Monday, February 28, 2011

எனக்கும் தெரியும்! அவனுக்கும் தெரியும்!

"என்ன செல்வம் உன் சீனியர் சம்பத்தோட சுத்தமாப் பேசுறதில்லையா?"

"ஆமாங்க, அளவாத்தான் பேசிக்கிறது. அவரு குணம் நமக்கு ஒத்து வராதுனு ஒதுங்கிக்கிட்டேன். என் கலீக், ரஞ்சனியும் அவரும் எந்நேரமும் ஒண்ணா வேற சுத்திக்கிட்டு இருக்காங்க."

"ஆமா ரஞ்சனி வந்து உன் lab ல சேர்ந்ததும் 24 மணி நேரமும் அவன் அவ பின்னாலதான் சுத்துறான் சம்பத்!"

"ஒரே labல என்னை மாதிரி "கலீக்" கா இருந்தா அதைவிட தொல்லைதான். இவங்க பாடுற டூயட்டுக்கு நடுவிலேனு நம்ம எதுக்குனு என் வேலையைப் பார்த்துக்கிட்டு இருக்கேன். நைட் நேரம் அந்தப் பக்கமே போறதில்லை. என்னென்னவோ நடப்பதா சொல்லிக்கிறானுக..பாதிக்கு மேலே புரளியாவும் இருக்கலாம் "

" சம்பத் என்னவோ உன்னைபத்தி வேறமாதிரி சொல்லிக்கிட்டு திரிகிறான்?"

"என்ன சொல்றீங்க, இளங்கோ?!"

"நீ இப்போ பண்ணுகிற ப்ராஜெக்ட் அவனோட ஐடியாவாம். அதை நீ திருடி பண்ணிட்டனு. அதனால்தான் நீ அவரோட பேசுறதில்லைனு சொல்றான் சம்பத்."

"இதென்ன புதுக்கதை? அவர் ஐடியானா அவர் ஏன் பண்ணலையாம்? நான் பண்ற ப்ராஜெக்ட் அவர் ப்ராஜெக்ட்க்கு ஓரளவு ரிலேட்டெட் தான் ஆனால் இது என்னுடைய ஒரிஜினல் ஐடியாங்க! என் பாஸே நான் பண்ணுறக்கு ஓ கே சொல்லிட்டாரு! இதுல இவரு என்ன?"

"உனக்கு ஒண்ணுமே தெரியாதா?"

"என்ன சொல்றீங்க?"

" இண்ஸ்டிடூட் முழுவதும் நீ அவன் ஐடியாவை திருடிவிட்டதாவும் அதனாலதான் நீ அவனோட பேசுறதில்லைனும் சொல்லிக்கிட்டு திரிகிறான், சம்பத்! இண்ஸ்டிடூட் முழுவது உன் பேரு நாறிப்போச்சு"

"போய் நாய் மாதிரி கொரைச்சிக்கிட்டு திரியட்டும்"

"ஏய் ஏன்ப்பா இப்படி திட்டுற?"

"பின்ன என்னங்க, நம்ம எல்லாம் பார்ப்பணர்களை எதுக்கெடுத்தாலும் திட்டுறோம். இதுபோல் பொய்சொல்லிக்கிட்டு திரிகிற ஈனப்பயலுகளும் நம்மில் இருக்கானுக . இவன் பண்ண முடியாத/ இவனுக்கு வராத ஐடியால நம்ம பண்ணிட்டா உடனே இவன் ஐடியாவை திருடியதா சும்மா பொய் சொல்லிக்கிட்டு திரிகிறான் அந்த ஆளு! என்ன இப்படி ஒரு ஈனத்தனமான ஈகோ இவனுக்கு! இவன்லாம் ஒரு ஆளு!"

"நீ சொல்ற விசயம் எனக்கு மட்டும்தான் தெரியும்! அப்போ நீ ஏன் ஆவனோட பேசுறதில்ல?"

"நான் இந்த வொர்க் ஆரம்பிக்க முன்னாலேயே ரொம்ப நாளா இந்தாளோட தேவையில்லாமல் பேசுவதில்லை! என்னங்க இந்தாஅளுக்கு மிருகத்தனமாக் கோவம் வருது."

"அவன் ரொம்ப short-tempered தான்! அதுமட்டும் எல்லாருக்கும் தெரியும்"

"இதைக் கேளுங்க, ஒரு நாள் இந்தாளோட நட்ராஜ்ல ஒரு தமிழ்ப்படம் பார்க்கப்போனோம். கொஞ்சம் லேட்டாத்தான் நாங்க போனோம் படம் போட்டுட்டான்.! இடம் தேடி இருட்டுல உட்கார தடவித் தடவி உக்காரப்போகும்போது பின்னால உள்ளவன் "உக்காருயா மறைக்கிது" னு கத்தினான். படம் மறைச்சா அவன் கத்தத்தான் செய்வான்! அவனை இவரு "செருப்பால அடிப்பேன்! பேசாமல் மூடுடா" ங்கிறார்!. எதுக்கு? படத்தை மறைக்கிற உக்காருனு சொன்னதுக்கு?"

"படம் மறைச்சா கத்தத்தான் செய்வான்."

"சரி, அதுக்காக செருப்பால அடிப்பேன்னா சொல்றது? கொஞ்சமாவது என்ன பேசுறதுனு தெரிய வேண்டாம்? அவன் ஒரு கூட்டமா கோஷ்டியா வந்திருந்தால் என்ன நடந்து இருக்கும்னு தெரியலை! இது மாதிரி எங்க ஊர்ல எவனிடமாவது செருப்பால அடிப்பேன்னு சொல்லியிருந்தால் அடிச்சு கொன்னேபுடுவானுக! He has an extremely bad temper! இதுமாதிரி வார்த்தையை விட்டால் ஒரு நாள் இல்லை ஒரு நாள் எவனிடமாவது இந்த ஆளு அடிவாங்கி சாக வேண்டியதுதான். இதுபோல ஒரு சில இண்ஸிடெண்ட்ஸ் பார்த்ததும்தான் நான் இவனிடம் இருந்து ஒதுங்கினேன். நானும் சொல்லிப்பார்த்தேன் உங்க மேலேதான் தப்புனு . அந்தாளு கேக்கிற மாதிரி இல்லை. நேத்து வந்த நீ என்ன சொல்றது நான் என்ன கேக்கிறது? ங்கிற ஒரு மாதிரி "டோன்" மாறுச்சு. நான் இவன் சகவாசம் நமக்கு ஒத்துவராதுனு பேசாமல் ஒதுங்கிக்கிட்டேன்."

"சரி, அவன் உன்னைப்பத்தி சொல்றது பொய்னு சொல்றியா? அப்போ அது பொய்யினு உனக்கும் எனக்கும்தான் தெரியும்!"

"அந்த ஆளுக்கும் தெரியும்! இது என் ஐடியானு! ஊருக்குத்தான் எதையோ சோடிச்சு சொல்லிக்கிட்டு இருக்கான்! அவன் மனசாட்சிக்குத் தெரியும். This is not his fucking idea!"

"என்னவோ போ. ஆனா, சம்பத் ஒரு bright guy னு எல்லாருக்கும் தெரியும்."

"அதனாலென்ன இப்போ?"

" அவன் சொன்ன பொய்தான் உண்மை என்றுதான் எல்லாரும் நம்புறானுக! நீ சொல்றதாலே நான் நம்புறேன்!"

"நீங்களும் நம்பலைனாலும் பரவாயில்லைங்க! எதுக்கு ரொம்ப கஷ்டப்பட்டு நம்புறீங்க?"

"நான் அப்படி சொன்னேனா, செல்வம்?"

" இது என்னோட ஐடியானு எனக்கும் தெரியும், அவனுக்கும் தெரியும்! இந்த வொர்க்கை நல்ல இண்டர்நெஷனல்ல ஜேர்னலில் பப்ளிஷ் பண்ணியாச்சு ! நம்புறவன் நம்பட்டும்! I don't have any guilty feelings. That is all I care! இவன் ஊரெல்லாம் கொற அழுகை அழுது ஒப்பாரி வைக்கட்டும்!"

Saturday, February 26, 2011

சபாஷ்! ஜாக்கி சேகருக்குப் பாடம் புகட்டிய பதிவுலகம்!

நண்பர் ஜாக்கி சேகர், நடுநிஷிநாய்கள் படத்தைப் பிடிக்காதவர்கள், அதை ரசிக்க முடியாதவர்கள், மற்றும் கவுதம் மேனனை பளார்ப் பளார்னு அறைந்தவர்களுக்கெல்லாம் என்னவோ அறிவுரை சொல்ல கிளம்பிட்டாரு. நான் அவருக்கு சொல்ல வர்றது இதுதான்! இது அறிவுரை இல்லை! எதிர் வினை!

நண்பரே! உங்களுக்கு நடுநிஷி நாய்கள் ரொம்ப ரசிச்சுப் பார்க்க முடிஞ்சதா? தப்பே இல்லை! நீங்கள் செய்ததுபோல் படத்துக்கு நல்ல விமர்சனம் கொடுங்கள்! திரும்பத் திரும்ப சைல்ட் மொலெஸ்டேஷன், இண்செஸ்ட்டைப் பார்த்து ரசிங்க! உங்களுக்கு உள்ள கலைக்கண்னோட பார்த்துப் பார்த்து ரசிங்க! கவுதம் மேனனுக்கு "பிருந்தாவனமும் நொந்தகுமாரன்" விருது கொடுங்க! அது உங்க உரிமை!

ஆமா, நீங்க ஏன் கவுதம்-மேதாவி-மேனனுக்கு இப்படியெல்லாம் வக்காலத்து வாங்கிக்கிட்டு? அப்புறம் சும்மா கலாச்சாரக் காவலர்களுக்கு இந்தப்படத்தை எப்படிப்பார்க்கனும்னு அறிவுரை எல்லாம் சொல்லிக்கிட்டு?..ஒரு நிமிஷமோ ரெண்டு நிமிஷமோ, இதெல்லாம் எதுக்கு?

தமிழ்மண நிர்வாகத்தில்கூட ஓரளவுக்கு கலாச்சாரக் காவலர்கள் இல்லைனா, தமிழ்மணமும் இன்னைக்கு காமலோகம் ஆகி நாறிப்போயிருக்கும் என்பது என் நம்பிக்கை!

உங்க பதிவுக்கு பொதுவாக நல்ல பரிந்துரைகள் கிடைக்கும் என்பது என் கணிப்பு! உங்களுக்குத்தான் உலகம் சரியாப்புரியுது என்பதுபோல நீங்க செய்த அறிவுரைக்கு கிடைத்த மதிப்பெண்களுக்கு 7/24..இதுக்கு என்ன அர்த்தம்னா.. நான் எதுக்கு சொல்ல? புரிஞ்சுக்கிட்டா நல்லது! மேலும் பதிவுலகில் எதிர் மதிப்பெண் கொடுத்தவர்கள் கலாச்சாரக்காவல்ர்கள்னு சொல்ல முடியாது! உங்க அறிவுரையை பார்த்து எரிச்சல் அடைந்தவர்கள்! அதனால் என்ன? இதெல்லாம் பதிவுலகில் சகஜம்தான்னு சொல்றீங்களா?! உண்மைதான்..நீங்கள் நீங்களாத்தான் மேன்மேலும் மனம்தளறாது தொடருங்கள்!

நான் ஒண்ணும் கலாச்சாரக்காவலன் இல்லை, சார்! ஆனால் அவர்கள் தேவை மற்றும் சேவை நமக்கு நிச்சயம் அவசியம் என்று நம்புறேன். எதுக்கு? நாம் வரம்பு மீறும்போது கவுதமை அறைந்ததுபோல. என்னையும், வரம்புமீறுபவர்களையும் அறைவதற்கு!

Friday, February 25, 2011

TASMAC கண்டுபிடிச்சது எம் ஜி ஆர்! உதவாக்கரைத்தமிழன்!

நான் உண்மைத்தமிழன் இல்லைங்க! ஒரு உதவாக்கரைத் தமிழன் ஆனால் உண்மையும் பேசுவேன். என்னவோ சாராயத்தை கண்டுபிடிச்சதே கலைஞர் கருணாநிதிதான் என்கிற மாதிரி ஆளாளுக்கு புருடா விட்டுக்கிட்டு திரிகிறார்கள்.

மது உடலுக்குத் தீங்கானதுனு என்னவோ புதுசா கண்டுபிடிச்சு வியாக்யானம் பேசுகிறார்கள்! TASMAC கண்டுபிடிச்சது புரட்சித்தலைவர் எம் ஜி ஆர்! ஆனால் டாஸ்மாக் க்குகாக கருணாநிதிக்கு க்ரிடிட் கொடுப்பது அநியாயம். அப்பன் முருகனுக்கே இதுபோல பொய் பேசுறது பிடிக்காது!

பாவம் எம் ஜி ஆர்க்கு மது உடல்நலத்திற்கு கெடுதினு தெரியாது! சினிமாவுல நடிக்கும்போது மட்டும் நம்ம விசிலடிச்சான்குஞ்சுகளை ஏமாத்த சும்மா குடிக்காதே! னு புருடாவிடுவாரு வாத்தியாரு! ஆனால் நிஜவாழ்வில் மது உடலுக்கு நல்லதுனு நம்பினாரு அவரு. அதனாலதான் மது விலக்கை 1980 ல தளர்த்தினார் எம் ஜி ஆரு.

