2011 வந்ததும் எல்லாரும் 2010 ஐ திரும்பிப் பார்க்கிறாங்க! எனக்கு 2010 ஐ திரும்பிப் பார்க்க இஷ்டமில்லை! என்னத்தை திரும்பிப் பார்த்து என்னத்தை நெனச்சு பெருமையடைய? அப்படி எதுவும் 2010ல பெருசா சாதிக்கலை! 2011 ல சும்மா முன்னோக்கிப் பார்த்து நடக்க வேண்டியதுதான்.
எத்தனை பாடங்கள்தான் கற்றாலும் சாகிறவரை யாரையாவது நம்பி ஏமாறத்தான் போறோம்! இவன் இப்படினு நெனைக்கலையே? நு ஆச்சர்யப்படப்போறோம். சில நண்பர்களை இழக்கப்போறோம்! சில துரோகிகளை பார்க்கப்போறோம்! தகுயில்லாதவன் வெற்றியடையிறதையும், தகுதியுள்ளவன் தோல்வியைத் தழுவுவதையும் பார்க்கத்தான் போறோம்! எதுக்கு வம்புனு பல முறை வம்பிலிருந்து ஒதுங்கினாலும் ஒரு சில நேரம் வம்பிலே மாட்டத்தான் போறோம்.
சிலர் வயித்தெரிச்சல்ல விழப்போறோம்! நீ என்ன பெரிய இவனா? உன்னைப்பார்த்து வயிறெரிய என்ன இருக்கு? நு கேட்டுப்புடாதீங்க! இந்தப் பாழாப்போன உலகத்திலே பிச்சைக்காரனை பார்த்து வயிறெரியக்கூட பல பிச்சைக்காரனுக இருக்காங்க! நீங்க யாராயிருந்தாலும் உங்க தகுதி எதாயிருந்தாலும் என்னைக்குமே உங்களுக்கு மேலே பல கோடிப்பேரு இருப்பார்கள் உங்களுக்குக்கீழேயும் கோடிப்பேர் இருப்பாங்க! புரியுதா? நீங்க சாதாரணமானவர் மட்டுமில்லை! அசாதாரணமானவரும் கூட!
முன்னால் பார்த்து நடந்து போகையிலேயும் யாருமேலேயாவது மோதத்தான் போறீங்க! கண்ணெல்லாம் நல்லாத் தெரியும்! மனசு பின்னால அலல்து சைட்ல பிராக்குப் பார்க்கும்! மோதினால் என்ன இப்போ? மன்னிப்புக் கேட்டுட்டுப் போயிடலாமா? மன்னிக்க முடியாதுனு அவரு சொன்னா? அபராதம் கட்டிடலாமா? உங்களால கொடுக்க முடியாத அபராதம் கேட்டா? என்னவோ செய்ங்க!
ஆமா நம்ம சரத்குமாரு இந்த 40 வருட டைரக்டர் விழாவில் ரொம்ப சோகமா இருக்க மாதிரி இருந்தாரே ஏன்? உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்னு பாட்டு வேற! என்ன காடாத்தை போராடி என்னத்தை கிழிச்சாரு நு தெரியலை! அந்தம்மா ஏன்ப்பா இப்படி? என்ன பெண் முன்னேற்றம்னா இதுதானா? சரி, எது எப்படியோ, என்னுடைய அறிவுரை என்னனா, அவங்க, தம்பதிகள் ரெண்டு பேரும் சேர்ந்து ஒரே மேடை ஒரே விழாவில் கலந்துகொள்ளாமல் இருப்பது ரெண்டுபேருக்குமே நல்லது. அவரு அவரை அறிஞ்ச மாதிரி தெரியலை! அதான் சொல்லுறேன். It was really awful to see them embarrassing each other! ரஜினி-லதா, செல்வமணி-ரோஜா எல்லாம் எப்படி நடந்துக்கிட்டாங்க? உனக்கென்னவா? ஆமா எனக்கென்ன?
