Wednesday, November 26, 2008

மும்பையில் தாஜ்மஹால் ஹோட்டலில் பயங்கரவாதம்!!

மும்பையில் பயங்கரவாதிகள் தாஜ் ஹோட்டலில் தாக்குதல்!

இதுவரை சுமார் 80 பேர் சாவு! இந்தியர்களுடன் அமெரிக்கன் மற்றும் ப்ரிடிஷ் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களை பணய கைதிகளாக தாஜ் ஹோட்டலின் மேல் மாடியில் வைத்துள்ளார்கள். :(

துப்பாக்கிகள் வைத்து தென் மும்பையில் உள்ள ஹோட்டல்களை பயங்கரவாதிகள் தாக்கியுள்ளனர். வெளிநாட்டுக்காரர்களை பணயகைதியாக்க முயன்றதுபோல் உள்ளது!

cnn.com

http://www.rediff.com/news/2008/nov/26-update-terror-in-mumbai.htm

Monday, November 24, 2008

காதலுடன் -1

சந்தியாவுக்கு ஒரே குழப்பமா இருந்தது. இரவு சீக்கிரமே படுக்கைக்கு வந்துவிட்டாள். படுக்கையில் புரண்டு படுத்துக்கொண்டு யோசித்தாள். அன்று மதியம் அவள் பார்க்கப்போன அந்த தமிழ்படம் "குருவி"யை அவளால் கவனித்துப் பார்க்கவே முடியவில்லை! அவள் நினைவெல்லாம் அவளுக்கு முன்னால் 5 வரிசைகள் தள்ளி உட்கார்ந்து இருந்த ரமேஷ் மற்றும் அவருடன் அமர்ந்திருந்த அந்தப்பொண்ணு பற்றியே இருந்தது. ஏனோ படம் முடிவதற்கு முன்பே தன் தோழியிடம் ஒரு சாக்கு சொல்லிவிட்டு எழுந்து வந்துவிட்டாள்.

இப்போதும் படுக்கையில் படுத்துக்கொண்டு அதையே யோசித்துக்கொண்டிருந்தாள். ரமேஷ் இங்கே எங்கே வந்தார்? யார் அந்தப் பொண்ணு? ரமேஷோட ஏன் படத்துக்கு வந்திருக்காள்? அவரோட மனைவியா? இல்லை கேர்ள் ஃப்ரெண்டா? சும்மா வெறும் ஃப்ரெண்டோ? எப்போ ரமேஷ் சிகாகோ வந்தார்? சும்மா விசிட் பண்ணுகிறாரோ? அவர் ரமேஷ்தானா? வேறு யாருமா? நிச்சயம் அவர்தான். யார் அந்தப்பொண்ணு? ரொம்ப இளமையா இருக்காளே! இருந்தாலும் தன் அளவுக்கு கவர்ச்சியாக அவள் இல்லைதான் என்று ஆறுதல் அடைந்துகொண்டாள், சந்தியா. இப்படி என்னென்னவோ யோசித்து தலையை பிய்த்துக்கொண்டிருந்தாள்.

ரமேஷ், சந்தியாவின் பழைய ஃப்ரெண்டு மற்றும் ரொம்ப நெருங்கிப் பழகியவர். இருவருக்கும் இடையில் ஒரு சின்ன "ஈகோ க்ளாஸ்" ஏற்பட்டு அது ஒரு பெரிய "வைல்ட் டேர்ன்" எடுத்ததால் இருவரும் பிரிந்துவிட்டார்கள். அது ஒண்ணும் அப்படி ஒண்ணும் பெரிய விசயமே இல்லை. ஆனால் ஒவ்வொரு சமயம் ஒரு சின்ன சாதாரண விஷயம்கூட இப்படி பெரிதாகி முடிந்துவிடுகிறது. அதன்பிறகு சந்தியாவுக்கு கல்யாணம் முடிவான போது, ஏதோ வேலை காரணமாக ரமேஷ் நியூ ஜேர்சிக்கு வேலை மாற்றலாகிப் போய்விட்டார். ஃபோன் நம்பர் கூட சந்தியாவுக்கு கொடுக்கவில்லை. அல்லது வேணும்னே கொடுக்கலையானு தெரியவில்லை. அவளை அதற்கப்புறம் அவர் கூப்பிடவும் இல்லை. அவள் இன்னும் அதே வீட்டு ஃபோன் நம்பர்தான் வைத்திருந்தாள். அவள் கல்யாணத்திற்கு ஒரு வாழ்த்து தந்திகூட அவரிடம் இருந்து இல்லை. ஒரு வேளை என் பத்திரிக்கை கிடைத்து இருக்காதோ? ஒரு ஈ-மெயில் வாழ்த்துக் கூட இல்லை! அதன் பிறகு இரண்டு வருடமாகிவிட்டது அவரைப் பார்த்து. ரமேஷிடம் எந்தவிதமான தொடர்பும் இல்லாமல் போய்விட்டது.

