Tuesday, August 24, 2010

பெண்களும் தத்துவமும்!

பெண்கள் பொதுவாக தத்துவத்தில் ரொம்ப ஆர்வம் காட்டுவதில்லைனு சொல்லுறாங்க. நான் பார்த்த வரைக்கும் அது உண்மையும்கூட. ஒருவகையில் பார்த்தால் பெண்கள் நிறைகுடம். லூசுத்தனமா எதுவும் செய்வதும் இல்லை. அப்புறம் தத்துவம் பேசுவதும் இல்லைனு சொல்லலாம். இது நம்ம ஊரில் மட்டுமல்ல, எல்லா ஊர்லயும்தான் பெண்கள் தத்துவம்பேசுவதில் இறங்குவதில்லைனு சொல்றாங்க. அந்தக்காலத்திலிருந்து இன்னைக்குவரைக்கும், பொதுவாக தத்துவ ஞானிகளெல்லாம் ஆண்களாகத்தான் இருக்காங்கலாம்.

சரி, தத்துவம்னா என்ன? இது எதுக்கு வாழக்கைக்குத் தேவை? இதை வரையறுப்பதைவிட, நான் படித்ததில் பிடித்த சில தத்துவங்களைத் தருகிறேன்.

1) Love isn't finding a perfect person. It's seeing an imperfect person perfectly.

2) Love is a state in which a man sees things most decidedly as they are not.

3) Immature love says: 'I love you because I need you.'
Mature love says: 'I need you because I love you'

4) You have your way. I have my way. As for the right way, the correct way, and the only way, it does not exist.

5) Judge a man by his questions rather than by his answers.

6) I cannot believe in a God who wants to be praised all the time.

7) I'm not upset that you lied to me, I'm upset that from now on I can't believe you.

8) The true man wants two things: danger and play. For that reason he wants woman, as the most dangerous plaything.

9) It is not a lack of love, but a lack of friendship that makes unhappy marriages.

10) Is man one of God's blunders? Or is God one of man's blunders?

11) He who cannot lie does not know what the truth is.

12) Whatever is done for love always occurs beyond good and evil.


Most of them are by German Philosopher "Friedrich Nietzsche" Here is his photo! :)

Monday, August 16, 2010

"சாரு"வை மிரட்டிய எந்திரன் ரசிகன் யார்?


படம் வரும் முன்பே எந்திரன் சாதனைகளும் சங்கடங்களும் ஆரம்பித்துவிட்டது!

* திரு. சாரு நிவேதிதா அவர்களை யாரோ எந்திரன் விமர்சனம் எழுதக்கூடாதுனு மிரட்டியதாகவும், ICU விலிருக்கும் அவர், அதுக்கெல்லாம் பயப்படமாட்டேன் வழக்கம்போல் எந்திரன் ஒரு குப்பையாகத்தான் இருக்கும்னு ஒரு "எந்திரன் விமர்சனம்" எழுதி இருக்கார்! சரி, இப்படியெல்லாம் ஒரு விமர்சகரை மிரட்டுவது யாராக இருந்தாலும் அது கீழ்த்தரமான செயல்தான். அப்படி யாரும் செய்தார்களா? செய்திருந்தால் அது யாராயிருக்கும்? இல்லைனா எந்திரன் பத்தி எழுத சாருவுக்கு இது ஒரு சாக்கானு ஒரு கேள்வி எழாமல் இருக்காது!

இதிலென்ன விசேஷம் என்றால், சாரு, மேதாவி ஞாநி போன்றவர்கள் படம் "குப்பை"னு எழுதினால் பொதுவாப் படம் ப்ளாக் பஸ்டராவது வழக்கம். சிவாஜி மற்றும் தசாவத்ராம் போன்ற படங்கள் இதற்கு நல்ல உதாரணம். அதனால் சாரு குப்பைனு சொல்லப்போற எந்திரன் படம் பல வசூல் சாதனைகள் படைத்து ப்ளாக் பஸ்டர் ஆகும்னு எதிர்பார்க்கப்படுகிறது.

