எனக்கு ஜானகிராமன் எழுத்து பிடிக்கும்! இதை சொல்லீட்டு நளபாகம் நாவல் பத்தி பச்சையாக "அனலைஸ்" பண்ணப்போறேன். ஆமா, என்ன ப்ளாட் இந்தக் கதையில்? ஒரு வரில ..அசிங்கமா சொல்லலாம், "மாமியாரே மருமகளை இன்னொருவனுக்கு கூட்டிக்கொடுக்கிறாப்பிலே எழுதியிருக்காரு" மரை கழண்டு போயி இந்த ஆளு னு!
மாமியார், ரங்கமணிக்கு (வீட்டு எஜமானி) குழந்தை பாக்கியம் கெடையாது, கொஞ்ச வயதிலேயே விதவையானவள்! சிறுவயதிலேயே ஏதோ கலயாணம்னு பண்ணி வச்சு, ஒரு காம சுகமும் அனுபவிக்காமல் வாழ்ந்தவள், வாழ்ந்துகொண்டு இருப்பவள். இப்போ கதையில் மாமியார் ரங்கமணி ஒரு நடுவயது விதவை!
அந்த வீட்டுக்கு ஏதோ சாபம். அந்த வீட்டில் குழந்தை பொறந்து 100 ஆண்டுகளுக்கு மேலாகுது! ரங்கமணிக்கு தான் பெற்ற குழந்தை இல்லை என்பதால் ஒரே ஒரு வளர்ப்பு மகன் (சுவீகார புத்திரன்) மட்டும்தான் இப்போ அந்த வீட்டில் உண்டு! ஆனால் அந்த வீட்டில் ரங்கமணிதான் மஹாராணி! ரங்கமணி பேச்சை எதிர்த்துப் பேசுமளவுக்கு வளர்ப்பு மகனுக்கு தைரியமோ சுயமரியாதையோ கெடையாது.
ரங்கமணிக்கு ஒரே பெரிய பிரச்சினை என்னனா குழந்தை இல்லாதது! சரி தனக்குத்தான் குழந்தை பாக்கியம் இல்லாமப்போச்சு! வளர்ப்பு மகனுக்காவது குழந்தை பிறக்கனும்னு ஒரு அழகான மருமகளை பங்கஜத்தை (மாட்டுப்பெண்ணை) கட்டி வைத்து அந்த வீட்டில் ஒரு பேரப்பிள்ளையைப் பார்க்கனும்னு ஆவலுடன் இருப்பாள்! இருவருக்கும் எந்தத் தொந்தரவும் இல்லாமல் கோயில் குளம்னு போய்க்கொண்டு தன்னாலான உதவி செய்து ஒரு அழகான குழந்தையை மருமகள் பங்கஜம் பெத்துத் தருவாள்னு ஏங்கிக்கிட்டு இருப்பாள் ரங்கமணி!
ஆனால் வளர்ப்பு மகனுக்கும் குழந்தை பிறக்காது! மேலும் வளர்ப்பு மகன் ஒரு வினயமில்லாத அப்பாவி! காதலிலும் சரி, காமத்திலும் சரி, சுவீகார புத்திரன் "சரியில்லை" என நம்புவார் அம்மா ரங்கமணி.
இப்படி "போர்" அடிச்சுப் போயி, பேரக்குழந்தை பிறக்காத விரக்தியுடன் "யாத்திரை" ஒண்ணு போவாள் ரங்கமணி. அங்கே இளம் வயதில் உள்ள ஒரு வித்தியாசமான ஒரு நபரான, சமையல்க்காரன் "காமேஸ்வரனை" சந்திப்பாரு! காமேஸ்வரனை, ரங்கமணிக்கு ரொம்ப பிடிச்சுப் போயிடும்! காமேஸ்வரனை எல்லோருக்குமே பிடிக்குமளவுக்கு ஜானகி ராமன் எழுதி இருப்பாரு!
