Thursday, July 31, 2014

காவிரிமகனும் எம்ஜியாரும்! ஏமாற்றுக்காரனுக்கு ஏமாற்றுக்காரன்!

தமிழ்ப் பதிவுலகில் பெரிய மனிதர்கள் எல்லாம் நெறையவே இருக்காங்க. அதோட சின்னச் சின்னப்பசங்களும் இருக்காங்க. இங்கே வயதுக்கும் பெரிய சின்ன மனிதனுக்கும் சம்மந்தம் இல்லை!

சரியோ தவறோ, தான் சொல்ல வந்ததை தெளிவாக சொல்லிவிட்டு, தன் கருத்தை பகிர்ந்துவிட்டுப் போறவங்க பெரிய மனிதர்கள். இன்னொரு வகை இருக்கு, எதையாவது சொல்ல வருவதுபோல் வந்து எதையாவது வரிந்து வரிந்து எழுதிவிட்டுத்  தலைப்புக்கும் தான் சொன்ன கருத்துக்கும் சம்மந்தமே இல்லாமல் முடித்துவிட்டுப் போற ஏமாற்றுக்காரர்கள்! இவர்கள் சின்னத்தனமானவர்கள்.

காவிரி மகன்னு ஒரு பதிவர் இருக்காரு. இவர் வயதில் மிகவும் மூத்தவர் என்பது என் புரிதல். மற்றபடி எனக்கு இவரைப் பத்தி தெரியாது. இவர் நல்லவரா, வல்லவரா, கெட்டவரா, கோமாளியா என்னனு தெரியாது. ஆனால் இவரு தமிழ்ப்திவுலகில் "பெரிய மனுஷன்"!

இவர் சமீபத்தில் எம்ஜியாரும் ராகுகாலமும்னு ஒரு பதிவு (மூனு பிரிவா) எழுதினாரு. இது மூன்றும் தொடர் பதிவுகளாக வந்தன.

 தலைப்பைப்பார்த்துட்டு நம்ம என்ன நினைப்போம்?

எம்ஜிஆர் பகுத்தறிவுவாதியா? இல்லைனா மூடப்பழக்கவழக்கங்கள் கொண்டவரா? சரி இவர் அனுபவத்தில் என்னடா சொல்றாரு "இந்த பெரிய மனுஷன்" னுதான் வாசிக்கப் போவோம்.

அங்கே போனால், வரிந்து வரிந்து எழுதுகிறார்..ஒரு ஃபங்க்சனுக்கு எம்ஜிஆர் வரப் போராரு. அந்த ஃபங்கஷன் ராகுகாலத்தில் அமைந்துவிட வாய்ப்பிருக்கிறது. அதைத் தவிர்த்தாங்களா? - எம்ஜியாரின் ஆலோசனைப்படி. அல்லது அதைப்பற்றி பகுத்தறிவுவாதி எம்ஜியார் கவலைப்படவில்லையா? என்கிற கேள்விக்கு பதில் தேடிப் போயி இந்தப் பதிவை வாசிச்சவனை எல்லாம் பைத்தியக்காரனாக்கிவிட்டார் அந்தப் பிரபலப் பதிவர் காவிரிமகன்.

எனக்குப்புரிந்தவரைக்கும் Believe it or not, MGR never had an opinion on this at all. அந்த விழா ராகுகாலத்தில் நடந்ததா இல்லையா என்றே அவருக்கு தெரியாது என்பதுபோல் முடிகிறது கட்டுரை!

ஆக, எம்ஜியாரையும், ராகுகாலத்தையும் வச்சு, அதுக்கு இடையில் இவரு நுழஞ்சி என்னதான் எழுதினாரு இந்த ஆளுனு பார்த்தால்,

இவருடைய சொந்தக்கதை, இவரு உக்காந்தது, நடந்தது, இவர் இவருடைய எஜமானுக்கு அறிவுரை சொல்லியது, இவரு எஜமானுக்கும் ராகுகாலத்துக்கும் ஏற்பட்ட பிரச்சினை, அப்புறம் இவரு உச்சாப்போனது இப்படியே போனது கட்டுரை.

கடைசியில் ராகுகாலத்தில் அந்த ஃபங்க்சன் நடந்துமுடிந்ததாம்- எம்ஜியாருக்கு அது ராகுகாலமென்று தெரியாமலே! இப்படித்தான் முடிகிறது இந்தக் கட்டுரை..