இதற்கிடையில் சந்தியா திருமண வாழ்க்கையில் வெற்றியடையவில்லை. கல்யாணம் ஆகி 3 வாரம்கூட அவளை மணந்த ராஜுவுடன் சேர்ந்து வாழமுடியவில்லை அவளால். இப்போது இருவருக்கும் விவாகாரத்து ஆகிவிட்டது.

சந்தியாவின் ஃபோன் அலரியது! அவள் ஃபோனை எடுக்காமல் படுத்தே ரமேஷ் யோசனையில் இருந்தாள்.

"ஹாய் சந்தியா! நான் தான் ரமேஷ் பேசுறேன். மூவ்ட் பேக் டு விண்டி சிட்டி! சும்மாதான் கூப்பிட்டேன்" என்று போனது ரமேஷின் மெசேஜ்!

அவசரமாக எழுந்து வந்து ஃபோனை எடுத்தாள், சந்தியா.

"ஹாய் ரமேஷ்! ஹல்லோ!!"

"ஆர் யு தேர் சந்தியா?"

"யா"

"எப்படி இருக்கீங்க?"

"இருக்கேன். நீங்கள்?"

"நான் நல்லா இருக்கேன் சந்தியா. உங்களை இன்று தமிழ்ப்படம் பார்க்கப்போனபோது தியேட்டரில் பார்த்தேன். பழைய ஞாபகம் எல்லாம் வந்தது. எப்படி இருக்கீங்க? கல்யாண வாழ்க்கை எல்லாம் எப்படி இருக்கு?"

"தியேட்டரில் என்னைப் பார்த்தீங்களா! நானும் உங்களைப்பார்த்தேன் ரமேஷ். ஆனால் பேச முடியவில்லை"

"ஆமா, ஆனால் ஒரு ஃப்ரெண்டோட வந்திருந்தேன். படம் முடிந்த பிறகு உங்களோட பேசலாம்னு நினைத்தேன். ஆனால் உங்களை பிடிக்கமுடியவில்லை"

"நான், படம் முடியும் முன்பே வெளியில் வந்துவிட்டேன், ரமேஷ்! என்ன சிகாகோ பக்கம், ரமேஷ்?"

"இங்கே மூவ்பண்ணிட்டேன், சந்தியா. இங்கேதான் வேலை"

"ஆர் யு சீரியஸ்?"

"யெஸ்"

"எங்கே இருக்கீங்க?"

"ஹில்சைட்' ல இருக்கேன் சந்தியா!"

"ஹு வாஸ் இட்?"

"ஹூ?"

"அந்த பெண்? உங்களோட படத்துக்கு வந்திருந்தாளே?"

"ஓ அவளா? ஜஸ்ட் எ ஃப்ரெண்ட், சந்தியா. அவள் பெயர் லக்ஷ்மி. என் கம்பெணியில் வேலை பார்க்கிறாள். அவள்தான் இந்தப் படத்துக்கு என்னை அழைச்சுண்டு வந்தாள்"

"இல்லை யாருனு சும்மாதான் கேட்டேன்" என்று ஏதோ உளறினாள் சந்தியா.

"உங்க ஹஸ்பண்ட் வீட்டில் தான் இருகாரா? நான் பேசலாமா?"

"நோ, ரமேஷ்! நான் தனியா தான் இந்த வீட்டில் இருக்கேன்"

"ரியல்லி?! சாரி, நான் நியூ ஜெர்சி போகும் முன் என் நம்பர் கூட கொடுக்கல"

"இந்த சாரியெல்லாம் இப்போ எதுக்கு, ரமேஷ்? ஐ ஆம் நாட் கோயிங் டு அக்செப்ட் யுவர் சாரி! சரி, இப்போவாவது கூப்பிட்டீர்களே? தேங்க்ஸ்"

"ஹேய், கொஞ்சம் புதிர் போடாமல் கொஞ்சம் தெளிவா சொல்லுங்களேன் ப்ளீஸ்?"

"எதைச் சொல்ல, ரமேஷ்?"

"உங்க கல்யாண வாழ்க்கைபற்றித்தான்.. என்ன ஆச்சு? ஒன்ஸ் ஐ யூஸுட் டு பி யுவர் க்ளோஸ் ஃப்ரெண்ட் தானே? சொல்லக்கூடாதா, சந்தியா?"

"ஒண்ஸா? அப்போ சரி சொல்லக்கூடாதுதான்" என்று சிரித்தாள்.

"ஏய் ஏய், இப்போவும் நான் உன் ஃப்ரெண்டுதான் சந்தியா!"

"அதை ஏன் கேக்குறீங்க, ரமேஷ்! அது ஒரு வாரம்கூட ஒழுங்கா போகலை! ரமேஷ். இட் வாஸ் எ ஃபியாஸ்கோ"

"ஐ ஆம் சாரி டு நோ தட்! சரி ஏன்? என்ன ஆச்சு?"