ஒரு பக்கம் சத்துணவு குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு, சத்தான மதுவை இன்னொருபக்கம் அப்பாமார்களுக்கு ஊத்தினார் நம்ம புரட்சித்தலைவர்.

ஆனால் கருணாநிதி மட்டும்தான் மது வருமானத்தை வச்சு தமிழ்நாட்டுக்கு வருவாய் தேடுகிறாரு நு சொல்றாங்க சில பொய்த்தமிழர்கள்!

எடுத்தான் தடையை திறந்தான் கடையை! நு தனிக்காட்டு ராஜால நம்ம ரஜினி பட்டைய கிளப்புவாரு! தடையை எடுத்தது நம்ம புரட்சித்தலைவர்தான்!

TASMAC வரலாறு தெரியாமல் சும்மா எதையாவது சொல்லக்கூடாது!

History

TASMAC was established in 1983 by the government of M. G. Ramachandran (MGR) for wholesale vending of alcohol in Tamil Nadu.
The state has a long history of prohibition, first implemented in 1937 by the Indian National Congress government of C. Rajagopalachari. Between 1937 and 2001, it was lifted briefly during 1971-74, 1981–87 and 1990-91. After 1983, TASMAC was in charge of wholesale liquor sales in the state whenever prohibition was lifted. In 2001, prohibition was lifted again and TASMAC became the wholesale monopoly for alcohol. For retail vending, the state auctioned off licenses for running liquor shops and bars. But this led to the formation of cartels and loss of revenue to the state. The government tried to counter this by introducing a lot system from the financial year 2001-02, where potential bidders bid for shops grouped by revenue. But the lot system could not prevent cartelisation, as bidders later withdrew in favour of others. In October 2003, the government passed an amendment to the Tamil Nadu Prohibition Act, 1937, making TASMAC the sole retail vendor of alcohol in the state. By 2004 all private outlets selling alcohol were either shut down or taken over by the company. This monopoly established by the ADMK government of J. Jayalalitha came into effect on 29 November 2003. The DMK government of M. Karunanidhi which took power in 2006, did not revise its predecessor's policy and TASMAC continues to control the alcohol industry in the state.[2][3][4][5][6]

கருணாநிதிதான் எல்லாருக்கும் தண்ணிய ஊத்துறார்னா, எம் சி ஆரும், ஜெயாவும் என்ன சாராயம்னு சொல்லி டாஸ்மாக் ல சர்பத்தா கொடுத்தாங்க??

ஜெயா குடிகாரனோட கூட்டு! தண்ணி பார்ட்டிதான்!

நான் கருப்பு எம் ஜி ஆரு, நான் தனியா நின்னுதான் அரசியல்ல புடுங்குவேன் னு வீராவேசம் பேசிய கேப்பிட்டனு, அம்மா பின்னால போறாராம் இந்த தேர்தலில்! நான் சாகிற வரை யாரோடவும் கூட்டுச் சேரமாட்டேன் தனியாத்தான் புடுங்குவேன் என்று சொன்னது எல்லாம் சும்மா "ஆக்டிங்" தான் போல இருக்கு!

என்ன மயிறுக்கு இஷ்டத்துக்கு பேசுறானுகனு தெரியலை! எல்லா அரசியல்வாதியும்தான் பேசுறான்னா, இவரும் எல்லாரும் மாதிரித்தான்னா என்னத்துக்கு இவருக்கு ஓட்டுப்போடனும்? இவர் சினிமால சி பி ஐ ஆஃபிசரா வந்து சாதிச்சதுக்காகவா?

இதே விசயகாந்தை குடிகாரன், இவனுக்கெல்லாம் எம் ஜி ஆர் பேரை சொல்ல என்ன அருகதை இருக்கு என்று சொன்னது இதே அம்மையார்தான்! அப்படி சொல்லும்போது இந்த ஆளைப் பார்த்தால் பாவமா இருந்தது. அதுக்கு அந்த வெங்காயம், காப்பிட்டனு, நான் குடிக்க இவருதான் ஊத்திக்கொடுத்தாரா?னு எதிர் வாதம் செய்தார்.

இன்னைக்கு நாய் மாதிரி தன்னை குடிகாரன்னு சொன்னவ கூட கூட்டுச் சேர்ந்து புடுங்கப்போறாராம்! ஆக இப்போ இவங்க ரெண்டுபேரும் ஒண்ணாச்சேர்ந்து, ஆட்சியப்பிடிச்சு ஒரே தண்ணி பார்ட்டிதான்!

இல்லைனா ஆட்சியைப் பிடிச்ச உடனே மதுவிலக்கை அமல்ப்படுத்தப் போறாங்களா? என்னத்தை கிழிக்கிறானுகனு பார்க்கத்தான் போறோம்!

Vijayakant's party to join hands with AIADMK to ‘oust DMK' G. Sathyamoorthi

CHENNAI: Ending days of uncertainty over its electoral strategy, the Desiya Murpokku Dravida Kazhagam (DMDK) of actor Vijayakant on Thursday said it would join hands with the AIADMK in seeking to oust the DMK regime in Tamil Nadu.

A three-member DMDK election panel opened formal talks with the AIADMK – the first sign that Mr. Vijayakant's five-year-old party is also turning to alliance politics. So far, the actor-politician has been maintaining that his alliance was “only with God and the people”.

“We want to oust the DMK regime in Tamil Nadu. Therefore, we are with the AIADMK,” DMDK presidium chairman Panruti S. Ramachandran told reporters at the All India Anna Dravida Munnetra Kazhagam's headquarters here after a 75-minute meeting.

Preliminary talks on seat-sharing between the two parties had begun. “The talks were cordial and the sharing of seats will be decided soon,” Mr. Ramachandran said.

He said the people of Tamil Nadu wanted a change of government. To fulfil the people's aspirations, our leader Vijayakant also wants all opposition parties in the State to unite to trounce the ruling party at the hustings. Asked whether his party was concerned over the number of seats, Mr. Ramachandran said, “What we are concerned with is the DMK government's exit.”

To a question on whether the DMDK would join the government in the event of the AIADMK-led alliance getting elected to power, he said, “We have already announced that we will not seek any accommodation in the ministry”.

When a reporter pointed out that Mr. Vijayakant had said many times that his party would not have any tie-up with other parties, Mr. Ramachandran said, “The voice of the people is the voice of God. Now, people want the DMK ousted from power and hence we are trying to forge an alliance.” He was confident that such an alliance would be “victorious”.

While the DMDK panel consisted of Mr. Ramachandran, the party's State youth wing secretary Sudeesh, and treasurer Sundarrajan, the AIADMK committee comprised its treasurer O.Panneerselvam, headquarters secretary K.A. Sengottiyan, and election wing secretary Pollachi V. Jayaraman.

Meanwhile, Mr. Vijayakant greeted Ms. Jayalalithaa on her 63rd birthday.

Wednesday, February 23, 2011

சின்னச் சின்ன அவமானங்கள்! (1)

"என்னடா ஸ்ரீகாந்த், ரொம்ப "dull" லா இருக்க?"

"பழைய ஃப்ரெண்டுடா! ரொம்ப நாள் தொடர்பு இல்லை. ஒரு வாரம் முன்னால ரெண்டு இ-மெயில் அனுப்பியும் பதிலையே காணோம். உயிரோட இருக்கானா இல்லையானு தெரியலை! இல்லைனா வேணும்னே பதில் அனுப்பலையானு தெரியலை"

"அவன் பேரென்ன?"

"எதுக்கு ஹிந்துவா, முஸ்லிமானு பார்க்கவா? அது எல்லாம் ரொம்ப அவசியமாடா?"

"ஏண்டா டேய்! பேரைத்தானே கேட்டேன்? சரி, உனக்கென்ன இப்போ திடீர்னு அவன்மேலே அக்கறை?"

"என்னனு தெரியலைடா. திடீர்னு பழைய நினைவுகள். ஒண்ணா பேசிய சில விசயங்கள்லாம் ஞாபகம் வந்தது. ஏதோ misunderstanding தான் தொடர்பு நின்னுச்சு ரொம்ப நாளானதுனால என்னனு சரியா ஞாபகம்கூட இல்லை. திடீர்னு just hi சொல்லனும்னு தோனுச்சு"

"நீ நிறுத்தினயா, அவனா?"

"நிச்சயம் நாந்தான்னு நினைக்கிறேன். It is more than a year now"

"இப்ப திடீர்னு நீ இ-மெயில் அனுப்பயியதும் அவன் பதிலனுப்பனும்? அப்படித்தானே?"

"Why not? ரெண்டு இ-மெயில்டா. I was his friend. Even now, I am his friend. I miss him!"

"May be he does not care about you any more. Does it hurt you?"

"Of course, such a thought hurts! ஆனால் as long as he is healthy and doing good..I am happy for him!"

"If he does not care about you anymore, why do you care?"

" I dont know why. நமக்கு வாழ்க்கையில் எத்தனை நல்ல நண்பர்கள் கெடைக்கிறாங்க? Not that many, right? "

"இந்தா பாரு! It is not always about you, Srikanth? "

"என்னடா சொல்ற?"

"நாளுக்கு நாள் எல்லாரும் மாறிக்கொண்டேதான் இருப்பாங்க. உன்னைவிட நல்ல நண்பர்கள் அவனுக்கு கெடச்சு இருக்கலாம். நீ எதுக்கு அப்புறம்? நீதான் உலகத்திலேயே best ஆ?"

"that is insulting.."

"அதான் காரணம்னு நான் நெனைக்கிறேன்."

"ஏன்டா ரஹீம், வாழ்க்கையில்தான் நமக்கு எத்தனை சின்னச் சின்ன அவமானங்கள்! ?"

"என்ன திடீர்னு தத்துவம்?"

"இல்லை யோசிச்சுப் பார்த்தேன். நம்ம சிறுவயதிலிருந்து எத்தனை அவமானங்களை சந்திச்சு இருக்கோம்னு. சின்னச் சின்ன தலைகுனிவுகள்..இன்று நெனச்சு வெட்கப்படும் அளவுக்கு செய்த சிறு தவறுகள்.. எல்லாரும் நம்மைப் பார்த்து சிரித்து கேலிபண்ணிய தருணங்கள்.."

"ஆரம்பிச்சுட்டியா?"

"எனக்கு ஒரு விசயம் சொல்றியா? நீ எல்லாம் எப்படிடா இது மாதிரி எதிலும் மாட்டாம இருக்க?"

"யார் சொன்னா?"

"இல்லை ஒரு நாளும் என்ன மாரிப் பொலம்பிப் பார்த்ததில்லையே!'

"I think we all get insulted like that now and then. That is life. I just dont think about it. That's all."

"சொல்லேன் எதாவது?"

"சொல்லனும்னா அந்த அவமானத்தை மனதில் கொண்டு வரனும். என் mood spoil ஆகும். I do think about such incidents sometimes"

"When?"

"ஏதாவது மோசமான moodல இருக்கும்போது.."

"Really?!"

"ஆமடா ஏதாவது மோசமான moodல இருக்கும்போதுதான் இது மாதிரி நினைவுகள் வந்து தொலைக்கும்!"

"என்னவோ போ! அவன் எங்கிருந்தாலும் வாழ்க!"

"விட்டுத் தொலைடா அவனை! "

Tuesday, February 22, 2011

சாருநிவேதிதா ஒரு படிக்காத மேதையா?

முறைப்படி பள்ளி சென்று படித்து பட்டம் வாங்கியவங்க எல்லாருமே பெருசா சாதிக்கவும் இல்லை! கல்லூரி சென்று படிக்காதவங்க மேதையாவும் சாதனையாளர்களாகவும் ஆகியிருப்பதையும் நாம் நெறையவே பார்த்திருக்கோம்!

அரசியல்வாதிகள்/முதல்வர்கள் காமராஜ், கருணாநிதி, எம் ஜி ஆர், எல்லாம் கல்லூரிக்கே போனதில்லைனு எல்லாருக்கும் தெரியும். அதேபோல் நடிகர்கள் சிவாஜி, ரஜினி, கமல், எல்லாம்கூட கல்லூரிக்கே சென்றதில்லை.

கவியரசர் கண்ணதாசன்கூட அப்படி ஒண்ணும் பெருசா படிக்கவில்லைதான்.

எழுத்தாளர்களை எடுத்துக்கிட்டாலும் ஒருவருடைய படிப்புக்கும் அவருடைய எழுத்துத் திறமைக்கும் சம்மந்தம் இருக்கனும்னு அவசியமே இல்லை என்பது உலகமறியும்.

ஒரு காலத்தில் எழுத்தாளர்கள் எல்லாம் தமிழ் இலக்கியம் படிச்சு இருப்பாங்கனு நான் நினைப்பதுண்டு. சரி இன்றைய பின்நவீனத்துவ எழுத்தாளர்கள் (அப்படினா என்னனு எனக்கு இன்னும் சரியா விளங்கலை) என்ன படிச்சு இருக்காங்கனு அது பற்றி கொஞ்சம் உள்ள இறங்கி பார்ப்போம்னு இன்னைக்கு பெரிய பெரிய எழுத்தாளர்கள் என்று சொல்லப்படும் நம்ம சாரு நிவேதிதா, ஜெயமோஹன், எஸ் ராமகிருஷ்ணன் பற்றிக் கொஞ்சம் தேடிப் பார்த்தேன்.