* இசை வந்ததும் வராததுமா ஒருவர் "எந்திரன் இம்சை" னு எந்திரன் இசைக்கு விமர்சனம் எழுதி இருக்கார். ஆனால் இவர் கெட்டநேரமா என்னனு தெரியலை எந்திரன் பாடல்கள் வெளியான முதல் நாள், அமெரிக்கா மற்றும், யு கே வில் டாப் 10 ஐ -ட்யூன் உலக ஆல்பத்தில் ஒண்ணாக வந்துள்ளது. இது தமிழ் சினிமாவிற்கு ஒரு புதிய வர்லாறு! இம்சையே இப்படினா, உண்மையிலேயே இசை நல்லா இவருக்கு பிடிப்பதுபோல வந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் னு யோசிக்கிறீங்களா? இவருக்குப் பிடித்திருந்தால் நிச்சயம் டாப் 10 ஆல்பத்தில் வந்திருக்காது!

* தெலுங்கு ரைட்ஸ் 30 கோடிக்கு வாங்கிவிட்டதாக ஒரு தகவல் வந்தது. இப்போ அதுவும் பொய்னு சொல்றாங்க! இதுல செம வேடிக்கை என்னனா சன் பிக்சர்ஸ்க்கு தெரியாமலே இந்த டீலை பண்ணி இருக்கார்களாம்! சரியான் லூசுகள் போல இதை வாங்கிய மற்றும் விற்றவர்கள்!

* ஹிந்தி- ரோபாட் ரிலீஸ்க்கு ஷாருக்-கான் வரவழைக்கப் படுவார், அமீர்கானும் வருவார்னு பிஹைண்ட்-தி-வூட்ஸ் ல ஒரு பொய் செய்தி வந்தது. ஆனால் உண்மையில், அமிதாப் ஃபேமிலி மட்டும்தான் இந்த விழாவில் கலந்து கொண்டார்கள்.

* எந்திரன் 150 கோடி செலவில் எடுக்கப்பட்ட படம்னு சொல்றாங்க!

இதில் குறைந்தது எவ்வளவு திரும்பி வரும்?

தமிழ் இசை ரைட்ஸ்: 8 கோடி

தெலுகுப் பட ரைட்ஸ்: 30 கோடி

டி வி ரைட்ஸ் (எல்லா மொழிகளும்): 7 கோடி

கர்நாடகா/கேரளா ரைட்ஸ்: 15 கோடி

ஓவெர் சீஸ் ரைட்ஸ்: 15 கோடி

தமிழ்ப் பட ரைட்ஸ்: 80 கோடி

ஹிந்தி டப்பிங் ரைட்ஸ்: 15 கோடி

இதை கூட்டிப் பார்த்தால், மொத்தம் ஒரு 170 கோடி வருது. போட்ட காசை எடுத்துவிடுவார்கள் போல இருக்கு :)))

Tuesday, August 3, 2010

அமெரிக்கன் பியூட்டி! கடலை கார்னர் (60)

"ஹாய் பிருந்த் டார்லிங்!"

"காலைல மீட்டிங்லாம் உங்களுக்கு எப்படிப் போச்சு, கண்ணன்?"

"இட் வாஸ் ஃபைன். நீ எப்படிடா இருக்க?"

"ஐ மிஸ் யு. உங்களை ஈவனிங் வீட்டுக்கு வரச் சொன்னேன் இல்ல?"

"அதை ஏன் கேக்கிற, வழியிலே ஏதோ ஆக்ஸிடெண்ட் போலடா, ட்ராஃபிக் ஜாம், அதான் அப்படியே அடுத்த எக்ஸிட் எடுத்து என் வீட்டுக்கு போயிட்டேன்."

"இப்படி ஒரு எக்ஸ்க்யூஸா?"

"நெஜம்மாத்தான்டா சொல்றேன்"

"சரி வேறென்ன விஷயம்?"

"ஸ்டெய்ஸி உன்னைப் பத்தி கேட்டாள்.. ஏன் உன்னைக்காணோம்னு கேட்டா, நான் எதையோ சொல்லி சமாளிச்சேன்."

"உண்மையைச் சொல்ல வேண்டியதுதானே?"

"உண்மையைத்தான் சொன்னேன்."

"என்ன சொன்னீங்க?"

"பிருந்தா நேக்கடா இருக்கும்போது கொள்ளை அழகா இருக்கானு சொன்னேன்."

"பொய்!"

"நெஜம்மாத்தான்."

"அதுக்கு அவ என்ன சொன்னாள்?"

"அவ உன்னை நேக்கடா பார்த்ததில்லையாம் அதனால .."

"அவ வேற பார்க்கனுமாக்கும்? உண்மையைச் சொல்லுங்க"

"இதுக்கு ஒரு நெஜம் சொல்லனுமா? அவ ஒரு மாதிரி டேர்ன் ஆண் ஆயிட்டா. அதனால கொஞ்சம் கவனமாயிரு அவ கிட்ட"

"ஹா ஹா ஹா. பொய்தானே?'