"ரெண்டு பேரும் கம்ப்ளீட் மிஸ்-மேட்ச்! சேர்ந்து வாழ வழியே இல்லைனு எனக்கு தோனியது. அதனால் டிவோர்ஸ் ஆயிடுத்து. எல்லாம் நன்மைக்கேதான் னு போக வேண்டியதுதான் ரமேஷ்" என்று சிரித்தாள்.

"எனக்கு எதுவுமே தெரியாதே, சந்தியா!"

"சரி இப்போ தெரிந்துவிட்டதில்லையா?"

"இது ரொம்ப ஸ்ட்ரேஞ் சந்தியா"

"எது?"

"சரி விடுங்க"

"ரமேஷ்! ஒரு உதவி செய்ய முடியுமா,ப்ளீஸ்?"

"டெல் மி"

"ப்ளீஸ், பழைய மாதிரியே, வா போ என்றே என்னை கூப்பிடுங்களேன்?"

"எனக்கு நடந்ததை பற்றி எல்லாம் தெரியாது இல்லையா? அதனால் தான்..."

"சரி, இப்போ தான் தெரிஞ்சிடுச்சே?"

"ஓ கே சந்தியா"

"சரி இப்போ என்ன ஸ்ட்ரேஞ்னு சொல்லுங்க?"

"வெளிப்படையா சொல்ல முடியல சந்தியா"

"நீங்க ரொம்ப ஈகோயிஸ்டிக்கா, ரமேஷ்?"

"தெரியலையே! இருந்தாலும் இருக்கும்"

"தெரியலையா? சரி, உங்களைப்பத்தி என்ன தெரியும் உங்களுக்கு?"

"என்னைப்பற்றி என்னோட நெருங்கி பழகியவர்களுக்குத்தான் நல்லாத் தெரியும். அதனால நீதான் சொல்லனும்!" ரமேஷ் சிரித்தான்.

"சொல்லவா?"

"ம்ம்"

-தொடரும்

பின் குறிப்பு: இது ஒரு கற்பனை கதைதான். எவ்வளவு தூரம் எழுத முடியும்னு தெரியலை. ஏதோ நேரம் கிடைக்கும்போது எழுதி எல்லோரையும் கொல்லுறேன். சரியா, வாசகர்களே? :-)

Wednesday, November 19, 2008

நாத்தீகர்களும் கடவுளும்!

என்னவோ கடவுள்னு ஒருவர் இருந்தால், அவர் ஆத்தீகர்களுக்குத்தான் நன்றியோட இருப்பார்னு நினைப்பது தவறு! கடவுள் என்பவர் இருந்தால், சாதாரண ஜால்ராவுக்கும், முகஸ்துதிக்கும் மயங்கும் மனிதனைப்போல் உணர்வு உள்ளவர்/ள் போல் நினைத்து மடமையில் வாழ்கிறார்கள் சில ஆத்தீகர்கள்!

நாத்தீகர்களுக்கு கடவுள் என்றுமே எதிரி அல்ல. கடவுள் இல்லாமல் அவர்களால் வாழமுடியுது. அவர்களுக்கு கடவுளின் உதவி தேவைப்பட வில்லை! நாத்தீகர்களைப் பொறுத்தமட்டில் கடவுள் கடவுள்னு சொல்லி ஊரை ஏமாற்றும் சில ஆத்தீகர்களைத்தான் அவர்களுக்கு பிடிக்காது! கடவுள் என்பவர் இருந்தால் அவர் ஒரு போதும் நாத்தீகர்களுக்கு எதிரி அல்ல.

இப்போ எல்லோருக்கும் உதவி செய்ய ஒருவர் இருக்கார். அவரை எதுக்கு தொந்தரவு பண்ணனும், நம்ம பிரச்சினையை நாமே போராடி வெற்றியடைவோமே என்கிற தன்னம்பிக்கையில் அவரிடம் போகவில்லை, அவர் உதவியை நாடவில்லை என்றால், அவர் கோவிச்சுக்குவாரா? அப்படி கோபித்துக்கொண்டால் அவரும் சாதாரண மனிதர்தான். இல்லையா?

கடவுளுக்கு நாத்தீர்ககளைத்தான் ரொம்ப பிடிக்கும், பிடிக்கனும். தான் இல்லாமலே இவர்களால் தன்னம்பிக்கையுடன் போராடி வாழமுடியுது என்பதை கடவுளே பாராட்டுவார். என் பேரைச்சொல்லிச் சொல்லி ஊரை ஏமாற்றாமல்/ தங்களையே ஏமாற்றாமலும் இருக்காங்கனு ரொம்ப சந்தோஷப்படுவார்! அதைவிடுத்து, தன்னை வழிபடுவனைத்தான் எனக்கு பிடிக்கும் என்று கடவுள் நினைத்தால், அந்தக் கடவுளுக்கு கடவுளாக இருக்கும் தகுதி இல்லாமல்போகிறது!