விக்கில போய்ப் பார்த்தால் அவங்க வயசு, பிறந்த ஊர் போன்றவை மட்டும் அதுவும் ஓரளவுக்குத்தான் இருக்கு. எந்தப் பள்ளி, எந்தக் கல்லூரில படிச்சாங்கனு ஒரு விபரம்கூட இல்லை!

சாரு நிவேதிதா பையோடேட்டாவில் (அவர் தளத்திலும் மற்றும் விக்கியிலும்) சாரு நிவேதிதா படிப்பு பற்றி ஒண்ணுமே தெளிவாகயில்லை! நாகூர்ல பிறந்து வளர்ந்து அதுக்கப்புறம் எந்தப் பள்ளி, எந்தக்கல்லூரில என்ன படிச்சாரு? டெல்லிக்கு எப்போப் போனாரு? அங்கே என்ன படிச்சாரு? எந்த வயதில் தமிழ் எழுத்தில் ஆர்வம் வந்ததுனு ஒண்ணுமே சரியாக தெளிவாகப் போடவில்லை. ஓரளவுக்கு தன்னைப் பற்றி அவர் எழுதனும் இல்லையா?


ஜெயமோஹன்
தன் தளத்தில் தன்னைப்பற்றிக் கொஞ்சம் விளக்கமாகவே எல்லாம் கொடுத்துள்ளார். ரொம்ப எதார்த்தமாக இருக்கட்டுமே என்று தன் சாதியைக் கூட சொல்லியிருக்கார்னு எடுத்துக்குவோம். தன் படிப்பு (வணிகவியல்), வேலை மற்றும் எல்லா விசயங்களையும் ரொம்ப நேர்மையா தெளிவா எழுதி இருக்க மாதிரித்தான் இருக்கு.

புகுமுக வகுப்பு மார்த்தாண்டம் [இப்போது நேசமணி நினைவு] கிறித்தவக் கல்லூரியில். வணிகவியல் துறை. 1979ல். ஆர்தர் ஜெ ஹாரீஸ் முதல்வராக இருந்தார். ஐசக் அருமை ராசன் தமிழ்த்துறையில் இருந்தார். இருவரும் அக்கால ஆதர்சங்கள். 1980ல் நாகர்கோயில் பயோனியர் குமாரசாமிக் கல்லூரியில் வணிகவியல் இளங்கலை படிப்பில் சேர்தேன். அப்போது ஆர்தர் டேவிஸ் முதல்வராக இருந்த காலம். டாக்டர் மனோகரன் வணிகவியல் துறைத்தலைவர். 1982ல் கல்லூரிப்படிப்பை முடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறினேன்.

எஸ் ராமகிருஷ்ணனும்
அவர் தளத்தில் ஜெயமோஹன் போலவே தன்னைப்பற்றி, தன் படிப்பு எல்லாவற்றையும் ஓரளவுக்குத் தெளிவாகக் கொடுத்து இருக்கிறார். ஆங்கில இலக்கியம் படித்து இருப்பார் போல இருக்கு. அதில் பி எச் டி பண்ண ஆரம்பித்துவிட்டு பாதியில் தூக்கி எறிந்துவிட்டதாக சொல்கிறார்.

கல்லுரி நாட்களில் எழுதத் துவங்கினேன். எழுதிய முதல்கதை கபாடபுரம். அது கையெழுத்து பிரதியாக நண்பர்களால் வாசிக்கபட்டு தொலைந்து போனது. வெளியான முதல்கதை பழைய தண்டவாளம் கணையாழியில் வெளியானது.

ஆங்கில இலக்கியம் கற்று அதில் டாக்டர் பட்ட ஆய்வு மேற்கொண்டேன். ஆனால் ஊர்சுற்றும் மனது படிப்பைத் தூக்கி எறிய வைத்தது.

வயசுன்னு பார்த்தால் சாருதான் எல்லாருக்கும் அண்ணன் போல இருக்கு! ஹி இஸ் இன் ஹிஸ் பிஃப்டிஸ்லனுதானே சொன்னாங்க? அவருடைய பிறந்த தேதியும் வயதும் விக்கில போடலை!

ஜெயமோஹன் (ஏப்ரல் 22, 1962), வயது வச்சுப் பார்த்தால் சாருக்கு தம்பி, எஸ் ரா வுக்கு அண்ணன்.

எஸ் ராமகிருஷ்ணன் தான் எல்லாருக்கும் தம்பினு தோனுது (ஏப்ரல் 13, 1966)!

பாப்புளாரிட்டியும், வயதும் ஒரு மாதிரி பாரெலெல்லாகத்தான் போகுற மாதிரி இருக்கு!

பின் குறிப்பு: சாரு, படித்துப் பட்டம் வாங்கியவராகவும் இருக்கலாம். விபரம் தெரிந்தவர்கள் பிறந்த தேதி, வயது சொல்லப்பட்டிருக்கிற தொடுப்புக் கொடுக்கவும்! நன்றி.

Monday, February 21, 2011

நடுநிசி நாய்க்கு XXX சான்றிதழ் கொடுத்தால் என்ன?

பதிவுக்கு அதிக ஹிட்ஸ் கெடைக்க செய்கிற யுக்திகள் போலவே "இது ஒரு உண்மைக்கதை!" அப்புறம் "பலஹீனமானவங்க பார்க்காதீங்க!" னு சொல்லி ஓரளவுக்கு எல்லாரையும் டெம்ப்ட் பண்ணி காசைப் பார்த்துட்டாரு சினிமா வியாபாரி கவுதமு-மேதாவி-மேனனு! நடுநிசி நாய்கள் படம் எடுக்கப் போட்ட காசு 2 கோடிக்கு மேலே இருக்காதாம்! அப்போ எங்கே படம் விழுக? விழுந்தாலும் கெளதம் மேனனுக்கு பல கோடி இலாபமாம்!

ஒருவேளை, செண்ஸாரே படத்தை நிறுத்தி இருந்தால் போட்ட காசு வந்து இருக்காதுதான். செண்ஸாரைக் கடந்துவிட்டதால படம் விழுக சாண்ஸே இல்லை! அதுவும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின்மூலம் கவுதம்-மேதாவி-மேனன், இன்னைக்குப் புகழ் உச்சியில் இருப்பதாலும் மேலும் இந்தக் குப்பை ஒரு லோ பட்ஜெட் என்பதால் ஃப்ளாப் ஆனாலும் படம் வெற்றிதான். ஸ்ரிதர் பிள்ளை ட்வீட்ஸ்ல படம் கமர்சியல் வெற்றியடைஞ்சிருச்சுனு சொல்றாரு! கவுதமு போட்டகாசுக்கு மேலே அள்ளிட்டாருனு சொல்லி இருக்காரு!

சிறுவர் சிறுமியரை செக்ஸ¤வல் அப்யூஸ் செய்வது போல கற்பனைக்கதையோ நிஜக்கதையோ எடுப்பது எனக்கு சுத்தமாக ஆகாத ஒண்ணு. அதுபோல் உலகில் எந்த மூலையிலும் நடக்கவில்லைனு யாரும் சொல்லவில்லை! உலகில் நடப்பதை எல்லாம் காட்டனுமா?

ஒருமுறை கமலஹாசன் தமிழ்ப்படங்களில் அப்பட்டமான கிஸ்ஸிங் ஸீன் எடுப்பதை பலர் பலவிதமாக விமர்சிச்சபோது, என்ன சொன்னார்னா “நான் என் மனைவியை கிஸ் பண்ணுறேன். அதேபோல் படத்தில் ரியலிஸ்டிக்கா காட்டினால் என்ன தப்பு?” னு கேட்டாரு மனுஷன். உண்மைதான்! அப்போ மனைவியை நாலு சுவத்துக்குள்ளே என்ன என்ன செய்றோமோ அதை எல்லாம் அப்படியே சினிமால வர்ற மனைவிட்ட செய்றாப்பிலே அப்பட்டமாக எடுத்து எல்லோருக்கும் காட்டினால் படத்துக்கு XXX சான்றிதழ் இல்ல கொடுக்கனும்? எப்படி A சான்றிதழ் பத்தும்?னு ஒரு கேள்வி எழாதா? என்ற விவாதங்கள் வந்தன. ஒரு வழியாக கமல் புரிஞ்சுக்கிட்டார், இதெல்லாம் ஆவுறதில்லைனு!

இப்போ நம்ம கவுதம்-மேதாவி-மேனன் சைல்ட் மொலெஸ்டேஷன், அப்யூஸ், செக்ஸ் ஆர்ஜி அது இதுனு அவருடைய நவீன போர்ண் அறிவை வச்சு, “உண்மைக்கதை” நு ஒரு பொய்யைச்சொல்லி A லயிருந்து XXX க்கு தாவுகிறார். என்னுடைய கேள்வி இதுதான். தமிழ் சினிமாவில் மாக்ஸிமம் A சான்றிதழ்தான் கொடுக்கமுடியும். " A சான்றிதழ்" என்கிற வரையறையத் தாண்டும்போது, செண்ஸார் XXX சான்றிதழ் கொடுத்தால் என்ன? நான் கேள்விப்பட்ட வரைக்கும் இதுபோல் A சான்றிதழ் பெற்ற இந்த நடுநிசி நாயைப் பார்க்க சிறுவர் சிறுமியரை முட்டாள் பெற்றோர்கள் அழைத்துச் சென்றார்களாம்! "XXX" கொடுத்தால் ஒருவேளை சிறுவர்களை அழைத்துச் சொல்ல மாட்டார்கள்! XXX சான்றிதழ் படங்கள் வெளிவருவது சட்ட விரோதமா? அதெல்லாம் கவுதமுக்காக அதை வெளியிடலாம்தான்.

சாமி எடுத்துவிட்ட ஒரு ஒரு எயிட்ஸ் அவேர்னெஸ் படமான “மிருகம்” படத்தைக்கூட ஓரளவுக்கு ஜஸ்டிஃபை பண்ணலாம்.

இதை எப்படி கவுதம்-மேதாவி -மேனன் ஜஸ்டிஃபை பண்ணுவாரோ என்கிற கேள்விக்கு, இதோ மேதாவி பதி சொல்லுறாரு!

Gautham Menon : "Nadunisi Naaygal is new age Tamil cinema. I have tried to break the rules of regular Tamil cinema with this film. It's also in a genre that is new to me. It's experimental in the sense that it is a dark and disturbing film. It's a contrast to all my earlier films in every sense. In a way, it's an announcement that I am always looking to break away from a style that I am known for and create a new style for myself.

Adds Menon: "Anything experimental and new will always be received with bouquets and brickbats and I am at a stage in my career where I fully understand that. I stand by this film with a lot of conviction. Its not a film that you can walk out of saying that you loved it unless you are fond of this genre of films. It's an experience, that's all it is. And the last frame before the direction card will tell you why I decided to make this film. Your encouragement will hopefully pave the way for a new style in Tamil cinema and a new breed of Tamil filmmakers."

நன்றி, SIFY!

Well just like I thought he is defending his "XXX" attempt in Tamil Cinema that he is taking us/Tamil Cinema to "NEW LEVEL"! But the fact is Gautham Menon f'cked up this time with his worthless plot for making filthy money! இது ஒரு உண்மைக்கதை என்பது பொய்னு சொல்வதைவிட, ஏதாவது "அடல்ட் சைட்" ல வந்த "உண்மைக்கதை"யா இருக்கலாம்தான்!

I wonder what is his next step to take us to higher level? LOL

Friday, February 18, 2011

பா ம க - தி மு க கூட்டணி! ஜோஸ்யருக்கு பொன்னாடை!


நான் நெசம்மாவே அந்த ஜோஸ்யர் சொன்னதை நம்பவே இல்லை!ஜோஸ்யத்தை எப்படி என்ன மாதிரி ஒரு ஆளு நம்புவாங்க? ஆனால் இன்னைக்கு நம்ம மருத்துவர் ராமதாஸ் 31 சீட் வாங்கி தி மு க வுடன் தேர்தல் கூட்டணி அமச்சுக்கிட்டாருனு சொன்னதும், மொதல் வேளையாக நம்ம ஜோஸியருக்கு ஒரு பொன்னாடை ஒண்ணை வாங்கிப்போயி அதை போட்டு மரியாதை ஜெஞ்சிப்புட்டாச்சு ! "ஐயா! நீங்க கடவுளுக்கு ரொம்ப க்ளோசா? எப்படி இதெல்லாம்"னு கேட்டேன்! அவரு அதுக்கு "இதன்ன பெரிய விசயம்?, நான் வருகிற சட்டமன்ற தேர்தலில் யாரு செவிப்பானே சொல்லிடுவேன்" னாரு மனுஷன்! "சரி, சரி, அவசரப்படாதீங்க"னு அவர் வாயைகட்டி வச்சுட்டு இங்கே ஓடியே வந்து நம்ம ஜோஸ்யர் பத்தி சொன்ன பதிவை உங்களுக்கு தொடுப்புக் கொடுக்க வந்துப்புட்டேன்!

ராமதாஸு யாரோட கூட்டணி சேருவார்? ஜோஸ்யர் கணிப்பு பதிவைப் பாருங்கப்பா! எல்லாரும் நம்ம ஜோஸ்யரை பாராட்டி ஜோரா ஒரு தர கைதட்டுங்க!

இந்தா இருக்கு ஐயா ராமதாசோட முடிவு!