அதே யாத்திரை போகும்போது, குழந்தையில்லாத மருமகள் பங்கஜம், மகன் (துரை?) இருவருடைய ஜாதகத்தையும் ஒரு பிரபல ஜோஸ்யர்ட்ட கொடுத்து அலசி ஆராயச்சொல்லுவாள் ரங்கமணி..
அந்த பிரபல ஜோஸியர் ரங்கமணி வாயில் சர்க்கரை அள்ளிப்போடுவார்!
* பங்கஜத்துக்கு குழந்தை பாக்கியம் உண்டு!!!
ஆனால் அடுத்து வளர்ப்பு மகனுடைய ஜாதகத்தைப் பார்த்து, ஒரு பெரிய குண்டையும் தூக்கிப் போடுவாரு!
* மகன் துரை (? பெயர் சரியா என்னனு தெரியலை) க்கு குழந்தை பாக்கியம் இல்லவே இல்லை!
சந்தேகமே இல்லாமல் ஜோஸ்யர் சொல்லிப்புடுவாரு!
ஆனால் இந்த மாமியார், ரங்கமணி, இந்தக்கதையின் நாயகி, ஒரு மாதிரியான "sick woman"! மருமகளுக்கு புத்திர பாக்கியம் இருப்பதால் எப்படியாவது அந்த வீட்டில் ஒரு குழந்தை பிறந்தே ஆகனும்னு ஒரு முடிவுக்கு வந்துவிடுவார். அதுக்காக மாமியார் ரங்கமணி என்ன பூஜைனாலும், எதுவேணுமானாலும் செய்யத் தயார்! ஆமா! எதுவேணுமானாலும்!
தான் சந்தித்த காமேஸ்வரனை தன் மகன் ஸ்தானத்துக்கு கொண்டுவர முடிவெடுத்து விடுவார், ரங்கமணி. " தன் வீட்டில் வந்து பூஜை, மற்றும் சமையல் செய்ய வருகிறாயா?" என கேட்டு அழைப்பாள். காமேஸ்வரன் கொஞ்சம் யோசித்துவிட்டு பிறகு சரி என்றவுடன் அவனை வீட்டுக்கு அழைச்சுண்டு வந்திடுவார்.
காமேஸ்வரன் ஒரு பிரம்மச்சாரி! நல்ல கவர்ச்சியான ஆண்மகன்! அவனைத் தன் வீட்டுக்கு அழைச்சிட்டு வருவாள், ரங்கமணி! அத்துடன் தன் மாட்டுப்பெண் பங்கஜத்துடன் காமேஸ்வரனை நெருங்கி பழக விடுவார். காமேஸ்வரனைப் பற்றி பலவாறு நல்லவிதமாகச் சொல்லி அவன் மேல் மருமகளுக்கு ஆசையை தூண்டுவார், மாமியார் ரங்கமணி!
"இவர் பூஜை புஷ்ங்கரியம் எல்லாம் செய்பவர். இவர் சமையலுடன் பூஜை செய்தால், தன் மருமகளுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்னு அழச்சிண்டு வந்திருக்கேன்"- இது வந்து ஊருக்காக!
ஆனால் உண்மையில், இந்த "சிக் மாமியாரின்" முயற்சி என்னனு கதையை நடத்திச்செல்லும்போது அதில் மாமியார் (அம்மா), மருமகள் (மாட்டுப்பெண்) இருவரும் பேசிக்கொள்ளும்போது வாசகர்கள் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்!
இந்த உதவாக்கரை மகனால் இந்த வீட்டில் குழந்தை பிறக்காது! அதனால் காமேஸ்வரன் உதவியுடன் குழந்தை பாக்கியம் உள்ள அழகான "மாட்டுப்பெண்" பங்கஜத்தை ஒரு குழந்தை பெற்றுக் கொடுக்க வைக்க வழி செய்வாள் ரங்கமணி!
