இப்போ எந்திரன் திரையிட்டு 100 நாட்களை கடக்கப்போகும் சூழ்நிலையில் "எந்திரன் கதை என்னுடையது" என்று எத்தனை பேர் சொல்லியிகிறார்கள், யாருக்கு வெற்றிவாய்ப்பு சாத்தியம் என்று இன்னொரு முறை பார்ப்போம்!
--------------------------------
1) எழுத்தாளர் தமிழ்நாடன்...
* “”ஜூகிபா” என்ற தனது சிறுகதையை மூலக்கதையாக வைத்து ரஜினி நடித்த ‘எந்திரன்’ படம் எடுக்கப்பட்டுள்ளது என்றும், இதுகுறித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சென்னை போலீஸ் கமிஷனரிடம் பத்திரிகையாளரும், இலக்கியவாதியுமான ஆரூர் தமிழ்நாடன் புகார் அளித்துள்ளார்.
இந்திய பத்திரிகை பதிவாளர் முன்பு பதிவு செய்யப்பட்டு பதிவு எண் 49612/1990 கொண்ட “”இனிய உதயம்” இதழில் வெளியான காப்புரிமை கொண்ட எனது “”ஜூகிபா” கதையை என்னிடமோ, இனிய உதயம் வெளியீட்டாளரிடமோ எந்த முன் அனுமதியும் பெறாமல் மோசடி செய்து லாபம் சம்பாதிக்கும் கெட்ட உள்நோக்கத்துடன் திரைப்பட இயக்குநர் சங்கர் 1997-98-ல் தான் கற்பனை செய்தது என்று பொய்யாகக் கூறி “”எந்திரன்” திரைப்படத்தை உருவாக்கி அவரே அதன் இயக்குநராகவும் செயல்பட்டு, சன் பிக்சர்ஸும் அதன் நிர்வாக இயக்குநர் கலாநிதிமாறன் தயாரிப்பாளராகவும் செயல்பட்டு கூட்டு சதி செய்து “”எந்திரன்” திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளிலும் வெளியிட்டு எனது காப்புரிமையை சட்டத்திற்கு விரோதமாக உரிமை மீறல் செய்துள்ளனர்.
2) தெலுகு எழுத்தாளர் ஒருவர்...
* தெலுகு எழுத்தாளர் மைனாம்பட்டி பாஸ்கர் என்பவர், அவருடைய 1984 ல எழுதிய "புத்தி ஜீவி" என்கிற கதையின் காப்பிதான் இந்த எந்திரன் (ரோபோ) கதை என்கிறாராம். அவரும் சட்டப்படி அனுகுவதாக சொல்லப்பட்டது.
-------------------
எழுத்தாளர்கள் கேட்கும் நஷ்ட ஈடுகள்...
* 1984 ல எழுதிய "புத்தி ஜீவி"யின் காப்பி ரைட்ஸ் வயலேஷனுக்காக நஷ்ட ஈடாக, ஆசிரியர் மைனாம்பட்டி பாஸ்கர் கேட்பது ரூ. 50 லட்சம்
* 1990 ல் வந்த "ஜுகிபா" வின் ஆசிரியர் தமிழ்நாடன் கேட்கும் நஷ்ட ஈடு ரூ. 1 கோடி.
என்னுள் எழும் சில கேள்விகள்...
* இப்போ ஷங்கர் காப்பி அடிச்சார்னே வச்சுக்கிட்டா, யாருடைய கதையைக் காப்பியடிச்சார்?
* ரெண்டு ஆசிரியர்களும் வெற்றிபெற வாய்ப்பிருக்கா?
* "ஜூகிபா" என்கிற கதை, என் கதை "புத்தி ஜீவி" யின் தழுவல்னு மைனாம்பட்டி பாஸ்கர் ஏன் சொல்ல மாட்டேன்கிறார்?
* "ஜூகிபா" வுக்கும் "புத்தி ஜீவி"க்கும் சம்மந்தமே இல்லையா? "ஜூகிபா"வும் "புத்தி ஜீவி" யும் இந்த எழுத்தாளர்கள் இருவருடைய ஒரிஜினல் ஐடியானு இருவரும் ஒத்துக்கிறார்களா? அதெப்படி சாத்தியம்?
*"என் இனிய இயந்திரா" வுக்கும் எந்திரன் கதைக்கும் சம்மந்தமே இல்லையா? படத்தில் சுஜாதாவுக்கு ஷங்கர் க்ரிடிட் கொடுக்காதது இப்போ பெரிய தவறாகிவிட்டதோ?
* ஆமா எந்திரனில் அப்படி என்னப்பா கதை இருக்கு? இத்தனை புத்தகங்கள், சினிமாக்களில் இருந்து திருட?
வெற்றி யாருக்குக்கிடைக்கும்?
