அதாவது இவர் 2010 ஆண்டு வெளிவந்த படங்களைப் பார்த்து ரசித்து அந்தத்தமிழ்ப் படங்களின் தரங்களை மட்டுமல்லாமல் ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, பின்னணி இசை போன்றவற்றை எடுத்து தரங்களை அலசியுள்ளார். நல்ல விசயம்தான். ஆனால் இவர் பார்க்காத படங்களை இந்த அலசலில் இருந்து "எக்ஸ்க்ளூட்" பண்ணியிருக்கலாம். அதாவது 2010ல் ஏராளமான பொருட்செலவில், மிகச்சிறந்த கலைஞர்களை வைத்து தயாரித்து வெளி வந்த எந்திரன் நான் பார்க்கவில்லை, அதனால் அதில் ஒளிப்பதிவு, பின்னணி இசை போன்ற தொழில்நுட்பங்கள் பற்றி எனக்குத் தெரியாது. நான் பார்த்த படங்களை மட்டுமே இங்கே குறிப்பிட்டுள்ளேன் என்று இவர் சொல்லி இருக்கலாம்.
ஒருவேளை எந்திரனை பார்த்துவிட்டாரோ? பார்த்துவிட்டு அதை வெளியே சொல்ல வெட்கப்படுகிறாரா? என்பது எனக்குத் தெரியவில்லை! சொன்னால்த் தானே தெரியும்?
சன் டி வி மீடியாவை தன் கையில் வைத்துக்கொண்டு எவ்வளவு கீழ்த்தரமாக இறங்கி எந்திரனை மக்களிடம் விற்க முயன்றார்களோ, அதைவிட ஒரு படி கீழே இறங்கி ரஜினிமேல் தனக்குள்ள காழ்ப்புணர்ச்சியை காட்டி, எந்திரனை ஒழிக்க முயன்றவர் நம்ம "மேதை" சுரேஷ் கண்ணன்! அதெல்லாம் தப்புனு நான் சொல்ல வரலை அது அவருடைய உரிமை! அவருடைய சுதந்திரம்! அதை நம்ம யாரு தட்டிப் பறிக்க?
சுரேஷ் கண்ணனின் சாதனைகள் சில..
* எந்திரன் இசை வந்த புதிதில், அதன் இசையை இம்சை என்றார்.
* எனக்குத்தெரிய எந்திரன் படம் பார்த்ததாக காட்டிக்கொள்ளவில்லை! அந்தப் படத்தின் மேல் தனக்குள்ள காழ்ப்புணர்ச்சியை அப்படித்தான் அவர் எல்லோருக்கும் உணர்த்தினார்.
* எந்திரன் என்கிற ஏகாபத்தியன் என்று தினமணியில் வந்த ஒரு கட்டுரையை காப்பி பேஸ்ட் பண்ணிப் போட்டு தன் தளத்தின் தரத்தை வளர்த்தார்.
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்...
அவரும் பாவம் இமசைனு சொல்லிப்பார்த்தார், பலியாடுகளைக் கொன்றவர்கள் ரஜினி ரசிகர்னு பலிபோட்டு எந்திரனை கேவலப்படுத்திப் பார்த்தார். தினமணியில் வந்த கட்டுரையை வெட்டி ஒட்டிப் பார்த்தார். எந்திரன் வெளிவந்த நாள் முதாலாக தூக்கமிழந்து பாக்ஸ்ஆஃபிஸில் எந்திரன் படுத்திறாதா, விமர்சகர்களிடம் அடி வாங்கிவிடாதானு தூங்காமல் கஷ்டப்பட்டார். பாவம் அவர் நினைத்தபடி எதுவும் நடக்கவில்லை! அதைவிடக் கொடுமை என்னனா இவரைத்தவிர்த்து உலகத்தில் உள்ள அனைத்து விமர்சகர்களும் இந்தப்படத்தை பாராட்டிவிட்டார்கள். ஆக நிக்கலில் செய்த எந்திரனிடம் மோதி பிச்சைப் பாத்திரம் நொறுங்கியதுதான் மிச்சம்!
