Thursday, June 3, 2010

ஜெயமோஹனும் பிச்சைக்காரர்களும்!


கேரளாக்காரன் மாட்டுக்கறி சாப்பிடுவான் ஆனால் பிச்சை எடுக்கமாட்டான்னு சொன்னா நம்புவீங்களா? கேரளாக்காரன் பிச்சை எடுக்கிறதில்லையா? யார் சொன்னா? அப்படித்தான் இந்த ஆர்ட்டிக்கிள்ல போட்டிருக்கு!

------------------------------------- ---------------------
Rich Beggars
.fullpost{display:inline;}
>>>>>3 Kerala cities give Rs420m in alms(PTI)8 January 2006People in the three corporations — Trivandrum, Cochin and Kozhikode — give alms of over Rs42 crore a year says a recent study. A battalion of 3,000 beggars, majority of them children, collect over Rs11 lakh from these cities every dayAmong the large number of beggars there is hardly any Keralites. They are mainly from southern states of Tamil Nadu, Karnataka, Andhra Pradesh and northern states like Rajasthan.-------------------------- ---------------

பிச்சை எடுக்கிறதுலகூட தமிழந்தான் முன்னால நிக்கிறான்! இதையும் சொல்லி பெருமையடஞ்சுக்குவோமா? இல்லை, கின்னஸ்ல எதுவும் தமிழனுக்கு இதைவச்சு ரெக்கார்ட் வாங்கித்தர முடியுமானு பார்ப்போமா? எப்படியோ கின்னஸ்ல இடம் பெற்றால் போதாதா?

நான் என்ன செய்வேன்னு சொல்றீங்களா? நீங்களும் நானும் தமிழன் என்றால் தமிழ்ப்பிச்சைக்காரர்கள் வளர்ந்துகொண்டே போவது உங்களுக்கும் எனக்கும் அவமானம்தான்!

சரி, கஷ்டம்னுதான் எல்லாரும் பிச்சை எடுக்கிறான் என்றால், கேரளால மட்டும் ஏன் பிச்சைக்காரன் கம்மியா இருக்கான்? நெசமாத்தான் சொல்கிகிறேன், கேரளாக்காரன் டீ கடை வைக்கிறத பார்த்து இருக்கேன். ஏன் எப்படிவேணா முன்னேறனும்னு நடிகையாவாங்க, "அந்தத் தொழில்"ல கூட இறங்கி உழைப்பாங்க. இல்லைனா வயித்துப்பொழைப்புக்காக தமிழ் எழுத்தாளராகி கேரளாவின் புகழ் பாடுவாங்க! இல்லைனா பிச்சைக்காரனைப் பத்தி கதை எழுதி பணம் புகழும் சம்பாரிப்பாங்க. ஆனா பிச்சை எடுக்க மாட்டாங்க போல இருக்கு!

என்னை பொருத்தவரையில் பிச்சை எடுப்பது >90% ஒரு தொத்து வியாதிதான். அதை வளர்த்துவிடுவது தான தர்மம் செய்யும் நம்மதான். ஏழ்மை, இயலாமை என்பது கொஞ்ச விழுக்காடுகள்தான். இல்லைனா 5-8 வ்யது ஹெல்த்தியான கொழந்தைகள் ஏன் பிச்சை எடுக்குதுங்க? இன்னொன்னு, நம்மில் உள்ள பரிதாபப்படும் குணம்தான் பிச்சைக்காரர்களை வளர்த்துவிடுது.

இது மட்டுமல்ல, நம்மில் உள்ள நெறைய கெட்ட பழக்கங்கள் தொத்துவியாதிதான். இப்போ உதாரணமாக பெண்கள் புகை பிடிக்கிறதை எடுத்துக்குவோம். நம்ம நாட்டில் அது ரொம்ப ரொம்ப கம்மினு சொல்லலாமா? சைனா, கொரியா அமெரிக்காவிலெல்லாம் பெண்கள் புகைபிடிப்பது ரொம்ப ரொம்ப அதிகம். இதுவும் ஒரு தொத்து வியாதிதான், நம்ம ஊர்ல ஏனோ இது பரவவில்லை!

நம்ம நாட்டில் பிச்சைக்காரர்களே இருக்கக்கூடாது என்கிற பேராசை எனக்கு! என்ன ஒரு சின்னப்புத்தி, உனக்கு? பிறவியிலேயே பிச்சைக்காரங்களாப் பிறந்த அவங்களை எல்லாம் என்ன செய்றது? பாவம்! நீயெல்லாம் நல்லாயிருப்பியா? உனக்கெல்லாம் இரக்கமே இல்லையா! நீ ஒரு நாள் பிச்சை எடுத்தாலும் எடுப்ப, அப்போது தெரியும் உனக்கு, ஏன் பிச்சைக்காரர்கள் உருவாகிறார்கள்னு. இப்படித்தான் எல்லாரும் நெனைப்பார்கள்! நம்ம யாருக்குத்தான் வக்காலத்து வாங்கல? பிச்சைக்காரங்களை மட்டும் விட்டுடுவோமா என்ன?
ஆமா வருண் நீ என்னத்தை கிழிச்ச? பெரிய புடுங்கி மாதிரி லெக்ச்சர் அடிக்கிற?