பொதுவாக மனிதனாகப்பிறந்தவர்கள், ஏமாற்றாமல், திருடாமல், பெண் பொறுக்கியாக இல்லாமல், நம்பிக்கை துரோகம் பண்ணாமல், மேலும் எல்லோரையும் தன்னைப்போல் நினைப்பது, மனிதாபிமானத் தோட வாழ்வது போன்ற நற்பண்புடன் வாழ்ந்தால், நாத்தீகராக இருந்தாலும் அவர்களும் உயர்ந்த மனிதர்கள்தாம் என்பதை தன் சுயநலத்திற்காக, இறைவழிபாடு மற்றும் கடவுளை திருப்திப்படுத்த முயலும் ஆத்தீகர்கள் மனதில் கொள்ள வேண்டும்.

நாத்தீகர்கள், கடவுள் இல்லை என்று நம்புவது ஒண்ணும் பெரிய குற்றமல்ல! நம்ப முடியாததால் நம்புவதில்லை! அவர்களுக்கு நடிக்கத்தெரியவில்லை! தன் மனதில் தோன்றுவதை உண்மையாக சொல்கிறார்கள்! அவ்வளவுதான்!

நற்குணங்களுடன், மனிதாபிமானத்துடன் இருந்து தன்னால் உணரமுடியாத கடவுளை வணங்கவோ வழிபடவோ நாத்தீகர்கள் செய்யவில்லையென்றால் அது ஒண்ணும் தவறல்ல! அது எந்த வகையிலும் அவர்களை குறைக்காது என்பதை ஆத்தீகர்கள் உணர்வது நல்லது!

Friday, November 14, 2008

காதல் கல்வெட்டு-15 (முற்றும்)

கொஞ்சம் நில்லுங்கள்!!! நிறைய ஃப்ளாஸ்பேக் லாம் போயிட்டு இப்போ வந்து சேர்ந்தாச்சு! இந்தப்பகுதி காதல் கல்வெட்டு-4 ன் தொடர்ச்சி! சரி இப்போ படிங்க!
---------------------------

கயலுக்கு அன்று தூக்கம் வரவே இல்லை. ஆனாலும் வருண்,ரொம்ப ரொம்ப மோசம் என்று நினைத்தாள், எப்படி இப்படியெல்லாம் என்னை தூங்க விடாமல் பண்றார்? ஒரு பக்கம் இவ்வளவு இண்டிமேட்டா பேசுவார். ஆனால் இன்னொரு பக்கம் ஏதோ அந்நியன் மாதிரி நடிக்கவும் செய்வார். வாயை திறந்து சொன்னால் என்ன? இவர் ரொம்ப தலைக்கனம் பிடித்தவரோ? ஒருவேளை வேறு யாரையும் விரும்புறாரா? அந்த ஜென்னி இப்போ தனியாத்தானே இருக்கிறாள்? என்ன ட்யூட்டரிங் பண்ணுறாரோ யாருக்குத் தெரியும்? வாழ்நாள் முழுவதும் ட்யூட்டரிங் பண்ணுவாரோ? மறுபடியும் ஃபோனை எடுத்து வருணை கால் பண்ணினாள்.

"என்ன கயல்! தூங்கலையா இன்னும் நீ?"

"தூக்கம் வரலை. நீங்களும் தூங்கலை போல இருக்கு? எதுவும் ட்யூட்டரிங் ப்ரிப்பரேஷனா?'

"என்ன கிண்டலா?"

"இல்லையே ஏன் இன்னும் தூங்கலை?"

"வர வர நீ ரொம்பத்தான் என்னை அதட்டுற! சரி, ஒரு பொண்ணைப்பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன், அதனால் தூக்கம் வரலை"

"யார் அவள்? யாரும் வெள்ளைக்காரியா?"

"இல்லையே. ஏன் வெள்ளைக்காரினா பிடிக்காதா உனக்கு? வெள்ளைக்காரனோட ஏதாவது டேட் போயிருக்கியா?"

"போயிருக்கேன். ஆனா எனக்கு அவர்களை எல்லாம் பிடிக்கலை, வருண்"

"ஆனால் எனக்கு வெள்ளைக்கார பெண்கள் பிடிக்கும், கயல்"

"அப்படியா? வெள்ளையா இருப்பதால் பிடிக்குமா?"

"யாராவது வெள்ளையா இருந்தால் போதும் அலைவேன்கிறயா? இல்லை, கயல். எனக்கு அவங்க மேலே நிறைய மரியாதை உண்டு"

"யாரையாவது காதலிச்சு இருக்கீங்களா?"

"வெள்ளைக்காரியையா?"

"ஆமாம்!"