PMK clinches alliance with DMK, gets 31 seats

The ruling DMK on Friday entered into a seat-sharing agreement with the PMK for theTamil Nadu Assembly elections by allotting 31 seats to the party and assuring its support for a Rajya Sabha nomination.

Chief Minister M. Karunanidhi and PMK founder S. Ramadoss signed the agreement at the DMK President’s Gopalapuram residence here after two hours of discussion.

“I came a happy man to invite the Chief Minister for my grandson’s marriage. I am returning a happy man,” Dr Ramadoss told reporters, explaining the deal clinched between his party and the DMK

The number of seats given to the PMK is the same as the 31 it was allotted in the Assembly elections in the DMK alliance. The DMK contested 132 seats, the Left parties together got 23 seats and the Congress 48.

Though the relationship between the DMK and the PMK was on a roller-coaster ride in the wake of the Chief Minster’s remarks that Congress president Sonia Gandhi was against including the PMK in the alliance, both sides buried the differences and reached an accord.

As things stand now, the Congress can get a maximum of 61 seats. The DMK has 23 seats to spare, as the Left parties are now in the AIADMK camp. Mr. Karunanidhi may not be in a position to part with all of them to the Congress as the Viduthalai Chiruthaigal Katchi (VCK) has joined the alliance.

Asked whether the party would seek the same constituencies it had contested last time, Dr Ramadoss said the committee appointed for the purpose would identify the constituencies.

He expressed the hope that the DMK-Congress combine would win the polls in the state.

Asked whether he had plans to meet AICC president Sonia Gandhi in the wake of completion of seat-sharing, he said former Minister Anbumani Ramadoss had already met the Congress leader.

He declined to answer the question on whether the PMK’s bargaining power had come down since the party had to settle for 31 seats though he wanted 45 seats.

“It has neither come down nor gone up. I will meet the reporters separately to explain,” he said.

When reporters recalled his comment in 2006 that the DMK was neither generous nor stingy in allotting seats for the PMK and sought his view now, he said, “I leave it to your interpretation.”

Keywords: Assembly poll alliance, Tamil Nadu elections

-Hindu

நன்றி ஹிந்து! நன்றி ஜோஸ்யரே!

அப்போ இனிமேல் நானும் ஜோஸ்யத்தை நம்பித்தான் ஆகனுமா? :(

Wednesday, February 16, 2011

மாட்டுப்பொண்ணுனா Cowgirl-ளா?


கீழே கொடுக்கப்பட்டுள்ளது ஜெயமோகன் தளத்தில் யாரோ அவர் கதைகளைப் பாராட்டி எழுதிய பின்னூட்டம். இதில் ஒரு பிராமணர் பாஷை நல்லாத் தெரிந்தவர் என்ன சொல்லி இருக்கார் னா, அத்தையை அம்மா என்றும், மருமகளை மாட்டுப்பெண் என்று சொல்வதுதான் பிராமணர்கள் வழக்கம் என்கிறார்.

ஐந்து கதைகளிலும் என்னை அறைந்தவை அறமும், வணங்கானும்தான். கெத்தேல் சாஹிப், ஆறாம், வணங்கான் மூன்றுமே inspiring. தாயார் பாதம் நன்றாக இருந்தாலும் என்னைப் பொறுத்த வரையில் ஐந்தாவது இடம்தான். பாலசுப்ரமணியம் யார் என்று தெரியவில்லையே! கொஞ்சம் nitpicking . // உள்ள போய் என்ன அத்தைன்னு தொட்டதுமே தெரிஞ்சுடுத்து. // பிராமண மருமகள்கள் இல்லை இல்லை மாட்டுப்பெண்கள் மாமியாரை அம்மா என்றுதான் அழைப்பார்கள், அத்தை என்று இல்லை – அதுவும் தஞ்சாவூர்க்காரர்களுக்கு இன்றும் அப்படித்தான். அதே போல [...]

"ஆத்துக்காரர்" என்றால் அகத்துக்காரர்னு சரியான அர்த்தம் என்று சொன்னதும் பரவாயில்லையே னு தோணியது.

அதேபோல் "மாட்டுப்பெண்" என்று ஏன் அழைக்கிறார்கள் என்று யாராவது தமிழ் அறிஞர்கள் விளக்கினால் நல்லாயிருக்கும்! ஒருவேளை "மாற்றுப்பெண்" என்ற அர்த்தமோ? "மாற்றுப்பெண்" என்பதுதான் மருவி "மாட்டுப்பொண்ணானது" என்றாலும் எல்லோருடைய தமிழ் உச்சரிப்பையும் கேலி செய்யும் பிராமணர்கள் எப்படி இப்படி அர்த்தத்தையே மாற்றும் அளவுக்கு கவனக்குறைவா இருந்தாங்க?

இதுபோக ஒரு ஜானகிராமன் கதையில் "ஷட்டகன்" என்கிற ஒரு வார்த்தை வந்தது. அதுக்கும் அர்த்தம் சரிவர தெரியவில்லை!

யாரையும் கேலிசெய்யும் கெட்ட எண்ணத்தில் இந்தப்பதிவு ஆரம்பிக்கவில்லை. ஆனால் தலைப்பு சும்மா ஒரு ஜாலிக்காகத்தான் போட்டிருக்கேன். யாரும் சண்டைக்கு வர வேண்டாம். ஆங்கில மொழி பெயர்ப்பில் "கவ்கேர்ள்" னா இப்படித்தான் இருப்பாங்க். மேலும் "கவ்கேர்ள்" என்பது ஒரு செக்ஸுவல் இண்டெர்கோர்ஸ் பொஸிஷன் என்றும் சொல்றாங்க!

நன்றி! வணக்கம்!

பதிவுலகில் திமுக காரர்களுக்கு பஞ்சம்!

ஒரு காலத்தில் பதிவுலகில் ரசினியை என்னவேணா திட்டலாம்! கேக்க நாதி இருக்காது! இப்போ அது ரொம்ப கொறைஞ்சி போயிருச்சு! பதிவர்களுக்கு போர் அடிச்சிருச்சா என்னனு தெரியலை!

மற்றபடி எப்போவுமே என்றும் காண்ட்ரோவேர்ஸியல் சாருவை திட்டி என்னத்தையாவது எழுதி எளிதில் சூடாக்கலாம். அதாவது சாருவின் தேகம் பத்தியும் எந்திரனில் ஐஸ்வர்ராய் பின்பிறம் பற்றியும் மிக்ஸ்ப் பண்ணி எதையாவது பேசி கோயிலப்பட்டி முறுக்கு விக்கலாம்! அதெப்படி இது ரெண்டையும் இணைக்க முடியும்? பதிவுலகில் எல்லாமே முடியும்ங்க!

சமீபத்தில் பதிவுலக சூப்பர் ஸ்டார் சாருக்குப் போட்டியா சீமான் போட்டிக்கு வந்து நின்னாரு. அதாவது மாவீரன் சீமான் பத்தி தலைப்பில் பேசினால்/எழுதினால் உங்க பதிவு ரொம்பவே விரும்பி வாசிக்கப் படும்! இப்போ சீமான் அண்ணே அம்மா ஜால்ரா ஆனதும் ஓரளவுக்கு அவர் சூப்பர் ஸ்டார் பதவிக்கு அழிவுகாலம் வந்துருச்சு. தன்னால் தனிப்பட்ட முறையில் செய்யமுடியாமல் ஜெயா பின்னால போய் நிக்கிற எவனுமே தன்மானமுள்ள தமிழனா எப்படி இருக்க முடியும்?னு மக்களுக்கு சந்தேகம் வந்துருச்சு.

அதிசயமாக இன்னைக்கு பதிவுலகில் திமுக காரர்களுக்கு ரொம்பவே பஞ்சமாகிப் போயிடுச்சு. கலைஞர் தும்மினாலும் இருமினாலும், அதிலும் அரசியல்தான் இருக்குனு சொன்னாலும், எதுக்கெடுத்தாலும் கலைஞரை கண்ணா பின்னானு விமர்சிச்சாலும் நியாயம் கேக்க ஒரு திமுக் காரன் இல்லாமல் நாதியில்லாமல் போச்சு.

ஒரு வேளை தி மு க காரங்க எல்லாம் எதையும் தாங்கும் இதயம் கொண்டவங்களா ஆகிட்டாங்களானு தெரியலை! அல்லது காங்கிரஸ் கூட்டணியோட நிக்கிற எப்படியும் நாங்கதான் ஆட்சியப் பிடிக்கபோறோம், தூற்றுவார் தூற்றட்டும்னு கண்டுக்காமல் இருக்காங்களானு தெரியலை!

இதிலென்ன கொடுமைனா திமுக அல்லாதவர்கள் எல்லாம் இப்போ கலைஞருக்கு வக்காலத்து வாங்க வேண்டிய பரிதாப நிலை உருவாகிப்போச்சு! பதிவுலகில் தி மு க காரங்க எப்போ திரும்ப வந்து ஆதிக்கம் செலுத்த போறாங்கனு ஒரே ஏக்கமாயிடுச்சு போங்க. அட் லீஸ்ட் அநியாயமாக/எந்த ஒரு நியாயமே இல்லாமல் கலைஞர் தாக்கப்படும் போதாவது வந்து என்னனு ஒரு பின்னூட்டம் போட்டுக் கேளுங்கப்பா!

Tuesday, February 15, 2011

தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு!

தமிழ்மணத்தில் இருந்து திரைமணத்தை பிரித்ததால், திரைப்படம் சம்மந்தப்பட்ட இடுகைகளை இரண்டாம்தரமாக ஆக்கி உண்மையிலேயே நல்ல முன்னேற்றம்தான் அடைந்தோம். ஆனால் சமீபத்தில் திரைமணத்தில் திரைப்படம் சம்மந்தமே இல்லாத கண்ட "spam" பதிவுகள் பல (search results? web directory?") புதிய இடுகைகளில் இடம்பெறுகின்றன. :(

இதை தமிழ்மண நிர்வாகிகள் அறிவார்களா? இதெல்லாம் எப்படி தமிழ்திரை வகையில் சேர்க்கமுடியும்? இது ஒரு மாதிரியான "abuse" ஆ? இல்லைனா தமிழ்மணமே இதை அனுமதிக்கிறாங்களா? னு எனக்குத் தெரியலை. அதை தமிழ்மணத்துக்கும், பலருக்கும் சொல்லலாம்னுதான் இந்தப்பதிவு!

தன் மகளுக்காகத்தான் ரஜினியின் இந்த ராணா வா?


ரஜினியின் சம்பளம் ஒரு 30 கோடி அல்லது 35 கோடி இருக்குமா? அதெல்லாம் இண்கம் டாக்ஸ் டிப்பார்ட்மெண்ட்க்குத்தான் தெரியும். ரஜினி கோடி கோடியா தமிழர்கள் பணத்தை கொள்ளையடிச்சு வச்சு இருக்கார்னு ஒரு சில குற்றச்சாட்டுக்களை ஓரமா வச்சுட்டு, இன்னைக்கு நிலைமைக்கு ரஜினி நிலைமையைப் பார்ப்போம். இன்னைக்கு ரெண்டு வருடத்துக்கு ஒரு படம் ரஜினி பண்ணுவதால் விஜய், தனுஷ், சூர்யா ஒரு வருடத்துக்கு சம்பாரிக்கிற அளவுதான் ரஜினியும் ஒரு நடிகனா சம்பாரிக்க முடியும் என்பதுதான் நிதர்சனம். இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்னு ஒர் பேரு இருந்தாலும் நடிகனா வருமானம் என்பது ஒண்ணும் அள்ளி கொட்டப்போவதில்லை. ரஜினிக்கு வயது 60க்கு மேலாகிவிட்டதால் அதுவும் இன்னும் சில வருடங்களில் முடியாது.

இதற்கிடையில் அவரு ரெண்டாவது பொண்ணு என்ன பண்ணுறார்னு தெரியலை. சமீபத்தில் ஏதோ பணப்பிரச்சினைனு (எதோ செக் பவுண்ஸ் ஆனதாக) எல்லாப் பத்திரிக்கையில் வருமளவுக்கு கவனக்குறைவா இருந்து இருக்கமாதிரி இருக்கு. அதுபோக சுல்த்தான் த வாரியர் படத்தில் எவ்ளோ இண்வெஸ்ட் பண்ணினார்னு தெரியலை. இவர் "விளையாட்டு" முயற்சிக்கு விலை 10 கோடியா இருந்தாலும் படம் வெளிவந்தாத்தான் போட்ட காசையாவது எடுக்க முடியும். இதுபோல் கார்டூன் படங்களெல்லாம் எடுபடுமா?னு தெரியலை. இன்னும் அந்தப்படம் முடிந்த பாடில்லை. வீணாப்போன "கோவா" வும் ஒண்ணும் பெருசா வெற்றியடையவில்லை!

எந்திரனுக்கு அப்புறம் ரஜினி நடிக்கிறதை நிறுத்திவிடுவார்னு எதிர்பார்க்கப்பட்டது. நான் நிச்சயம் எதிர் பார்த்தேன். ஆனால் இப்போ ராணா அறிவிப்பைப்பார்த்தால், ரஜினி இப்போதைக்குள்ள நடிக்கிறதை நிறுத்தப்போவதில்லை போல இருக்கு. எந்திரனிலோ, சிவாஜியிலோ பி அண்ட் சி செண்டர் தியேட்டர் ஓனர்கள் சந்திரமுகி அளவுக்கு சம்பாரிச்ச மாதிரியும் தெரியலை. எந்திரன் படத்தில் 43 கோடி சன் நெட்வொர்க் சம்பாரிச்சதா கணக்குக் காட்டி இருக்காங்க. அவங்க ஒரு வழியா தப்பிச்சாங்க, ஷங்கர் கனவை நனவாக்கியதுடன்! படம் வெளியிட்ட ஒரு சில தியேட்டர் ஓனருக்கு நஷ்டம்கூட வந்து இருக்கலாம்.