இப்போ 2010 படங்களை தரவரிசைப் படுத்தவும்..
தான் பார்க்காத எந்திரனைப் பற்றித்தான் முதன் முதலாக விமர்சிச்சுள்ளார். அதைவிடுங்க, அதாவது 2010ல் வந்த படம்! 2002 ல் வெளிவந்த பாபாவையும் இங்கே கொண்டு வந்து எந்திரனையும் பாபாவையும் இணைத்த ஒரே மேதை நம்ம சுரேஷ் கண்ணன் அவர்கள்தான்.
எந்திரனுக்கு நிகரான பரபரப்பை சென்ற வருடங்களில் ஏற்படுத்தியது இதே நடிகரின் 'பாபா'. ஆனால் அதில் முன்வைக்கப்பட்ட போலித்தனமான ஆன்மீகம் காரணமாகவும் நம்பகத்தன்மையின்மை மற்றும் சுவாரசியமின்மை காரணமாகவும் 'பாபா' படுதோல்வியைத் தழுவியது.
என்னதான் எந்திரனை திட்டினாலும் அந்தப்படம் க்ரிட்டிகலாவும் கமர்சியலாகவும் வெற்றிவாகை சூடிவிட்டது! அதனால் ஒரு 8 வருடங்கள் முன்னால் சென்று சம்மந்தமே இல்லாத ஒரு தோல்விப்படத்தை எடுத்து 2010க்கு கொண்டு வந்து அவர் ஆசையைத் தீர்த்துக்கொண்டார்!
சன் டி வியின் தான் என்கிற அகம்பாவம் மோசமா இல்லை பதிவுலகில் சுரேஷ் கண்னனுடைய அகம்பாவம், திறந்த மனதில்லாத குணம் மோசமானு கேட்டால் அது பெரிய விதாத்துக்குரியது.
சரி, 2010 போய்விட்டது! மறப்போம் மன்னிப்போம்! 2011 லாவது தன் அனுகுமுறையை மாற்றி, தனிப்பட்ட தன் காழ்ப்புணர்ச்சியைத் தூக்கி ஓரமாக வைத்துவிட்டு ஒரு "ப்ரஃபெஷனலாக"ஒரு திறந்த கண்ணோட்டத்துடன் இவர் படங்களை விமர்சிப்பார் என்று நம்புவோம்!
வாழ்க சுரேஷ் கண்ணனின் கலைத்தொண்டு! அவருக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
24 comments:
தளபதியோட நூல் வெளியீட்டு விழாவுக்கு வராத அமெரிக்கப் பதிவர்கள்ன்னு ஒரு இடுகை தேத்தலாமா, வேண்டாமான்னு நடத்தப் போற கூட்டத்துக்கு போலாமா, வேண்டாமான்னு ஒரு கூட்டம்.
இந்த வருஷமாவது வெட்டி வம்பு, வீண் பேச்சு , தனிநபர் தாக்குதல்கள், காழ்ப்புணர்ச்சி இல்லாத பதிவுலகத்தைப் பார்க்க ஆசைப்பட்டேன். அதில் விழுந்த முதல் மண் இந்த பதிவு. போய் உருப்படியா எதாவது எழுதுங்க சார்.
ஏன்யா உனக்கு இந்த ஆகாத வேலை. நீங்களும் ஏதாவது ஒரு சினிமாவைத் திட்டி பதிவு போடுங்க(இந்தப் பதிவு மாதிரியே). படிச்சுட்டு போறோம்
***பழமைபேசி said...
தளபதியோட நூல் வெளியீட்டு விழாவுக்கு வராத அமெரிக்கப் பதிவர்கள்ன்னு ஒரு இடுகை தேத்தலாமா, வேண்டாமான்னு நடத்தப் போற கூட்டத்துக்கு போலாமா, வேண்டாமான்னு ஒரு கூட்டம்.
