ஒருவர் அவருடைய ஊர், நாடு, கண்டம் எதாயிருந்தாலும் பரவாயில்லைனு விட்டுவிட்டு அவர் தன் மதத்தை சேர்ந்தவர் என்பதால், தன் ஊருக்கு எதிராக, தன் நாட்டுக்கு எதிராக அவர் செய்த "தவறு"களை நியாயப் படுத்த முயற்சித்தல், அவருக்கிழைத்த "அநீதி"யை எடுத்து விமர்சித்தல், அவருக்காக வரிந்துகொண்டு வருதல், என்கிற மத அடிப்படையான செயலை தவறு என்பதுபோல்தான்
நாம் வாதிடுகிறோம். ஆமாம், யாரு இந்த
நாம்? பொதுநோக்குப் புத்தியுள்ள, நம்மைப்போல நல்லவர்கள்! :-)
* மத உணர்வு என்பது நல்லதல்ல என்கிறோம்!
* மதத்தால் ஒன்றுபடுவது தவறென்கிறோம்!
* ஒருவனே தேவன் என்றால் எல்லாமதத்தவரும் இறைவன் குழந்தைகள்தானே? என்கிறோம்
* "ஐயா வருண்! நான் அப்படியெல்லாம் சொல்வதில்லை" என்றால் நீங்கள் இங்கே விமர்சிக்கப்படவில்லை! தயவு செய்து இதை கண்டுக்காதீங்க!
இறைவன் ஒருவனே என்றால், எல்லோரும் அந்த இறைவனை வணங்கவே, திருப்திப்படுத்தவே பல மதங்களும் உருவாக்கப்பட்டது என்கிற போதும் தன் மதம்தான் உயர்ந்தது என்று சொல்வதுகூட இறைவனுக்குக்கூட நகைப்பை உண்டாக்கலாம்.
நாம் இப்படி சொல்வதை
* "மத உணர்வு கொண்டர்வர்கள்",
* "தன் மதம்தான், வழிதான் சரியானது என்று மதத்தால் ஒன்று சேர்பவர்கள்",
"இந்த மதவுணர்வு தவறானது என்கிற நம்முடைய நிலைப்பாட்டை" ஏற்றுக்கொள்ளத் தயங்குறாங்க. மத உணர்வில் தவறென்ன? என்கிறார்கள். இருந்தாலும் இவர்கள், தம்முடைய இந்த நிலைப்பாடை "சரி" என்று வெளிப்படையாக வாதிடுவதில்லை!
ஏன் மத உணர்வு நல்லதல்ல என்பதற்கு சில காரணங்கள் நாம் சொல்லலாம்.
* சூழ்நிலை 1) நீங்க வக்காலத்து வாங்கும் அவர் அயல் நாட்டவராக இருக்கும்போது, அந்த நாடு நம் நாட்டுக்கு எதிரியாக இருக்கும்போது, உங்க மத உணர்வு, உங்களை "தேச துரோகி" யாக்குதுபோல் ஒரு சூழ்நிலை உருவாகும் ஒரு அபாயம் இருக்கு!
* சூழ்நிலை 2) மதச்சார்பற்ற நாட்டில் வாழும் நீங்க நாட்டுப்பற்று உள்ளவராக இருக்கனும்னு எதிர்பார்க்கப்படுது. மத அடிப்படையில் நீங்கள் போகும்போது உங்கள் நாட்டுப்பற்று கேள்விக்குறியாகிற ஒரு அபாயமும் இருக்கு.
இப்படியெல்லாம் பிரச்சினைகள் இருக்குனு சொல்லி
நாம் விவாதிக்கலாம். ஆனால்.. என்ன ஆனால்.. இதை எப்படி "நியாயப் படுத்தலாம்" னு பிறகு பார்ப்போம்.
அதாவது மதப்பற்று உள்ளவங்க,
* சூழ்நிலை 3) சூழ்நிலை 4) என்று பலவகைகளை காட்டி இதுபோல் சூழ்நிலைகளில் என்னுடைய மதவுணர்வு தப்பில்லை என்று வாதிடுவார்கள்
************************************
இன உணர்வு பத்தி பேசுவோம்..
இங்கே நாம் அனைவரும் தமிழர்கள்! ஒரே இனம்!
சரி, நாம், " தமிழா! இன உணர்வு கொள்!" னு சொல்றோம். நாம் திராவிடர்கள் எல்லாம் ஒண்ணு சேரனும் என்கிறோம்!