"இல்லையே"

"சரி சொல்லுங்க! என்ன அப்படி ஒரு பெரிய மரியாதை வெள்ளைக்காரிகள் மேலே?"

"ஒரு முறை ஜென்னியிடம் பேசிக்கொண்டு இருந்தேன். எனக்குத் தெரிந்த ஒரு வயதான ஒரு ஆள், அவர் நடந்துகொள்ளும் விதத்தைப்பற்றி. 82 வயது இருக்கும். அந்த வயதில் காம உணர்வோட அலைவது பற்றி பேச்சு வந்தது. அதைப்பற்றி கொஞ்சம் அலசினோம்"

"யார் அவர்? உங்க ரிலேட்டிவ் யாருமா வருண்?"

"ரிலேடிவ் மாதிரித்தான், கயல். பொதுவா இந்த மாதிரி இந்த வயதில் காம உணர்வு இருந்தால் மற்றவர்களிடம் தவறாக நடந்தால், நம் இந்தியர்கள் எல்லாம் வெறுப்பார்கள். ஆனால் ஜென்னி அவருக்காக பரிதாப்பட்டாள்"

"எதுக்கெடுத்தாலும் ஜென்னி! ஜென்னி! ஜென்னி! சரி, ஏன் இந்தப் பரிதாபமாம், வருண்?"

"ஏன் என்றால்? அவருக்கு நடக்க முடியாது. கண் தெரியாது. எதுவுமே முடியாது. ஆனால் வேலைக்காரி போய் டீ கொடுக்கும்போது அவள் கைய்யைப்பிடிப்பாராம். அவர் அவரே இல்லை கயல், எல்லா உணர்வுகளையும் இழந்துவிட்டார். ஒரு குழந்தை மாதிரினு சொல்லலாம்"

"என்ன இருந்தாலும் இது அருவருப்பான விசயம் தானே? இதுக்கு என்ன தீர்வு, வருண்?"

"எனக்குத் தெரியலை கயல். எனக்கும் பயங்கர எரிச்சலாக வரும். ஆனால் அவள் சொன்னதுக்கப்புறம் யோசித்துப்பார்த்தால் அவரை திட்டுவதைவிட பரிதாபப்படுவது சென்ஸிபிளா தோனுது'

"செக்ஸ் ரொம்ப மோசமான விசயம்னு நினைக்கிறீங்களா, வருண்"

"செக்ஸ் ஒரு அழகான விஷயம், கயல். ஆனால்.."

"ஆனால்?"

" தகுதிப்பெற்ற இரண்டு நபர்களுக்குள் நிகழ்ந்தால் தான் அது அழகு"

"அப்படினா?"

"ஒரு 13 வயது பெண்ணை ஒரு 34 வயது ஆள் அரட்டைப்பெட்டியில் சந்தித்து அவளுடன் செக்ஸ் சாட் பண்ணுவது எல்லாம் அழகா இருக்காது'

"அந்த அபிலேஷ் பாஸ்கரனை பிடிச்சு உள்ளே போட்டுட்டாங்க, வருண்"

"நம்ம ஊரில் உள்ள மடையனுகளுக்கு ஃப்ரீ செக்ஸுக்கும், செக்ஸுவல் அப்யூஸுக்கும் வித்தியாசம் தெரியலை. அது தெரியாமல் ஏதாவது லூசுத்தனமா செய்து மாட்டிக்கொண்டு நம்ம மானத்தையும் சேர்த்து வாங்கிறானுகள்"

"சரி விடுங்க, நம்ம விசயத்துக்கு வாங்க. யார் அந்தப் பொண்ணு, உங்களை தூங்கவிடாமல் தொந்தரவு பண்ணியது?"

"அவளா? அவள் ஒரு ரொம்ப நல்ல பொண்ணு. என்னோட உரிமையா பழகுவாள் பேசுவாள். ரொம்ப அழகா இருப்பாள். தமிழ் பொண்ணு"

"யார் உங்க பழைய காதலி ஜெயந்தியா?"

"அவள் எல்லாம் இப்போ இடத்தை காலி பண்ணிட்டா"

"அப்போ யாரு?"

"நீ என்ன சரியான ட்யூப் லைட்டா?"

"ஆமா. யார் அந்தப் பொண்ணு?'

"கண்ணாடி எதுவும் பக்கத்தில் இருக்கா?"

"இருக்கு"

"அதில் பாரு. உன்னையே பார்ப்பாள்!"

"அவளா? நேரம் கெட்ட நேரத்தில் என்ன அவள் நினைப்பு?"

"நானா நினைச்சேன்? அவள்தான் வந்து அநியாயம் பண்ணுறா?"

"என்ன அநியாயம்?'

"இப்போ சொல்ல மாட்டேன்!"

"நீங்க ரொம்ப ரொம்ப மோசம் வருண்"

"என்ன குரல் ஒரு மாதிரியா இருக்கு? வெட்கமா?"