22 comments:
நம்ம மணியண்ணாவுக்காக லேசா கடையத் திறந்து அடைச்சாச்சு! :)
// இந்தப் பாழாப்போன உலகத்திலே பிச்சைக்காரனை பார்த்து வயிறெரியக்கூட பல பிச்சைக்காரனுக இருக்காங்க //
அந்த பதிவர் பாவம்ங்க... அவரை ஏன் வம்புக்கு இழுக்குறீங்க... (அப்பாடா... பத்த வச்சாச்சு...)
ஏன் இப்படி ஒரு புலம்பல்... பதிவு முழுவதும் ஒரு நெகடிவ்வான சிந்தனை இழையோடுவது போல தெரிகிறதே...
// நீங்க யாராயிருந்தாலும் உங்க தகுதி எதாயிருந்தாலும் என்னைக்குமே உங்களுக்கு மேலே பல கோடிப்பேரு இருப்பார்கள் உங்களுக்குக்கீழேயும் கோடிப்பேர் இருப்பாங்க! புரியுதா? நீங்க சாதாரணமானவர் மட்டுமில்லை! அசாதாரணமானவரும் கூட!//
நல்ல தத்துவம்:)!
மொத்தத்துல வேஸ்ட் னு சொல்றீங்க...
திரும்பிப்பார்த்ததிலும் சில படிப்பினை கிடைக்கலாம்...ஆனால் அதை பிரகடனப்படுத்துவதுதான் தேவையானு யோசிக்கணும்...
f
வித்தியாசமான தொடர் பதிவு. :-)
கரை புரண்டு ஓடும் ஆதங்கத்துடன் ஒரு தொடர் பதிவு...!! ஆனா வரிக்கு வரி பொறுமையா படிச்சேன் கடைசில ஏதாவது நிறைவாய் சொல்வார் என்று...ம்ம்
நீங்க சாதனை பண்ணலன்னு யார் சொன்னா? இவங்க மத்தியில பதிவு எழுதுறதே பெரிய சாதனை தான்... எப்பூடி? தொடர்ந்து எழுத என் வாழ்த்துக்கள்..
--
மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.com
என்னாசுங்க பாஸ், ஒரு விரக்தி தெரியுதே?
ஆமா ராதிகா டபல் மீனிங்கில் வேறு பேசி வெறுப்பேத்துனாங்க
***Philosophy Prabhakaran said...
// இந்தப் பாழாப்போன உலகத்திலே பிச்சைக்காரனை பார்த்து வயிறெரியக்கூட பல பிச்சைக்காரனுக இருக்காங்க //
அந்த பதிவர் பாவம்ங்க... அவரை ஏன் வம்புக்கு இழுக்குறீங்க... (அப்பாடா... பத்த வச்சாச்சு...)***
தல: அவரை எனக்கு சரியாக்கூடத் தெரியாது! என்ன இப்படி ஒரு தீக்குச்சியை வீணாக்கிட்டீங்களே! :)
***Philosophy Prabhakaran said...
ஏன் இப்படி ஒரு புலம்பல்... பதிவு முழுவதும் ஒரு நெகடிவ்வான சிந்தனை இழையோடுவது போல தெரிகிறதே...
10 January 2011 6:46 PM***
ஆமா எல்லாமே நெகடிவாத்தான் வந்திருக்கு. இந்தப்பதிவின் தலையெழுத்து அப்படி போல. இன்னொரு பதிவு பாஸிடிவாப்போட்டு சரிக்கட்டிடலாம் :)
***ராமலக்ஷ்மி said...
// நீங்க யாராயிருந்தாலும் உங்க தகுதி எதாயிருந்தாலும் என்னைக்குமே உங்களுக்கு மேலே பல கோடிப்பேரு இருப்பார்கள் உங்களுக்குக்கீழேயும் கோடிப்பேர் இருப்பாங்க! புரியுதா? நீங்க சாதாரணமானவர் மட்டுமில்லை! அசாதாரணமானவரும் கூட!//
நல்ல தத்துவம்:)!