மருமகள் பங்கஜத்திடம் முதலில் ஜாடை மாடையாக, காமேஸ்வரனுடன் பூஜையில் கலந்துகொண்டு, "நல் உறவு" வைத்துக்கொண்டு, அவன் உதவியுடன் குழந்தை பெற்றுக்கச் சொல்லிப்பார்ப்பார். ஆனால் பங்கஜம் அதுபத்தி யோசிக்கும்போது பலமுறை அதில் தப்பில்லை என்பதுபோல "இன்சிஸ்ட்" பண்ணுவார் மாமியார் ரங்கமணி. இந்த மாதிரி மாமியார் யாருக்கு கெடைப்பாங்க? :) பங்கஜம் கொடுத்து வச்சவள்! :)
பாவம் பங்கஜம், அவள் ஒரு இளம் பெண்! காம உணர்ச்சிகள் பொங்கி வழியும் வயது அவளுக்கு! அவள் கணவனுக்கு காமத்தில் ரொம்ப ஆர்வமும் இருக்க மாதிரி ஜானைகிராமன் எழுதி இருக்க மாட்டார். ஆனால் பங்ஜதத்தை நல்லபடியா அவங்க பெற்றோர்கள் வளர்த்துவிட்டுருப்பாங்க! ரங்கமணியின் தூண்டுதலாலும், தன்னிச்சையாகவும் காமேஸ்வரன் சட்டைபோடாமல் பூஜை செய்யும்போது, பங்கஜம் அவனைப் பார்த்து ரசிக்கத்தான் செய்வாள், தனியாக இருக்கும்போது அவனை நினைத்து "ஃபேண்டஸைஸ்" கூட பண்ணுவாள். ஆனால், அவளால் அவனோட தகாத உறவு வைத்துக்கொள்ள முடியாது! அவள் மாரல்ஸ் அவளை தடுக்கும்! அது போல் உறவு வைத்துக்கொள்வது தப்புனு அவளுக்கு தெளிவாக்த் தெரியும். அதனால ரங்கமணி செய்யச் சொல்வதுபோல அவளால் செய்ய முடியாது!
பங்கஜம், இப்படி பட்டும் படாமலும் காமேஸ்வரனுடன் பழகுவதைப் பார்த்த ரங்கமணி, ஒருமுறாஈ அவளிடம், "நீ இப்படியே இருந்தால், நான் (ரங்கமணி) காமேஸ்வரனுடன் உறவு வைத்து குழந்தை பெற்றுக்கக்கூட தயங்க மாட்டேன்" என்பதுபோல் சொல்வதாக எழுதியிருப்பார் நம்ம தி ஜா ரா.
ரங்கமணி certainly has some kind of psychological problems as she never had a normal sex life or enough sex or whatsoever.
வளர்ப்பு பையன் துரை (? பெயர் சரியா என்னனு தெரியலை) ஒரு பரிதாபத்துக்குரிய கேரக்டர். "sexual desire" "sex drive" "jealousy" "possessiveness" எல்லாம் தலை விரித்தாடும் சாதாரண ஆண்களுக்கு இந்த "வளர்ப்பு ம்கன்" கேரக்ட்டர் புரியாது. Janakiraman purposely made this character as very WEAK!
காமேஸ்வரனும் இந்த செக்ஸ் விசயத்தில் இன்னொரு மாதிரி "தர்த்தி" தான். ரங்கமணியுன் (ஆமா ரங்கமணியும்தான்), பங்கஜமும் அவனைப் பார்க்கும்போது அவன் மேல் "காம இச்சையுடன்" பார்க்கிறார்கள் என்பதை உணராமல், அதை பொருட்படுத்தாமல், பூஜை, பூஜை, சமையல்னு வாழ்கிற நல்லவனான இவன், பார்க்கிற பெண்களை எல்லாம் நினைத்து சுய இன்பம் செய்து வாழும் சாதாரண ஆம்பளை கேரக்டர் இல்லை! செக்ஸ்தான் உலகத்திலேயே பெரிய விசயம்னு நெனச்சுக்கிட்டு வாழ்கிற, பார்க்கிற பெண்களை எல்லாம் படுக்கை அறையில் வைத்து நினைத்துப் பார்க்கும் "சாதாரண ஆம்பளை"களுக்கு காமேஸ்வரன் போல எளிதாக காம உணர்ச்சிக்கு அடிமையாகாத "பெரிய மனுஷன்கள்" பத்தி புரியுமா என்பது சந்தேகம்தான்.