3 January 2011 9:16 AM***
நான் ஃபெட்னாவுக்கே இதுவரை போனதில்லை. இங்கேயிருந்தே வாழ்த்திவிடுவேன் தளபதியை! அவ்ளோதான் நம்மாள முடிந்தது :)
//இந்த வருஷமாவது வெட்டி வம்பு, வீண் பேச்சு , தனிநபர் தாக்குதல்கள், காழ்ப்புணர்ச்சி இல்லாத பதிவுலகத்தைப் பார்க்க //
என்ன கொடுமையான ஆசையா இது? எப்போ கிழவி வர? நாம் போயி குடுசை கட்ட?
***Blogger Rajesh kumar said...
இந்த வருஷமாவது வெட்டி வம்பு, வீண் பேச்சு , தனிநபர் தாக்குதல்கள், காழ்ப்புணர்ச்சி இல்லாத பதிவுலகத்தைப் பார்க்க ஆசைப்பட்டேன். அதில் விழுந்த முதல் மண் இந்த பதிவு. போய் உருப்படியா எதாவது எழுதுங்க சார்.
3 January 2011 9:18 AM***
எனக்கும் அப்படி ஒரு ஆசை இருந்துச்சு. என்ன பண்ணுறது? அவர் எந்திரனை விட்டு தொலைய மாட்டேன்கிறாரே! :(
வருண் said...
***ILA(@)இளா said...
ஏன்யா உனக்கு இந்த ஆகாத வேலை. நீங்களும் ஏதாவது ஒரு சினிமாவைத் திட்டி பதிவு போடுங்க(இந்தப் பதிவு மாதிரியே). படிச்சுட்டு போறோம்***
சரி ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்லுங்க, எந்திரனுக்கும், பாபாவுக்கும் என்னங்க சம்மந்தம்???
3 January 2011 9:40 AM
விடுங்க வருண்
ரஜினி தவிர்த்து அவர் எழுதும் பதிவுகள் எனக்குப் பிடிக்கும். சினிமா விமர்சகர்களில் குறிப்பிடத்தக்கவர். அவர் கமல் ரசிகர் என்பது வெளிப்படை எனினும் மன்மதன் அம்பை நடுநிலைமையை விமர்சித்தே இருந்தார்
****தர்ஷன் said...

3 January 2011 9:51 AM ****
எந்திரனுக்கு முன்னால பரபரப்பை ஏற்படுத்திய படம் சிவாஜி இல்லையா?
வேணும்னே "பாபா"வை இங்கே நுழைக்கிறார், தர்ஷன்.
மன்மதன் அம்பு விமர்சனமும் கொஞ்சம் வரம்பு மீறிவிட்டார் என்பதே என் எண்னம். உதயநிதியின் தயாரிப்பு என்பதால் அளவுக்கு அதிகமாகவே ரொம்ப மோசமாவிமர்சித்துள்ளார் என்பதே என் எண்னம் :) it certainly deserves a better review/rating than what he wrote. :)
வருண், சொல்வதற்கு ஒன்றுமில்லை. காலம் பொன் போன்றது. :-)
***J. Ramki said...
வருண், சொல்வதற்கு ஒன்றுமில்லை. காலம் பொன் போன்றது. :-)
3 January 2011 11:05 AM***
இப்படியே நம்ம ஒண்ணுமே சொல்லாமல் போனோம்னு வச்சுக்கோங்க, அவர் பண்ணுகிற தவறு அவருக்கு தெரியப்போவதில்லை. ஆமாம் காலம் பொன்னானதுதான். The earlier he learns the better for him. :)
adichu aadunga.
