
ஜப்பானிய மொழிப்படத்தை தழுவி மிஸ்கின் (ராஜா) இயக்கி மற்றும் இசை ஞானி இளையராஜா இசையமைத்து வெளிவந்துள்ள ஒரு தரமான சினிமாதான் நந்தலாலா! யாருக்கு? பொதுமக்களுக்கு எப்படினு இன்னும் தெரியலை. ஆனால் உலக சினிமா, கொஞ்ச காசுபோட்டு நல்ல சினிமா த்ரனும்னு நெனைக்கிறவங்களுக்கு!
இதுவரை விமர்சனம் எழுதிய விமர்சகர்கள் பலர் இந்தப்படத்தை புகழ்ந்து தள்ளியுள்ளார்கள். அப்படி ஆஹா ஓஹோனு புகழ்ந்து எல்லோரும் எழுதியுள்ளதால், இனிமேல் இந்தப் படத்தை நெகட்டிவாக விமர்சிக்க இப்போதைக்கு சாருநிவேதிதாக்குக் கூட தைரியம் வராது.
ஆமா ஜப்பானியப் படத்தை தழுவி எடுத்த படமாமே?
மிஸ்கின் ஜப்பானியப் படத்தை சுட்டு இருகிகாராமே?
அப்படியே இருந்தால் என்ன? இல்லை ஜீனியஸ் மிஸ்கின் காப்பியடிச்சா தான் என்ன பெரிய தப்பு? அதெல்லாம் பெரிய தப்பில்லை! ஆனா இதே வேலையை (தழுவலை) நம்ம கமல் செஞ்சிருந்தா? இந்நேரம் கமலுக்கு கண்ணா பின்னானு திட்டு விழுந்து இருக்கும். அதென்னவோ தெரியலை ரொம்பப் பெரிய ஆளாயிட்டாத்தான் இந்தத் தழுவல் பிரச்சினை அதிகம்.
சரி, காப்பியடிச்சா அந்த ஸ்டில்லைக் கூட அப்படியே காப்பி அடிக்கனுமா என்ன? இல்லை இல்லை தழுவினால் அந்த ஸ்டில்லைக்கூட விடக்கூடாதா?..
பதிவுலகில் ஒரு சில விமர்சகர்கள் இருக்காங்க. இவங்க எப்படினா சன் நெட்வொர்க் ஒரு படத்தை விநியோகம் செய்தால், அதை அறவே வெறுத்து, அவர்கள் மேலே உள்ள வெறுப்பில் அந்தப் படத்தை நியாயமாக விமர்சிக்காமல், கேவலமான ஒரு விமர்சனத்துடன் வருவது போலிருக்கும். ஒரு நல்ல விமர்சகர், படத்தின் பட்ஜெட்டைப் பார்க்காமல், படத்தை யார் தயாரித்தது என்பதைப் பார்க்காமல் அதை விமர்சனம் செய்யனும் எனபது என் தாழ்மையான எண்ணம். ஆனால் அந்த அளவுக்கு நம்ம பதிவுலகில் உள்ள பல பதிவர்களுடைய தரம் இன்னும் உயரவில்லை!
நான் சன் மற்றும் மு க குடும்பத்தினருக்கு வக்காலத்தெல்லாம் வாங்கவில்லை! "வ" குவாட்டர் கட்டிங் போன்ற படங்கள் ஃப்ளாப் ஆனதில் சந்தோஷப் பட்ட முதல் ஆள் நாந்தான். இதே நந்தலாலா படத்தை சன் நெட்வொர்க் அல்லது யாராவது மு க குடும்பம் தயாரித்து இல்லைனா விநியோகம் செய்து இருந்தால் இதற்கு நொடிக்கொருமுறை விளம்பரம் கொடுத்து இருந்தால்? அதன் விளைவு நந்தலாலாவுக்கு பதிவுலகில் என்ன ஆகியிருக்கும் என்று யோசித்தேன்.
ஒரு சில பதிவர்களின் விமர்சனமே இப்போது வந்துள்ளதுக்கு எதிர் மாதிரியாக வந்திருக்கும்!
எந்திரனாக இருக்கட்டும், நந்தலாலாவாக இருக்கட்டும் இல்லைனா மைனாவாக இருக்கட்டும், தன் சொந்த விருப்பு வெறுப்புகளை தள்ளி வைத்துப் படத்தை படமாகப் பார்த்து விமர்சிக்கும் நிலை வந்தால் நல்லாயிருக்கும்! ஒரே படத்தை சன் குழுமும் எடுத்தால் ஒரு மாதிரியும், ஞாநி தயாரித்தால் ஒரு மாதிரியும், ப்ரமிட் சாய்மீரா தயாரித்தால் ஒரு மாதிரியும் விமர்சிக்க வேண்டியதில்லை!