இப்போதுள்ள நிலையில், ராணாவையும் சந்திரமுகி போலே ஒரு சின்ன பட்ஜெட் படம் எடுத்தால்தான் எல்லோரும் சம்பாரிக்க முடியும். பொதுவாக லோ பட்ஜெட் ரனினி படம் விழுந்தாலும் போட்ட காசை எடுத்து விடுவார்கள்- இதுவரைக்கும். இனிமே எப்படினு தெரியலை.

இப்போ, ரஜினி, சுல்த்தான் த வாரியரை (ஹாரா?)முடிக்கமுடியாமல் இருக்கும் தன் மகளுக்கு உதவி செய்வதற்காக இந்த வயதில் அடுத்த படம் பண்ணிக்கொடுக்க முடிவு செய்திருக்காரோ என்னவோ.

ராணா..கே எஸ் ரவிக்குமார் இயக்கம். தீபிகா படகோன் ஹீரோயின், ஏ ஆர் ரகுமான் இசைனு சொல்றாங்க! நிச்சயம் இது ஒரு சுமார் 40 கோடி பட்ஜெட் படமாத்தான் இருக்கும் என்று நம்புகிறேன். சந்திரமுகி போலே க்ளிக் ஆச்சுனா தியேட்டர் ஓனர்கள் அள்ளலாம்! இல்லை சுமாராப் போச்சுனா, எந்திரனுக்கு மாதிரி பெட்டிக்கு பெரிய தொகை கொடுக்காமல் வாங்கினால், நிச்சயம் இலாபம் வரும் என்பதுதான் இங்கே கணக்கு.

இந்த ராணா படம் பலர் சொல்வதுபோல சவுந்தர்யா தயாரித்தால், ரஜினி இந்தப்படம் செய்வதே தன் மகளுக்கு பண உதவி செய்யத்தான் (கல்யாண சீர் கொடுக்க?) னுதான் தோனுது. பார்க்கலாம், உண்மை என்னனு போகப்போக!

Monday, February 14, 2011

நாவல் படிப்பவர்களும்! கதைகளை வெறுப்பவர்களும்!

ஸ்டார் விஜய் யில் நீயா நானா? நிகழ்ச்சியில் நடந்த இந்த தலைப்பில் ஒரு விவாதத்தைப் பார்க்க நேர்ந்தது. ரெண்டு பக்கமும் ரெண்டு வீணாப்போன குழு உக்காந்துகொண்டு விவாதம்னு என்னத்தையோ அர்த்தமில்லாமல் பேசிக்கொண்டு இருந்தாங்க! நடுவரும் (மாடெரேட்டர்) ஏதோ ரொம்ப சுமார்தான். அவரு பேரு எல்லாம் என்னனு தெரியலை.

நாவல் படிக்காதவங்க, நாவல் ஒரு கற்பனை கதை, உலகுக்கும் வாழ்க்கைக்கும் தேவையற்றது, "சும்மா கனவுலகில் சஞ்சரிப்பவர்கள்தான் வாசிப்பாங்க" என்று நாலுவரி ஒழுங்காப் பேசமுடியாதவங்களா பரிதாபமா எதையோ சொல்லிக் கொண்டு இருந்தாங்க, ஒரு பக்கம்.

நாவல் படிக்கிறவங்களும் நாவல் படிக்காதவன் எல்லாம் ஏதோ வாழ்க்கையை வீணாக்குகிறாங்க என்பதுபோல ஒரே உளறல். நாவல் படிக்கிறவங்களாவது ஒழுங்கா ஏதாவது பேசுவாங்களானு பார்த்தால் அதுவும் ஒரு பெரிய ஏமாற்றம்தான்.

பதிவுலகில் இருந்து ஒரு அம்பது பேரை செலக்ட் பண்ணி இந்த விவாதம் நடத்தி இருந்தால் நல்லாயிருந்து இருக்கும்.

பதிவுலகிலேயே நீங்க இதே ட்ரெண்டை கண்கூடாகப் பார்க்கலாம். அதாவது நாவல், சிறுகதை படிக்கிற வாசகர்கள் ரொம்ப கம்மியாத்தான் இருக்காங்க. அதுக்காக அவங்களை, அவங்க தரத்தை யாரும் இதிலிருந்து நிர்ணயிக்க முடியாது.

நான் பார்த்தவரைக்கும் பதிவுலகில் சிறுகதை அல்லது நாவல்கள் பிரபலமாவது ரொம்ப ரொம்ப அரிது (ஏதாவது பிரபலமாவது போல "கள்ளக்காதல்" "காமத்தீ" அப்படினு போட்டு இருந்தால்) நாலுபேருக்குப் பதிலா ஒரு நாப்பது பேரு வருவாங்க. இல்லைனா ஏதாவது போட்டி நடத்தி பரிசு தருவதாகச் சொன்னால் அதை "பரிசு" க்காக வாசிப்பார்கள். மற்றபடி கதைனா பொதுவாக வாசகர்கள் "ஜகா"தான் வாங்குகிறார்கள்.

இதைப்பத்தி நாலு விபரம் தெரிந்தவர்கள் உங்க கருத்தை சொல்லுங்களேன், ப்ளீஸ்? பயப்படாதீங்க! உங்க கருத்தை சும்மா சொல்லுங்க! யாரும் தப்பா எடுத்துக்க மாட்டாங்கங்க! :)


* நாவல் படிப்பதில் என்ன நன்மை?


* சும்மா சினிமா மாதிரி இதுவும் பொழுது போக்குத்தானா?


* நம்மில் நாவல் படிக்கிறவங்க ரொம்ப கம்மியா இருக்க உண்மையான காரணம் என்ன?


* நாவல் படிக்காதவங்க எல்லாம் நல்ல ரசனை இல்லாதவங்களா?


* இல்லை நாவல் படிக்கிறவங்க எல்லாம் ஏதோ ஒரு வகையில் உயர்ந்த ரசனை உள்ளவங்களா?


எனக்குத் தெரிய நண்பர் * ராஜ நடராஜன் ஒருமுறை, கதை படிச்சா எனக்கு தூக்கம் வரும் வருண்" னு சொன்னாரு! என் "போரான" கதையைத்தான் அப்படி சொன்னாருனு நான் நெனச்சுக்கிட்டேன். :)

Saturday, February 12, 2011

காதலர் தினம் நமக்கு அவசியமா? (18+)

இன்னைக்கு அமெரிக்காவில் 13 வயதுப் பொண்ணு டேட்டிங்கு அவங்க பெற்றோர்கள் பெர்மிஷனுடன் அனுப்பபடுகிறாள். 15 வயதில் சே·ப் செக்ஸ் ப்ராக்டிஸ் பண்ணுறாங்க! காதல்தான் அவங்க திருமணத்திற்கு அடிப்படை! முதன் முதலில் கிஸ் பண்ணிய, செக்ஸ் வச்சிக்கிட்ட பாய்·ப்ரெண்டு/கேர்ல் ·ப்ரெண்டை அவங்க கல்யாணம் செய்வது அரிதிலும் அரிது. ஹைஸ்கூல் காதல், காலேஜ், காதல், அப்புறம் “உண்மையான காதல்”னு நாலஞ்சு காதல் வந்திடும் கல்யாண்ம முடியுமுன்னே! காதலர் தினம் அவங்க வாழ்க்கை முறைக்கு 100% சரி.

நம்ம ஊரில் காதல் அந்தக் காலத்துல இருந்து கணவன் - மனைவிக்கு இடையே, காதலர்களுக்கு இடையே இருந்துகொண்டுதான் இருக்கு. ஆனால் இந்தக் “காதலர் தினம்” திடீர்னு நம்ம கலாச்சாரத்தில் புகுந்துள்ளது. இப்போலாம் ஹோலிப் பண்டிகை எல்லாம் நம்மாளு (தமிழன்) கொண்டாடுறான். அந்தக்காலத்தில் வாழ்ந்த நம் மக்கள் தன் பொறந்த நாளைக்கூட பெருசா கொண்டாடியது கெடையாது. நெறையாப் பேருக்கு தன் பொறந்த நாள் என்னைக்குனுகூட சரியாவே தெரியாது. தீபாவளி, பொங்கல், வருடப்பிறப்பு போன்றவைகளைத்தான் பெருசா (புத்தாடை அணிந்து) கொண்டாடினாங்க. கல்யாணம் ஆகாதவர்களுக்குள் காதல் மனதிலேயே உருவாகி வாழ்ந்து அழியும் ஒன்றாகத்தான் இருந்தது. அதை வெளியில் சொன்னால் அசிங்கம் என்று நம்பப்பட்டது.

நம்ம ஊர்லயும் இன்னைக்கு காதல், டேட்டிங், பாய்·ப்ரெண்டு, செக்ஸ்னு உலகறியச் சொல்ல, பேச இந்த விசயம் சாதரணமாயிடுச்சு. கால் செண்டர்ல எல்லாம் பலவிதமான என்னென்னவோ காதல்கள் (லீகல் இல்லீகல்) நடக்குதுனு சொல்றாங்க. எல்லா மாநகரங்களிலும் ·ஃப்ரீ காசுவல் செக்ஸ் என்பது நம்ம ஊரில் சாதாரணமாகி விட்டதுனு சொல்றாங்க! கற்புலாம், குஷ்புக்கு ஒரு படிமேலே போயி கல்யாணத்துக்கு முன்னாலயும் கெடையாது பின்னாலயும் கெடையாதுனு ஒரு சிலர் அடிச்சுச் சொல்றாங்க. எதுக்கு சும்மா கற்பு கிற்புனு உளறிக்கிட்டு இருக்கீங்கனு நண்பர் “கோகுல்” சொன்னது ஞாபகம் வருது. ஆமா, கல்யாணத்துக்கு முன்னால கற்பு இல்லைனா பின்னால மட்டும் எதுக்கு அசிங்கமா?

நமமில் ஒரு சில விழுக்காடுகள் அமெரிக்கர்கள் வாழ்க்கைபோலதான் வாழ்றாங்க. அவங்களுக்கு காதலர் தினம் இருப்பதில் தவறேதும் இல்லைதான். ஆனால் அரேஞிட் மேரேஜ்தான் (சாதி, ஜாதகம் பார்த்து) இன்னும் நம்ம மக்களில் மெஜாரிட்டி செய்றாங்க! நிச்சயம் நாம் இன்னும் அமெரிக்கர்களாகவோ, ஈரோப்பியனாகவோ ஆகவில்லை! அங்கேதான் திருமணம் செய்யாதவர்களுக்கு “காதலர் தினம்” இடிக்கிது. தன் மகளுக்கு ஜாதகம் பார்த்து கல்யாணம் செய்துவைக்கும் பெற்றோர்களுக்கு “காதலர்தினம்” கெட்டவார்த்தைதான்!

ஆமா காதலர் தினம் அன்று என்ன ஸ்பெஷல்?

· பொதுவாக ஒரு கி·ப்ட்/மலர்கள் தன் கணவரிடம் இருந்து கெடைக்கனும் என்பதால் மணமான பெண்களுக்கு இது பிடிக்குது. இதில் என்ன தவறு இருக்கு?

· கல்யாணம் ஆகாத "வயதுக்கு வந்த காதலர்கள்" கட்டாயம் “செக்ஸ்” வச்சுக்குவாங்க! I remember, my American friends were teasing each other saying “Did you have sex with your girl friend, on Valentine’s day?"!

Check out this story! எனக்கு ரோஸ் எல்லாம் வேணாம்டா! (18 + ஒன்லி சிறுகதை) . அந்தக்காலத்தில் ஒரு மூட் ல எழுதியது! :)

Finally, it is between two people. Personal. Who are we to say anything?னு போகலாம்தான்.

Friday, February 11, 2011

அண்ணே முபாரெக் பதவில இருந்து இறங்காதுபோல!


நேத்து, எகிப்திய ஜெனாதிபதி (பிரசிடெண்ட்) முபாரெக் பதவில இருந்து இறங்கிவிடுறேன்னு சொல்லிவிட்டார்னு எகிப்திய புரட்சியாளர்கள் வென்றார்கள் என்று எல்லோரும் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால், அண்ணே முபாரெக் செப்டெம்பெர் எலெக்ஷனில் மக்கள் தீர்ப்பைபின்படி இறங்குகிறேன் னு சொல்லிப்புடுச்சு. இதை யாருமே எதிர்பார்க்கவில்லை!

கடந்த 29 ஆண்டுகளாக ப்ரெசிடெண்டாக இருந்தும் இன்னும் போர் அடிக்கலைபோல இந்தப் பதிவியாசை! இல்லைனா ப்ரெசிடெண்ட் தொழில் தவிற வேற எதுவும் இதால செய்ய முடியாது போல!

Egypt's military high council has promised to lift the country's 30-year state of emergency when the "current situation has ended".

The televised statement came as crowds gathered in cities across Egypt for fresh protests.

Protesters are angry at President Hosni Mubarak's announcement on Thursday that he will not step down.