சில நேரங்களில் பார்ப்பனர்களை ஆரியர்கள் என்று சொல்லிப் நம்மைவிட்டுப் பிரிக்கிறோம்!
காரணம்?
* வீடு வாடகைக்கு விடப்படும்! பார்ப்பனர்களுக்கு மட்டும்! (இதுபோல் விளம்பரம்)
* மாமிசம் சாப்பிடுறவா ஆத்துக்கெல்லாம் எப்படி போகுறது? அவா ஆத்துல கவிச்சு வாடை இல்ல அடிக்கும்ண்ணா! (இதுபோல் எண்ணங்களுடன் திரியிறவங்க)
இவர்கள்தான் இதற்கு காரணம்!
சரி இனவுணர்வு பத்தி தொடருவோம்..
இனவுணர்வு மட்டும் சரியா? ஏன் சரி??
* அ) ஒரு பிரச்சினை....அதில் நம் மொழிபேசுபவர் தவறாக நடக்கிறார். மாற்று மொழி பேசுபவர் ஒரு அப்பாவி. நியாயம் நம் இனத்தவர், தமிழரிடம் இல்லை. பிறமொழி பேசுறவர் சொல்வதில், செய்வதில்தான் நியாயம் இருக்கு. இந்த சூழலில் இன உணர்வு கொள்ளனுமா? இல்லைனா நியாயமாக நல்லவரான பிறமொழி பேசுறவர் பக்கம் சேரனுமா?
* ஆ) ஒரு பார்ப்பனர் வீட்டு அப்பாவி பெண்ணிடம் ஒரு திராவிடர் தவறா நடந்துகொள்கிறார். அந்தப்பொண்ணு பாவம், எந்தத் தப்பும் செய்யவில்லை!
இந்த சூழலில் தமிழா நீ "இன உணர்வு" கொள்வியா? பாவம் தவறு செய்யாத ஒருவருக்கு கை கொடுப்பியா?
நம்ம பொதுக்கட்டுரை எழுதுறோம். பலரையும் பலவாறு விமர்சிக்கிறோம். தமிழர் என்கிறோம். திராவிடர் என்கிறோம். இந்தியர் என்கிறோம். இன உணர்வு கொள் என்கிறோம். நாட்டுப்பற்று வேண்டும் என்கிறோம். ஆனால் தனிப்பட்ட ஒரு மனிதனாக ஒரு சூழ்நிலையில் எப்படி நடக்கிறோம்? என்பது வேறு விசயம்.
அதாவது தனிப்பட்ட ஒரு மனுஷனாக
* மேலே உள்ள சூழ்நிலை அ) ல நான் அந்த மாற்று மொழி பேசுபவனுக்குத்த்தான் ஆதரவு கொடுப்பேன்! நீங்க எப்படி வேணா இருந்துட்டுப் போங்க!
* மேலே உள்ள சூழ்நிலை ஆ) ல நான் அந்த அப்பாவிப் பெண்ணுக்குத்தான் ஆதரவு கொடுப்பேன்.
அப்படி நான் செய்வதால் இப்போ நான் தமிழ் இன உணர்வு மொழியுணர்வு இல்லாதவனாகவும். திராவிட உணர்வு இல்லாதவனாகவும் ஆகிறேன். ஆமாம் நான் இனி துரோகிதான்.
முடிவுரை:
இங்கேதான் நீங்க இன உணர்வுனு நாம் என்ன சொல்ல வருகிறோம் என்பதை புரிந்து கொள்ளனும்.
* நாம் நியாயமான பிரச்சினைக்குத்தான் நம் இன உணர்வை, மொழி உணர்வை காட்டனும்.
* தமிழனுக்கு அநியாயம் நடக்கும்போதுதான் நாம் தமிழா இன உணர்வு கொள் என்கிறோம்!
* தீண்டாமை, உயர்சாதி என்று வரும்போதுதான் திராவிடன் என்று நம்மை ஒன்று சேர்க்கிறோம்.
* தமிழ் மொழியை இகழும்போதுதான் நாம் இனவுணர்வு கொள்ளனும்!
அதேபோல், மதவுணர்வு கொள்பவர்களும் இதேபோல் நாங்க எம்மதத்தில் அப்பாவிகள் பாதிக்கப் படும்போதுதான் எம்மதத்தவருக்கு குரல் கொடுக்கிறோம். இதில் தவெறன்ன? என்று கேட்டால், அவர்களுக்கு நம் பதிலென்ன?
நீங்களே சொல்லுங்கள்! :)
நன்றி, வணக்கம்!