"நீ நெஜம்மாவே ரொம்ப அழகுடா!"

"இல்லை நான் அதை சொல்லல"

"நீ அழகுனு தெரியுமா?"

"நீங்க சொல்லித்தான் தெரியும்"

"உனக்கு ஸ்டெஃபெனி தெரியுமில்ல?"

"அவளுக்கென்ன இப்போ? லொட லொடனு ஏதாவது பேசிண்டே இருப்பாள்"

"அவளோட கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தேன்."

"என்ன சொன்னாள்?"

"பர்சனல் ஸ்டஃப் எல்லாம் சொன்னாள்"

"என்னனு சொல்லுங்க!'

"அவளுக்கும் அவங்க அப்பாவுக்கும் எந்த காண்டாக்டும் இல்லைனு சொல்லுவாடா. நான் நொழச்சுக் கேட்டதில்லை. இன்னைக்கு ஏதோ மூட்ல இருந்தாள். எல்லாத்தையும் சொல்லீட்டா!"

" சொல்லுங்க"

"அவளோட அம்மா ஃப்ளைட் அட்டெண்டண்ட்டா இருந்தாங்களாம். அப்பா பைலெட்டாம். அப்போ அவர் மேரீடாம், அவருக்கு ஒரு ஃபேமிலி இருந்ததாம். இருந்தும் தே ஹாட் திஸ் அஃபையர். "

"தெரிந்துமா?"

"அப்படித்தான் அவள் சொன்னாள். "

"ஷி மஸ்ட் பி க்ரேசி"

"அப்போ அவ அம்மாவுக்கு வயது முப்பத்தி ஆறாம். அவங்க அவ அப்பாவிடம் தெளிவா சொல்லீட்டாங்களாம். அதாவது எனக்கு 36 வயசாயிடுச்சு. இனிமேல் நான் ஒரு ஆளைப் பார்த்து பழகி கல்யாணம் பண்ணி ..இதெல்லாம் நடக்குமானு தெரியலை. உங்களை எனக்குப் பிடிச்சி இருக்கு. எனக்கு ஒரு குழந்தை வேணும். உங்கள் நிலைமை புரியுது. ஆனால் நான் உங்களுக்கு எந்த தொந்தரவும் தரமாட்டேன் னு சொல்லி ஒரு டீல் போட்டுக் கொண்டாங்களாம். அந்தக் குழந்ததைதான் நம்ம ஸ்டெஃபினியாம்! ஒரே ஒரு முறை அவங்க அப்பாவை கூப்பிட்டு பேசினாளாம். அவ்வளவுதானாம்!"

"அவளுக்கு அப்பாவே கெடையாதா?"

"அதான் சொன்னேன் இல்ல, அவளை 100% அவங்க அம்மாதான் பெத்து வளர்த்து இருக்காங்க. ஷி ஹாட் நோ காண்டாக்ட் வித் ஹிம். ஆர் நத்திங் டு டு வித் ஹிம். அதுக்கப்புறம் அவங்க அம்மா இன்னொரு ஆளை கல்யாணம் செய்துக்கிட்டாங்களாம். அவருக்கு ஒரு பையன் ஏற்கனவே இன்னொரு மனவி மூலம் இருந்ததாம். இவங்க நாலு பேரும் தான் இவளோட ஃபேமிலி. இவளோட ஸ்டெப் ப்ரதர் கம்ப்லீட்டா இவளோட ஸ்டெப் டாட் தான் வளர்த்தாராம். இவளை இவ அம்மா வளர்த்தாங்களாம். அவங்க நாலு பேரும்தான் ஒண்ணா வாழ்ந்தாங்களாம். நவ் ஷி மூவ்ட் அவ்ட்"

"அவ ஸ்டெப் டாட் எப்படி?"

"ஹி இஸ் எ ஜெர்க், னு சொல்றா! நான் டீட்டைலா கேக்கலை!"

"ஏதோ சின்மா கதை மாதிரி இருக்கு"

"நானே அவகிட்ட சொல்லீட்டேன். இது மாதிரி ஒரு ஆளை செக்கண்ட் பேர்சனா பார்ப்பேன்னு நெனைக்கவே இல்லைனு. இவ்வளவு பிரச்சினைகளுடன் இவ படிச்சு வந்திருக்கா பாரு! நமக்கெல்லாம் இது மாதிரி என்ன பிரச்சினை இருக்கு, சொல்லுடா?"