Reports say he has left Cairo and is in the Red Sea resort of Sharm el-Sheikh, where he has a residence.

"Mubarak has left Cairo with all his family," Mohammed Abdellah, spokesman for the ruling National Democratic Party, told AFP news agency.

In Cairo, thousands of people have gathered outside the presidential palace, in Tahrir Square and at state TV.

Meanwhile there were reports of clashes in northern Sinai as a police station was attacked and several people were injured.

The army said in what it called "Communique No 2" that it "confirms the lifting of the state of emergency as soon as the current circumstances end".

It endorsed the transfer of President Mubarak's powers to his vice-president, General Omar Suleiman, and guaranteed a free and fair presidential election, constitutional changes and "protection of the nation".

The army also urged "the need to resume orderly work in the government installations and a return to normal life, preserve the interests and property of our great people".

Disappointment for protesters

The lifting of Egypt's state of emergency has been a key demand of the protesters.

However, the BBC's Yolande Knell in Cairo said the army statement, which suggests it throws its weight behind President Mubarak's decision not to resign, will be a huge disappointment for demonstrators.


நல்லவேளைப்பா நமக்கெல்லாம் வெறும் பதிவு எழுதுற ஆசைதான் இருக்கு. இந்தப் பதவியாசை இன்னும் வரலை!செப்டெம்பெருக்கு இன்னும் ரொம்ப மாசம் இருக்கு. அதுக்குள்ள என்னவேணா நடக்கலாம்!ஆக மொத்தத்தில் புரட்சியாளர்கள் இன்னும் வெற்றியடையவில்லை என்பதே உண்மை!

Thursday, February 10, 2011

14 வயது சிறுவன் 31 ராணுவர வீரர்களை கொன்றான்!

இது மாதிரி அதிசயம் எல்லாம் எங்கே நடக்கும்? தாலிபன்களின் பயங்கரவாதம் தலைவிரித்து ஆடும் பாக்கிஸ்தானில்தான். இப்போ எல்லாம் சிறுவர்களை மற்றும் பெண்களை பலிகொடுத்துத்தான் தீவிரவாதம்/பயங்கரவாதம் எல்லாம் செய்றாங்க.

14 வயது சிறுவனுக்கு ஸ்கூல் யுனிஃபார்ம் அணியவைத்து,
வெடிமருந்துகளை அவன் உடம்பில் கட்டி பாக்கிஸ்தான் ராணுவவீர்கள் ட்ரயினிங் செய்கிற இடத்திற்கு அனுப்பி 31 பாகிஸ்தான் ராணுவவீரர்களை கொன்று, சுமார் 40 ராணுவ வீரர்களை காயப்படுத்தி சாதனை படைத்து இருக்காங்க, இந்த தாலிபன் வீராதி வீரர்கள்!

A teenage suicide bomber dressed in school uniform has blown himself up at an army compound in Pakistan, killing at least 31 people, officials say.

எதுக்காக? னா அமெரிக்கா - பாகிஸ்தான் எந்த உறவும் இருக்கக்கூடாதாம். அதற்கு பாகிஸ்தான் அரசாங்கத்துக்கு மெசேஜ் கொடுத்து மிரட்டுறாங்களாம்!

இதையெல்லாம் பார்க்கும்போது இந்தியாவில் வந்து பயங்கரவாதம் செஞ்சவங்களுக்கும் இதுபோல் ஆட்கள்தான் காரணம்னு தோன்றுகிறது.

14 வயது சிறுவனுக்கு என்னப்பா தெரியும்? சரி எது தப்பு எதுனு தெரியுமா? பள்ளிக்குப் போயி, விளையாட்டு மைதானத்தில் வெளையாண்டு வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க வேண்டிய சிறுவனை பலிகொடுக்கிறாங்க! :(

தற்கொலை செய்த சிறுவனும், அவனை பலியாடாக்கிய தீவிரவாதிகளும், இறந்த 31 இராணுவவீரகளும் ஒரே ரத்தம், ஒரே இனம், ஒரே மதம், ஒரே கடவுளை வழிபடுபவர்கள்!

பயங்கரவாதிகளின் வீரசாகசங்கள் தொடரும்! :(

Wednesday, February 9, 2011

ஆமா, உங்க கையெழுத்து எப்படி இருக்கு?

முன்னால எல்லாம் அம்மாவுக்காவது தமிழ்ல வாரம் ஒரு முறை கடிதம் எழுதுவதுண்டு. இன்னிக்கும் நான் எழுதின எல்லாக் கடிதத்தையும் ஏதோ பொக்கிஷம்போல வச்சிருப்பாங்க! இப்போ எல்லாம் "கால்" பண்ணிப் பேசுவதோட முடிந்தது.

ஆங்கிலம்? டாக்ஸ் ரிட்டர்ன் கூட இ-ஃபைலிங் பண்ணத்தான் சொல்றாங்க. ஆக, பேனா வச்சு எழுதுவதுனா அப்பப்போ பர்சனல் செக்ல ஒரு வரி எழுதுவது, அதில் கோழி கிளறுவதுபோல ஒரு கையெழுத்து போடுறது. அவ்வளவுதான். வொர்க்ல ஒரு சில பேப்பர் வொர்க், டாககுமெண்ட்ஸ் ரெக்கார்ட் பண்ண பேனாப் பிடிச்சு எழுதுவதுண்டுதான். ஆனாலும் ரொம்ப கம்மி.

நீச்சல், ட்ரைவிங் எல்லாம் என்றுமே மறக்காதாம். அதேபோலதான் எழுத்தும்னு நெனைக்கிறேன். நிச்சயம் உயிரிருக்கும் வரை, கைவிரல்கள் இருக்க வரை எழுதமுடியும்தான். ஆனால் தமிழ்ல கூட இப்போ எல்லாம் ஒரே டைப்தான் (பதிவுலகிலும்தான்) பண்ணுறோம். டைப் அடிப்பதாலே எவ்ளோ அழகா இருக்கு பாருங்க என் கையெழுத்து! "ஸ்பெல் செக்" மட்டும்தான் பண்ண முடியலை!

தமிழ்ல எழுதி பல மாதங்கள் இல்லை சில ஆண்டுகள் ஆகிவிட்டது. இ, ஒ எல்லாம் எழுதினால் எழுத்துக்கள் கேவலமா வ்ருது. ஏதோ ரெண்டாப்புப் படிக்கும்போது எழுதின "அழகு"ல இருக்கு என் எழுத்துக்கள்! சும்மாவே என் கை எழுத்து ஒண்ணும் அழகா குண்டு குண்டா தெளிவா இருக்காது. இப்போ அதைவிட படுகேவலமா இருக்கு!

உண்மையிலேயே இன்னைக்கு என் கையெழுத்து தலையெழுத்து மாதிரிதான் இருக்கு! இதுக்காக ஒண்ணும் கவலைப்பட வேண்டியதில்லைதான். ஆனால் என் கையெழுத்து படுமட்டமா ஆயிடுச்சுங்கிறதாலே எதையும் தமிழ்ல எழுதவே பயம்மாயிருக்கு!

உங்க கையெழுத்தெல்லாம் எப்படி? அப்படியே அழகா இருக்கா? இல்லைனா எழுதிப் பார்த்துத்தான் சொல்லனுமா?

Tuesday, February 8, 2011

பிடித்த பதிவர்களும் பிடிக்காத நடிகர்களும்! செந்தழல் ரவி!

பதிவர்கள் ரொம்ப மென்மையானாவர்கள்! சொன்னால் நம்ப மாட்டீங்க, நெறையப் பேரு தொட்டால் சிணுங்கி! அவங்க எழுத்துக்கும் அவங்க மனசுக்கும் சம்மந்தமே இருக்காது! அவங்களை புகழலாம் ஆனால் உள்மனதைக் காயம் செய்யுமளவுக்கு அவங்க எழுத்தை, நடையை கடுமையாக விமர்சனம் செய்யக்கூடாது என்பது பதிவுலக நாகரிகம்.

பதிவுலகம்னு எடுத்துக்கிட்டா என்னை நெறையப் பதிவர்களுக்குப் பிடிக்காது! எனக்கும் நெறையப் பதிவர்களைப் பிடிக்காது. இது இயற்கைதான். எல்லாருக்கும் எல்லாருடைய எழுத்தும் எப்படிப் பிடிக்கும்? அதுக்காக, நாம் இவங்களை எல்லாம் "நான் பின் தொடருவது இல்லை"னு நாம் தம்பட்டம் அடிப்பதில்லை! என்ன இருந்தாலும் நம்ம எல்லாம் ஒரே எழுத்துக்குடும்பம் இல்லையா? அவங்க எழுத்தைப் பிடிக்கலைனா ஒதுங்கி போயிடனும். இன்னும் சொல்லப்போனா, எனக்குப் பிடித்த பதிவர்கள்னு எழுதுவதுகூட தப்பு! அப்போ நீங்க விட்ட பதிவர்கள் எல்லாம் உங்களுக்குப் பிடிக்காதா? நு ஒரு கேள்வி வரும். பல பதிவர்கள் அவங்களை உங்களுக்கு பிடிக்காதுனு தவறா நெனச்சுக்குவாங்க, இல்லையா? பிடித்த பதிவர்கள்னு ஒரு சிலரை மட்டும் குறிப்பிட்டு எழுதுவதுகூட தப்பு! பிடித்த பதிவர்கள்னு எழுத வேணாம்னு நெனச்சாலும் ஒரு சில பதிவர்களைப் பத்தி எழுதியே ஆகனும். என்ன வகை பதிவர்களை? அதை எப்படி சொல்றதுனு தெரியலையே.

அண்ணன் செந்தழல் ரவி பத்தி எழுதுவோமா? அய்யய்யோ, இவருக்கு நான் என்ன எழுதினாலும் பிடிக்காதே! அதனால என்ன? இதெல்லாம் பெரிய குற்றமா? அதுக்காக அவங்களை நாமும் வெறுக்கனுமா என்ன? நம் எழுத்தைப் பிடிச்சவங்களைதான் நமக்கும் பிடிக்கனுமா? கொஞ்சம் வேற மாதிரி இன்னொரு கோணத்தில் யோசித்தால் என்ன? பதிவுலகில் அவர் நெறைய வேலைவாய்ப்பு சம்மந்தப்பட்ட பதிவுகள், பலருக்கும் உதவும் வண்னம் போடுறாரே? மேலும் யாருக்கும் உதவி செய்யனும்னா (சாருக்குகூட) மொதல் ஆளா நிக்கிறாரே? அதை எல்லாம் பாராட்டலாமே? அவரைப் பத்தி இறக்கி ஒரு பின்னூட்டம்போட்டால் ஒரு கூட்டமே வக்காலத்துக்கு வருதே? அது சும்மாவா வரும்? ஏதோ நம்ம அறிவுக்கு எட்டாத நல்லவைகள் அவரிடம் இருக்குமோ? சரி இதோட நிறுத்திக்கிறேன். அப்புறம் அவரு வஞ்சப் புகழ்ச்சினு சொல்லுவாரு! எதுக்கு வம்பு?

பிடிக்காத நடிகர்கள் பத்தி எழுதலாமா? ஏன் அது மட்டும் தப்பு இல்லையா? அவங்க கோடி கோடியா சம்பாரிக்கிறாங்களே? அதுக்காக? பிடிக்கலைனா அவங்க படம் பார்க்காமப் போக வேண்டியதுதானே? சரி சும்மா பெயரை மட்டும் சொல்லிட்டுப் போயிடுறேனே?. *ஜீவன், *எஸ் ஜெ சூர்யா, *விமல். சரி, சரி போதும்! கடைசியா பிடிச்ச நடிகர் ஒருவரைப் பத்தி சொல்லி சுமூகமாக முடிச்சிடுவோம்.



மறைந்த நடிகர் கொச்சின் ஹனீஃபா! என்ன ஒரு நடிகர்! ஒரு எஸ் வி ரங்காராவ், டி எஸ் பாலையா லெவலுக்கு குறையே சொல்ல முடியாத அளவுக்கு எந்த ஒரு ரோலையும் அழகா ரசிக்கத்தக்க செய்பவர். அதுவும் அவருக்கே உரித்தான ஒரு ஆக்ஸண்ட்ல பேசி மனதை கவரும் நடிகர் இவர். அம்புட்டுத்தான்!

Monday, February 7, 2011

சாருவை ஹீரோவா வச்சு மிஸ்கின் படம் எடுத்தால்?

பதிவர் ஆர் கே சதீஷ்குமாருடைய சமீபத்திய சாதனை என்னனா, சாருவுடைய நல்மதிப்பைப் பெற்று ரொம்பப் பிரபலமாகிவிட்டார். அது எப்படி நன்மதிப்பை பெறுவது? அதுக்கு நீங்க தரமான ஒரு நாவல் எழுதனும்னு இல்லை! தரமான கட்டுரை எழுதனும்னும் இல்லை! ஒரே சிம்ப்பிள் ஃபார்முளாதான்! சாருதான் தமிழ்ல இன்னைக்கு தலைசிறந்த இலக்கியவாதி! சாரு இல்லைனா தமிழ் எப்போவோ செத்து இருக்கும்னு ஒரு புளுகு புளுகி ஒரு ஜால்ராப் பதிவு போடனும்! அம்புட்டுத்தான்!

பதிவுலகில் எப்படி வாழ்றது,வாழத்தெரியாத மக்குப் பதிவர்கள் எப்படி சாகிறாங்கனு எல்லாம் தெரிந்த இவருக்கு, சாருக்கு ஜால்ரா அடிக்கத் தெரியாதா என்ன?