கு கு: உங்களுக்கு ஹாப்பி நியு இயர்! இந்த வருடம் டாலஸ்லதான் சூப்பர் பவ்ல். நான் பார்க்க வரும்போது உங்க வீட்டுக் கதவு தட்டப்படும் :)))
//கு கு: உங்களுக்கு ஹாப்பி நியு இயர்! இந்த வருடம் டாலஸ்லதான் சூப்பர் பவ்ல். நான் பார்க்க வரும்போது உங்க
வீட்டுக் கதவு தட்டப்படும் :))//
அப்படியே எனக்கும் போன் பண்ணுங்க
***Blogger நசரேயன் said...
//கு கு: உங்களுக்கு ஹாப்பி நியு இயர்! இந்த வருடம் டாலஸ்லதான் சூப்பர் பவ்ல். நான் பார்க்க வரும்போது உங்க
வீட்டுக் கதவு தட்டப்படும் :))//
அப்படியே எனக்கும் போன் பண்ணுங்க
3 January 2011 1:37 PM***
தள: நீங்க அமெரிக்கன் ஃபுட்பால் பார்ப்பதுண்டா? இல்லை இன்னும் க்ரிக்கட்தானா? :)
வருண் said...
கு கு: உங்களுக்கு ஹாப்பி நியு இயர்! இந்த வருடம் டாலஸ்லதான் சூப்பர் பவ்ல். நான் பார்க்க வரும்போது உங்க வீட்டுக் கதவு தட்டப்படும் :)))
thattungal thirakkappadum.
//உங்களுக்கு ஹாப்பி நியு இயர்! இந்த வருடம் டாலஸ்லதான் சூப்பர் பவ்ல். நான் பார்க்க வரும்போது உங்க
வீட்டுக் கதவு தட்டப்படும் :))//
மாட்டிடையன் (cow boys) புதிய அரங்கத்தின் முதல் இறுதி ஆட்டம் காண வரவும், அது சரி உங்கள் கணிப்பில் யார் அந்த இரு அணிகள் இறுதி சுற்றுக்கு வருவதோ!!!
***முச்சந்தி said...

3 January 2011 2:32 PM***
Happy New Year! :)
IN AFC, I think the New England patriot is going to go all the way to super bowl unless some ravens or steelers or Colts eliminate them.
In NFC, I dont think Atlanta falcons are that good though they have the best record. It is hard to predict who will go to super bowl bowl from NFC.
I will post my wild card weekend winners predictions soon :)
அவர் எழுதியதை எத்தனை பேர் படித்திருப்பார்கள் என்று தெரியவில்லை... ஆனால் எதிர்பதிவு எழுதி அவரை பிரபலமாக்கி விட்டீர்கள்...
நக்கீரன் பட்டியலில், கடந்த ஆண்டும் சிறந்த பத்துப்படம் வரிசையில் எந்திரனுக்கு இடம் கொடுக்கவில்லை. வசூல் சாதனை எந்திரன் என்று மட்டுமே போட்டு இருந்தார்கள், அதற்கு எதும் விமர்சனம் உண்டா ?
:)
Good and correct
***Philosophy Prabhakaran said...
அவர் எழுதியதை எத்தனை பேர் படித்திருப்பார்கள் என்று தெரியவில்லை... ஆனால் எதிர்பதிவு எழுதி அவரை பிரபலமாக்கி விட்டீர்கள்...
3 January 2011 4:30 PM ***
அவரு ஏற்கனவே ரொம்ப பிரபலமானவர்தான், சார் :) அதான் அவரிடம் இதுபோல் எதிர்பார்க்கவில்லை!
***கோவி.கண்ணன் said...
நக்கீரன் பட்டியலில், கடந்த ஆண்டும் சிறந்த பத்துப்படம் வரிசையில் எந்திரனுக்கு இடம் கொடுக்கவில்லை. வசூல் சாதனை எந்திரன் என்று மட்டுமே போட்டு இருந்தார்கள், அதற்கு எதும் விமர்சனம் உண்டா ?
:)
3 January 2011 9:17 PM***
மொதல்ல உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள், கோவி! :)
நக்கீரனைவிட நம்ம க்ரிடிக் சுரேஷ் கண்ணனுக்கு மரியாதை உண்டுனு நம்புறேன் நான். ரஜினினு வரும்போதுதான் அவர் கொஞ்சம் நடுநிலை தவறுகிறார் :(
***Blogger sasibanuu said...
Good and correct
3 January 2011 10:29 PM**
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சசி பாணு :)
Post a Comment