என்னையும் சேத்துத்தான் திட்டிக்கிறேன் இங்கே, தலை!


சரி, சப்போஸ் நீங்க போடுற பிச்சையை எல்லாம், ஒரு உண்டியலில் போட்டு, அதையெல்லாம் இந்த பிச்சைக்காரகளுக்குப் போய் சேருவதுபோல செய்யமுடியுமா? அதாவது, இவர்கள் இடையூறு இல்லாமல், தொந்தரவு இல்லாமல் இவர்களைப்பார்த்து இன்னும் பலர் பிச்சை எடுக்க ஆரம்பிக்காமல், இவர்களுக்கு சேரவேண்டியதை சேர்த்துடுவோமே? முடியாதா? அவன் பிச்சை எடுக்கும்போதுதான் நான் போடுவேன். மாசத்துக்கு இவ்வளவு பிச்சை போடுறேன்னு கணக்குப்பண்ணி அதை அவர்களிடம் போய் சேருவதுபோல செய்யமுடியாது! பிச்சைக்காரனுக்கு காசு போடுறபோது வருகிற திருப்தி இதிலே வராதுனு சொல்றீங்களா? ஏன் இந்த மாதிரி லூசுத்தனமா ஒரு சஜஷன் தர்றேன்னா பிச்சை எடுப்பதும் ஒரு தொத்து வியாதிதான். ஒருவர் எடுப்பதைப்பார்த்து இன்னொருவர் செய்றாங்க.

அதென்னவோ தெரியலை நம்ம ஜெயமோஹன் மட்டும் காவிச்சாமியார்கள், அஹோரிகள் பிச்சைக்காரர்களைப் பத்தி ஆராஞ்சிகிட்டே இருக்கிறார். உக்காந்த இடத்திலே இருந்து நகராத சோம்பேறிகள்னா இவருக்கு ரொம்பப் பிடிக்கும்போல இருக்கு. இந்துமதச் சாமியார்கள் எல்லாம் சோம்பேறியா? இல்லையா? சாமியார்களும் உழைக்காமல் பொழைப்பு ஓட்டும் ஒரு மாதிரியான பிச்சைகாரர்கள்தான்.

அப்புறம் நம்ம ஜெயமோஹன் பாலாவோட சேர்ந்து நான் கடவுள் எல்லாம் உருவாக்கி பிச்சைக்காரர்கள் வாழக்கையை படம் பிடிச்சுக்காட்டி பெருமையடைஞ்சு இருக்கார்! பாலாவுக்கு பிச்சைக்காரர்கள் போட்ட பிச்சைதான் நேஷனல் அவார்ட்னுகூட அசிங்கமாக்கூட சொல்லலாம்! சிலர் தமிழ் வாசகர்களை வச்சுதான் பொழைப்பு நடத்துறார்னா சிலர் தம்ழ்பிச்சைக் காரங்களையும் விடமாட்டேன்க்றார்கள்- இவர் பொழைப்பை ஓட்ட.

ஜெயமோஹன் தமிழந்தான்னு சொல்றீங்களா? எனக்கென்னவோ அவர் பிறப்பால், மனசால் மலையாளினுதான் தோனுது. அவர் சாதியை, சஃபிக்ஸா பிள்ளை, நாயர்னு எல்லா இடத்திலேயும் போட்டு இருக்கார். அதென்ன இவ்வளவு சாதிப்பெருமைனு தெரியலை! ரொம்ப ஹானஸ்ட்டாதான் எழுதி இருக்கார். அவர தாயின் மறைவு பற்றிப்படிக்கும்போது கஷ்டமா இருந்தது. அவர் தனிப்பட்ட வாழ்க்கையைப்பத்தி நான் விமர்சிக்கவில்லை! அவர் எழுத்தையும், அவர் எழுதிய வசனங்களையும்தான்! மற்றபடி தமிழ் அவர் தொழிலுக்காக அவர் கற்ற ஆயுதம்.

