சரி, விஷப்பாம்புகள் பத்தி பார்ப்போம். முன்னால சொன்னதுபோல விஷப்பாம்புக்கு பேர் போன நாடுகளில் நம்ம ஊரும் ஒண்ணு. அதுவும் நமக்கு நல்லாத் தெரிந்த, பலதடவைகள் கேள்விப்பட்ட நான்கு வகையான பாம்புகள் உலகத்திலேயே மிகவும் கொடிய விஷப்பாம்புகள் வகையைச் சேரும்!
* நல்ல பாம்பு (நாகம்) Elapidae family:
நல்ல பாம்பு பொதுவாக தென் கிழக்கு ஆசியா, மற்றும் ஆப்பிரிக்காவில்தான் அதிகம் வசிக்கிறது. அதிக குளிர் சீதோசனநிலையுள்ள ஐரோப்பா மற்றும் அமெரிக்கா கண்டங்களில் நல்ல பாம்பு கெடையாது. பொதுவாக இவைகள் இறை தேடுவது இரவில்தான்! நல்ல பாம்பின் விஷமும் முக்கியமாக நியுரோ டாக்ஸின் தான். நம்ம செண்ட்ரல் நேர்வஸ் சிஸ்டத்தை மற்றும் மூளையை பாதிக்கும் விஷம்!
இந்தியாவில் நல்ல பாம்பு கடிச்சா அதற்கு மருந்தாக "polyvalent snake anti venom" தான் பொதுவாக கொடுக்கிறாங்க. இது குதிரைக்கு குறைந்த அளவில் நல்ல பாம்பு விஷத்தைக் கொடுத்து, படிப்படியாக அதிகமாகக் குதிரை ரத்தத்தில் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கி, அதிலிருந்து தயாரித்த மருந்து.
ஒரு சிலர் நல்ல பாம்பு எல்லாமே "ஆண் பாம்பு"னு சொல்லி கேட்டிருக்கேன். அதாவது, ஆண் மயில் தோகை விரித்து ஆடுவது போல, ஆண் பாம்பு மட்டும்தான் "படம் எடுக்கும்" என்று ஒரு சிலர் நம்புறாங்க. உண்மையிலேயே ஆண் மற்றும் பெண் நாகம் படம் எடுக்கும் என்றுதான் அறிவியல் சொல்லுது!
கீழே கொடுக்கப் பட்டுள்ள இன்னும் 3 வகை நம்ம ஊர்ப் பாம்புகள் (* கட்டுவிரியன் (common Krait, Family: "Elapidae": * கண்ணாடி விரியன் * சுருட்டை விரியன்) பற்றி பின்னால பார்ப்போம்!
மேலே படத்தில் உள்ளது கருநாகம்!