும் போது எனக்கும் உறுத்தலாக இருந்தது. நீங்கள் சொன்ன பிறகுதான் எழுத்து நடைதான் உறுத்தல் என்பது புரிகிறது.
நன்றி.
***நண்டு @நொரண்டு -ஈரோடு said...
நல்லா சொன்னீங்க வருண் .
23 December 2010 8:06 PM **
நன்றிங்க, நண்டு :)
ஏதோ சொல்லனும்னு தோனுச்சுங்க! :)
***Blogger மா சிவகுமார் said...
படிக்கும் போது எனக்கும் உறுத்தலாக இருந்தது. நீங்கள் சொன்ன பிறகுதான் எழுத்து நடைதான் உறுத்தல் என்பது புரிகிறது.
நன்றி.
24 December 2010 4:42 AM***
வாங்க சிவக்குமார்! :0
இந்தப்பதிவு போட்டதாலதான் நீங்கல்லாம் இருக்கீங்க, நான் மட்டும் தனியா இல்லைனு உணர முடிந்ததுங்க, சிவக்குமார்! :)
மற்ற விஷயங்களை ஆணித்தரமாக எழுதிவிட்டுப், “பெண்கள் அதைப் பொருட்படுத்துகிறார்களோ என்னமோ” எனத் தெளிவில்லாமல் எழுதியிருப்பதைக் கவனித்தீர்களா”வருண்” அவர்களே?
அதை மட்டும் தெளிவில்லாமல் அவர் எழுதியிருப்பதைக் கவனித்தீர்களா?
//அவ்வளவு ஏன், இன்று, ”வல்லரச நாடாக்கும்” என்று தன் பராக்கிரமத்தை காட்டிக்கொள்ளும் அரசுகள் உருவாக்கும் ராக்கெட், அணுஆயுதம் மாதிரியான வஸ்துக்கள் எல்லாம் மிக வெளிப்படையாகவே ஆணினச்சின்ன வடிவமைப்பில் இருப்பதை காணலாம். //
இது சரியல்ல என நான் குறிப்பிட்ட கமென்டை வெளிடவில்லை.
ராக்கெட், குண்டுகளின் வடிவத்துக்கு எரொ டைனமிக்ஸ் தியரி தான் காரணம். ஆண்குறி போட்டி அல்ல.
நம் ராக்கெட் விஞ்ஞானி அப்துல் கலாம் பெண்ணை கவர ராக்கெட்டை ஆண்குறியாக வடிவமைத்தாரா?
மேலும் ராக்கெட் வடிவமைக்கும் டி அர் டி ஓ (DRDO)பல பெண் விஞ்ஞானிகளும் உள்ளனர்.
அவர்களுக்கும் பெண்க்ளை கவரும் நோக்கம் இருக்கிறதா?
***லதானந்த் said...
மற்ற விஷயங்களை ஆணித்தரமாக எழுதிவிட்டுப், “பெண்கள் அதைப் பொருட்படுத்துகிறார்களோ என்னமோ” எனத் தெளிவில்லாமல் எழுதியிருப்பதைக் கவனித்தீர்களா”வருண்” அவர்களே?
24 December 2010 6:31 PM
லதானந்த் said...
அதை மட்டும் தெளிவில்லாமல் அவர் எழுதியிருப்பதைக் கவனித்தீர்களா?
24 December 2010 6:33 PM ***
ஆணித்தரமாக அவங்க எழுதுறதே, அவர்களுடைய அறியாமைனு தான் தோனுதுங்க. மத்தபடி நான் ரொம்ப உள்ள நொழையவில்லை! இதுபோல் எழுதும் எழுத்து என்னை அவ்வளவு கவர்வதில்லை! :(
***Vinoth said...
//அவ்வளவு ஏன், இன்று, ”வல்லரச நாடாக்கும்” என்று தன் பராக்கிரமத்தை காட்டிக்கொள்ளும் அரசுகள் உருவாக்கும் ராக்கெட், அணுஆயுதம் மாதிரியான வஸ்துக்கள் எல்லாம் மிக வெளிப்படையாகவே ஆணினச்சின்ன வடிவமைப்பில் இருப்பதை காணலாம். //
இது சரியல்ல என நான் குறிப்பிட்ட கமென்டை வெளிடவில்லை.
ராக்கெட், குண்டுகளின் வடிவத்துக்கு எரொ டைனமிக்ஸ் தியரி தான் காரணம். ஆண்குறி போட்டி அல்ல.
நம் ராக்கெட் விஞ்ஞானி அப்துல் கலாம் பெண்ணை கவர ராக்கெட்டை ஆண்குறியாக வடிவமைத்தாரா?
மேலும் ராக்கெட் வடிவமைக்கும் டி அர் டி ஓ (DRDO)பல பெண் விஞ்ஞானிகளும் உள்ளனர்.
அவர்களுக்கும் பெண்க்ளை கவரும் நோக்கம் இருக்கிறதா?***
வினோத்,
மேலே 1 பின்னூட்டத்தில் வாசகனும் இதையே சொல்லியிருக்கார் பாருங்க!
உங்க மாற்றுக்கருத்தை (பின்னூட்டத்தை)வெளியிட்டால் என்ன? குடிமுழுகியா போய்விடும்?
என்னவோ போங்க!
உங்கள் கருத்து மிகவும் சரியானது, மட்டுமல்ல, இது முக்கியமானதும் கூட. இதுவரை எங்கும் பின்னூட்டமிடாத நான் இங்கு இடுவதற்கு காரணம், இந்த போக்கு அதிகமாகி வருவதால் தான்.
பத்திரிக்கைகள் இவ்விசயத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி வருகின்றன.
இது உதவி ஆசிரியர்களின் வேலையோ என சந்தேகிக்கிறேன்.
எது நடந்தது எது நடந்திருக்கக்கூடும் வித்தியாசம் படிப்பவர்கள் உணரும் விதமாக எழுத வேண்டும். பலர் இவ்வாறு செய்வதில்லை. மிக பிரபல எழுத்தாளர்கள் கூட செய்யத்தவறும் போக்கு வருத்தத்திற்குரியது.
இதில் காலம் பற்றிய கேள்வியில்லை, செய்தி உறுதி செய்யப்பட்டதா இல்லையா என்பதுதான்.
***Arasu T said...

27 December 2010 10:04 PM***
தங்கள் கருத்துக்கு நன்றி, திரு அரசு அவர்களே!
Post a Comment