வசந்தபாலன்னு ஒரு பிச்சைக்காரன் அங்காடி தெருல சாதாரண வேலையாட்களையும் பிச்சைக்காரர் களாக்கிவிட்டான். அதுவும் ஜெயமோஹன் இண்ஃப்ளுயெண்ஸ்தானோ? அதென்னவோ தெரியலை ஜெ மோ வசனம் எழுதினதுனாலதானோ என்னவோ. அவர் வசனம் எழுதப் போறபக்கமெல்லாம் தமிழ் பிச்சைக்காரந்தான் திரிகிறான். நல்லா இருக்க திருநெல்வேலிக் காரர்களையும் கையை கால இழக்கவிட்டு பிச்சைக் காரனாக்கி ரசிக்கிறார்கள் வசந்தபாலனும், ஜெயமோஹனும். JM really has some kind of obsession for "beggars" or not?

சரி, இதெல்லாம் எதுக்கு? இந்த பரிதாப நான் கடவுள்ல பிச்சைக்காரகளை யெல்லாம் பார்த்து ஏற்கனவே இளகிய மனம் உள்ள நீங்க என்ன செய்வீங்க? கொஞ்சம் அதிகமாகவே உருகி நெறையா பிச்சைபோடுவீங்களா? ஆமா! பாவம் இல்லையா? இந்த தொத்துவியாதியை வளர்க்க நம்மளால ஆன உதவி. இல்லையா? யாருக்கு க்ரிடிட் கொடுக்கலாம். ஜெயமோஹனுக்கும் பாலாவுக்குமா?
ஏதாவது பண்ணனும்ங்க பிச்சைக்காரர்களை ஒழிக்க! கோயில்களையெல்லாம் இடிக்கனுமா? பரவாயில்லை, கடவுள் போவிச்சுக்க மாட்டார்!

நம்ம நோபல் பரிசு வின் பண்ணலைனா பரவாயில்லை! பிச்சைக்காரங்கள் இல்லாமல் ஆக்கினோம்னா 100 நோபல் பரிசு வென்றதுக்கு சமம்.

சாமியார்களும் பிச்சைக்காரர்களும் இல்லைனா இந்திய கலாச்சாரமே ஒழிஞ்சுபோயிடும்னு பயமா இருக்கா, உங்களுக்கு? பரவாயில்லை ஒழியட்டும்!

ஒரு பத்து பிச்சைக்காரர்களை, பிச்சை எடுக்காமல் சாதாரணமாக வாழும் வழியில் நம்ம 1000 பேர் சேர்ந்து செய்தால், நீங்க காந்தியைவிட, நேருவைவிட, அண்ணாவைவிட பெரிய ஆள்னு நான் சொல்லுவேன்!

இன்னும் ஒரு விசயம். நம்ம சீக்கியர்களை முட்டாள்கள் போல சர்தார்ஜி ஜோக் சொல்லிக்கிட்டுத் திரிகிறோம். கேரளாக்காரனைவிட சீக்கியர்கள் ஒரு படி மேலேனு சொல்றாங்க! சீக்கியர்களும் பிச்சை எடுப்பதே இல்லைனு சொல்றாங்க! அப்போ அவங்களால மட்டும் இயலாதவர்கள், ஊனமுற்றோரெல்லாம் இல்லாமல் போயிடுவாங்களா என்ன? இருக்கத்தான் செய்வாங்க! அதெப்படி அவங்கள்ல மட்டும் பிச்சைக் காரர்கள் உருவாகாம இருக்காங்க? சம்ஹவ் அவர்கள் "கம்யுனிட்டி" அவர்களை கவனிச்சுக்கிறாங்க, பிச்சை எடுக்க விடாமல்! யோசிப்போமா?

வெள்ளைக்காரர்களுக்கு இரக்கமே கிடையாது. தத்துவம். தானம், தர்மம் செய்வதெல்லாம் இந்தியர்கள், சைனீஸ் போன்றவர்கள்தான் என்று நான் நினைப்பதுண்டு, ஆனால், காந்தி, புத்தர் எல்லாம் உருவான இந்தியாவில் சில மிருகங்கள், நல்லா உள்ள குழந்தைகளை ஊனமாக்கி பிச்சை எடுக்கவிடுவதாக சொல்றாங்க! நம்ம எப்படி வெள்ளைக்காரனைவிட உயர்ந்தவாராக முடியும்? நிச்சயம் இதுபோல "சகோதரர்கள்" உள்ள நம்ம உயர்ந்தவர்கள் கெடையவே கெடையாது!

நம்மதான் இப்படினா, அதேபோல் சைனாவிலும் நடக்கிறதாக நான் எங்கோ படித்தது கீழே!

My friends in China tell me that they never give money to beggars because according to them, “it’s always a scam.” I am told that even the beggars without their arms and the legs are merely puppets of a larger group. During a rather horrifying conversation, one Chinese man told me that kidnapped Chinese children frequently have their hands or their legs chopped off to be used as moneymaking machines. In other words, nothing is at it seems when you see these poor people. There is usually something else going on behind the scene.

Honestly I get seriously disturbed when I see beggars- esp when they are "physically challenged". I wonder how would others feel. May be they think "happiness and sadness" are equally experienced by every human being.