"ஏன் இப்படி வாழ்றாங்க?"

"தெரியலை. இதுதான் அமெரிக்கன் பியூட்டி!"

"ஸ்டெஃபெனிக்கு அவ அம்மா மேலே கோபம் இல்லையா?"

"தெரியலை. அவ என்ன சொல்றானா, அது அவ அம்மாவோட பர்சனல் திங். நான் அதை எப்படி கேள்வி கேக்க முடியும்னு"

"எல்லாருக்கும் இதுபோல ஒரு அனுபவம் கெடைக்காது இல்லை?"

"இதோட படிச்சு இந்த அளவுக்கு வெற்றியடைந்து இருக்கா பாரு! எவ்வளவு பிரச்சினைகள் வந்திருக்கும் ஹை ஸ்கூல், மிடில் ஸ்கூல்ல படிக்கும்போதெல்லாம்?"

"தட்ஸ் ரியல்லி க்ரேட் தட் ஷி குட் ஓவெர்கம், கண்ணன்"

"நான் அப்படித்தான் அவகிட்ட சொன்னேன்"

-தொடரும்

Monday, August 2, 2010

எந்திரனை வைத்து பொழைப்பு நடத்தும் திருவாளர் சு.க!

இவர் ரோம்ல இருக்காராம், அதனால இவரு ரோமனாயிடுவாராம். இப்போ எந்திரன் நேரமாம் அதனால இவரு, கஷ்டப்பட்டு எந்திரன் பாடல்கள் விமர்சனம் எழுதியே ஆகனும்னு எல்லா வேலையையும் விட்டுப்புட்டு அரைகுறையா பாட்டையெல்லாம் கேட்டுவிட்டு முதல் விமர்சனம் வலையில் எழுதுராறாம்!

இல்லைனா இவரை "பெருசுகள்" லிஸ்ட்ல சேர்ந்த்துவிடுவாங்களாம். இப்படி ஒரு ஜஸ்டிஃபிகேஷன்! இவர் இன்னும் சின்னத்தனமாத்தான் இருக்காராம்! நான் சொல்லல அவரே சொல்றாரு

***When in Rome, do as the Romans do
என்பதற்கேற்ப தற்போதைய பரபரப்பான 'எந்திரன்' இசை பற்றி எழுதவில்லையெனில் 'பெருசுகள்' லிஸ்டில் சேர்த்து விடுகிறார்கள் என்பதால் இந்தப் பதிவு.****

திருவாளர் சு. க சொல்ல வேண்டியது.. சினிமாப் பதிவுகள் எழுதிதான் நான் பொழைப்பு ஓட்டனும். அதனால நான் எந்திரன் விமர்சனம் என்கிற பேரில் எதையோ உளாறுகிறேன்னு சொல்லி ஆனஸ்டா எழுதி இருக்கலாம்! அது பெரிய மனுஷன் செய்ற வேலை. இவர் என்ன செய்வார் பாவம்! இவருடைய முயற்சியே சின்னத்தனமான ஆளுனு காட்டத்தானே? அதுக்குத்தான் ஆரம்பத்திலேயே இந்தமாதிரியான ஒரு உளறல் ஜஸ்டிஃபிகேஷன்.

இந்த "ஞானி சு க" இசையை அலசு அலசுனு அலசி விமர்சனம் எழுதி முடிச்சுட்டாரு! சரி இந்த இசைஞானி விமர்சனம் எழுதி முடிச்சாச்சு. அதோட விட வேண்டியதுதானே? எழுதி உளறிமுடிச்ச பிறகு தன் உளறல்கள் மேலே தனக்கே சந்தேகம் வந்துருச்சுபோல பாவம்! உண்மையிலேயே இசையின் தரம் தெரியாமல் உளறிட்டோம்னா அசிங்கமாப் போயிடுமேனு கடைசியில், he is covering his own butt now!

****எந்திரன் இசையைப் பொறுத்தவரை இது என்னுடைய தற்காலிக அவதானிப்பே. தொடர்ந்த மீண்டும் சில முறையான கவனிப்புகளில் மேற்குறிப்பிட்டவை தவிர மற்ற சில பாடல்க்ளின் இசையமைப்பும் கூட பிடித்துப் போகலாம்.****

இவரை எப்படி "பெருசுகள்" (பெரிய மனிதன்) லிஸ்ட்ல சேர்க்க முடியும்? இந்த சந்தேகம் எல்லாம் இவருக்கு எதுக்கு வருது?