இவர் எழுதிய பதிவைப்போல் சமீபத்தில் யாருமே இப்படி ஒரு தலைசிறந்த சாரு ஜால்ராப் பதிவு எழுதலை! அன்பர் சாருவும் மனம் குளிர்ந்து, உருகி, வழக்கம்போல் பெரியமனசுடன் இவர் பதிவை அவர் தளத்தில் "சைட்" (தொடுப்பு கொடுத்து) பண்ணிவிட்டார். இவரும் அதுக்கு நன்றி சொல்லி இன்னொரு ஜால்ராப்பதிவு போட்டுவிட்டார்! :)

இதில் இன்னொரு விசயம் என்னனா திடீர்னு மிஸ்கின் என்கிற ஒரு ஆளு தமிழ் சினிமாவை பாழ் படுத்துறான், அவன் ஒரு ஒரிஜினாலிட்டி உள்ள கலைஞனே இல்லைனு ஆர் கே சதீஷ்குமார் கண்டுபுடிச்சுப்புட்டாரு! அதுமட்டுமல்ல, சாருவுடைய தேகம் நாவல் இவரு இன்னும் படிக்கலையாம்! படிக்கலைனாலும் அது உலகத்தரம் வாய்ந்ததாகத்தாக்கும் னு கண்டுபிடிச்சுட்டாரு மனுஷன்!

குமுதத்தைப் பத்தி திட்டித் திட்டி எழுதிய சாருவும் குமுதமும் சமரசமாகப் போனது போல, நாளைக்கு மிஸ்கின் சாருவுக்கு ஏற்ற ஒரு ஹீரோ ரோலை உருவாக்கி, பழசை எல்லாம் மறந்துடுவோம்னு சொல்லி சாருவை வச்சு ஒரு படம் இயக்கினால், ஆர் கே சதீஷ்குமார் என்ன செய்வாரு? அதெல்லாம் நடக்காதா? ஒருவேளை அப்படி நடந்தால் பதிவுலகை விட்டு ஓடிருவாரோ? இல்லைனா சாருவுடைய மன்னிக்கும் குணத்தைப் பாராட்டி இன்னொரு ஜால்ராப்பதிவு போட்டு, மிஸ்கினை இன்னொரு முறை அனலைஸ்ப் பண்ணி உன்னதக் கலைஞனாக்கிவிடுவாரா? நமக்கெப்படி இதெல்லாம் தெரியும்? அவருக்குத்தான் தெரியும்!

என்னவோ போங்கப்பா! வரவர இந்த மாதிரி ஜால்ராப் பதிவுகளைப் பார்த்தாலே எரிச்சலாத் தான் இருக்கு!

திரு ஆர் கே சதீஷ்குமார் அவர்கள் பதிவர்கள் செய்யும் 10 தவறுகளோட சேர்த்து, சாரு ஜால்ராப் பதிவையும் அப்பப்போ போடலைனா அது பெருந்தவறுனு 11 வதா ஒரு பாயிண்டு ஒண்ணும் போட்டு இருக்கலாம்!

விரைவில் வரப்போகிற தேகம் பற்றிய இவருடைய விமர்சனம் படிக்க நான் காத்துக்கிட்டு இருக்கேன். புக் வாங்கிட்டாரா இன்னும் கெடைக்கலையானு தெரியலை! :(

சைனாவுக்கும் இந்தியாவுக்கும் என்ன பெரிய வித்தியாசம்?

* சிங்கப்பூர் மற்றும் மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளைப்போலவே சைனால போதை மருந்து கடத்தி பிடிபட்டால் அதற்கு தண்டனை மரண தண்டனையாம்! இந்தியாவிலே போதைப் பொருள் கடத்துவதற்கு மரண தண்டனைபோல் பெரிய தண்டனை கொடுக்கப்படவில்லை!

(Xinhua)
Updated: 2009-10-13 23:29

BEIJING - Chinese court's sentence of death penalty on a British drug trafficker is in line with Chinese laws, said a spokesman for China's Ministry of Foreign Affairs on Tuesday.

Akmal Shaikh, 53, male, was sentenced to death in the first instance trial by the Intermediate People's Court of Urumqi Municipality in northwest China's Xinjiang Uygur Autonomous Region on October 29, 2008, said Ma Zhaoxu, spokesman for the Ministry of Foreign Affairs at a regular news briefing.

The case is currently being reviewed by China's Supreme People's Court, Ma said.

"All the procedures have been in line with relevant Chinese laws. During the trial, The accused and the counsel had freely exercised their rights of defense, and translation service had ben provided to the accused. His legal rights had been fully guaranteed," he said.

According to Ma, the British embassy in China and a British organization had proposed to organize mental disease examinations on Akmal Shaikh, while offering no evidence that he may be suffering from mental disease.

The accused had said that he and his family members had no history of mental diseases, Ma said.

The case is under examination, he said.



* இந்தியாவைப்போலவே சைனாவில் போர்னோக்ராஃபி பார்ப்பது எடுப்பது இரண்டுமே சட்டவிரோதமாம். ரெண்டு நாட்டிலுமே திருட்டுத்தனமாக மக்கள் இதை பார்க்கிறார்கள் என்றாலும் அரசாங்கம் இந்தப் பாவப்பணத்தை ஒரு இலாபமாக வச்சு நாட்டை முன்னேற்ற முயலுவதில்லை என்பது நல்ல விசயம்.

* நம்ம ஊர் என் ஜி ஓ மற்றும் அரசாங்க அலுவலக ஊழியர்களுக்கும் சைனால உள்ள அரசாங்க அதிகாரிகளுக்கும் ரொம்ப வித்தியாசம். ரெண்டு அலுவலர்களிடமும் லஞ்சம், கரப்ஷன் போன்றவை இருந்தாலும், சைனாவில் இவர்கள் பயங்கர அநியாயம் செய்றாங்களாம் (நம்ம ஊர் எம் எல் எ மாதிரி போல). சாதாரண குடிமகனுக்கும் இவர்களுக்கும் வாழ்க்கைத்தரம் மற்றும் பலவிதமான விசயங்களில் ரொம்ப வித்தியாசமாம். இவர்கள் என்ன குற்றம் செய்தாலும் தப்பிக்க சட்டத்தில் நெறையா ஓட்டைகள் உண்டாம்.

* சைனாவில் தம்பதிகள் ஒரு குழந்தைக்கு மேலே பெற்றுக்கொண்டால், ரெண்டாவது குழந்தையை தத்து கொடுக்கச் சொல்றாங்க. அப்படி கொடுக்க மறுத்தால், அரசாங்கம் பலவித சலுகைகளை பறித்துவிடுமாம். சப்போஸ் தம்பதிகளில் இருவருமே அவங்க அப்பா அம்மாவுக்கு ஒரே குழந்தையாக இருந்தால் இன்னொரு குழந்தை பெற்றுக்கலாமாம். மக்கள் தொகையை இப்படித்தான் அவங்க கண்ட்ரோலுக்கு கொண்டு வர்றாங்களாம்.

* சைனாவில் பன்றிக்கறி, மற்றும் மாட்டுக்கறி சாதாரண மக்களின் அன்றாட உணவு. இந்தியாவில் இது ரெண்டையும் சாப்பிடுறவங்க ரொம்ப ரொம்ப கம்மி. வெஜிடேரியன் சாப்பிடுறவந்தான் அறிவாளினு ஒரு சிலர் நெனச்சுக்கிட்டு இருக்காங்க. சைனா/ஜப்பான்/கொரியா/மேலைநாடுகள் போன்ற நாடுகள் நம் நாட்டைவிட எந்த வகையிலும் அறிவில் குறைந்து இல்லை என்பது ஒரு சில மரமண்டைகளுக்கு புரியனும்!

* நம்ம இந்தியா விசிட் பண்ணும்போது ஆளுக்கு ஒரு பர்சனல் லாப் டாப் எடுத்துட்டுப் போகலாம். ஏர்போர்ட்ல ஒண்ணும் கெடுபிடி இல்லை! சைனாவில அப்படி நீங்க எடுத்துட்டுப் போகமுடியாதாம். திருப்பி கொண்டு வந்துவிடுவேன் என்கிற பேச்சுக்கே இடமே இல்லையாம்! அதற்கான "டூட்டி" செலுத்தியே ஆகனுமாம். அமெரிக்காவில் $600 உள்ள ஒரு கம்ப்யூட்டர், சைனாவில் $1200 இருக்குமாம். அரசாங்க அலுவலகர் மற்றும் ஏர்போர்ட்ல யாராவது உங்க நண்பர் அல்லது ரிலேடிவ் இருந்தால் கதையே வேறயாம்!

* சைனாவில் அரேஞ்ஜிட் மேரேஜ் எல்லாம் மலையேறிபோச்சாம். நம்ம ஊர்ல இன்னும் 80 விழுக்காடுகளுக்கு மேலே அரேஞிட் மேரேஜ்தான் செய்றாங்க>


சும்மா ஒரு சைனீஸ் கலீக் இடம் பேசி தெரிந்துகொண்ட விசயங்கள்! :)

Sunday, February 6, 2011

இந்தியர்களுக்கு பெருமை சேர்க்கும் போர்ன் ஸ்டார்!



சன்னி லியோன் என்கிற 29 வயதான படத்தில் உள்ள இவர் இந்தியர்களை (sikh) பெற்றோர்களாகப் பெற்ற கனடியன் - அமெரிக்கன். இவர் ஒரு அடல்ட் ஆக்ட்ரஸ். இவரைப்பற்றி இவர் சாதனைகளை விக்கில போட்டிருக்கு பாருங்க!

பெண்ணியவாதிகள், புதுமைப்பெண்கள், போஸ்ட்மாடர்ன் எழுத்தாளர்கள், கலாச்சாரக்காவலர்களை கேலிசெய்யும் முற்போக்குவாதிகள் போன்றவர்கள் இதுபோல் ஒரு நடிகையின் சாதனைகள் எப்படி எடுத்துவாங்கனு தெரிந்துகொள்ள ஆவல்!








பாபி ஜிண்டால், நைட் சியாமலன் போன்றவர்களை சொல்லி இந்தியர்கள் பெருமை பேசுவதுண்டு, அதேபோல் நாம் சன்னி லியோன் பெருமையும் பேசலாமா? இல்லை இவரை மட்டும் ஒரு அவமானச் சின்னமாக எடுத்துக்கனுமா? இதெல்லாம் என்னுள் எழும் விடை தெரியாத கேள்விகள்!

அதிக சுதந்திரம் கொடுத்தல், மனம்போல் வாழவிடுதல் போன்றவைகளை பெற்றோர்கள் தன் குழந்தைகள் நலனுக்காக செய்தால் அவர்களை இப்படியும் கொண்டுசெல்லும்!

What are we going to say to a young girl we are bringing up in US/Canada about Sunny Leone?

Don’t take her (Sunny Leone) as a role-model? If you do, I am sure your daughter would ask, Why not? She is famous and achieved a lot! What is wrong in becoming famous like her?

How are you going to convince your child that it is wrong? Or there is nothing wrong it?

Saturday, February 5, 2011

கேள்வியும் நானே பதிலும் நானே (சூப்பர் பவ்ல் ஸ்பெஷல்)!

* எல்லாரும் க்ரிக்கெட் பத்திப் பேசும்போது, நீங்கமட்டும் ஏன் அமெரிக்கன் ஃபுட் பால்னு உளறிக்கொண்டு இருக்கீங்க?

நான் அமெரிக்கா வந்த புதிதில், "இதென்னப்பா விளையாட்டு? பாக்ஸிங்கைவிட கேவலமாயிருக்கு?" னு என் அமெரிக்கன் நண்பர்களிடம் சொல்லியிருக்கேன். ஆனால் இப்போ எல்லாம் அமெரிக்கன் ஃபுட் பால் சீசன் தான் பெஸ்ட் டைம்! சூப்பர் பவ்ல் முடியும்போது டிப்ரெஸிங்கா இருக்கும்! ரொம்ப இண்டெர்ஸ்டிங் ஆன விளையாட்டு இதுங்க, நம்புங்க! எனக்குத் தெரிய என்னைப்போல் நெறைய இந்தியர்கள் உண்டு!

* அமெரிக்காவில் வந்து வாழும் இந்தியர்கள் ஏன் அமெரிக்கன் ஃபுட்பால் பார்ப்பதில்லை இன்னும் க்ரிக்கட்டே பார்க்கிறாங்க?

நான் என்ன நெனைக்கிறேன்னா இவங்களுக்கு இந்த விளையாட்டு எப்படி ஆடுவாங்க, ரூல்ஸ் என்ன, அஃபெண்ஸ்னா என்ன செய்யனும், டிஃபெண்ஸ்னா அவங்க வேலை என்ன னு ஒண்ணுமே நெறையப்பேருக்குத் தெரியாதுனு நம்புறேன். இந்த கேம் எப்படி வெளையாடும்னு தெரிந்தால் நிச்சயம் க்ரிக்கட்டை எல்லாம் ஓரமா வச்சுட்டு இந்த விளையாட்டை ரசிச்சுப்பார்ப்பாங்க!

* டாலஸ்ல நாளை நடக்கவிருக்கும் 2011 சூப்பர் வின்னர் யார்னு ப்ரிடிக்ஷன்?