காவிரி மகனின் பதிவின் தலைப்புகள்..

எம்ஜியாரும் ராகுகாலமும் இடையில் சிக்கிய நானும் (1)

 எம்ஜியாரும் ராகுகாலமும் இடையில் சிக்கிய நானும் (2)

 எம்ஜியாரும் ராகுகாலமும் இடையில் சிக்கிய நானும் (இறுதிப் பகுதி)


இறுதிப்பதிவில் வந்த பின்னூட்டம்..
  1. நான் எம்ஜியார்-தான் ராகு காலத்தில் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டாரோ என்று எண்ணிக்கொண்டிருந்தேன். கடைசியில் ஆர்கேசி சாருக்குத்தான் அந்த பிரச்சனையோ?

இந்தத் தொடரைப்படிச்சு முடிச்சதும் எனக்கு தோனியது. பதிவுலகில் இந்தமாதிரி பித்தலாட்டுக்காரனுகதான் பெரியமனுஷன் போர்வையில் திரிகிறானுக. ஆமா, மனதில் தோனியதை அப்படியே சொல்லிவிட்டேன். நான் ரொம்ப "ஆனஸ்ட்" டாக்கும்.

என் சிந்தனைகள் தொடருகிறது..ஆமா, இந்த பதிவை எழுதியவன் கேணையனா? இல்லை தலைப்பைப் பார்த்துப்போயி இதை வாசிச்சவனுக எல்லாரும் கேணையனுகளா?  இல்லைனா தமிழ்ப் பதிவுலகில் திரிகிற எல்லாருமே கேணையனுகதானா???

இது இப்படி..

************************

இந்தாளுடைய  இன்னொரு பதிவில் இன்னொரு யோக்கியன் பின்னூட்டமிடுறான். எப்படி? இந்தாளை வானளாவ புகழ்ந்து நீங்க அப்படி எழுதுறீங்க, இப்படி எழுதுறீங்கனு சொல்லி- இதயத்திலிருந்து வார்த்தைகளை அள்ளிக்கொட்டி..


Urządzenia fitness – siłownie plenerowe i ścieżki zdrowia commented on ஓதுவது சாத்தான் என்றாலும் சொல்லும் வேதம் சரியாகத் தானே இருக்கிறது ….!!!
Hi! This is my 1st comment here so I just wanted to give
a quick shout out and say I truly enjoy reading your articles.
Can you suggest any other blogs/websites/forums that go over the same
subjects? Thanks a ton!


உடனே இந்தாளும், அதான் நம்ம விமர்சனம்காவிரிமகன் தான், இந்தப் பின்னூட்டக்கரனுடைய பின்னூட்டத்தில் மயங்கி குழப்பத்துடன் அதை அரைமனதாக  அவன் புகழ்ந்ததை வெட்கத்துடன் ஏற்றுக்கொள்ள..

பிறரிடம் இருந்து வந்த தொடர் பின்னூட்டங்கள் தெளிவுபடுத்துவது என்னவென்றால்.. அவன் பின்னூட்டத்தில் எழுதியதெல்லாம் சுத்தமான பொய், பித்தலாட்டம் என்று.

இவர் பதிவைப் புகழ்ந்து பின்னூட்டமிட்ட அவனுக்குத் தமிழ் தெரியுமா என்பதே கேள்விக்குறி!! என்பது தெளிவாகிறது தொடர் பின்னூட்டங்களில்!!!

ஆக,  பின்னூட்டமிடுவது அவனுக்குத் தொழில். இப்படி ஒரு பித்தலாட்டப் பின்னூட்டக்காரன்!!

ஆக, எம்ஜியாரையும் ராகுகாலத்தையும் வச்சு இவர்கள் சொந்தக்கதையை எழுதி இப்படி வாசகர்களை ஏமாற்றும் ஒரு பிரபலப் பதிவர்கள் ஒருபுறம்!   அவரையும் ஏமாற்றும் ஒரு பித்தலாட்டப் பின்னூட்டக்காரன்கள் இன்னொரு பக்கம்!

இதுதான் தமிழ்ப் பதிவுலகம்! Enjoy blogging, folks! :)