"ஆமா, உங்களுக்கு நான் யாரு வருண்?"

"எனக்கு நீ யாரு? எனக்கு நீ, கயல்!"

"அதில்லை! என்ன உறவு?"

"உனக்குத் தெரியாதா?"

"சொல்லுங்க"

"பச்சையா சொல்லவா?"

"ம்ம்"

"என் உயிருக்குயிரானவள்"

மெளனம்

"ஹேய்! இருக்கியா?"

"ம்ம்"

"ஐ லவ் யு, கயல்!"

"மறுபடியும் சொல்லுங்க வருண்!"

"ஐ லவ் யு வெர்ரி மச்!"

"லவ் யு டூ ஸ்வீட் ஹார்ட்!"

-முற்றும்

Friday, November 7, 2008

கற்புனா என்ன? : சில நினைவலைகள்(360 டிகிரி) - 8

பாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4, பாகம் 5, பாகம் 6
பாகம் 7
"Did you have inter****** with him?" என்னுடைய ஒரு நடிகரைப்பற்றிய பதிவுக்கு ஒரு சகோதரர் இப்படி ஒரு "கனிவான" பின்னூட்டம் எழுதி இருந்தார். பாவம், அவர் கூட பயணம் செய்பவர்களோடு எல்லாம் இண்டர்கோர்ஸ் வைத்துக்கொள்ளும் மனநோயாளி போலிருக்கிறது. சகோதரரே, அந்த பழக்கம் எல்லாம் என்னிடம் இல்லை என்பதை தாழ்மையாக தெரிவித்துக்கொள்கிறேன்.உங்களுடைய மனநோய் விரைவில் குணமாகவும் பிராத்திக்கிறேன். என்ன அந்த காமெண்டை டிலிட் பண்ணிட்டு பேசாமல் விட்டுவிடுவேன் என்று நினைத்தீர்களா? அதெல்லாம் இல்லை, கமெண்ட் பக்கத்தில் எழுதினால் ஒருவேளை கவனிக்கப்படாமல் போய்விடும் வாய்ப்பிருக்கிறது இல்லையா, அதனால் தான். இப்படி எல்லாம் எழுதி உங்களுக்கு என்ன கிடைத்துவிட்டது? ஏதாவது கிடைத்திருந்தால் மகிழ்ச்சி!

பெண்கள் பயந்துக்கொண்டு ஓடுவதால் தான் துரத்தும் ஜென்மங்களுக்கு ரொம்ப திரில்லிங்காக இருக்கிறது, பதிலுக்கு திரும்பி நின்று கையில் ஒரு கல் எடுத்துப்பாருங்கள், துரத்தும் கோழை தலைதெறிக்க ஓடிவிடும். இப்படி கடுமையாக எழுத எனக்கும் பிடிப்பதில்லை, சிலருக்கு இந்த மொழி தான் புரிகிறது, நான் என்ன செய்ய? சரி அதை விட்டுத்தள்ளுவோம், சில ஜென்மங்கள் என்ன திட்டினாலும் திருந்தாது. போன தொடரில் ஒரு விஷயத்தை சரியாக எழுதாமல் குழப்பி விட்டேன் என்று நினைக்கிறேன். அதாவது, இளம் வயது பெண்கள் வயதான ஆண்களை காதலிக்க கூடாது என்ற பொருள் வந்துவிட்டது, நான் எழுத நினைத்தது அதுவல்ல.

படிக்கும் வயதில் பெண்கள்/ஆண்கள் தயவு செய்து படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தவும். இன்று காதல் வசனம் பேசுபவர்கள், நாளை நீங்கள் கஷ்டப்படும் போது உதவப்போவதில்லை. நன்றாக படித்து, வேலை கிடைத்து ஒரு நிலையை அடைந்தப்பிறகு 50 வயதுக்காரர் என்ன, Anna Nicole மாதிரி 80 வயது மனிதரைக்கூட காதலியுங்கள், திருமணம் செய்துக்கொள்ளுங்கள், தவறே கிடையாது. காதல் வயதெல்லாம் பார்த்து வருவதில்லை, ஆனால் காதலை செயல்முறைப்படுத்தும்போது வயது வரம்பு அவசியம்! இது தான் நிதர்சனம், நம்பினால் நம்புங்கள்.

மேலும் மற்றொரு கேள்வி, இந்தியப்பெண்களோ அல்லது ஆண்களோ திருமணத்துக்கு முன் உடலுறவு கொண்டால் அதை தைரியமாக உங்கள் significant otherருக்கு தெரிவிப்பீர்களா? இல்லை தானே? வெஸ்டர்னர்ஸ் அப்படி எல்லாம் மறைக்க மாட்டார்கள், திருமணத்தின் போதே 'வெர்ஜின் இல்லை' என்பது நன்றாக தெரிந்தே திருமணம் செய்துக்கொள்வார்கள். அப்படி என்றால் நாம் ஒரு ஆணையோ அல்லது பெண்ணையோ பொய் சொல்லி ஏமாற்ற வேண்டும்! ஏமாற்றுவதில் உங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றால், திருமணத்துக்கு முன் உடலுறவு கொள்ளும் விஷயத்தில் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை.