காமேஸ்வரனை நினைத்து "ஃபேண்டஸைஸ்" செய்த அன்று இரவு பங்கஜம், அவள் கணவனுடன் உடலுறவு கொள்ளுவாள். கொண்ட பிறகு.. அன்னைக்கு மட்டும் அவளுக்கு உடலுறவின்போது 8 ஆர்கசம் வந்ததாக இதிலே எழுதியிருப்பாரு..அன்று இரவு உடலுறவு கொண்ட பிறகு பங்கஜம் அசை போடுகிறாள்... 6 மணிக்கு கடையை அடச்சுட்டு வந்தாரு .. ஒண்ணு ரெண்டு மூனு .. எட்டு! எட்டா? எப்படி? எப்படி என்னைக்குமில்லாம்ல இன்னைக்கு மட்டும் எட்டு வந்தது?னு அவள் யோசிப்பதாக. அன்னைக்குத்தான் பங்கஜம் குழந்தை உண்டாவாள்!!
கடைசியில் ஜோஸ்யர் சொன்னதை ஒரு மாதிரியாக உண்மையாக ஆக்கிவிடுவார்.. அதாவது ஒரு மாதிரி பங்கஜம் குழந்தை பெற்றுக்க காமேஸ்வரன் ஒரு "catalyst " மாதிரி இருந்ததாகக் காட்டிவிடுவார்.
இந்தக்கதையை நான் படிக்கக்கூடாத வயதில் படிச்சு பயந்து போயிட்டேன்! முதலில் ஜானகி ராமனை "பர்வேர்ட்" அது இது திட்டி தீர்த்து, விவாதிச்சு, பேசிப் பேசி.. யப்பா!
அதைவிட காமெடி என்னனா என் ஃப்ரெண்டு ஒருத்தன் இந்தக் கதையைப் படிச்சிட்டு, பங்கஜம் தனக்கு அன்று "8 முறை ஆர்கசம் அடைந்ததை நினைத்து" அசை போடுவதை, " அவள் கணவனுடன் அன்று எட்டு முறை உடலுறவு கொண்டதாக" ஜானகிராமன் எழுதி இருக்கதாக தவறுதலாகப் புரிந்து கொண்டான்!! :-))
ஆர் வி யுடைய இந்த விமர்சனத்தையும் கட்டாயம் படிங்க!
4 comments:
தளபதி, உமக்கு காமேசு, அம்மணி எல்லாம் யாருன்னு தெரியுமாவே? புரூசு???
புரூசு, நம்ம இங்கிலாந்து படைவீரர் இல்ல? அம்மணியை ஒரு வழி பண்னிப்புடுவாரு இல்ல!
காமேஷ் இல்ல அது பட்டாபி!!
நீங்க அந்த மரப்பசுவை விட மாட்டீங்க போல!
வருண்,
எல்லாக்கதைக்குமே ஒரு முன்னோடி ,அல்லது ஒரு தூண்டுதல், வேறு எங்காவது இருக்கும். இக்கதைக்கும் மஹாபாரதம் அப்படியே என நினைக்கிறேன்.
குழந்தை இல்லாமல் சாந்தனு(அல்லது விசித்திர வீரியன்) இறந்த பின் ,அவரது இரண்டு மனைவிகளான அம்பிகா,அம்பாலிகா ஆகியோரை சத்தியவதி(இவரும் சாந்தனுவின் ஒரு தாரமே) வியாசருடன் , இறந்த மன்னன் உடல் சாட்சியாக உறவு கொள்ள செய்து புத்திர பாக்கியம் பெற செய்வாள். அப்படி பிறந்தவர்கள் தான் திருதராஷ்டிரன், பாண்டு, இலவச இணைப்பு விதுரன்.