ஸ்டீலர்ஸ் ஏற்கனவே 6 முறை சூப்பர் பவ்ல் வின் பண்ணிவிட்டதால், பாக்கர்ஸ் வின் பண்ணனும்னு எனக்கு ஒரு ஆசை. ஸ்டீலர்ஸ் ஜெயிச்சாலும் ஓ கே தான். As long as it is a close game, I would be happy! :)

* முன்னால் காதலி/காதலன் யுடன் அவளு(ரு)க்குத் திருமணம் ஆனபிறகு சாதாரண நட்பாயிருக்க முடியுமா?

எங்கிருந்தாலும் வாழ்கனு மரியாதையா வாழ்த்திவிட்டு, அவர் பக்கம் இந்த ஜென்மத்தில் திரும்பிப்பார்க்காமல் இருக்கது ரெண்டு பேருக்கும் மரியாதை, நல்லது, உங்க சுயமரியாதையை காப்பாத்திக்கலாம். மேலும் அதுதான் நீங்க அவளு(ரு)க்கு செய்கிற கடைசி நன்மை! உங்களுக்கும்தான்! கல்யாணத்துக்கு அப்புறம் முன்னால் காதலி/காதல்ன் உடன் சும்மா நட்பாயிருக்கேன் ஃப்ரெண்டாயிருக்கேன், நான் அவருடைய நலம் விரும்பி என்பதெல்லாம் வீண் வம்பு மேலும் அர்த்தமற்றது.

உலகம் மிகப்பெரியது. அவர் நிழல், நினைப்பு இல்லாமல் நீங்க இந்த ஜென்மத்தில், இந்த உலகத்தில் சந்தோஷமாக வாழலாம்! வாழக்கத்துக்கனும்! வாழ்ந்து காட்டனும்!

Friday, February 4, 2011

மாணவி தற்கொலையில் வினவின் தலைப்பு நியாயமானதா?

ஏழை மாணவி திவ்யா ஆசிரியர்களால் அளவுக்குமீறி, மிருகத்தனமாக பரிசோதனைக்கு உள்ளக்கப்பட்டதால், அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து இறந்துவிட்டார் என்பது மிகவும் வருத்தமான செய்தி.

அவர் ஏழை என்பதால் அவரை அவமானப்படுத்தப் பட்டது என்று கண்கூடாகத் தெரிகிறது. அவரை சோதித்த, சித்ரவதை செய்த, அவமானப்படுத்திவர்கள்தான் அவளை தற்கொலை செய்ய தூண்டியவர்கள் என்று குற்றம் சாட்டலாம். இதுபோல் ஒரு மாணவியிடம் பொறுப்போடு நடக்காத ஆசிரியர்கள், சம்மந்தப்பட்ட அலுவலகர்கள் மற்றும் அந்தக்கல்லூரி நிர்வாகிகள் எல்லோருக்குமே சட்டப்படி தண்டனை வாங்கிக்கொடுக்கனும் என்பதில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை!

ஆனால், வினவு, மிருகத்தனமாக அவமானபப்டுத்தப் பட்ட மாணவி திவ்யாவின் தற்கொலை மரணத்தை எப்படி பச்சைப் படுகொலை என்று சொல்லலாம் என்று எனக்கு விளங்கவில்லை?

என் பார்வையில் இதுபோல் "பச்சைப் படுகொலை" என்று எழுதுவது தவறான வார்த்தை! நாம் இதுபோல் கிரிமினல் குற்றவார்த்தை பயன்படுத்துவதில் மிக கவனமாக இருக்க வேண்டும் என்பது என் எண்ணம். எனக்கு இது சமம்ந்தப்பட்ட எந்தவிதமான விசயங்களும் சரியாகவோ, டீட்டயிலாகத் தெரியாதுதான்.

நிச்சயம் திவ்யாவை தற்கொலை செய்ய தெரிந்தோ தெரியாமலோ தூண்டிய்வர்களை, அவமானப்படுத்திவர்களை சட்டப்படி அனுகி தண்டனை வாங்கிக்கொடுக்கனும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதுக்காக வினவு இதை எப்படி "பச்சைப் படுகொலை" என்று சொல்லலாம்? வினவு கவனமாக வார்த்தை பிரயோகம் செய்தால் அவர்களுக்கு நல்லது!

Thursday, February 3, 2011

அரசியல் சாக்கடையில் விழுந்துவிட்ட விஜய்!

சமீபத்தில் காவலன் ப்ரமோஷன்க்கு, ஜெயா டி வி ல, அசின்-விசை நேர்முக ஒளிபரப்பில் வந்தபோது யாராவது அசினை கவனிச்சீங்களா? ஏதோ இருளடிச்ச மாதிரி உக்காந்து இருந்தார், அசின். காரணம்? "தயவு செய்து என்னை எதுலயும் மாட்டி விட்டுறாதீங்க" "எனக்கும் காவலன் ரிலீஸ் பிரச்சினைக்கும் சம்மந்தம் இல்லை" னு அசின் விஜயிடம் தெளிவாக சொல்லிவிட்டார்னு தோனுச்சு. அதனால இந்தப் பிரச்சினையை விஜய் வாயிக்குள்ளேயே மென்னு முழுங்குவது அழகாத் தெரிந்தது.

காவலன் படம் ரிலீஸ்ப் பண்ணி ஓடி முடிந்துவிட்ட நிலையில் இப்போ விகடன் பேட்டியில் ஆளுங்கட்சி மற்றும் தி மு க வை தன் காவலன் பிரச்சினைகளுக்கு முழுக்காரணம்னு நேரிடையாக குற்றம் சாட்டியுள்ளார் விஜய்.

ஏன் இவருக்கு பிரச்சினை கொடுக்கிறாங்க? அதாவது விஜயாகிய நான் அரசிலில் இறங்கி பெரிய ஆளாயி கிழிச்சுடுவேன்னு ஆளுங்கட்சி பயப்படுறாங்கனு சொல்லி தன்னைத்தானே பெரிய ஆளாக்கி பீத்தி இருக்கார் இந்தக் குட்டி எம் சி ஆர்.

எம் சி ஆர், ஜெயா, விசய் காந்து வரிசையில் தன்னையும் சேத்து தனக்குதானே பெருமை சேர்த்து இருக்கார் இன்றைய அரசியல்வாதி விஜய்!

இதையெல்லாம் பார்த்து எம் சி ஆர் ஆவியா வந்து "என்னப்பா இதெல்லாம்? என்னை உன்னோட சேர்த்து கேவலப்படுத்துற?" னு வருத்தப்பட்டுட்டுப் போனாலும் ஆச்சர்யப்பட ஒண்ணுமில்லை!

அதோட விடல, "இதுபோல் தான் குற்றம் சாட்டியதால என் உயிருக்குக் கூட ஆபத்து வரலாம்"னு சேர்ந்து விட்டு இருக்கார். இந்த ஒரு ஸ்டேண்ட்மெண்ட்டே இவர் அரசியல் சாக்கடையில் விழுந்து, தமிழ்நாட்டை சுத்தம் செய்ய தயாராகிவிட்டதை அழகாக் காட்டுது.

திடீர்னு இவருக்கு எப்படி வீரம் வந்துச்சுனா.. ஸ்பெக்ட்ரம் ஊழல் அது இதுனு ஆகி திமுக ஆட்சி முடியப்போது, இனிமேல் தி மு க செத்த பாம்புதான்..அடுத்த ஆடசி நம்ம அம்மாதான் என்கிற நம்பிக்கையில் இருக்கார் விசயும் அவர் அப்பாவும்.

சரி, தி மு க தோத்து அம்மா ஆட்சிக்கு வந்தால் என்ன ஆகும்னு விஜயும் அவர் அப்பாவும் நம்புறாங்கனு பார்ப்போம்.

* இனிமேல் விஜய் படங்கள் எல்லாம் (குப்பையா இருந்தாலும்) 175 நாள் ஒரு 100 திரையரங்குகளில் ஓடும். தி மு க தான் இனிமே இவர் படம் ஓடுறதை தடுக்க முடியாதே!

* அம்மாவே தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் விசய் தான்னு எல்லாருக்கும் சொல்லி கூடிய சீக்கிரம் விசையை முதல்வராக்கிவிடுவார். அப்போ அம்மா என்ன செய்வார்? அவரு விசையை சி எம் ஆக்கிவிட்டு இவர் அப்பா உதவியுடன் தன்னை பி எம் ஆக்க முழு மூச்சா முயற்சியில் இறங்கி வெற்றியும் அடைவார்!

* எம் சி ஆர்க்கு அப்புறம் இந்த குட்டி எம் சி யார் உங்களுக்கும் ஏன் எனக்கும்கூட "தலைவர்"னு அம்மா மேடை மேடையாப் போயிச் சொன்னாலும் அதிசயப்பட ஒண்ணும் இல்லை!

* ஆக, அரசியல் சாக்கடையில் விழுந்த விஜயும் அவர் அப்பாவும் அ தி மு க ஆட்சியின் போது நீந்தி நீந்தி அதில் உள்ள அழுக்கையெல்லாம் மீன்களை போல சுத்தப்படுத்தி தமிழ்நாட்டை பெருசா முன்னேத்திடுவாங்க!

இதெல்லாம் நடக்கப்போவதாக கனவு காண்கிறாங்க!

-----------

ஆனால் உண்மையில் தி மு க தோத்து அம்மா ஆட்சிக்கு வந்தால் எதையும் கிழிக்க முடியாது! தி மு க திரும்ப ஆட்சிக்கு வந்தால்தான் விஜய் அரசியல் கனவுக்கு நல்ல காலம் பொறக்கும்!

* அப்போத்தானே, தன் படம் விழுந்தாலும் தி மு கவை கொறை சொல்லியே தன் அரசியல் நாடகத்தை இதே மாதிரி எம் சி ஆர், ஜெயா, கேப்பிட்டனுனு சொல்லித் தொடரலாம்?

* சப்போஸ், கார்த்தி, சூர்யா, தனுஷ் படங்களோட மோதி தன் படம் படுத்தால் யாரை குறை சொல்லுவார் விசை, பாவம்? ஆட்சியில் இருக்கும் அம்மாவையா? அப்படி செய்தால் எல்லாரும் இவரை லூசைப் பார்ப்பதுபோல பார்க்க ஆரம்பிச்சுடுவாங்க இல்லையா?

ஆக, இந்த எலக்ஷனில் தி மு க வெற்றியடைந்தால்தான் விஜய், அரசியல் சாக்கடையில் இன்னும் நல்லா நீந்த முடியும்! அதனால் விசய் ரசிகர்கள் எல்லாம் தி மு க வுக்கு ஓட்டுப்போட்டு மறுபடியும் தி மு கவை "மைனாரிட்டி கவண்மெண்ட்டாகவாவது" ஆட்சிக்கு கொண்டு வந்து, "என் படத்தை ரிலீஸ் பண்ண ஆளுங்கட்சி விடலை இல்லைனா என் படம் ஓடிக்கிட்டே இருக்கும்"னு சொல்லி கொறைஅழுகை அழுது ஒப்பாரி வச்சு எப்படியாவது விசயை அடுத்த முதல்வராக்கிப் புடுங்கப்பா!

Wednesday, February 2, 2011

ராமதாஸ் யாரோட கூட்டு சேருவார்? ஜோஸ்ய கணிப்பு!

வரும் சட்டமன்ற தேர்தலில் பா ம க தலைவர் ராமதாசு தி மு க - காங்கிரஸ் கூட்டணியில் இணைவாரா இல்லை அ தி மு க - ம தி மு க கூட்டணியில் இணைவாரா? என்கிற கேள்விக்கு சரியாக பதில் தெரியுமா?

தெரியும், ஆனால் தெரியாது!

தெரியாது ஆனால் தெரியும்!

என்ன யாரு அதிக சீட் தர்றாங்களோ அவங்களோட சேருவார்னு சொல்றீங்களா? அதிகமான சீட் நிச்சயம் ஜெ ஜெ கொடுக்க வாய்ப்பு இருக்கு.

ஆனால் என் கணிப்புப்படி (நீங்க என்ன அரசியல்ல புலியா? நு கேட்டுப்புடாதீங்க) அவர் யாரோட கூட்டு சேருவார்னு எனக்கு நல்லாத் தெரியும்!

சரி, என் கணிப்பு தப்பாக சாண்ஸ் இருக்குனு ஒரு ஜோஸ்யக்காரரிடம் கேட்டேன்.

அவர் அடிச்சு சொல்றார்!

என்னனு? தி மு க கூட்டணியில்தான் ராம்தாசு சேருவாருனு!


ஒருவேளை அப்படி சேரலைனா, இனிமேல் ஜோஸ்யத்தை நான் நம்பப்போவதில்லை! நீங்களும் திருந்துங்க!

Tuesday, February 1, 2011

திருடிய கவிதை!


எனக்குக் கவிதை எழுதத்தெரியாதுனு எல்லாருக்கும் தெரியும். ஆனால் எப்போவோ யாரோ எழுதிய கவிதையை ஏன் இங்கே கொடுக்கக்கூடாது?

மின்னல்!

பூமி என்கிற மாது

நிர்வாணமாகக்

குளிக்கும்போது


அதை படம் பிடிக்கும்


கேமிரா!


இதை எழுதியவர், திரு. ராமநாதன் என்கிற கவிஞர்! எபோவோ படிச்சது! மேலே உள்ள படம் இணையத்தில் திருடியது!