கற்பு, கத்திரிக்காய் என்ற லெக்சரடிக்க வரவில்லை, ஒரு மனிதரை ஏமாற்றுவது ரொம்ப தவறு, அதுவும் திருமணம் போன்ற முக்கியமான உறவுகளில் ஏமாற்றுவது ரொம்ப ரொம்ப தவறு என்பது என் கருத்து. அதுவும் பொதுவாக நம்ம ஊரில் ஆண்களின் மெண்டாலிட்டி அருமையிலும் அருமை! அவர்கள் எப்படிப்பட்ட கோவலன்களாக இருந்தாலும், தங்களுடைய மனைவி மட்டும் கண்ணகியாக இருக்க வேண்டும் என்ற அசாதாரண எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. பொதுவில் உணர்ச்சிவசப்பட்டு பெண் சுதந்திரக்கருத்துக்களை உதிர்ப்பவர்களும், தனியறையில் எப்படி என்பதை நிச்சயமாக சொல்ல முடியாது. பெண் சுதந்திரம் எல்லாம் ஓவர் நைட்டில் கிடைத்துவிடாது.ஜாதி சமத்துவமே இன்னும் கிடைக்காத போது, ஆண் -பெண் சமத்துவம் கொஞ்சம் பேராசையே! சமத்துவமே வராது என்று சொல்லவில்லை, நிச்சயம் உடனே வராது என்பது மட்டும் உண்மை. இதை எல்லாம் சமாளிக்க முடியுமென்றால், You go girl!!! Sky is the limit!. இதெல்லாம் டூ மச் என்று நினைப்பவர்கள் ஒழுங்கு மரியாதையாக நன்றாக படித்து முன்னேறுவதில் கவனத்தை திருப்பவும். நமக்கெல்லாம் Limit is the sky!

இதெல்லாம் புரியாதவர்களுக்கு அவர்களுக்கு புரிந்த மொழியிலேயே எழுத முயலுகிறேன், பெற்றோர் கடினமாக உழைத்து நம்மை படிக்க வைக்கும் பணத்தை வீணாக்குவது தவறில்லையா? வீணாக்க விருப்பம் என்றால் சுயமாக சம்பாதித்து உங்கள் பணத்தை மற்றும் நேரத்தை வீணாக்கவும். இன்றைய இளையத்தலைமுறை ஆண்களுக்கு தன்னம்பிக்கையுள்ள, படித்த, அதிகாரத்தில் இருக்கும் பெண்களை ரொம்ப பிடிக்கிறது, ஒரு நிலைக்கு வந்த பிறகு தானாகவே காதலிக்கும் வாய்ப்புகள் வரும், வேண்டுமென்றால் சுயம்வரம் வைத்து கூட வேண்டியவரை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இதற்கு நல்ல உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் என்னுடைய தோழி சரஸ்வதியை(அடையாளம் தெரியாமல் இருக்க பெயரை மாற்றுவதற்குள் உயிர் போகிறது எனக்கு!)குறிப்பிடலாம். தானாகவே உழைத்து முன்னுக்கு வந்தவர்கள் பட்டியலில் அவளுக்கும் நிச்சயமாக ஒரு இடம் உண்டு.

யூனிவர்சிட்டியில் புதிதாக வந்து சேர்ந்த போது எங்கள் யாருக்குமே அவளை அவ்வளவு பிடிக்கவில்லை. ஒல்லியாக, நெடு நெடுவென்று சுடிதாருடன் வருவாள். Fashion sense என்றால் கிலோ என்ன விலை அவளுக்கு, இந்தியப்பெண்கள் குறைவு என்பதால் வேண்டா வெறுப்பாக அவளையும் சேர்த்துக்கொள்வோம். அவளுடைய குடும்ப பிண்ணனியை தெரிந்துக்கொண்ட போது பாவமாக இருந்தது. அப்பா உடற்பயிற்சி ஆசிரியர், அம்மா ஹவுஸ் ஒய்ஃப், இவளுக்கு முன் ஒரு அக்கா, பின்னால் ஒரு தங்கை. கல்லூரி கட்டணம் கூட கட்ட முடியாமல் ரொம்ப திணறி இருக்கிறார்கள். படிப்பு மட்டும் அவளுக்கு ரொம்ப நன்றாக வந்தது என்று சொன்னால் அது பச்சைப்பொய்! அதெல்லாம் இல்லை, அவள் ஒரு கடின உழைப்பாளி. நாங்கள் டிவி பார்க்கும் போது, வெட்டி அரட்டையடித்து பொழுதைப்போக்கும் போது, டான்ஸ் க்ளப்புக்கு போகும் போது- எதிலும் கலந்துக்கொள்ளாமல் படிப்பு, படிப்பு, படிப்பு!