இதில் இன்னொரு விசித்திரம் வியாசர் சத்தியவதியின் மகன்,ஆனால் அப்பா வேறு(ஒரு ரிஷி அவர்) அப்படி பார்த்தால் சிற்றன்னைகளுக்கு புத்திரப்பாக்கியம் கொடுத்திருக்கிறார் வியாசர். :-))
இதெல்லாம் பார்க்கும் போது தி.ஜா பெருசா தப்பு செய்துவிட வில்லை.
புத்திர பாக்கியம் இல்லாதவங்க புத்திர காமேஷ்டி யாகம் செய்தால் பிள்ளை பிறக்குமாம் , ஒரு வேளை அத சிம்பாலிக்காக காட்ட காமேஷ்வரன்னு பேரு வச்சாரோ என்னமோ.
****வவ்வால் said...
வருண்,
எல்லாக்கதைக்குமே ஒரு முன்னோடி ,அல்லது ஒரு தூண்டுதல், வேறு எங்காவது இருக்கும். இக்கதைக்கும் மஹாபாரதம் அப்படியே என நினைக்கிறேன்.
குழந்தை இல்லாமல் சாந்தனு(அல்லது விசித்திர வீரியன்) இறந்த பின் ,அவரது இரண்டு மனைவிகளான அம்பிகா,அம்பாலிகா ஆகியோரை சத்தியவதி(இவரும் சாந்தனுவின் ஒரு தாரமே) வியாசருடன் , இறந்த மன்னன் உடல் சாட்சியாக உறவு கொள்ள செய்து புத்திர பாக்கியம் பெற செய்வாள். அப்படி பிறந்தவர்கள் தான் திருதராஷ்டிரன், பாண்டு, இலவச இணைப்பு விதுரன்.
இதில் இன்னொரு விசித்திரம் வியாசர் சத்தியவதியின் மகன்,ஆனால் அப்பா வேறு(ஒரு ரிஷி அவர்) அப்படி பார்த்தால் சிற்றன்னைகளுக்கு புத்திரப்பாக்கியம் கொடுத்திருக்கிறார் வியாசர். :-))
இதெல்லாம் பார்க்கும் போது தி.ஜா பெருசா தப்பு செய்துவிட வில்லை.
புத்திர பாக்கியம் இல்லாதவங்க புத்திர காமேஷ்டி யாகம் செய்தால் பிள்ளை பிறக்குமாம் , ஒரு வேளை அத சிம்பாலிக்காக காட்ட காமேஷ்வரன்னு பேரு வச்சாரோ என்னமோ.
13 January 2012 4:36 AM***
புராணங்கள்னு வரும்போது அந்தக்காலத்தில் (500-2000) ஆண்டுகளுக்கு முன்பு, மனிதனுடைய வாழ்க்கை முறை வேறுமாதிரி இருந்து இருக்கலாம்னு சொல்லி சமாளிக்கலாம்.
ஜானகிராமன் என்னைக்குமே நடக்காததை எழுதியது இல்லைங்க! அன்று மட்டுமல்ல இன்றும் இதுபோல் பல விசயங்கள், ரங்கமணி போல், அம்மணி போல் அலங்காரம்போல் பெண்களும் பாபுபோல ஆண்களும் வாழ்ந்து கொண்டுதான் இருக்காங்க!
ஒருவருடன் வாழ்ந்துகொண்டு இன்னொருவரை நினைத்து ஃபேண்டசைஸ் செய்வதெல்லாம் என்னைக்குமே இல்லைனும் சொல்ல முடியாது! ஆனால் நளபாகம் கதையை படிப்பவர்கள் பெரும்பாளோர் ஒருமுறை கமேஸ்வரனை அவள் தொட்டதால் குழந்தை உண்டானமாதிரி தி ஜா சொல்லியிருக்காருனு தவறாகவும் புரிந்துகொள்வார்கள்.
ரங்கமணி ஒரு மனநோயாளி என்பதுபோல் தி ஜா வெளிப்படையாகவும் சொல்ல மாட்டார். புரிஞ்சுக்கிறவங்க புரிஞ்சுக்கலாம். :-)
Post a Comment