10 January 2011 6:46 PM***
வாங்க ராமலக்ஷ்மி :)
எல்லாரும் முன்னாலேயே சொன்னதுதாங்க, ராமலக்ஷ்மி. நான் கொஞ்சம் மாடிஃபை பண்ணி சொல்லியிருக்கேன்.
உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு னு கண்ணதாசன் வரிகள் இருக்கிறதே :)
***பயணமும் எண்ணங்களும் said...
மொத்தத்துல வேஸ்ட் னு சொல்றீங்க...
திரும்பிப்பார்த்ததிலும் சில படிப்பினை கிடைக்கலாம்...ஆனால் அதை பிரகடனப்படுத்துவதுதான் தேவையானு யோசிக்கணும்...
10 January 2011 7:28 PM***
வாங்க சாந்தி!
கசப்பான கடந்தகாலத்தை நினைத்து நொந்துகொள்வதிலும், இனிப்பான கடந்த காலம் இன்று இல்லாததை நினைத்து ஏங்குவதிலும் நிகழ்காலம் நல்லா அமையுமானு தெரியலைங்க :)
ஆகா!
***Chitra said...
வித்தியாசமான தொடர் பதிவு. :-)
10 January 2011 9:12 PM ***
வாங்க, சித்ரா :)
***Kousalya said...
கரை புரண்டு ஓடும் ஆதங்கத்துடன் ஒரு தொடர் பதிவு...!! ஆனா வரிக்கு வரி பொறுமையா படிச்சேன் கடைசில ஏதாவது நிறைவாய் சொல்வார் என்று...ம்ம்
10 January 2011 10:15 PM***
வாங்க கெளசல்யா அவர்களே!
நீங்க இப்படி வரிக்குவரி படிக்கப்போறீங்கனு தெரிந்து இருந்தால் ஏதாவது நிறைவாய் சொல்லியிருக்கலாம்தான். :( என்னவோ போங்க இந்தப்பதிவின் தலைஎழுத்து அது போல.. இப்படித்தான் முடியனும்னு இருந்து இருக்கு போல, நம்ம கைல என்ன இருக்குனு சொல்லித் தப்பிச்சுக்கவா நான்? :)
***மதுரை பாண்டி said...
நீங்க சாதனை பண்ணலன்னு யார் சொன்னா? இவங்க மத்தியில பதிவு எழுதுறதே பெரிய சாதனை தான்... எப்பூடி? தொடர்ந்து எழுத என் வாழ்த்துக்கள்..
--
மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.com
11 January 2011 12:12 AM***
வாங்க பாண்டி! நன்றிங்க! :)
**இரவு வானம் said...
என்னாசுங்க பாஸ், ஒரு விரக்தி தெரியுதே?
11 January 2011 2:37 AM**
என்னமோ ஒரு மூடுங்க. மத்தபடி ஒண்ணும் இல்லை :)
என்னடா பொல்லாத வாழ்க்கை
இதுக்குப்போயி அலட்டிக்கலாமானு போயிடுற டைப்தான் நான் :)
***தர்ஷன் said...
ஆமா ராதிகா டபல் மீனிங்கில் வேறு பேசி வெறுப்பேத்துனாங்க
11 January 2011 4:10 AM***
ஆம்பளை என்ன, பொம்பளை ரவுடித்தனம் பண்ணினாலும் கேவலமாத்தான் இருக்கும்னு காட்டினாங்கபோல இந்த 50 வயதான அரைவேக்காடு!
***பழமைபேசி said...
ஆகா!
11 January 2011 10:01 AM***
வாழ்க மணியண்ணா! னு இந்தப்பதிவு வாழ்த்துது! :)
Post a Comment