அவள் உழைப்பெல்லாம் தேர்வுகளில் ஜொலித்தது, பேராசிரியர்கள் அவள் என்றால் மரியாதையாக பார்த்தார்கள். எங்கள் செட்டிலேயே அதிக க்ரேட் பாயிண்ட் ஆவெரேஜில் க்ராஜுவேட் பண்ணினாள். Fortune 500 கம்பனியில் உடனே இண்டர்னாக எடுத்துக்கொண்டார்கள், எங்களுக்கெல்லாம் ஒரு உப்புமா கம்பனிகளில் வேலை கிடைத்தது. 'வேலை கிடைத்துவிட்டதே' என்று எங்களை மாதிரி வெட்டியாக அவள் சொன்ன வேலையை மட்டும் செய்துவிட்டு வீட்டுக்கு ஓடவில்லை, தன் வேலை மட்டுமில்லாது, மற்றவர்கள் வேலைகளையும் கற்றுக்கொண்டாள். சில மாதங்களில் அவளை நிரந்தரமாகவே வேலைக்கு எடுத்துக்கொண்டார்கள். சக தோழிகள் அவளை பொறாமை கலந்த மரியாதையுடன் பார்க்க ஆரம்பித்தோம். அதுமட்டுமல்ல, ரொம்ப நல்ல மனிதரை தேர்ந்தெடுத்து திருமணமும் செய்துக்கொண்டாள். சரஸ்வதி தற்போது 6 மாதமேயான அழகான பெண்குழந்தைக்கு அம்மா, Software quality control பிரிவில் ப்ராஜக்ட் லீட்! ஏதோ தேவதை கதை போல இருக்கிறது இல்லையா?

தேவதைக்கதை எல்லாம் இல்லை, இந்தப்பெண் பல போராட்டங்களை கடந்தே இந்த நிலையை அடைந்திருக்கிறாள். எத்தனையோ நாள் என்னிடம் தாங்க முடியாமல் வாய்விட்டு அழுதிருக்கிறாள்! எத்தனை துன்பம் வந்தாலும், அடுத்த நாள் நல்லதாக விடியும் என்பது அவளின் அசைக்க முடியாத நம்பிக்கை. இவள் ஆண்களையே ஏறெடுத்துப்பார்க்காதை கவனித்து, ஒருவேளை லெஸ்பியனோ என்று கூட நினைத்திருக்கிறோம். இவளுடைய இந்நாள் கணவர், அந்நாள் காதலராக இருக்கும் போது ரெஸ்டாரண்டுக்கு அவரை அறிமுகப்படுத்த அழைத்து வந்தாள். சாப்பிட்டுக்கொண்டிருந்த எனக்கு புரை ஏறிவிட்டது. "I thought you are a lesbian!" என்று ஒரு தோழி வாய்விட்டே அலற, உடனே அனைவரும் ஆமோதித்தோம். பிறகு சூழ்நிலையை உணர்ந்து அவசரமாக அவளுடைய காதலரின் முகத்தைப்பார்த்தோம், பேயறைந்தது போல இருந்தது! இப்போதும் அதே எக்ஸ்ப்ரெஷனுடன் தான் உலா வருகிறார்(சும்மா ஜோக்):)

-நினைவுகள் தொடரும்

Wednesday, November 5, 2008

மைக்கேல் க்ரைக்டன் (Michael Crichton) மறைந்தார்!

ஆங்கில நாவல் ஆசிரியர் மைக்கேல் க்ரைக்டன் இன்று மரணம் அடைந்தார் :( இவர் ஒரு எழுத்தாளர் மற்றும் ஒரு டாக்டர் (ஃபிசிஸியன்) என்பது குறிப்பிடதக்கது.

இவர் எழுதிய சில நாவல்கள்..

Disclosure

Jurassic Park

State of Fear

Next

ER (creator) (TV show)

இவர் மரணம் எதிர்பாராதது :(.

இவருக்கு வயது 66 தான்! :(

Tuesday, November 4, 2008

பராக் ஒபாமா- ப்ரசிடெண்ட் ஆஃப் யு எஸ் எ!

அமெரிக்கா சரித்திரம் படைக்கிறது!

ஆஃப்ரிக்கன் அமெரிக்கன் பராக் ஒபாமாவை 44 வது ப்ரசிடெண்ட் ஆக தேர்ந்தெடுத்தது.

இது அமெரிக்கர்களை ஒரு தலை சிறந்த மற்றும் திறந்த மனப்பான்மை உள்ள மக்களாக காட்டுகிறது!

இந்தியாவில் இன்னும் ஒரு திராவிட ப்ரைம்மினிஸ்டர் வரவில்லை என்பது வருத்தத்திற்குரியது!