* சரி, இதில் ஷங்கர் பணபலத்தை வைத்து (சன் நெட் வொர்க் உதவியுடன்) எளிதாக வெல்லலாம். அது நிச்சய்ம சாத்தியம். நீதி, நேர்மை, நியாயம் எனப்தையெல்லாம் கொஞ்சம் ஓரமாவச்சுட்டு , யோசிங்கப்பா.. பணபலம் வைத்து நல்ல வக்கீலை யாரால் வாங்க முடியும்? நிச்சய்ம் சன் டிவி மற்றும் ஷங்கரால் முடியும்..
* அடுத்து, 1984 ல எழுதிய எழுத்தாளர் மைனாம்பட்டி பாஸ்கருக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகம். தமிழ்நாடன் 1990 லதான் பிரசுரிச்சதால, 1984 லயே எழுதிய பாஸ்கருக்கு இந்த கேஸ் சாதகமாக அமையலாம். மேலும் அவர் கேட்கிற நஷ்ட ஈடு ரூ. 50 லட்சம் தான்.
* "ஜூகிபா" கதையை நான் பார்த்தேன், படித்தேன். நிச்சயம் ஓரளவுக்கு எந்திரன் கதை மாதிரித்தான் இருக்கு. ஆனால்.. 1984 ல தான் எழுதிய கதை என்று சொல்கிற பாஸ்கராலேயே இவருடைய கதையின் ஒரிஜினாலிட்டி கேள்விக் குறியாகிறது . அதனால் தமிழ்நாடன் அவர்களுக்கு வெற்றி வாய்ப்புக் கம்மிதான் என்பது என் எண்ணம்.
நான் இதில் யாரையும் நல்லவர் கெட்டவர்னு சொல்றாப்பிலே இல்லை. என் மேலே கேஸ் இல்லை! அதனால சும்மா தூரத்தில் இருந்து வேடிக்கை பார்க்கிறேன். அவ்வளவுதான்...
9 comments:
// "ஜூகிபா" என்கிற கதை, என் கதை "புத்தி ஜீவி" யின் தழுவல்னு மைனாம்பட்டி பாஸ்கர் ஏன் சொல்ல மாட்டேன்கிறார்? //
இது ஒரு நல்ல கேள்வி...
காப்பி, இன்ஸ்பிரேஷன் இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்துக்கொள்ள வேண்டும்... அப்படி பார்த்தால் சுஜாதாவுக்கும் அவரது விஞ்ஞான நாவல்களுக்கும் isaac asimov ஒரு இன்ஸ்பிரேஷன் என்று கூறலாம்... அதற்காக சுஜாதா ஐசக் அசிமோவை பார்த்து காப்பி அடித்தார் என்று கூற முடியாது...
***Philosophy Prabhakaran said...
காப்பி, இன்ஸ்பிரேஷன் இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்துக்கொள்ள வேண்டும்... ***
இது ரொம்ப கஷ்டமான மேட்டர் தல! டிக்ஷனரி பார்த்து புரிந்துகொள்ளுமளவுக்கு எளிதான விசயம் இல்லை :)
மாப்ள நீங்க அடிச்சி ஆடுங்க
// நசரேயன் said...
மாப்ள நீங்க அடிச்சி ஆடுங்க
//
தளபதி, நீங்க புடிச்சிப் பாடுங்க!
Iron Man 2 பாத்தீங்களா? எல்லாம் ஒரே மாதிரி தீம் தான்.... ஆனால், ஒரே மாதிரி கதை கிடையாது. என் பங்குக்கு குழப்பி பார்த்தேன். ஹி,ஹி,ஹி,ஹி....
I wish Rajini was in Iron Man 2 .....
***நசரேயன் said...
மாப்ள நீங்க அடிச்சி ஆடுங்க
6 January 2011 5:05 PM***
வாங்க தள! :)
**பழமைபேசி said...
// நசரேயன் said...
மாப்ள நீங்க அடிச்சி ஆடுங்க
//
தளபதி, நீங்க புடிச்சிப் பாடுங்க!
6 January 2011 5:48 PM***
வாங்க, மணியண்ணா! :)
***Blogger Chitra said...
Iron Man 2 பாத்தீங்களா? எல்லாம் ஒரே மாதிரி தீம் தான்.... ஆனால், ஒரே மாதிரி கதை கிடையாது. என் பங்குக்கு குழப்பி பார்த்தேன். ஹி,ஹி,ஹி,ஹி....
I wish Rajini was in Iron Man 2 .....
6 January 2011 10:24 PM***
வாங்க, சித்ரா!
நான் இன்னும் அந்த சீரீஸ்ல ஒரு படமும் பார்க்கலைங்க! பார்த்துட்டு சொல்றேன். :)
Post a Comment